லாஜிக் கதவுகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்டுரைகளில் விவாதித்து வந்திருக்கிறோம். அவற்றின் வகைகள், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பிறகு சுவாரசியமான தகவல்களை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் லாஜிக் கதவுகள் குறித்த கடைசி கட்டுரை இதுதான். இந்தக் கட்டுரையில், ஆல் ரவுண்டர் NAND கதவு குறித்துதான் பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, கடந்த கட்டுரையில் ஆல்ரவுண்டர் NOR கதவு குறித்து பார்த்திருந்தோம்

NOT Using NAND

கடந்த கட்டுரையில் பார்த்ததை போலவே, NAND கதவிற்கும் அதனுடைய இரண்டு உள்ளீடுகளையும் சேர்த்து ஒரே உள்ளீடாக மாற்றி விட வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் வெளியீடானது,NOT கதவின் வெளியீடுக்கு சமமாக இருக்கும்.
AND using NAND

AND கதவின் மறுதலை தான் NAND என அதற்கான கதவுக்கான கட்டுரையிலேயே நான் குறிப்பிட்டிருப்பேன். அப்படிப் பார்த்தால் இப்போது நம்மிடத்தில் NAND இருக்கிறது, அதை ஒன்றிய பகுதியில் பார்த்த NOT USING NAND கதவை பயன்படுத்தி மறுதலை செய்து வெளியீட்டில் AND கதவை பெறலாம்.
OR using NAND

டிமார்கனின் இரண்டாவது விதியைப் படித்து பார்த்தீர்கள் அல்லவா? அதே அடிப்படையில் தான் இங்கே OR using NAND கதவை எளிமையாக கட்டமைத்து இருக்கிறோம். இரண்டு மறு தலைகள் வரும்போது அவை ஒன்றை ஒன்று நீக்கிவிடும் என்பதையும் நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
NOR using NAND

முன்பு நாம் செய்திருந்த, OR கதவோடு ஒரு மறுதலைக்காக NOT கதவை போட்டுவிட்டால் போதும். NOR கதவு தயாராகிவிடும்.
Ex-OR using NAND

இந்த மின் சுற்று உங்களுக்கு சற்றே குழப்பமாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் கவனமாக பாருங்கள். A,B ஆகிய இரண்டு உள்ளீடுகளும் ஒரு NAND கதவுக்கு வழங்கப்படுகிறது. பின்பு A உள்ளீடானது இரண்டாவது NAND கதவுக்கும், B உள்ளீடானது மூன்றாவது NAND கதவுக்கும் வழங்கப்படுகிறது. முதலாவது கதவின் வெளியீடானது இரண்டு மற்றும் மூன்றாவது கதவுகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்பு இரண்டு மற்றும் மூன்றாவது கதவுகளின் வெளியிடானது நான்காவது கதவுக்கு உள்ளீடாக வழங்கப்படுகிறது. நான்காவது கதவிலிருந்து கிடைக்கும் வெளியீடானது ,ExOR கதவின் வெளியீடுக்கு எடுத்து சமமாக இருக்கும். இதற்கான கணக்கீடை நான் கீழே கொடுக்கிறேன்.
First gate output = (A.B)’
Second gate input = A(A.B)’
Third gate input = B(A.B)’
Secod gate output = (A(A.B)’)’
Third gate output = (B(A.B)’)’
Fourth gate input = third out + second out
Using demorgens law and simplification
Final output= A’.B + A.B’
அவ்வளவுதான், லாஜிக் கதவுகள் குறுந்தொடர் இனிதே நிறைவடைகிறது.
எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடரின் நிறைவு கட்டுரையில் சந்திக்கலாம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com