குனு/லினக்ஸிற்கானNuTyX எனும் புதிய இயக்கமுறைமை

தற்போது NuTyX எனும் அதிக நெகிழ்வுத்தன்மையுடனான ஒரு முழுமையான குனு/லினக்ஸிற்கான இயக்கமுறைமை வெளியிடப்பெற்றுள்ளது , , .
இதனை பயன்படுத்தவிரும்பும் பயனாளர்கள் முதலில் குனு/லினக்ஸ் இயக்கமுறைமையின் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.
ஏனெனில் இதனுடைய ‘install-nutyx’ எனும் உரைநிரல் , சுதந்திரமான GRUB நிறுவுகையின் செயல்முறை, cards’ எனும்தொகுப்பு மேலாளர், collections, என்பன போன்ற அசல் கருத்துமைவுகள் குனு/லினக்ஸ்பற்றி குறைந்த அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்கக்கூடும்.
தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், லினக்ஸ் இயக்க முறைமை அமைவு எவ்வாறு ஒன்றிணைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் குனு/லினக்ஸ் இயக்கமுறைமையில தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்புவோர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த இயங்குதளமாகும்.
NuTyX ஆனது MATE, LXDE, LXQt, GNOME, KDE5 , XFCE வரைகலை இடைமுகங்கள் ஆகியவற்றினை எண்ணிம(Binary) வடிவத்தில் வழங்குகிறது.

NuTyX அதன் சொந்த தொகுப்பு மேலாளரான CARDS ஐப் பயன்படுத்திகொள்கிறது.
இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென துறைகளின் அமைவைப் பயன் படுத்துவதா, சொந்த மூலத் தொகுப்புகளைத் தொகுத்து நிறுவுகைசெய்வதா அல்லது கணினியில் இயல்பாக ஒருங்கிணைக்கப் பட்ட எண்ணிமதொகுப்புகளில் திருப்தி அடைவதா என்பதை முதலில் தீர்மானித்திடுக

NuTyX இன் 10 நன்மைகள்
1.வேறு எந்த விநியோகத்திலிருந்தும் NuTyX ஐ நிறுவுகைசெய்திடலாம், install-nutyx என பெயரிடப்பட்ட BASH உரைநிரலை பதிவிறக்கம் செய்யலாம்: அது என்ன செய்யும் என்பதற்காக திரையில் காண்பிக்கப்படும் விவரங்களை கவனமாகப் படித்தபின்னர், புரவலர் விநியோகத்திலிருந்து அதைத் தொடங்கிடுக. இது, உரைநிரலிற்கு தேவையான அனைத்து கருவிகளையும் மிகவிரிவாக சரிபார்க்கின்றது, பின்னர் குறைந்தபட்ச தொகுப்பிற்கான தொகுப்புகளின் பதிவிறக்கத்தைத் தொடங்குக, இறுதியாக நாம் விரும்பும் இடத்தில் அவற்றை நிறுவுகைசெய்திடுக
2. இதனுடைய படிநிலையிலான துறையின்(port) தொகுப்பு அமைப்பானது மென்பொருளை நிர்வகிப்பதில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஒவ்வொரு தொகுப்பும் அடிப்படை அமைப்பு, கட்டளை வரிகளின் பயன்பாடுகள் , நூலகங்கள், வரைகலை இடைமுகம், வரைகலை நூலகங்கள், அனைத்து மேசைக்கணினிகள் வரைகலை அல்லாத அல்லது வரைகலை பயன்பாடுகள். ஆகிய செயலிகளின் தொகுப்பிற்கு பொறுப்பாகும்.
3.துறையில்(porting)எனப்படும் மிக எளிய முறையானது, இதனுடைய களஞ்சியங் களிலிருந்து ஒரு செய்முறையைப் பதிவிறக்கம்செய்திட அனுமதிக் கிறது. இந்த செய்முறையானது CRUX இல் பயன்படுத்தப்படும் உரைநிரல் களுடன் மிகவும் ஒத்திருக்கிறது, மேலும் இது பொதுவாக 10 கட்டளை வரிகளுக்கு குறைவாகவே இருக்கின்றது. இதனைகொண்டு தேவையான அனைத்து சார்புகளையும் தீர்மானித்தபின்னர் பயன்படுத்த முடியும்.
4.இதனை ஒரு கோப்புறையில்( folder) நிறுவுகை செய்யப்பட்டவுடன், NuTyX இன் தனிப் பயனாக்கப்பட்ட நிறுவுகைசெய்யக்கூடிய ISO பதிப்பை உருவாக்குகின்ற திறனைக் கொண்டுள்ளது. நாம் விரும்பினால், புதிய நேரடி பதிப்பை மற்ற கணினிகளிலும் மீண்டும் நிறுவுகைசெய்திடலாம்.
5.இது ஒரு முழுமையான அடிப்படை எண்ணிம தொகுப்பு அல்லது தனிப்பட்ட அடிப்படை எண்ணிம தொகுப்புகளின் தேர்வை நிறுவுகைசெய்திட அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக: devel, man, doc , lib.
6.தனிப்பட்ட தரவிற்கு தனி HDD அல்லது பகிர்வு தேவையில்லை. இலக்கு வட்டு அல்லது பகிர்வை வடிவமைக்காமல்இதனுடைய NuTyX நிறுவியை நிறுவுகை செய்திடலாம் / மீண்டும் நிறுவுகைசெய்திடலாம்.
7.இது தனித்துவமான நிறுவுகைக்கான குறிமுறைவரிகளைக் கொண்டுள்ளது, இது NuTyX நிறுவியை ஏற்கனவே இருக்கின்ற இலக்கு பகிர்வை வடிவமைப்பதில் இருந்து தடுக்கிறது. இதன் பொருள் NuTyX தரவு உள்ள பகிர்வில் நிறுவுகை செய்திடலாம் என்பதாகும்: (எடுத்துக்காட்டாக) தனிப்பட்ட கோப்புகள், பல்வேறு அமைப்பு அல்லாத கோப்புறைகள்.
8.இது மிகவும் சக்திவாய்ந்த, எளிமையான கட்டளைவரிகளைக் கொண்டுள்ளது, இது அடிப்படை அமைப்பிற்கு மாற்றவும் , வரைகலை பயனர் இடைமுகத்தை முழுமையாக மாற்றவும் அனுமதிக்கிறது (உதாரணமாக KDE இலிருந்து XFCE க்கு). இது ஒவ்வொரு தொகுப்பையும் மீண்டும் நிறுவுகைசெய்வது அல்லது பதிவிறக்கம் செய்வது ஆகியபணிகளை தேவையற்றதாக ஆக்குகிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட தொகுப்புகள் இன்னும் புதுப்பித்த நிலையில் இருந்தால் தானாகவே மீண்டும் நிறுவுகைசெய்யப்பட்டுவிடும்.
9.இது glibc ஐத் தவிர வேறு சார்புகள் இல்லாமல், விரிவாக்கக்கூடிய தகவமைவுகளால் செய்யப்பட்ட முற்றிலும் தனித்துவமான தொகுப்பு மேலாளரைக் கொண்டுள்ளது. இதனுடைய எண்ணிம (இயக்கநேர) சார்புகளை தானாகவே கண்டறியும் திறன் அதன் வலுவான திறன்களில் ஒன்றாகும்.
10. chrootஇன் சிறப்பு சூழலில் ஒரு நிலைக்கு அனைத்து தொகுப்புகளையும் சரியாக தொகுக்கும் திறனை இது கொண்டுள்ளது. தொகுத்த பிறகு, உடைந்த இணைப்புகள் எதுவும் காணப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அனைத்து சார்புகளும் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றது.

இது குறித்து விரிவான வழிமுறைகள் செய்முறைகள் ஆகியவை இதனுடைய nutyx.org/en/ எனும் இணையமுகவரியில் கிடைக்கின்றன.

%d bloggers like this: