மூலம் – ta.wikipedia.org/s/7dfq
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, இந்திய விக்கி அறிவியல் மாதம் 2018ஐ முன்னிட்டு பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). இதன் நோக்கம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், பெண்கள் நலன் சார்ந்த கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவதும் ஆகும்.
விதிகள்
சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். இவை குறைந்தது 9000 பைட்டுகள் அளவு அமைய வேண்டும். அக்டோபர் 1, 2018 முதல் அக்டோபர் 31, 2018 வரை போட்டி நடைபெறும்.
- கட்டுரை அக்டோபர் 1, 2018 0:00 தொடங்கி அக்டோபர் 31, 2018 23:59 (இந்திய நேரம்) வரையிலான இடைப்பட்ட காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கட்டுரை ஏற்கனவே என்ன அளவு இருந்தாலும், அதில் கூடுதலாக 9000 பைட்டுகள் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இந்த அளவாவது இருக்க வேண்டும்.(வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)
- கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
- கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டா.
- கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி பார்த்துக் கொள்ளுங்கள்.
- கட்டுரை தகவல் நிறைந்ததாக அமைய வேண்டும்.
- கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்.
- ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
- ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில் ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
- தாங்கள் உருவாக்க/மேம்படுத்த விரும்பும் கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யவும்.
நினைவுப்பரிசு
பங்குபெறும் அனைவருக்கும் சிறப்பு அஞ்சலட்டை அல்லது அதற்கு நிகரான நினைவுப்பரிசு வழங்கப்படும்.
ஒருங்கிணைப்பாளர்கள்
இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
த.சீனிவாசன்