உபுண்டு முனையச் சிறுகுறிப்பு
கீழ்கண்டவற்றை உபுண்டு ஜினோம் முனையத்தில் தட்டச்சு செய்யுங்கள்:
sudo apt-get install fortunes-ubuntu-server -y
இனி உபயோகமான குறிப்புகள் பெற, பின்வரும் கட்டளையைப் பல முறை பயன்படுத்துங்கள்:
ubuntu-server-tip
இதோ சில எடுத்துக்காட்டுகள்:
lsof பயன்படுத்தி எந்தெந்த கோப்புகளுக்கு ஓப்பன் ஹாண்டில் (open handle) உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம்.
‘lsof +D /path’ பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள தடத்திற்கான பிராசஸ்களை (process) கண்டுபிடித்து விடலாம்
நீங்கள் ஏதாவது தவறான கட்டளை அல்லது கடவுச்சொல் தட்டச்சு செய்துவிட்டால், பயப்பட வேண்டாம், ctrl + u பயன்படுத்தி முழு வரியையோ, ctrl + w பயன்படுத்தி ஒரு வார்த்தையையோ அழித்து விடலாம்.
நீங்கள் PostgreSQL தரவுத்தளம் (database) பயன் படுத்துபவராக இருந்தால், ptop பயன்படுத்தி நிகழ் நேர (real time) பயன்பாட்டை கண்காணிக்கலாம். அது போலவே /03/21/postgresql-to-file/”PostgerSQL-லில் இருந்து கோப்பிற்கு ஏற்றுமதி செய்வதும் எளிது.
முனையக் கட்டளை வரலாற்றை ctrl+r பயன்படுத்தி எளிமையாகத் தேடலாம், ctrl+r பயன்படுத்தியபின், கட்டளையில் இடம் பெற்றிருந்தது என நீங்கள் கருதும் சில வார்த்தைகளை பயன்படுத்தினால் உங்களுக்கான பதில் கிடைத்துவிடும்.
பாஷ்(bash) நிரல் தொடரியில் (syntax) வட்டமடித்தலை (loop) உருவாக்க:
“for i in *; do echo $i; done”
தடத்தை இருமுறை தட்டச்சு செய்யாமல் நகலாக்கம் செய்ய:
“cp /long/path/to/file/name{,.orig}” இது suffix.orig உடன் ஒரு நகலை ஏற்படுத்தும்.
ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி