விக்கிபீடியா புகைப்படப் போட்டியின் தீர்ப்பு

By | December 14, 2013

விக்கிபீடியா புகைப்படப் போட்டி:

 

விக்கிபீடியா நடத்திய  புகைப்படப் போட்டியில்  ’சாஸ்த்ரா’ பல்கலைகழகத்தில், எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.

இப்போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களின் தரம், தனிப்பட்ட நோக்கம், படமெடுக்கப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தல்  போன்ற  அம்சங்களைப் பொருத்து பரிசுக்குரிய புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கார்முகில்வண்ணன் எடுத்த புகைப்படம், தஞ்சை பெருவுடையார் (பெரிய கோயில்) கோயிலின்  முழுத்தோற்றத்தையும் எழில்கொஞ்சும் வகையில் காட்டியுள்ளது. இதில் பல நாடுகளிலும் வெற்றிபெற்றவர்களுக்கு, லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

இப்போட்டியை உலகின் மிகப்பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

Thamizh G <iamthamizh@gmail.com>

இதழ் 23 நவம்பர் 2013