கட்டற்ற தரவுகளின் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவில், எண்ணில் அடங்காத தமிழர்களுக்கும் தரவு தரும் அயராத பணியை செய்யும், பல தன்னலமில்லாத மாமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில் மிகவும் குறுகிய காலத்தில், விக்கிபீடியா தளத்தில் 8000 கட்டுரைகள் தொடக்கம் எனும் உயரிய நிலையை அடைந்திருக்கும் சாதனையாளர் தான் “திரு.சத்திரத்தான்“
மேலும், விக்கிப்பீடியா அமைப்பால் நடத்தப்பட்ட பெண்ணியமும் நாட்டுப்புறவியலும் எனும் கட்டுரை எழுதும் போட்டியில் சிறப்பு பரிசையும் பெற்றிருந்தார்.
அன்னாரை போன்றவர்களால் தான், உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் உலகளாவிய தகவல்களை, அரும்பெரும் தரவுகளை! தமிழில் எளிமையாக பெற முடிகிறது.
என்னைப் போன்ற தொடக்கநிலை எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார்.
அன்னாரை வாழ்த்தி சிறப்பிப்பதில் பெருமை கொள்கிறது கணியம் அறக்கட்டளை.
அன்னாரது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
தமிழின் ஆகச்சிறந்த தரவு தளமாக விக்கிபீடியாவை மாற்ற ,அனைவரும் ஒருங்கிணைவோம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர்.செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
( தெ.தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில்)
இளநிலை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.