இன்றைய போட்டிமிகுந்த சூழலில் இணையம் நம்முடைய வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு உறுப்பாக மாறிவிட்டது அதாவது நம்மில் பெரும்பாலானோர் எந்தவொருமுடிவையும் தெரிவுசெய்வதற்குமுன் அதற்கு தேவையான தகவல்களையும் விவரங்களையும் இணையத்தின் உலா வி
அதன்
வாயிலாக
தேவையான தகவல்களை
தேடிபிடித்து
படித்தறிந்து
தெளிவடைந்தபின்னரே முடிவு எடுத்திடுகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை நிலவரமாகும் அதனால் அனைத்து வியாபார நிறுவனங்களும் தமக்கென தனியானதொரு இணையபயன்பாட்டினை கண்டிப்பாக வைத்து பராமரிக்க வேண்டிய நிலைஏற்படுகின்றது
.
அதனோடுகூடவே தற்போதைய நவீணகாலதேவையானது ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தனக்கென தனியானதொரு இணையபக்கத்தையோ அல்லது இணையபயன்பாட்டினையோ கண்டிப்பாக வைத்து பராமரிக்கவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது . இதனை பயன்படுத்திகொள்ளும் வாடிக்கையாளர்களை அந்நிறுவனமானது எவ்வாறு கருதுகிறது என்பதிலும்,அதன் தயாரிப்புகளில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றது என்பதிலும் இணையதளத்தின் அல்லது இணையதள பயன்பாட்டின் தரமானது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு இணையபயன்பாடு என்பது அடிப்படையில் ஒரு கணினி பயன்பாடாகும் அந்த கணினிபயன்பாட்டினை தொலை தூரத்திலுள்ளசேவையாளர்கணினியில் வைத்து கொண்டு உலகில் எங்கிருந்தும் எந்தநேரத்திலும் அதனை பயனாளர் ஒருவர் தன்னுடைய இணையஉலாவியின் வாயிலாக அனுகி இடைமுகம் செய்து செயல்படுத்தி பயன்பெறமுடியும் என்பதால் இது இணையபயன்பாடு என அழைக்கப்படுகின்றது . இணையபக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைபற்றிய அனைத்து தகவல்களும் உரையாகவோ உருவப்படமாகவோ கானொளிகாட்சியாகவோ அல்லது இவை யனைத்தும் சேர்ந்து உருவாக்கப்பட்ட கட்டமைவை வாடிக்கையாளர் ஒருவர் மிகஎளிதாக உலகில் எங்கிருந்தும் எந்தநேரத்திலும் தன்னுடைய இணையஉலாவியின் வாயிலாக அனுகி இடைமுகம் செய்து தேவையான விவரங்களை பெறமுடிகின்ற கட்டமைப்பாகும்
இவ்விரண்டும் நல்ல தரமாக அமைந்திருந்தால்தான் வாடிக்கையாளரின் மனம் திருப்தியுற்று மீண்டும் இவைகளை அனுகி தங்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்வார்கள் அதனால் இவைகளை நல்ல திறனுடன் உள்ளதாவென பரிசோதித்து பார்த்திடவேண்டுமல்லவா ?அதற்காக உதவவருவதுதான 1.செயல்பரிசோதனை (functional testing) ஆகும். இதன்கீழ் உரைப்பெட்டிகளின் உள்ளீடுகளை சரிபார்த்தல், உடைந்த இணைப்புகளை சரிபார்த்தல், குக்கீ தொடர்பான செயல்பாடுகளைச் சரிபார்த்தல் என்பன போன்ற பல்வேறு பரிசோதனைகள் ஆரம்பகாலகட்டத்தில் நம்முடைய கைகளாலேயே மேற்கொள்ளப்பட்டது தற்போது QTP, Selenium, UFT போன்ற கருவிகளின் வாயிலாக தானாகவே சரிபார்த்து பரிசோதித்து அறியுமாறான வசதியாக மேம்பட்டுவிட்டது
2.அதற்கடுத்ததாக பயன்பாட்டு பரிசோதனை (Usability testing) ஆகும் இதன்கீழ் போட்டியாளர்களின் பயன்பாடுகளின்அனைத்து வசதிவாய்ப்புகளும் நம்முடைய இணைய பயன்பாட்டிலும் வாடிக்கையாளர்கள் அனவருக்கும் கிடைக்கின்றதா இலக்கணப்பிழை போன்றவை தானாகவே சரிசெய்து கொள்ளப்படுகின்றதா உதவி உள்ளடக்கஇணைப்பு சரியாக செயல்படுகின்றதா ஆகியவற்றை சரிபார்ப்பதற்காக Chalkmark, Clicktale, Clixpy, Feedback Army, Aplitools Eyes என்பன போன்ற கருவிகள் பேருதவியாய் விளங்குகின்றன
3.மூன்றாவதாக இடைமுகபரிசோதனை(Interface testing) இதன்கீழ் பயன்பாடுகளுக்கிடையேயான இடைமுகத்தினை சரிபார்த்திடுவதற்காக Application testing:எனும் பரிசோதனையும் பயன்பாட்டிற்கும் சேவையாளர் கணினிக்கும் இடையேயான இடைமுகத்தினை சரிபார்த்திடுவதற்காக Web server testing:எனும் பரிசோதனையும் தரவுதளத்துடன் பயன்பாடு இடைமுகத்தினை சரிபார்த்திடுவதற்காக Database server testingஎனும் பரிசோதனையும் செய்யப்படவேண்டும் இதற்காக AlertFox, Ranorex, SoapUI, Postman, Fiddler என்பன போன்ற கருவிகள் முக்கிய பங்காற்றுகின்றன
4.நான்காவதாக ஒத்திசைவு பரிசோதனை(Compatibility testing) இதன்கீழ் இணையபயன்பாடானது அனைத்து இணையஉலாவிகளுடனும் ஒத்திசைவாக செயல்படுகின்றதாவென Browsera, Browser Sandbox, Browsershots போன்ற கருவிகளை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம் மேலும் விண்டோ லினக்ஸ் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளுடனும் ஒத்திசைவாக செயல்படுகின்றதாவென Seleniumஎனும் கருவியை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம் அதுமட்டுமல்லாது iOS , Androidபோன்ற அனைத்து கைபேசி இயக்கமுறைமைகளுடனும் ஒத்திசைவாக செயல்படுகின்றதாவென Appium, Selendroid போன்ற கருவிகளை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம்.
5.ஐந்தாவதாக திறன்பரிசோதனை(Performance testing) மேலேற்றும் திறன், முறிவுபுள்ளி ஆகியவற்றை சரிபார்த்து பரிசோதி்த்திடவேண்டும் இதில்மிகமுக்கியமாக இணையபயன்பாடானது தொடர்ந்து இயங்கி கொண்டே யிருக்கும்போது இடையில் எந்தநேரத்தில் இடைமுறிவு ஏற்பட்டு தொங்கலாக நின்றுவிடும் என சரிபார்ப்பதற்கான Stress testing எனும் பரிசோதனையை Load Runner, Jmeter போன்ற கருவிகளை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம்
6.ஆறாவதாக மிகமுக்கியமான பாதுகாப்பு பரிசோதனையாகும்(Security testing) அனுமதியற்றவர்கள் பயன்படுத்தாமலிருக்குமாறும் மற்ற தீங்கு விளைவிக்கநினைப்போர் நம்முடைய பயன்பாட்டினை முடக்கிவிடாமல் காத்திடுவதற்கும் Babel Enterprise, Wapiti, Zed Attack Proxy, Vega, skipfish, Ratproxy , Arachniஎன்பனபோன்ற கருவிகளை கொண்டு பாதுகாப்பாக இருக்கின்றதாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளலாம்