விக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்

தமிழ் விக்கி மூலம் – ta.wikisource.org

இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் சுமார் 2000 மின்னூல்கள் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, Google OCR மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பிழைகளை நீக்கி, மெய்ப்பு பார்க்கும் (Proof Read) பெரும் பணி நம்முன்னே காத்துள்ளது. சுமார் 5 லட்சம் பக்கங்களை திருத்தி அவற்றை மின்னூலாக வெளியிட வேண்டும். இப்பெரும் பணியில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.

தமிழ் விக்கிமூலத்தில் மெய்ப்பு செய்வதற்கான உதவி காணொளிகளை நண்பர் பாலாஜி உருவாக்கி வருகிறார். அவை பின்வருமாறு

விக்கிமூலம் – ஓர் அறிமுகம்

விக்கிமூலத்தில் புதிய கணக்கு தொடக்கம்

மெய்ப்பு செய்யும் பொழுது மேலடிகளை எப்படி சேர்ப்பது மற்றும் பத்திகளுக்கு இடையில் எவ்வளவு வெற்று வரிகளை இட வேண்டும்?

அட்டவணை (table) மெய்ப்பு

மேற்கோள்கள் உள்ள புத்தகங்களை எப்படி மெய்ப்பு செய்வது?

அத்தியாயங்கள் பிரிப்பு

பாடல் கவிதைகளை மெய்ப்பு செய்வது எப்படி?

அடுத்த கட்ட காணொளிகளை விரைவில் வெளியிடுவோம்.

 

இவற்றில் ஏதேனும் ஐயம் எனில், விக்கி மூலம் ஆலமரத்தடியில் கேளுங்கள். அல்லது tshrinivasan@gmail.com க்கு எழுதுங்கள்.

 

காணொளிகளை உருவாக்கிய பாலாஜி அவர்களுக்கு நன்றிகள்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/UserBalajijagadesh.jpg/322px-UserBalajijagadesh.jpg

பாலாஜி

படம் -https://commons.wikimedia.org/wiki/File:UserBalajijagadesh.jpg

%d bloggers like this: