மிகவும் பிரபலமான பத்து நிரலாக்க மொழிகள்

மைக்ரோசாப்ட்எனும் நிறுவனத்திற்கு சொந்தமான GitHub இனுடைய மிகப்பெரிய திறமூல தளங்களுடனான தொடர்புகளை யும் இணைய அணுகலையும் கருத்தில் கொண்டு இணையவெளியில் திறமூல தளங்கள் தொடர்பான இதனுடைய (GitHub) வருடாந்திர அறிக்கையானது நிரலாளர்கள் பயன்பாடுகளின் மேம்படுத்துநர்கள்ஆகியகுழுக்களின் போக்குகளைபற்றி அறிந்து கொள்வது மிகவும் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களிடையே எந்தெந்த நிரலாக்க மொழிகள் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதைக் கண்காணிக்கவும், காலப்போக்கில் குறிப்பிட்ட நிரலாக்க மொழியின் புகழ் எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்காகவும், 12,000 இற்குமேற்பட்ட மேம்படுத்துநர்களை கொண்ட கணக்கெடுப்பில் இருந்து GitHubஎனும் தளமானது தரவுகளைத் தொகுத்துள்ளது. அவ்வாறான இந்த
GitHub இன் வருடாந்திர கணக்கெடுப்பின்படி,2021ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான பத்து நிரலாக்க மொழிகள் பின்வருமாறு
#1: ஜாவாஸ்கிரிப்ட்: GitHub 2014 இல் கணினி மொழிகளை தரவரிசைப்படுத்தத் தொடங்கியதிலிருந்து ஜாவாஸ்கிரிப்ட் உலகின் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாக வலுவாக உள்ளது.இந்த கணினி மொழியானது அதன் முதல் தோற்றமான நெட்ஸ்கேப் என்பதிலிருந்து மிகநீண்ட தூரம் பயனித்துவந்துள்ளது, ஆயினும் தற்போது அனைத்து இணையதளபக்கங்களிலும் இதனுடைய குறிமுறைவரிகள் 97% க்கும் மேலாக இயங்குகிறது,. ஜாவாஸ்கிரிப்ட்டை செயல்படுத்துவது எளிதானது நெகிழ்வானது என்பதால் தாம் விரும்புவதாக பெரும்பாலான மேம்படுத்துநர்கள்(W3Techs)கூறுகிறார்கள்.இந்த கணினி மொழியானது இணையதளங்களுடன் ஊடாடக் கூடியதாகவும் மாறும் தன்மை யுடனும் இருக்க அனுமதிக்கிறது – எடுத்துக் காட்டாக,இது Google தேடலின் தன்னியக்க வசதி போன்ற அன்றாட செயலிகளின்அடிப்படையாக இருக்கிறது. இந்த கணினி மொழியானது GitHub இன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது

#2: பைதான்:. பைதான் மிகவும் பிரபலமான திறமூல மொழிகளில் ஒன்றாகும், மேலும் இது தரவு அறிவியலில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது ,செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்கு இது உதவுகின்றது சில நிரலாளர்கள் பைத்தானை துவக்க நிலையாளர்களுக்கு மிகவும் ஏற்ற நிரலாக்க மொழி என்று பரிந்துரைக் கின்றனர். . ஏனெனில் இது பயன்படுத்த எளிதானது, மேலும் இது எளிய ஆங்கிலத்தை ஒத்த மிக நெருக்கமான குறிமுறைவரிகளை கொண்டுள்ளதால், கற்பிப்பதை எளிதாக்குகிறது. இந்த கணினி மொழி ஒரு குறிப்பிடத்தக்க பெரிய உணர்ச்சிமிக்க சமூக ஆதரவைக் கொண்டுள்ளது, GitHub இன் பட்டியலில் பைதான் இரண்டாவது நிரலாக்க மொழியாகும்.

#3: ஜாவா:பொதுவாக பின்-இறுதி மேம்பாட்டுத் திட்டங்கள், மேசைக்கணினி, பயன்பாடுகள், கைபேசி பயன்பாடுகள், தரவுத்தளங்கள் போன்ற பலவற்றிற்கு இந்த நிரலாக்கமொழி பயன்படுத்தப்படுகிறது. இப்போது செயல்படாத நிரலாக்க மொழியான Oak எனப்படும் நிரலாக்க மொழியிலிருந்து உருவாகி, பொருள் சார்ந்த கணினி மொழியாக இது மேம்படுத்தப்பட்டுவந்துள்ளது, இது ஆரக்கிள் நிறுவனத்திற்கு சொந்தமான சன் மைக்ரோசிஸ்டம்ஸ் எனும் நிறுவனத்தால் உருவாக்கிய குறிமுறைவரிகளை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. இது பல்துறை கணினி மொழிகளான C, C++, C# ஆகியவற்றினை ஒத்திருக்கிறது.
இந்த கணினி மொழியானது 2019 ஆம் ஆண்டில் பைத்தானைப் பின்தள்ளி னாலும், தற்போது GitHub இன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது இருந்த போதிலும், இது இன்னும் மேம்படுத்துநர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. Glassdoor இன் 2021 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவில் 50 சிறந்த பணிகளின் பட்டியலில் hottest role ஆக இருப்பது ஜாவா மேம்படுத்துநர்கள் மட்டுமேயாகும், இந்த கணினி மொழியின் அடிப்படையில்10,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இருப்பதாக Insider முன்பு அறிவித்தது. இந்த கணினி மொழியானது GitHubஇன் பட்டியலில் மூன்றாவதாகஉள்ளது

#4: டைப்ஸ்கிரிப்ட்:. இது ஜாவாஸ்கிரிப்ட்டுடன் நேரடியாக தொடர்ச்சியான கணினி மொழியாகும். இது JavaScript இன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது, மேலும் JavaScript இல் எழுதப்பட்ட எந்த நிரலும் TypeScript இல் இயங்குகின்ற திறனுடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டைப்ஸ் கிரிப்ட்டை அதன் முன்னோடியிலிருந்து வேறுபடுத்துகின்ற பின்வரும்இரண்டு வேறுபாடுகள் உள்ளன. இதில் ஜாவாஸ்கிரிப்ட்டில் இல்லாத வலுவான தட்டச்சு செய்திடுகின்ற வசதி உள்ளது, இது தொடரியல் சிக்கல்களுக்கு உதவுக்கூடும். மேலும், ஜாவாஸ்கிரிப்ட் போன்றில்லாமல், இது ஒருபொருள் சார்ந்த கணினி மொழியாகும், இது குறிமுறைவரிகளை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது, மேலும் இது பெரிய அளவிலான செயல்திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த கூடுதல் வசதிகள் டைப்ஸ்கிரிப்ட்டின் பிரபலம் அடைவதற்கு உதவியுள்ளன: இது கடந்த ஐந்து ஆண்டுகளில் GitHub இன் பட்டியலில் பத்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

#5: சி#: இணையதளங்கள் , பயன்பாடுகள் ஆகியவற்றின் மேம்பாட்டில் இதனுடைய பரந்த பயன்பாடு , ஜாவாவுடனான ஒற்றுமைகள் காரணமாக மேம்படுத்துநர்கள் இந்த C# எனும் கணினி மொழிக்கு ஆதரவாக பயன்படுத்தி கொள்ள விரும்புகின்றனர். மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தின், டைப்ஸ் கிரிப்ட்டின் பொறியாளர் ஆண்டர்ஸ் ஹெஜ்ல்ஸ்பெர்க் என்பவர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு C# ஐ உருவாக்கினார். இணையம் , பயன்பாடுகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக இது பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மொழி மிகவும் பிரபலமடைந்து, தற்போது GitHub இன் பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி யுள்ளது, ஏனெனில் C# இன் மேம்படுத்து நர்களின் பெரிய குழுவானது இந்த கணினிமொழியின் திறன்களை தொடர்ந்து உயர்த்துகொண்டேயுள்ளது.

#6: PHP:சில மேம்படுத்துநர்கள் PHP ஐ மோசமான நிரலாக்க மொழிகளில் ஒன்றாகக் கேலி செய்கின்றனர். PHP மீயுரை முன்செயலி Hypertext Preprocessor— என்பதன் சுருக்கெழுத்து பெயரே PHPஆகும் இதனுடைய முதலெழுத்தான P என்பது PHP ஐக் குறிக்கிறது — இது இணைய பக்க உருவாக்கததிலும் , ஊடாடும் இணையப் பக்கங்களை உருவாக்குவதிலும் இது முதன்மையாக இருக்கின்ற ஒரு திறமூல நிரலாக்க மொழியாகும். இது தரவுத்தளங்களுடனும் நன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது, மேலும் இது Facebook , Yahoo ஆகிய இணையதளங்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேம்படுத்துநர்களிடம் இருந்து இந்த இன்றியமையாத இணைய மேம்பாட்டுக் கருவியானது பிரிந்திருப்பதாகத் தெரியவருகிறது. புதிய கணினி மொழிகளுடன் ஒப்பிடும் போது திறமையற்ற வடிவமைப்பு , நிபுணத்துவம் இல்லாததைக் காரணம் காட்டி சிலர் PHPயை மோசமான நிரலாக்க மொழிகளில் ஒன்றாகக் கேலி செய்கின்றனர். 80,000இற்கு மேற்பட்ட நிரலாளர்களிடமும் இணையதள மேம்படுத்துநர்களிடமும் எடுத்த கணக்கெடுப்பின்படி, PHP நிரலாளர்கள் மற்ற கணினிமொழி நிரலாளர்களைவிட மிககுறைவான ஊதியம் பெறுகின்றனர் எனத் தெரியவந்துள்ளது .ஆயினும்கூட, இந்த கணினி மொழியானது தொடர்ந்து சில பிரபலங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஏனெனில் இது இணையதள பயன்பாட்டில் கிட்டத்தட்ட 79% ஐத் தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது, இந்த கணினிமொழியானதுGitHub இன் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது

#7: சி++: இந்த கணினி மொழியானது Xbox போன்ற பணியகங்கள் உட்பட விளையாட்டுகளின் மேம்பாட்டிற்கு அடிப்படையாக இருக்கிறது. இதனை(C++), C-plus-plus என ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது, இது C இன் வம்சாவளியாகும். இதன் அசல் பெயர், C உடன் இனங்கள்classesஆகும் , இதுவே C , C++ ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உயர்த்தி காட்டுகிறது C++ எனும் கணினி மொழியானதுபொருள் சார்ந்த வசதிகளைச் சேர்த்ததாகும், இது நிரலாக்கத்தின் வகை உண்மை உலகத்துடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது சி எனும் கணினிமொழியில் இல்லாத புதிய தரவு செயலிகளைச் சேர்ப்பதை எளிதாக்குகிறது.
1990 களில் C++ மிகவும் பிரபலமான நிரலாக்க மொழிகளில் ஒன்றாக இருந்தது, ஆனால் தற்போது அதனுடைய பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. பல இயக்க முறைமைகளில், இணைய உலாவிகளில் இது ஒரு முக்கிய கணினி மொழியாக இருந்தாலும், தேர்ச்சி பெறுவதற்கு கடினமான மொழிகளில் இதுவும் ஒன்றாகும், புதிய மேம்படுத்துநர்கள் இதனை தெரிவுசெய்வதைஇது எளிதாக்கு கிறது. ஆனால், இது இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக விளையாட்டுகளின் மேம்பாட்டில், இது box Playstation போன்ற பணிய கங்களையும், World of Warcraft,போன்ற விளையாட்டுகளையும் இயக்குகிறது.C++ எனும் கணினிமொழியானது GitHub இன்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது

.#8: Shell:தொலைநிலையில் பயன்பாடுகளை நிறுவுகைசெய்தல் அல்லது நீக்குதல் போன்ற பொதுவான செயல்முறைகளை தானியக்கமாக்க இந்த கணினி மொழியை பயன்படுத்தலாம். குறிமுறைவரிகளைத் தொகுத்தல், நிரல் சூழலை உருவாக்குதல் அல்லது வழக்கமான காப்புப்பிரதிகளைச் செய்தல் போன்ற அடிக்கடி செயல்படுத்தப்படும் பணிகளைத் இதன் வாயிலாக தானியக்கமாக்குவது எவ்வளவு எளிது என்பதன் காரணமாக இதுமிகவும் பிரபலமாக உள்ளது. இதனுடைய உரை நிரல்களின் மூலம் மிகவும் திறமையாகச் செய்யக்கூடிய பணிகளில் தொடர்ந்து செயல்படுகின்ற தகவல் தொழில்நுட்ப IT நிபுணர்களுக்கு இதுபேருதவியாக இருக்கின்றது. இந்த 2021 ஆம் ஆண்டு,GitHub இன்பட்டியலில் மிகவும் பிரபலமான எட்டாவது நிரலாக்க மொழியாக Cஎனும் கணினிமொழியை இது முந்தியுள்ளது.

#9: சி: இது ஆரம்பகால நிரலாக்க மொழியாக இருந்தபோதிலும், இந்த C எனும் கணினி மொழியின் புகழ் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து கொண்டே வந்துள்ளது. மேம்படுத்துநர்கள் பொதுவாக இந்த கணினிமொழியை அதன் பெயர்வுத்திறன் காரணமாக இயக்க முறைமைகளை வடிவமைக்க பயன்படுத்தி கொள்கின்றனர், அதாவது வெவ்வேறு இயக்க முறைமை களில் இதை எளிதாகப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, லினக்ஸ், யூனிக்ஸ் ஆகிய இரண்டும் இந்த சி எனும் கணினி மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. ஆனால் 1970களில் கென் தாம்சன் , டென்னிஸ் ரிச்சி ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஆரம்பகால நிரலாக்க மொழியாக இது இருந்தபோதிலும், இதனுடைய புகழ் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துவிட்டது. இது GitHub இன் பட்டியலில் எட்டாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்திற்குச் சரிந்துவிட்டது.

#10: ரூபி:கடந்த பத்தாண்டுகளில் ரூபியின் புகழ் சரிந்துகொண்டேவந்துள்ளது. இந்த கணினி மொழியானது1990 களில் Yukihiro “Matz” Matsumoto என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது, திற மூல நிரலாக்க மொழியான இந்த ரூபி எனும் கணினி மொழியானது பைத்தானைப் போலவே ஆங்கில மொழி கட்டமைப்பைப் பின்பற்றுகிறது. கடந்த தசாப்தத்தில் ரூபியின் புகழ் சரிந்துகொண்டேவந்துள்ளது, மேலும் 2018 ஆண்டு முதல் GitHub இன் முதல் பத்து பிரபலமான நிரலாக்க மொழிகளின் பட்டியலில் கடைசியாக உள்ளது.

%d bloggers like this: