லாஜிக் கதவுகள் தொடர்பான சில அடிப்படையான கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அந்த வகையில் AND,OR,NOT,NOR,EXOR,NAND உள்ளிட்ட லாஜிக் கதவுகள் குறித்து பார்த்து விட்டோம். மேலும், லாஜிக் கதவுகளோடு தொடர்புடைய டி மார்கன் விதி குறித்தும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் லாஜிக் கட்டுரைகள் குறுந்தொடரின் இறுதிப் பகுதியை நெருங்கி விட்டோம்.
NOR,NAND ஆகிய இரண்டு லாஜிக் கதவுகளும் Universal லாஜிக் கதவுகள் என அறியப்படுகிறது. இந்த இரண்டு லாஜிக் கதவுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, இன்ன பிற அனைத்து லாஜிக் கதவுகளையும் உங்களால் கட்டமைக்க முடியும். அதாவது, ஒரு லாஜிக் மின்சுற்று தயாரிப்பதற்கு இந்த இரண்டு கதவுகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே நம்மால் பயன்படுத்தி வடிவமைப்பு முடியும். இந்த கதவுகளைக் கொண்டு AND,OR,NOT,EXOR போன்ற அனைத்து விதமான லாஜிக் கதவுகளையும் அமைத்துவிட முடியும்.

அதாவது, உதாரணமாக,இந்த இரண்டில் ஏதாவது ஒரு கதவை பயன்படுத்தி AND கதவின்படி வீட்டை நம்மால் பெற முடியும். இது போலவே மேற்குறிப்பிட்ட அனைத்து லாஜிக் கதவுகளின் வெளியீடுகளையும் நம்மால் பெற்று விட முடியும். இந்தக் கட்டுரையில் NOR கதவின் பன்முகத்தன்மை குறித்து பார்க்கலாம். வெளியீடு அட்டவணைகள் முந்தைய கட்டுரைகளில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டுரையில் NAND கதவின் பன்முகத்தன்மை விளக்கப்படும்.

NOR ஆல் ரவுண்டர்
1)NOT using NOR

NOR கதவின் இரண்டு உள்ளீடுகளையும் இணைத்து ஒரே உள்ளீடை வழங்கும்போது உங்களுக்கு வெளியீட்டில் அந்த உள்ளீடின் தலைகீழி கிடைக்கும். இதன் மூலம் உங்களால் NOT கதவுகுரிய வெளியீட்டைப் பெற முடியும்.
2)OR using NOR

NOR கதவின் தலைகீழ் கதவு தான் OR கதவு என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். அப்படி என்றால், முன்பே தயாரித்து வைத்திருந்தேன் NOR using NOT கதவை ஒரு சாதாரண NOR கதவைத் தொடர்ந்து போட்டு விட்டால் போதும். OR கதவுக்கான வெளியீடு இங்கே கிடைக்க பெற்று விடும்.
3)AND using NOR

இந்த சுற்று குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்பு எழுதப்பட்டிருக்கும் டிமார்கன் விதிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டும். டிமார்கனின் இரண்டாவது விதி அடிப்படையிலேயே இந்த லாஜிக் கதவானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரை புரியவில்லை என்றால், டிமார்கள் விதிகள் குறித்து முந்தைய கட்டுரையை பார்க்கவும்.
அதாவது, இரண்டு லாஜிக் உள்ளீடுகளும் NOR using NOT கதவுகளைக் கொண்டு மறுதலை செய்யப்பட்டிருக்கிறது. பின்பு மற்றும் ஒரு NOR கதவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டிமார்கன் விதிப்படி, இரண்டு தனி தனி லாஜிக்கல் உள்ளீடுகளின் மறு தலைகளின் கூட்டல் மதிப்பானது, அந்த லாஜிக்கல் உள்ளீடுகளின் பெருக்கல் மதிப்பின் மறு தலைக்கு சமமாக இருக்கும். கடைசி வெளியீட்டில் இரண்டு மறு தலைகள் வருவதால், அவை தானாகவே நீங்கி, A.B எனும் AND கதவுக்கான வெளியீடு கிடைக்கும்.
4)NAND using NOR

AND கதவு எப்படி உருவாக்கப்பட்டது என்று புரிந்ததா! அதில் NOT using NOR கதவு ஒன்றை இறுதியில் போட்டுவிட்டால் போதும், NAND கதவு தயாராகிவிடும்.
5)EX-OR Using NOR

சும்மாவே EXOR கதவு என்றால் குழப்பம், இதில் இது வேறயா என புலம்புகிறீர்களா? நன்றாக உற்று கவனித்து பாருங்கள். முதலாவது பகுதியில் NOR கதவுக்கான வெளியீடு பிறப்படுகிறது. இரண்டாவது பகுதியில் ஹேண்ட் கதவுக்கான வெளியீடு பெறப்படுகிறது. இவை இரண்டையும் மீண்டும் ஒரு நாற்கதவுக்குள் உள் செலுத்துகிறார்கள்.
அதற்கான, பூலியன் செயல்பாட்டை தீர்த்தால் EXOR கதவுக்கான வெளியீடு உங்களுக்கு கிடைக்கும்.
NOR கதவை எப்படி ஆல் ரவுண்டராக பயன்படுத்துவது என தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இந்தத் தொடரில் NAND கதவின் பன்முகத்தன்மை மட்டும் மீதம் இருக்கிறது. மேலும், விரைவில் இந்த எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடரும் நிறைவடைய இருக்கிறது.
சுமார் ஒன்பது மாத காலத்திற்கு அதிகமாக தொடர்ந்து எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடரானது வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த தொடர் குறித்து உங்களுடைய மேலான கருத்துக்களை என்னுடைய மின்மடலுக்கு எழுதலாம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com