எளிய தமிழில் WordPress 1

எளிய தமிழில் WordPress 1

அறிமுகம்

WordPress  என்பது உலகெங்கும் பல மில்லியன் கணக்கான மக்களால் அழகு ததும்பும் வகையிலும், பார்த்தவுடனே ஈர்க்கத்தக்கதாக வலைத்தளங்களையும் (Websites), வலைப் பூக்களையும் (Blogs) உருவாக்க உதவும் கட்டற்ற மென்பொருள் அமைப்பாகும். இதனை முழுக்கவே தீம்களையும் (Themes) செருகு நிரல்களையும் (Plugins) கொண்டு தனிப்பயனாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீம்களை நாம் WordPress தளத்திலேயே எளிதாக தரவிறக்க இயலும். பல நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற தளங்கள் கூட இத்தகைய தீம்களை வழங்கி வருகின்றன. அவற்றையும் நாம் தரவிறக்கி பயன்படுத்தலாம். இதேபோல்தான் செருகுநிரல்களும். இதன் காரணமாக நமது WordPress தளத்தின் செயல்பாடுகளை நீட்டித்துக் கொள்ளலாம்.

WordPress தளத்தில் இரண்டு அடிப்படைக் கருத்துருக்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவையாவன முறையே,

·         பதிவுகள் (Posts)

·         பக்கங்கள் (Pages)

பதிவுகள் என்பன சாதாரணமான வலைப்பூ உள்ளீடுகள்தாம். அது எவ்விதமான கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். அவை தொடர்களாக, கட்டுரைகளாக, கவிதைகளாக, படங்களாக, இருக்கலாம்.

பக்கங்கள் என்பன நிலையான உள்ளடக்கங்களைக் (Static Content) கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, தளத்தின் உரிமையாளர் பற்றிய  சுய அறிமுகம், மற்றும் நாம் நிலையாக தளத்தில் இருக்கவேண்டியதாக எண்ணும் தகவல்களைப் பக்கங்களாக பதியலாம் (உதா: தொடர்பு முகவரி.) (பக்கங்களின் தகவல்களையும் நாம் விரும்பும் நேரம் மாற்றியமைக்க முடியும். WordPress-ல் அதிகபட்சம் 10 பக்கங்கள் அமைக்க முடியும்.)

என்னால் வலைப்பூக்கள் நடத்த முடியாது. எனக்கு வலைப்பூ நடத்த விருப்பமில்லை என்றெல்லாம் நீங்கள் விரும்பினால் சொந்தமாக தளங்கள் (Websites) கூட  நடத்தலாம். அதில் எந்தமாதிரியான வடிவிலும் கருத்துகளை எழுதி வெளியிடலாம். அது உங்கள் தனிப்பட்ட தளமாக  (Personal Website) இருக்கலாம் அல்லது அது உங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமாகக் (Official) கூட இருக்கலாம்.

தமிழில் இயங்கும் சில WordPress (கவனிக்க: இவை Powered By WordPress) தளங்களை இங்கு குறிப்பிடுகிறேன். இவை உதாரணங்கள் மட்டுமே.

www.kaniyam.com/

www.writerpayon.com/

solvanam.com/

www.writermugil.com/

2.உள்நுழைதல் 

உள் நுழைதல் என்றால் Login. உங்கள் தளத்தில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்களைச் செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டால், நீங்கள் கண்டிப்பாக உள் நுழைய (Login) வேண்டும்.

முன்னதாக உங்களுக்கான கணக்கை wordpress.com –ல் தொடங்கிக் கொள்ளுங்கள். இப்போது உள்-நுழைதலைப் பற்றி பார்க்கலாம்.

உங்கள் தள முகவரியோடு wp-admin ஐ இணைத்து Address bar-;ல் தட்டச்சு செய்யலாம்.

your-wordpress-site.com/wp-admin

அல்லது நேரடியாக

WordPress.com

லேயே login செய்யும் வசதியும் உண்டு. அதில் சரியான பயனர் பெயரையும் (User name) கடவுச்சொல்லையும் (Password) கொடுத்தால் எளிதாக உள்நுழையலாம்.

 

இப்போது சில வடிவமைப்புகள் மாற்றப்பட்டிருப்பதால், நீங்கள் உங்கள் DashBoard-க்கு நேரடியாக செல்ல இயலாது. எனவே  your-wordpress-site.com/wp-admin வடிவத்தில் முகவரியை கொடுத்தால் நீங்கள் உங்கள் தளத்தின் Dashboard- அடையலாம்.

Dashboard என்பது உங்கள் தளத்தை நிர்வகிக்க உதவும் பக்கமாகும். அதில் உங்கள் தளத்தின் பெயர், பயனர் பெயர், புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள், வெளியேறுவதற்கான வசதி (Logout) உள்ளிட்ட தகவல்கள், வசதிகள் அதில் மேல்புறத்தில் இருக்கும்.

அடிப்படையான தகவல்கள் மட்டுமல்லாமல், இதுவரை நீங்கள் எழுதிய பதிவுகள், பக்கங்கள், உங்களுக்கு வந்துள்ள கருத்துகள், பதிவுகளின் பகுப்புகள் (categories), தளத்தின் பார்வைகள் (Site Stats) என சகலத்தையும் உங்கள் கணினிக்குள் கொண்டு வந்து தருவதே Dashboard ஆகும்.

Dashboard-ன் உதவியோடுதான் நாம் நமது முதல் பதிவை எழுதியாக வேண்டும். அதற்காக Dashboard-ன் செயல்பாடுகள் வசதிகளை அறிந்து கொள்வதும் அவசியமானதே.

Dashboard-ன் மூலம் நாம் என்னென்ன செய்யவேண்டும் என விரும்புவோமோ, அவையனைத்தும் இடப்பக்கம் Menu வடிவில் இருக்கும். இங்கே அவற்றை முதலில் வரிசைப்படுத்தி விடுகிறேன்.

·         Home (இல்லம் அல்லது முகப்பு)

·         Store (விற்பனை நிலையம்)

·         Posts (பதிவுகள்)

·         Media (ஊடகம்)

·         Links (இணைப்புகள்)

·         Pages (பக்கங்கள்)

·         Comments (கருத்துகள்)

·         Feedbacks (பின்னூட்டங்கள்)

·         Appearance (தளத்தின் தோற்றம்)

·         Users (பயனர்கள்)

·         Tools (கருவிகள்)

·         Settings (அமைப்புகள்)

இந்த Menu-களைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் காணலாம்.

 

 

தமிழ்
<iamthamizh@gmail.com>@iamthamizhthamizhg.wordpress.com

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: