தமிழின் முக்கிய இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கி மாரத்தான் நிகழ்வு செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகி
தமிழ் விக்கி மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.
நோக்கம்
தற்போதைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.
திட்டம் / கவனக்குவியம்
விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும்.
பயனர்கள் தமக்கு விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.
இவ்வாண்டு மாரத்தானில், துப்புரவு உள்ளிட்ட மேம்படுத்துதல் பணிகளை முதன்மையாகக் கருதி தொகுக்குமாறு பயனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏயு-கேபிசி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடக்கும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட படிவத்தில் முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்.