கட்டற்ற தரவுகளின் நாயகர் “திரு.ஶ்ரீ பாலசுப்ரமணியன்”

MR.SRI.BALASUBRAMANIYAN

கட்டற்ற தரவுகளின் களஞ்சியமான, விக்கிபீடியா குறித்து நாம் அனைவருமே அறிந்திருப்போம்.

நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இருந்து, விக்கிபீடியாவில் இருந்து தான் என்னுடைய அனைத்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கு தரவுகளை சேகரிப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, பெரும்பாலான விக்கிபீடியா கட்டுரைகள் தமிழில் கிடைப்பதற்கு அரியதாக இருந்தது.

ஆனால், அந்த குறைகளை நீக்கும் விதமாக! பல தமிழ் ஆர்வலர்களும் விக்கிபீடியா இணையதளத்தில் களம் புகுந்தனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை நாயகர் தான் “திரு.ஸ்ரீ.பாலசுப்பிரமணியன்”.

சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட, கல்வித்துறையில் பணியாற்றும், 56 வயதான, சாதாரண மனிதர் தான் “திரு.ஸ்ரீ பாலசுப்பிரமணியன். மனைவி மற்றும் சகோதரியின் உந்துதலால், இன்று விக்கிபீடியாவின் தமிழ் நாயகராக உயர்ந்திருக்கிறார்.

ஜனவரி 7 2019 தொடங்கி ஜூலை 13 2024 வரை, 5 ஆண்டு காலத்தில் சுமார் தமிழில் 6000 கட்டுரைகளை, விக்கிபீடியா இணையதளத்திற்கு தந்திருக்கிறார் “திரு.ஶ்ரீ.பாலசுப்பிரமணியம்” அவர்கள்.

மிகவும் குறுகிய காலத்தில், இணைய உலகில் இத்தகைய சாதனையை நிகழ்த்துவது, மிகவும் கடினமான ஒரு காரியம்.

கணினி அறிவுமிக்க, இளம் வயது எழுத்தாளர்களே தயங்கும் சூழலில்,  50வயதை கடந்த பின்பும், தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து 5 ஆண்டு காலம் எழுதி, 6000 கட்டுரைகளை விக்கிபீடியாவிற்குத் தந்து “சிறந்த பங்களிப்பாளர்” எனும் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்.

எவ்வித லாப நோக்கமும் இன்றி, பிறரது அறிவிற்கு நீரூற்றும்! கட்டற்ற தரவுகளின் களஞ்சியமாக திகழும் விக்கிபீடியாவின்! தமிழ் நாயகராக, இன்று நம் முன் திகழ்கிறார்                  ‘ “திரு.ஸ்ரீ.பாலசுப்பிரமணியன்” அவர்கள்.

அன்னாரை வாழ்த்துவதில்,          “கணியம் அறக்கட்டளை” மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. அன்னாரது பணிகள் தொடரவும், குறுகிய காலத்தில் பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்யவும் அன்னாரை வாழ்த்துகிறோம்.

அன்னாரை பின்பற்றி, விக்கிபீடியா தளத்தை தமிழ் தகவல் களஞ்சியமாக மாற்றுவோம்.

கட்டுரையாளர்:

ஸ்ரீ காளீஸ்வரர்.செ,

இளநிலை (கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ) – ( கணியம்)

இளங்கலை இயற்பியல் மாணவர்,

இணையம்

மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: