தற்காலத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக விக்கிபீடியா விளங்குகிறது. விக்கிப்பீடியாவின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கிய பங்களிப்பாளர்கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் கணியம் தளத்திலேயே காணக் கிடைக்கின்றன .
ஆனால், பலருக்கும் விக்கிப்பீடியாவிற்கான அதிகாரப்பூர்வ செயலியானது இருப்பது தெரிந்திருப்பதில்லை. பெரும்பாலும், இணையத்தில் தேடியே விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விரும்பிய கட்டுரைகளை பதிவு செய்து வைப்பது, தேடும் நேரத்திலேயே எவ்வித தாமதமும் இன்றி கட்டுரைகளைப் படிப்பதற்கும் இந்த ஆண்ட்ராய்டு செயலி பயன்படுகிறது.
மேலும், இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் சில கட்டுரை திருத்தங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதுவது போன்ற வேலைகளை கூட மேற்கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், அன்றாடம் உலக மக்களால் அதிகமாக வாசிக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள், தமிழில் அதிகமாக கவனிக்கப்படும் கட்டுரைகள் மற்றும் பல சுவாரசியமான வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
சுமார் 30 எம்பி அளவில் கிடைக்கக்கூடிய இந்த செயலியானது, உங்களுக்கு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகளின் தளமான fdroid தளத்தில் காணக் கிடைக்கிறது.




விக்கிபீடியாவை போன்ற அல்லது விக்கிபீடியாவின் அடிப்படையை பயன்படுத்தி இயங்கக்கூடிய, அங்கீகரிக்கப்படாத பல செயலிகளும் உங்களுக்கு இணையத்தில் காண கிடைக்கும்.
பெரும்பாலும் நம்பகமற்ற சூழலில் இருந்து கிடைக்கக்கூடிய இதுபோன்ற விக்கிபீடியா செயலிகளை பதிவிறக்க வேண்டாம்.
அதிகாரப்பூர்வ விக்கிபீடியா செயலி? என்பதை கவனித்து பதிவிறக்கவும். மேலும், இந்த செயலியை பயன்படுத்துவதற்கு நீங்கள் கட்டாயம் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும் எனும் அவசியமும் இல்லை. உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் எதுவும் திருடப்படாது என்றும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
இந்த செயலியானது முழுக்க முழுக்க கட்டற்ற முறையில்(Open source)வடிவம் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே,0இந்த செயலியின் நம்பகத்தன்மை குறித்து எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. பிறகு என்ன? இவ்வளவு நாளும் தேடித் தேடி கட்டுரைகளைப் படித்தது போதும் இனிமேல் ஒரே கிளிக்கில், உங்களது விக்கிபீடியா செயலில் விருப்பமான விக்கிபீடியா கட்டுரைகளை படித்து மகிழுங்கள்.
பதிவிறக்க இணைப்பு:
f-droid.org/en/packages/org.wikipedia/
மீண்டும் ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலியோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com