பொதுவாக நாம் அனைவரும் பயன்படுத்தி வருகின்ற கணினியில் செயல்படும் திறன்கொண்ட அதிநவீன அறிவியல் ஆய்விற்கு உதவுகின்ற கையடக்க BOINC 7.16.5 Rev 2 எனும் பயன்பாடானது தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப் பட்டுள்ளது. இந்த கையடக்க BOINC என்பது ஒரு சிறிய பயன்பாடாக தொகுக்கப்பட்ட விநியோகிக்கப்பட்ட கணினி செயல் திட்டமாகும்,, எனவே நம்முடைய பயணத்தின் போது அல்லது நிர்வாக உரிமைகள் இல்லாமல் எந்தவொரு கணினியிலும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இது PortableApps.com எனும் வலைதளத்தின் வழிகாட்டுதலின்படி கையடக்க வடிவமைப்பில் உள்ளதால் இது PortableApps.com இயங்குதளத்துடன் எளிதாக ஒருங்கிணைக்க முடியும். அதுமட்டுமல்லாது இது ஒருகட்டற்ற கட்டணமற்ற கையடக்கபயன்பாடாகும்.இது நம்முடைய கணினியைப் பயன்படுத்தி அதிநவீன அறிவியல் ஆய்வுசெய்திட நம்மை அனுமதிக்கிறது. இந்த கையடக்கBOINC பயன்பாடானது அறிவியல் கணக்கீட்டு பணிகளை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து பின்னணியில் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குகின்றது. இது பயன்படுத்த எளிதானது மேலும் பாதுகாப்பானது. இதுவரையில் இந்த கையடக்க BOINC பயன்பாட்டினை Einstein @ Home, IBM World Community Grid, Rosetta @ home. என்பன போன்ற சுமார் 30 அறிவியல்செயல் திட்டங்களில் பயன்படுத்தி கொள்ளப் படு கின்றது. இந்த செயல்திட்டங்கள் மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை ஆய்வு செய்கின்றன, புவி வெப்பமடைதலைப் படிக்கின்றன, pulsars எனும் நட்சத்திர கூட்டங்களை கண்டுபிடிக்கின்றன, மேலும் பல்வேறு வகையான அறிவியல் ஆய்வுகளைச் செய்கின்றன. முன்னிருப்பாக இது பணி செய்யும் போது செயல் திட்டங்கள் நம்முடைய சாதனத்தில் பல ஜிகாபைட் அளவிற்கு தரவுகளைப் பயன் படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க. விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து, முன்னுரிமைகளை கணக்கிடுவதன் மூலமும்,”Use no more than XX GB of disk space” எனும் பெட்டியை சரிபார்த்து ஒரு மதிப்பை உள்ளிடுவதன் மூலமும் இதை சரி செய்யலாம்.விண்டோஸ், மேக், லினக்ஸ், ஆண்ட்ராய்டு ஆகிய அனைத்திலும் இது செயல்படுகின்ற திறன்கொண்டது . நாம் இதனுடைய ஆய்வுகளில் பின்வரும் இரண்டு வழிகளுள் ஒன்றில் பங்கேற்கலாம்:
1. ஒருங்கிணைந்த அறிவியிலில்( Science United) சேருதல்: நாம் விரும்பும் அறிவியல் பகுதிகளைத் தேர்வுசெய்க அறிவியல் பகுதிகளுக்கு (பயோமெடிசின், இயற்பியல், வானியல் மற்றும் பல) பங்களிக்க இந்த ஒருங்கிணைந்த அறிவியலை ( Science United) பயன்படுத்திகொள்க. நம்முடைய கணினியின் வாயிலாக அந்த பகுதிகளில் தற்போதைய மற்றும் எதிர்கால செயல்திட்டங்களில் பணிபுரியுமுடியும். 2. பதிவிறக்கம்செய்தல்: விரும்பும் செயல்திட்டங்களைத் தேர்வுசெய்க குறிப்பிட்ட செயல்திட்டங்களுக்கு பங்களிக்க, கையடக்க BOINC ஐப் பதிவிறக்க வழிமுறை களைப் பின்பற்றிடுக கையடக்க BOINC ஐ நிறுவிய பின், நாம் விரும்பும் பல்வேறு செயல்திட்டங்களுடன் இதை இணைக்கலாம். நாம் மெய்நிகர் பெட்டியையும் நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்.