ஆண்ட்ராய்டில் திறவுகோள் உருவப்பொத்தான் (Key Icon) ஏன் உள்ளது?

By | November 15, 2026

நம்முடைய ஆண்ட்ராய்டு திறன்பேசியின் நிலைபட்டியலில் வீற்றிருக்கின்ற ஒரு சிறிய திறவுகோள் உருவப்பொத்தான் ஆனது அங்கு ஏன் இருக்கின்றது அல்லது அதற்கான அர்த்தம் அல்லது அதற்கான காரணம் என்ன என்று நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? உண்மையில் அது நமக்கு ஏதேனுமொரு எச்சரிக்கை அளிப்பதை போன்று தோன்றினாலும் அல்லது நம்முடைய சாதனத்தில் ஒரு சிக்கல் இருப்பதைக் குறிப்பது போன்றுத் தோன்றினாலும், பொதுவாக நாம் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அந்த திறவுகோள் உருவப்பொத்தான் ஆனது ஏதேநுமொரு சிக்கலைப் பற்றி நம்மை எச்சரிப்பதற்காக அங்கு இல்லை—நம்முடைய திறன்பேசி ஒரு மெய்நிகர் தனிப்பட்ட வலைபின்னலுடன் (Virtual Private Network (VPN)) தீவிரமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே அது குறிக்கிறது. அந்த திறவுகோள் உருவப்பொத்தான் நமக்கு என்ன சொல்கிறது? நம்முடைய இணையப் போக்குவரத்து ஒரு தொலைநிலை சேவையாளர் வழியாக அனுப்பப்படும் போதெல்லாம் இந்த திறவுகோள் உருவப்பொத்தான் தோன்றும். இது நம்முடைய IP முகவரியை மறைக்கிறது, நம்முடைய தரவை மறைகுறியாக்கம் செய்கிறது, மேலும் நம்முடைய இணையஇணைப்பின் தனியுரிமையை பின்தொடர்பவர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. நாம் இவ்வாறு இணையதொடர்பை பயன்படுத்தும்போது இந்த சின்னம் தோன்றக்கூடும்: தனிப்பட்ட VPN பயன்பாடுகள், மூன்றாம் தரப்பு பாதுகாப்பு, வைரஸ் தடுப்பு மென்பொருள், நம்முடைய சாதனத்தில் உள்ளூரில் இயங்கும் விளம்பரத் தடுப்பான் பயன்பாடுகள். நிலைப்பட்டியுடன் கூடுதலாக, பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் விரைவு அமைவுகளின் பலகத்தில் ஒரு பாதுகாப்பான VPN இணைப்பு செயலில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் அறிவிப்பு பேனரைக் காண்பிக்கும். எந்த VPN செயலில் உள்ளது என்பதைச் சரிபார்ப்பது எப்படி?

நமக்கு தெரிந்தே ஒரு VPN-ஐ இயக்கவில்லை என்றால், பின்னணியில் எந்தப் பயன்பாடு இயங்குகிறது என்பதைச் சரிபார்ப்பது நல்லது. Android-இல் நம்முடைய VPN அமைவுகளைக் கண்டறிவது எளிதானதும் விரைவானதுமாகும்: ‘Settings’-ஐத் திறக்கவும்: நம்முடைய திறன்பேசியின் முக்கிய ‘Settings’ எனும் பகுதிக்குச் செல்க. பின்னர் அதிலுள்ள ‘Connections’ என்ற பகுதிக்குச் செல்க: அங்கு சாதாரண Android சாதனங்களில் (Google Pixel போன்றவை), ‘Network & Internet’ என்பதைத் தட்டுக அல்லது VPN-ஐத் தேடிடுக. Samsung சாதனங்களில், Connections $\rightarrow$ More connection settings $\rightarrow$ VPN என்பதற்குச் செல்க. அதனை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ள இணைப்புகளைச் சரிபார்த்திடுக: நிறுவுகைசெய்யப்பட்ட VPN சேவைகளின் பட்டியலையும், தற்போது எந்தச் சேவை இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் திரையில் காணலாம்.

இதை ஏன் அணைத்துநிறுத்த விரும்புகின்றோம்?

தனியுரிமைக்கு VPN-கள் சிறந்த கருவிகளாக இருந்தாலும், அவற்றை 24 மணிநேரமும் செயல்பாட்டில் வைத்திருப்பது எப்போதும் நடைமுறைக்கு ஏற்றதன்று:

குறைவான இணைய வேகம்: கூடுதல் சேவையாளர்கள் வழியாகத் தரவுப் பரிமாற்றம் (traffic) நடைபெறுவதால் தாமதம் (latency) ஏற்படுகிறது; இது தொடரோட்டம், இணைய விளையாட்டு ஆகியவற்றினைப் பாதிக்கலாம்.

செயலி இணக்கமின்மை: பல வங்கிச் செயலிகள், தொடரோட்ட தளங்கள், குறிப்பிட்ட பகுதிகளுக்கான அணுகல் கட்டுப்பாடுகளை மீறுவதைத் தடுக்க VPN பயன்பாட்டைக் கண்டறிந்து தடுக்கின்றன.

மின்கலண் பயன்பாடு: மறைகுறியாக்கம் செய்யப்பட்ட இணைப்பை (encrypted tunnel) பராமரிக்க கூடுதல் செயலாக்கத் திறன் தேவைப்படுகிறது, இது நம்முடைய மின்கலணின் மின்சாரத்தினை சற்று வேகமாக காலிசெய்யக்கூடும்.

‘திறவுகோள்(Key)’ குறியீட்டை எவ்வாறு அகற்றுவது?

‘திறவுகோள்(Key)’ குறியீட்டை மறைக்க, செயல்பாட்டில் உள்ள VPN சேவையிலிருந்து துண்டித்தாலே போதுமானது:

விரைவான செயல்பாடு (Quick Toggle): நம்முடைய திறன்பேசியின் கட்டுப்பாட்டுப் பலகத்தை (control panel) கீழே இழுத்துத் திறந்து, VPN அறிவிப்பைத் தட்டி அதை அணைத்து நிறுத்திவிடுக.

‘Settings’ மூலம்: திறன்பேசியின் அமைப்புகளில் உள்ள VPN பகுதிக்குத் திரும்பி, செயல்பாட்டில் உள்ள இணைப்பை அணைத்துநிறுத்திவிடுக.

பயன்படுத்தாத செயலிகளை நீக்குதல்: நம்முடைய அனுமதியின்றி ஒரு செயலி தானாகவே VPN-ஐ இயக்கினால், அதை முழுமையாக நீக்குவதைப் பரிசீலித்திடுக.

Leave a Reply