தற்போது உலகம் முழுவதும், பல்பொருள் இணையத்தினை(Internet of Things (IoT)) பயன்படுத்தி வருகின்றனர், இதன்வாயிலாக இன்று பில்லியன் கணக்கான சாதனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இவ்வாறான பல்பொருள் இணைய(IoT) தொடர்பு நெறிமுறைகள் இந்தச் சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவுகளைப் பாதுகாப்பதோடுமட்டுமல்லாமல் அவ்வாறான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
சாதனங்கள் அனைத்தும் இணையத்தில் இணைந்து இருக்கும் போதும் தகவல் தொடர்பு வலைபின்னலுடன் பாதுகாப்பாக இணைக்கப்படும் போதும் மட்டுமே பல்பொருள் இணைய (IoT) அமைப்பு செயல்படவும் தகவலை நன்கு பரிமாறிகொள்ளவும் முடியும். அவ்வாறான சூழலில்தான் பல்பொருள் இணைய (IoT) தரநிலைகளும் நெறிமுறைகளும் தேவைப்படுகின்றன. பொதுவாக பல்பொருள் இணைய (IoT) சாதனங்களை IP அல்லது IP அல்லாத வலைபின்னலைப் பயன்படுத்தி இணைக்க முடியும். IP வலை பின்னலின் இணைப்புகள் ஒப்பீட்டளவில் சிக்கலானவை, அதற்கு பல்பொருள் இணைய (IoT) சாதனங்களிலிருந்து அதிகரித்த நினைவகமும் சக்தியும் தேவைப்படுகிறது, இருப்பினும் இவ்வாறான வரம்பு ஒரு பிரச்சனையன்று. மறுபுறம், IP அல்லாத வலைபின்னல்கள் ஒப்பீட்டளவில் குறைந்த சக்தியும் நினைவகத்தையும் கோருகின்றன, ஆனால் அவை குறிப்பிட்டஅளவு வரம்பைக் கொண்டுள்ளன.
6
பல்பொருள் இணைய (IoT) நெறிமுறையின் கட்டமைப்பு( architecture)
பல்பொருள் இணைய (IoT) கட்டமைப்பானது பல்வேறு துறைகளில் அதன் செயல்பாட்டையும் செயல் படுத்தலையும் பொறுத்துஅமைகின்றது. பல்பொருள் இணையத்தின் (IoT) கட்டமைக்கப்பட்ட அடிப்படை செயல்முறையானது, மூன்றடுக்கு கட்டமைப்பு, ஐந்தடுக்கு கட்டமைப்பு ஆகிய இரண்டு முக்கியமான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
3-அடுக்கு பல்பொருள் இணைய (IoT) கட்டமைப்பு: இந்த3-அடுக்கு கட்டமைப்பு மிகவும் அடிப்படையானது. இது புலண்களால்உணர்தல், வலைபின்னல், பயன்பாடு ஆகிய மூன்றடுக்குகளால் ஆனது.
புலண்களால்உணர்தலின் (perception) அடுக்கு என்பது தொட்டுணரக்கூடி அடுக்கு ஆகும், இதில் தம்முடையச்சூழலில் இருந்து சேகரிக்கின்ற அனைத்துதரவுகளின் திறனுடைய உணர்விகளின் அடிப்படையிலான சாதனங்களும் அடங்கும்.
பிணைய(network ) அடுக்குஎன்பது அனைத்து கம்பியில்லாததும் கம்பி உடையது மான தொடர்பு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும், மேலும் இதுபல்பொருள் இணையச்(IoT)சூழல் அமைப்பிலுள்ள சாதனங்களின் பயன்பாடுகளுக்கு இடையே இணைப்புகளை வழங்குவதற்கு பொறுப்பாக அமைகின்றது. தரவுகளானவை பின்னர் பயன்பாட்டு அடுக்குக்கு அனுப்பப்படுகின்றன.
பயன்பாட்டு( application)அடுக்கு என்பது பயனாளருக்கு பயன்பாடு சார்ந்த சேவைகளை வழங்குவதற்கு பொறுப்பாக அமைகின்றது. திறனுடைய வீடுகள், திறனுடையநகரங்கள் , உடல்நலன் போன்ற பல்பொருள் இணையத்தில்(IoT) பயன்படுத்தக்கூடிய பல்வேறு பயன்பாடுகளை இது வரையறுக்கிறது.
5-அடுக்கு பல்பொருள் இணைய(IoT) கட்டமைப்பு: இது மூன்று அடுக்கு கட்டமைப்பின் நீட்டிப்பாகும், அதாவது வழக்கமான மூன்று அடுக்குகளுடன் செயலாக்கஅடுக்கு, வணிக அடுக்கு ஆகிய மேலும் இரண்டு அடுக்குகள் இதில் கூடுதலாகசேர்ந்துள்ளன -இதிலுள்ளபுலண்களால் உணர்தல்அடு்க்கும் பயன்பாட்டு அடுக்கும் 3-அடுக்கு கட்டமைப்பைப் போலவே செயல்படுகின்றன.
போக்குவரத்து( transport) அடுக்கானது உணர்திறன் அடுக்கிலிருந்து செயலாக்க( processing) அடுக்கிற்கும் , அதற்கு நேர்மாறாகவும் கம்பியில்லாத, Bluetooth, 3G, RFID , NFC போன்ற வலைபின்னல்களைப் பயன்படுத்தி உணர்விகளின் தரவுகளைக் கடத்துகின்றது.
செயலாக்க( processing) அடுக்கு அல்லது இடைநிலை (middleware) அடுக்குஎன்பது தரவுத்தளங்கள், மேககணினி, மீப்பெரும் தரவுசெயலாக்க தகவமைவுகள் போன்ற பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து அடுக்கிலிருந்து வரும் பெரிய அளவிலான தரவுகளைச் சேமித்து, பகுப்பாய்வு செய்கிறது, செயலாக்குகிறது.
பயன்பாடுகள்,வணிகசெயலாக்கங்கள் பயனாளர் தனியுரிமை உட்பட முழுமையான பல்பொருள் இணைய(IoT) அமைப்பையும் வணிக (business) அடுக்கு நிர்வகிக்கிறது.
7
பல்பொருள் இணைய(IoT) இணைப்புகளின் வகைகள்
ஒரு IoT அமைப்பு தரவுகளின் தொடர்பிற்கு நான்கு வகையான பரிமாற்ற அலைவரிசைகளின் இணைப்பினைக் கொண்டுள்ளது.
சாதனத்திலிருந்து மற்றொருசாதனத்துடனான(Device-to-device (D2D) )தொடர்பு எனும் நெறிமுறையிலான இணைப்பானது Bluetooth, ZigBee, அல்லது Z-Wave ஆகிய நெறிமுறைகளைப் பயன்படுத்தி, அருகாமையில் உள்ள சாதனங்களைத் தொடர்புகொள்வதற்கான இணைப்பினைஅனுமதிக்கிறது. வலைபின்னலில் இல்லாத இணைப்பை நிறுவுவது இந்தD2D இணைப்பின் மூலம் சாத்தியமாகின்றது.
8
சாதனத்திலிருந்து நுழைவுவாயில்(Device-to-gateway)தொடர்பு எனும் நெறிமுறையிலான இணைப்பானது இடைநிலை தளத்தைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கிறது. இதிலுள்ளநுழைவாயில்கள் பின்வருமாறான இரண்டு முக்கிய செயல்களைச் செய்கின்றன – முதலில், உணர்விகளிடமிருந்து தரவை ஒருங்கிணைத்து, தொடர்புடைய தரவு அமைப்பிற்கு அனுப்புதல், இரண்டாவதாக, தரவை பகுப்பாய்வு செய்தல், இந்நிலையில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால், அதை மீண்டும் சாதனத்திற்கேத் திருப்பி அனுப்புதல்.
நுழைவுவாயிலிலிருந்து தரவுஅமைவு (Gateway-to-data systems)தொடர்புஎன்பது ஒரு நுழைவுவாயிலிலிருந்து பொருத்தமான தரவு அமைப்பிற்கான தரவுகளின் பரிமாற்றம் ஆகும்.
தரவு அமைப்புகளுக்கிடையேயான தொடர்பு ஆனதுதரவு மையங்கள் அல்லது மேககணினிகளுக்குள் உள்ளது. இந்த வகையான இணைப்பிற்கு, நெறிமுறைகளை வரிசைப்படுத்தவும், ஏற்கனவே உள்ள பயன் பாடுகளுடன் ஒருங்கிணைக்கவும் எளிதாக இருக்க வேண்டும். அவைகள் அதிக இருப்பு, திறன் , நம்பகமான பேரழிவு மீட்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
நடைமுறைபயன்பாட்டிலுள்ள பல்பொருள் இணைய(IoT) நெறிமுறைகள்
தற்போது பின்வருமாறான இரண்டு வகை IoT நெறிமுறைகள் உள்ளன.
வலைபின்னல் அடுக்கு நெறிமுறைகள்: IoT வலைபின்னல் நெறிமுறைகள் வலைபின்னலில் உள்ள உயர் திறன் சாதனங்களுடன் ஊடகத்தை இணைக்கின்றன. இந்த நெறிமுறையைப் பயன்படுத்தி வலைபின்னல்களுக்குள் இரண்டு இறுதிபுள்ளிகளுக்குஇடையேயான(End-to-end) தரவுத் தொடர்பினை அனுமதிக்கின்றது. HTTP, LoRaWAN, Bluetooth, Zigbee ஆகியவை சில பிரபலமான பல்பொருள் இணைய(IoT) வலைபின்னல் நெறிமுறைகளாகும்.
9
பல்பொருள் இணைய(IoT) தரவு நெறிமுறைகள்: IoT தரவு நெறிமுறைகளின்படி குறைந்ததிறன் கொண்டIoT சாதனங்களை இணைக்கின்றன. எந்த இணைய இணைப்பும் இல்லாமல், இந்த நெறிமுறைகள் வன்பொருளுடன் இரண்டு இறுதிபுள்ளிகளுக்கு இடையேயான (End-to-end) தொடர்பிணை வழங்க முடியும். IoT தரவு நெறிமுறைகளில் இணைப்பினை கம்பிஇணைப்பு அல்லது cellular வலைபின்னல் மூலம் ஏற்படுத்தலாம். MQTT, CoAP, AMQP, XMPP, DDS ஆகியவை சில பிரபலமான IoT தரவு நெறிமுறைகள்ஆகும்.
பல்பொருள் இணைய(IoT) நெறிமுறைகளும் வலைபின்னல்களின் தரநிலைகளும்
பல்வேறு பயன்பாடுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பல்வேறு IoT நெறிமுறைகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொன்றும் வெவ்வேறு IoT காட்சிகளுக்குஏற்ப அதன் சொந்த நன்மைகளையும் தீமைகளையும் கொண்டுள்ளன. மிகவும் பரவலாகப் பயன்படுத்தி கொள்ளப்படுகின்ற சில IoT நெறிமுறைகள் பின்வருமாறு
1.செய்தி வரிசை தொலைஅளவி போக்குவரத்து (Message queue telemetry transport (MQTT)) நெறிமுறை இந்த திறமூல வெளியீட்டாளர்/சந்தாதாரர் செய்தி போக்குவரத்து நெறிமுறை ஆனது மிகவும் இலகுவானது , சிறிய சாதனங்களை கட்டுப்படுத்தப்பட்ட வலைபின்னல்களுடன் இணைக்க ஏற்றது. நம்பகத் தன்மையற்ற வலை பின்னல்களில் உணரிகள் கைபேசி சாதனங்கள் போன்ற குறைந்த அலை வரிசையில் செயல்படுகின்ற வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இது குறைந்த திறன், சிறிய குறியீட்டு தடம் ஆகியவற்றினைகொண்ட சாதனங்களை இணைப்பதற்கும், அலைவரிசைக் கட்டுப்பாடுகள் அல்லது நம்பகமற்ற இணைப்புகள் காரணமாக பல்வேறு நிலைகளில் தாமதம் உள்ள கம்பியில்லா வலைபின்னல்களுக்கும் இது மிகவும் விருப்பமான நெறிமுறையாக அமைகிறது. தரவின் நம்பகமான விநியோகத்தை வழங்க, பரிமாற்றக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணையநெறிமுறை (TCP/IP) ஆகியவற்றின் மேல் இது செயல்படுகிறது. இந்தMQTT ஆனது சந்தாதாரர், வெளியீட்டாளர், தரகர் ஆகிய மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது:
இந்த நெறிமுறையில் அடிப்படை பணிப்பாய்வு, ஒரு தரகர் மூலம் சந்தாதாரர்களுக்கு தகவலை உருவாக்குவதற்கும் அனுப்புவதற்கும் வெளியீட்டாளரின் பொறுப்பை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. சந்தாதாரர்கள் , வெளியீட்டாளர்களின் அங்கீகாரத்தை சரிபார்த்து பாதுகாப்பை உறுதி செய்வதே தரகரின் முக்கிய செயல்பாடாகும். இந்த நெறிமுறை IoT சாதனங்களுக்கு விரும்பப்படுகிறது, ஏனெனில் இது சிறிய, மலிவான, குறைந்த நினைவ கத்துடனான, திறனுடைய சாதனங்கள், குறைந்த அலைவரிசை வலை பின்னல்களுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தகவல் வழிசெலுத்தி செயல்பாடுகளை வழங்குகிறது. இதில் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, MQTT சேவையின் பின்வருமாறான மூன்று நிலைகளை (QoS) பயன்படுத்தி கொள்கிறது.
QoS0 (அதிகபட்சம் ஒரு முறைமட்டும்): இது குறைந்த நம்பகமான ஆனால் விரைவான பயன்முறையாகும். இதன்வாயிலாக எந்த உறுதிப்படுத்தலும் பெறப்படாமல் செய்தி அனுப்பப்படுகின்றது.
QoS1 (குறைந்தபட்சம் ஒரு முறைமட்டும்): நகல் செய்திகள் பெறப்பட்டாலும், இதன்வாயிலாக ஒருமுறையாவது செய்தி வழங்கப்படுவதைஇதுஉறுதி செய்கிறது.
QoS2 (மிகச்சரியாக ஒரு முறைமட்டும்): இது மிகவும் நம்பகமானது ஆனால் அதிக அலைவரிசையை உட்கொள்ளும் பயன்முறையாகும். நகல் செய்திகள் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதை இதன்வாயிலாக உறுதிசெய்ய கட்டுப்படுத்தப்படுகின்றது.
MQTT என்பது இரு-திசை தொடர்பு நெறிமுறையாகும், இதில் வாடிக்கை யாளர்கள் செய்திகளை வெளியிடுவதன் மூலமும் தலைப்புகளுக்கான குழுவில் சேர்வதன் மூலமும் தரவை உருவாக்கலாம், நுகரலாம். இருவழி தொடர்பு IoT சாதனங்களின் உணர்வியில் தரவை அனுப்பவும், ஒரே நேரத்தில் உள்ளமைவு தகவல் , கட்டுப்பாட்டு கட்டளைகளைப் பெறவும் உதவுகிறது. MQTT மூலம், TLS ஐப் பயன்படுத்தி செய்திகளை மறைகுறியாக்கம் செய்வது , நவீன அங்கீகார நெறிமுறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைச் சரிபார்ப்பது ஆகியவை இந்த நெறமுறையில் மிகவும் எளிதாகிறது.
10
2.கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டு நெறிமுறை (Constrained application protocol (CoAP)) என்பது IoT இல் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட சாதனங்கள் வலைபின்னல்கள் ஆகியவற்றிற்கான வலை பரிமாற்ற நெறிமுறையாகும். இது பயனாளர் ஒருவர் தரவுச்செய்தி நெறிமுறை (user datagram protocol (UDP)) மூலம் செயல்படுத்தலாம், மேலும் இது திறனுடைய சக்தி ,கட்டிடங்களின்தானியிங்கி அமைவு போன்ற இலகு எடையுள்ள இயந்திரத்திலிருந்து இயந்திரம் வரையிலான (LWM2M) தொடர்பைப் பயன்படுத்தி இணைக்கும் திறன் கொண்ட பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. LWM2M ஆனது IoT சாதனங்களின் தொலைநிலையிலான நிருவகிப்பதை அனுமதிக்கிறது, மேலும் அவற்றைப் பாதுகாப்பாகக் கண் காணிக்க வும் கட்டுப்படுத்தவும் இடைமுகங்களை வழங்குகிறது. இதுCoAP கட்டமைப்பு பிரபலமான REST மாதிரியை அடிப்படையாகக் கொண்டது, இதில் சேவையகங்கள் URL இன் கீழ் வளங்களை கிடைக்கச் செய்கின்றன, மேலும் GET, PUT, POST , DELETE போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இந்த ஆதாரங்களை அணுகலாம். CoAP , HTTP ஆகிய நெறிமுறைகள் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன, CoAP ஆனது IoTக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, மேலும் குறிப்பாக M2M க்கு. இது பதிலாளிற்கான தற்காலிக நினைவக திறன்களுடன் குறைந்த மேல்நிலையைக் கொண்டுள்ளது, மேலும் செய்திகளை ஒத்திசைவற்ற முறையில் பரிமாறிக் கொள்கிறது. CoAP இன் கட்டமைப்பு பின்வருமாறான இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன: 1செய்தி அனுப்புதல், இது செய்திகளின் நம்பகத்தன்மை , நகல்கள்ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்; 2.கோரிக்கை / பதில், இது தகவல்தொடர்புக்கு பொறுப்பாகும்.
செய்தி அடுக்குஆனது UDPஇற்கு மேல் உள்ளது, மேலும் IoT சாதனங்களுக்கும் இணையத்திற்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பொறுப்பாக அமைகின்றது. CoAP ஆனது உறுதிப்படுத்தக்கூடிய(confirmable message (CON)), உறுதிப்படுத்த முடியாத(non-confirmable message(NON)) , ஒப்புகைசெய்தி(acknowledge message (ACK)) , மீட்டமைவுசெய்தி(reset message (RST)) ஆகிய நான்கு வெவ்வேறு வகைகளான செய்திகளைக் கொண்டுள்ளது – 1.உறுதிப்படுத்தக்கூடிய செய்தி(CON) என்பது இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு(End-to-end) இடையில் பரிமாறப்படும் போது நம்பகமான செய்தியாகும். மறுமுனையில் ஒப்புகைச் செய்தியை (ACK) அனுப்பும் வரை அது மீண்டும் மீண்டும் அனுப்பப்படும். 2.ACK எனும் ஒப்புகைச்செய்தியில் CON இன் செய்தி சுட்டி உள்ளது. உள்வரும் கோரிக்கையை நிர்வகிப்பதில் சேவையகம் சிக்கலை எதிர்கொண்டால், அது ACKக்கு பதிலாக மீட்டமைவு செய்தியை (RST) திருப்பி அனுப்பலாம். முக்கியமான செய்திகளை பரிமாறிக்கொள்ள, நம்பகமற்ற NON செய்திகளைப் பயன்படுத்தலாம், அங்கு சேவையாளர் செய்தியை அங்கீகரிப்பதில்லை. நகல் செய்திகளைக் கண்டறிய NON செய்திகளுக்கு செய்தி சுட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோரிக்கை/பதில் என்பது CoAPஎனும் சுருக்க அடுக்கின் இரண்டாவது அடுக்கு ஆகும், இது கோரிக்கைகளை அனுப்ப CON அல்லது NON செய்திகளைப் பயன்படுத்தி கொள்கிறது. ஒரு சேவையகம் உடனடியாக பதிலளிக்கக்கூடிய சூழ்நிலைகளில், ஒரு கோரிக்கை ஒரு CON செய்தியைப் பயன்படுத்தி அனுப்பப் படுகின்றது, அதில் ஒரு ACK செய்தி பதிலைக் கொண்டிருக்கின்றது அல்லது பிழைக் குறியீடு சேவையகத்தால் திருப்பி அனுப்பப்படுகின்றது. கோரிக்கை, பதில் ஆகிய இரண்டும் ஒரே அனுமதிச்சீட்டுகளைக் கொண்டுள்ளன, செய்தி சுட்டியிலிருந்து வேறுபட்டது. சேவையகம் உடனடியாக பதிலளிக்க முடியாத இடங்களில், எந்த உள்ளடக்கமும் இல்லாமல் ACK செய்தியை அனுப்புகிறது. பதில் தயாரானதும், பதிலைக் கொண்ட புதிய CON செய்தி வாடிக்கையாளருக்கு திருப்பி அனுப்பப்படுகின்றது, மேலும் வாடிக்கையாளர் ஆனவர் தன்னால்பெறப்பட்ட பதிலை ஒப்புக்கொள்கிறார்.
3.மேம்பட்ட செய்தி வரிசை நெறிமுறை (Advanced message queuing protocol (AMQP)) என்பது ஒரு திறந்த நிலையான பயன்பாட்டு அடுக்கு நெறிமுறையாகும், இது உயர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, எளிதாக வழங்குதல் இயங்கக்கூடிய தன்மை ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இணைப்பு-சார்ந்த நெறிமுறையாகும், அதாவது வாடிக்கையாளர் ,தரகர் ஆகியோர் தரவை மாற்றுவதற்கு முன் இணைப்பை நிறுவுகைச்செய்திட வேண்டும், ஏனெனில் TCP ஒரு போக்குவரத்து நெறிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. AMQP ஆனது நம்பகமான செய்தி விநியோகத்திற்காக 1.அமைதியற்ற வடிவம் (MQTT என்பதன் QoS0 போன்றது) , 2.தீர்வு வடிவம் (MQTTஎன்பதன் QoS1 போன்றது) ஆகிய QoS இன் இரண்டு நிலைகளை வழங்குகிறது . AMQP , MQTT ஆகிய தரநிலைகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், AMQP இல் தரகர் ஆனவர் பரிமாற்றம், வரிசைகள் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளாகப் பிரிக்கப்படுகிறார் – . வெளியீட்டாளர் செய்திகளைப் பெறுவதற்கும் அவற்றை வரிசைகளில் பரிமாறிக் கொள்வதற்கும்(Exchange) பொறுப்பாகின்றார். சந்தாதாரர்கள் அந்த வரிசைகளுடன் இணைகிறார்கள், அவை அடிப்படையில் தலைப்புகளைக் குறிக்கின்றன, மேலும் அவை கிடைக்கும்போதெல்லாம் உணர்விகளின் தரவைப் பெறுகின்றன.
11
4.தரவு விநியோக சேவை (Data Distribution Service (DDS)) என்பது பொருட்களின் நிருவாக குழுவிலிருந்து தரவு மையப்படுத்தப்பட்ட இணைப்பிற்கான ஒரு இடைநிலை நெறிமுறையாகும், இது குறைந்த தாமதம், தரவு இணைப்பு, தீவிர நம்பகத்தன்மை, வணிகப்பணி ஆகிய-முக்கியமான IoT பயன்பாடுகளுக்கான அளவிடக்கூடிய கட்டமைப்பை வழங்குகிறது. இந்த நெறிமுறை தரவு பரிமாற்றத்தில் பல்முனைபரப்பல்(multicasting) நுட்பங்களை ஆதரிக்கிறது , சிறிய நினைவக தடம் சாதனங்களிலும் பயன்பாடுகளிலும் உயர்தர QoS கொண்டுள்ளன. இதிலுள்ள செய்தியிடல் மாதிரியானது தரவு மையப்படுத்தப்பட்ட, வெளியிடுதல்-சந்தா (DCPS), தரவு உள்ளூர், மறுகட்டமைப்பு அடுக்கு (DLRL) ஆகியஇரண்டு இடைமுக அடுக்குகளைக் கொண்டுள்ளது . இதனுடையDCPS அடுக்கு, வெளியீட்டாளர் / சந்தாதாரர் செயல்முறையின் போது ஒரு பயன்பாட்டிற்குள் தரவு பொருட்களின் மதிப்புகளை பிணைப்பதற்கு பொறுப்பாகின்றது. DLRL என்பது பயன்பாட்டு மட்டத்தில் DDS ஐ ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு விருப்ப அடுக்கு ஆகும்.
12
DCPS இல் – DataWriter உடன் வெளியீட்டாளர் , DataReader உடன் சந்தாதாரர் ஆகிய இரண்டு முக்கிய கட்டமைப்புகள் உள்ளன . ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட தரவு வகைக்கும் தரவு பொருட்களின் மதிப்புகளை பிணைக்க ஒரு வெளியீட்டாளர் DataWriter ஐப் பயன்படுத்துகிறார். QoSஇன் கொள்கைகள் ஏதேனும் இருந்தால், அவற்றைப் பின்பற்றும் போது தரவு விநியோகத்திற்கு இது பொறுப்பாகும். தரவுஎழுதுபவர்(DataReader), ஒரு பயன்பாட்டிற்கு தரவுப் பொருட்களுடன் தொடர்புடைய தரவை எழுத வேண்டியிருக்கும் போது வெளியிட வேண்டிய தரவை விவரிக்கின்றார். ஒரு பயன்பாட்டிலிருந்து முன் வரையறுக்கப்பட்ட QoS கொள்கைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவைப் பெறுகிறார். latteஇலிருந்து தரவை மீட்டெடுக்க, சந்தாதாரருடன் இணைக்கப்பட்ட தரவுபடிப்பாளரை ஒரு பயன்பாடு பயன்படுத்திகொள்கிறது. இது தரவுபடிப்பாளரால் விவரிக்கப்பட்ட தரவுக்கு சந்தா செலுத்துகிறது, இது அறியப்பட்ட சந்தாதாரரால் வழங்கப்படுகிறது. தலைப்புகளைப் பயன்படுத்தி தரவுப் பொருட்களை வெளியிடுவதும் சந்தா செலுத்துவதும் செய்யப்படுகிறது. ஒரு தலைப்பு ஒரு பெயர், தரவு வகை , தரவு தொடர்பான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட QoS கொள்கைகளுடன் தொடர்புடையது. செய்தியிடல் மாதிரியில் தரவு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை நிர்வகிக்க QoS கொள்கைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு, ஆயுள், நம்பகத்தன்மை போன்ற பல அம்சங்களுடன் 23 வெவ்வேறு QoS நிலைகளை DDS வழங்குகிறது. , DDS இல் உள்ள DCPS அடுககின் தகவல்தொடர்பு மாதிரியின் உயர்மட்ட கண்ணோட்டத்தை அளிக்கிறது
இன்று இருக்கும் பல IoT செய்தியிடல் நெறிமுறைகளுக்கு இடையே உள்ள அடிப்படை ஒற்றுமைகளான IoT அமைப்புகளின் வடிவமைப்பு , வரிசைப்படுத்தல் முழுவதும் அவை இணைந்து செயல்படும் திறனைக் கொண்டுள்ளன என்று கூறுகின்றன. IoT சாதன வகைகள், அவை ஆதரிக்கக்கூடிய நெறிமுறைகளின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, IoT அமைப்புகள் IoT தரவு பரிமாற்றத்திற்காக பல நெறிமுறைகளைப் பயன்படுத்துவது அரிதானது அன்று. IoT சாதனங்களின் இணைப்பிற்கு செய்தியிடல் நெறிமுறைகள் முக்கிய கூறுகளாக இருப்பதால், பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் பலத்தையும் பலவீனங்களையும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.