இந்த மூன்று எளிய படிமுறைகளுடன் யார் வேண்டுமானாலும் மூலக்குறிமுறைவரிகளை இயந்திரமொழிமாற்றம் செய்து பயன்பாடாகஆக்கலாம்

பயன்பாட்டிற்கான மூலக்குறிமுறைவரிகளை தொகுக்க, குறிமுறைவரிகளை எவ்வாறு எழுதுவது அல்லது படிப்பது என்று நமக்குத் தெரிய வேண்டியதில்லை. பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகைசெய்திடுவதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன, ஆனால் திறமூலத்துடன் வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்பினை பெறமுடியும்: குறிமுறைவரிகளைநாமே தொகுக்கலாம். மூலக் குறிமுறை வரிகளைத் தொகுப்பதற்கான உன்னதமான மூன்று-படிமுறைகளின் செயல்முறைகள் பின்வருமாறு:
$ ./configure
$ make
$ sudo make install
மென்பொருளை உருவாக்க கட்டளைவரிகளை நிறுவுகைசெய்திடுதல்
நாம் குறிமுறைவரிகளை தொகுப்பது இதுவே முதல் முறை என்பதால், மென்பொருளை உருவாக்குவதற்கான கட்டளைவரிகளை நிறுவுகைசெய்திடு வதற்காக ஒரேயொரு வழிமுறையான ஆயத்தப் படிமுறை உள்ளது. குறிப்பாக, நமக்கு ஒரு இயந்திரமொழிமாற்றி தேவையாகும். GCC அல்லது LLVM போன்ற ஒரு இயந்திரமொழிமாற்றி போன்று தோற்றமளிக்கின்ற மூலக் குறிமுறைவரிகளை மாற்றுவதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
<iostream>
using namespace std;
int main() {
cout << “hello world”;
}
இயந்திர மொழியில், தகவலைச் செயலாக்க CPU பயன்படுத்துகின்ற வழிமுறை களில் இயந்திரக் குறிமுறைவரிகளை காணலாம், ஆனால் அது நமக்குப் புரியாது (நாம் CPU ஆக இல்லாவிட்டால்.) நம்முடைய தொகுப்பு மேலாளரைப் பயன்படுத்தி, Fedora, CentOS, Mageia போன்ற விநியோகங்களில் தொகுப்பதற்குத் தேவையான பிற கட்டளைவரிகளுடன் GNU C இயந்திரமொழிமாற்றி (GCC) , LLVM எனும் இயந்திரமொழிமாற்றி ஆகியவற்றைப் பெறலாம் இதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
$ sudo dnf install @development clang
லினக்ஸின் Debian, Elementary, Mint, போன்ற வெளியீடுகளுக்கான கட்டளைவரி பின்வருமாறு:
$ sudo apt install build-essential clang
நம்முடைய கணினியை அமைவுசெய்தால், ஒவ்வொரு முறையும் நம்முடைய மென்பொருளைத் தொகுக்க விரும்பும் சில பணிகள் பின்வருமாறு:
1. மூலக் குறிமுறைவரிகளைப் பதிவிறக்கம் செய்திடுதல்
2.கட்டமைக்கப்பட்ட மூலக் குறிமுறைவரிகளை பிரித்துவெளியிலெடுத்திடுதல்.
3.இறுதியாக தொகுத்திடுதல்
நமக்கு தேவையான அனைத்து கட்டளைவரிகளும் நம்மிடம் உள்ளன, எனவே இப்போது தொகுப்பதற்காக சில மென்பொருள்கள் தேவை.
1. மூலக் குறிமுறைவரிகளைப் பதிவிறக்கம் செய்தல் பயன்பாட்டிற்கான மூலக் குறிமுறைவரிகளைப் பெறுவது, பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருளைப் பெறுவது போன்றது. ஒரு இணையதளம் அல்லது GitLab, SourceForge அல்லது GitHub போன்ற மூலக்குறிமுறைவரிகளி்ன்மேலாண்மை தளத்திற்குச் செல்க. பொதுவாக, திறமூல மென்பொருள் செயல்பாட்டில் உள்ள (“தற்போதைய” அல்லது “nightly”) வடிவத்திலும், தொகுக்கப்பட்ட “நிலையான” வடிவத்திலும் கிடைக்கின்றன. “வெளியீட்டு பதிப்பு. சாத்தியமான போது நிலையான பதிப்பைப் பயன்படுத்திடுக, வேறுவிதமாக நம்புவதற்குக் காரணம் இல்லாவிட்டால் அல்லது அவைகள் தொடர்ச்சியாக இல்லாமல் உடைந்திருந்தால் அவற்றைச் சரிசெய்ய குறிமுறைவரிகள் போதுமானதாக இருந்தால். stable என்ற சொல்லுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறிமுறைவரிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது பயன்பாட்டின் நிரலாளர்கள் குறிமுறைவரிகளில் போதுமான நம்பிக்கையுடன் அதை .zip அல்லது .tar அல்லது ,archive இல் தொகுத்திடுக, அதற்கு அதிகாரப்பூர்வ எண்ணையும் சில சமயங்களில் வெளியீட்டு பெயரையும் கொடுத்து, பொதுநிரலாளர் அல்லாதவர்களுக்கு பதிவிறக்கம் செய்து வழங்கிடுக. – இந்தப் பயிற்சிக்காக, Angband ஐப் பயன்படுத்திகொள்க, ஒரு கட்டற்ற (GPLv2) ASCII dungeon crawlerஎன்பது. நமக்காக மென்பொருளைத் தொகுக்கும்போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை நிரூபிக்க போதுமான சிக்கல்களைக் கொண்ட எளிய பயன்பாடு இது. அதற்கான இணையதளத்திலிருந்து மூலக் குறிமுறைவரிகளை பதிவிறக்கம் செய்திடுக.
2. மூலக் குறிமுறைவரிகளை பிரித்துவெளியிலெடுத்தல் மூலக் குறிமுறைவரிகள் பெரும்பாலும் ஒரு archiveஆக தொகுப்பாக கட்டப்பட்டே வழங்கப்படுகிறது, ஏனெனில் மூலக் குறிமுறைவரிகள் பொதுவாக பல கோப்புகளைக் கொண்டிருக்கும். அது ஒரு tarball, zip file, 7z கோப்பு அல்லது முற்றிலும் வேறு ஏதேனும் இருந்தாலும், அதனுடன் தொடர்புகொள்வதற்கு முன் அதைப் பிரித்துவெளியிலெடுக்க வேண்டும் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
$ tar –extract –file Angband-x.y.z.tar.gz
அவ்வாறு அதைபிரித்து வெளியிலெடுத்தவுடன், கோப்பகத்தை பிரித்தெடுக்கப் பட்ட கோப்பகளுடனானதாக மாற்றி, முழுவதையும் பார்வையிடுக. கோப்பகத்தின் மேற்பகுதியில் முதலில் வழக்கமாக README எனும் கோப்பு இருக்கும். இந்தக் கோப்பில், குறிமுறைவரிகளைத் தொகுப்பதற்காக என்னென்னபணிகள் செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் இருக்கும். குறிமுறைவரிகளின் முக்கியமான வசதிகளைப் பற்றிய ஏராளமான தகவல்களை README ஆனது கொண்டிருக்கும்:
கணினிமொழி: குறிமுறைவரிகள் எந்த கணினிமொழியில் உள்ளது (உதாரணமாக, C, C++, Rust, Python).
சார்புநிலைகள்: இந்தப் பயன்பாட்டை உருவாக்கவும் இயக்கவும் கணினியில் வேறு என்னென்ன மென்பொருட்களை நிறுவுகைெய்திட வேண்டும்.
வழிமுறைகள்: இதுமென்பொருளை உருவாக்க எடுக்க வேண்டிய நேரடியான படிமுறைகளாகும். எப்போதாவது, இந்த தகவலை உள்ளுணர்வாக INSTALL என்ற தலைப்பில் தனியான கோப்பில் சேர்க்கிறார்கள்.
README எனும் கோப்பானது அந்தத் தகவலைக் கொண்டிருக்கவில்லை எனில், மேம்படுத்துநரிடம் பிழை அறிக்கையைப் பதிவுசெய்திடுக. மூலக் குறிமுறை வரிகளின் அறிமுகம் நமக்கு மட்டும் தேவை இல்லை. அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரும் இதுவரை பார்த்திராத மூலக் குறிமுறைவரிகளுக்கு புதியவர்கள் ஆவார்கள், மேலும் ஆவணப்படுத்தல் முக்கியமானது!
Angband இன் பராமரிப்பாளர்கள் குறிமுறைவரிகளை எவ்வாறு தொகுப்பது என்பதை விவரிக்க இணையத்தில்நேரடி வழிமுறைகளை இணைக்கின்றனர். இந்த ஆவணம் நிறுவியிருக்க வேண்டிய மற்ற மென்பொருளையும் விவரிக்கிறது, இருப்பினும் அது சரியாக உச்சரிக்கப்படவில்லை. இந்த தளம் “–enable-sdl, –disable-x11 போன்றவற்றை உள்ளமைக்க தருக்கங்களைப் பயன்படுத்திடுகின்ற வாய்ப்பாக (GCU, SDL, SDL2 , X11) உருவாக்கக்கூடிய பல்வேறு முன் முனைமங்கள் உள்ளன.” என கூறுகின்றது .இது நமக்கு ஏதோவொன்றைக் குறிக்கலாம் அல்லது வெளிநாட்டு மொழியாகத் தோன்றலாம், ஆனால் குறிமுறைவரிகளைத் தொகுக்கின்ற பணியை அடிக்கடிசெய்த பிறகு இதுஒருபழகிய செய்தியாகிவிடும். X11 அல்லது SDL2 என்ன என்பதை புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும், சில நாட்களுக்குள் குறிமுறை வரிகளைத் தொடர்ந்து தொகுத்த பிறகு, இவை இரண்டினையும் அடிக்கடி பார்க்க வேண்டிய தேவைஏற்படும். பெரும்பாலான மென்பொருள்களுக்கு மற்ற மென்பொருள் நூலகங்கள் தேவை என்ற எண்ணத்தில் வசதியாக இருக்கலாம், ஏனெனில் அவை மற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன. இந்த செய்தியில், Angbandஆனது மிகவும் நெகிழ்வானது இது விருப்ப சார்புகளுடன் அல்லது இல்லாமல் தொகுக்கிறது, எனவே இப்போதைக்கு, கூடுதல் சார்புகள் எதுவும் இல்லை என பாசாங்கு செய்யலாம்.

3. குறிமுறைவரிகளை தொகுத்தல் குறிமுறைவரிகளைஉருவாக்குவதற்கான படிமுறைகள் பின்வருமாறு:
$ ./configure
$ make
$ sudo make install
தானியிங்கி கருவிகளின்மூலம் கட்டமைக்கப்பட்ட செயல்திட்டங்களுக்கான படிமுறைகள் இவை, இவை மூலக் குறிமுறைவரிகள் எவ்வாறு வழங்குகின்றன என்பதைத் தரப்படுத்த உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளாகும். இருப்பினும், பிற கட்டமைப்புகள் (Cmake போன்றவை) உள்ளன, மேலும் அவற்றுக்கு வெவ்வேறு படிமுறைகள் தேவைப்படுகின்றன. செயல்திட்டப்பணிகள் Autotools அல்லது Cmake இலிருந்து விலகிச் செல்லும்போது, அவை READMEfile இல் நம்மை எச்சரிக்கை செய்கின்றன.
கட்டமைத்தல் இதற்காக Angband ஆனது Autotools ஐப் பயன்படுத்திகொள்கிறது, எனவே குறிமுறைவரிகளை தொகுக்க வேண்டிய நேரம் இது! Angband கோப்பகத்தில், முதலில், மூலக்குறிமுறைவரிகளுடன் சேர்க்கப்பட்டுள்ள கட்டமைப்பு உரைவரியை இயக்கிடுக அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
$ ./configure
இந்த படிமுறையில் வருடுதல் செய்து, Angband ஆனது சரியாக உருவாக்கத் தேவையான சார்புகளைக் கண்டறிகின்றது. சில சார்புகள் மிகவும் அடிப்படையானவை, அவை இல்லாமல் கணினி இயங்காது, மற்றவை சிறப்பு வாய்ந்தவை. செயல்முறையின் முடிவில், உரைநிரலானது அது கண்டறிந்த பற்றிய அறிக்கையை நமக்கு வழங்குகிறது :
[…]
configure: creating ./config.status
config.status: creating mk/buildsys.mk
config.status: creating mk/extra.mk
config.status: creating src/autoconf.h
Configuration:
Install path: /usr/local
binary path: /usr/local/games
config path: /usr/local/etc/angband/
lib path: /usr/local/share/angband/
doc path: /usr/local/share/doc/angband/
var path: (not used)
(save and score files in ~/.angband/Angband/)
— Frontends —
– Curses Yes
– X11 Yes
– SDL2 Disabled
– SDL Disabled
– Windows Disabled
– Test No
– Stats No
– Spoilers Yes
– SDL2 sound Disabled
– SDL sound Disabled
இந்த வெளியீட்டில் சில நமக்குப் புரியலாம், சில புரியாமலும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் பரவாயில்லை, SDL2 , SDL ஆகியவை முடக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருப்பதை கவனித்திடுக, மேலும் சோதனை புள்ளிவிவரங்கள் ஆகிய இரண்டும் எண்ணைக் குறிக்கின்றன. எதிர்மறையாக இருந்தாலும், இது ஒரு மோசமான செய்தி அன்று. இது, அடிப்படையில், ஒரு எச்சரிக்கைக்கும் பிழைக்கும் உள்ள வித்தியாசமாகும். உள்ளமைவு உரைநிரல் குறிமுறைவரிகளை உருவாக்குவதைத் தடுக்கின்ற ஏதாவது ஒன்றை எதிர்கொண்டிருந்தால், அது பிழையுடன் நம்மை எச்சரித்திருக்கின்றது. நம்முடைய கட்டமைப்பை சிறிது மேம்படுத்த விரும்பினால், இந்த எதிர்மறை செய்திகளைத் தீர்வுசெய்திட இதனை தேர்வு செய்யலாம். Angband ஆவணங்களைத் தேடுவதன் மூலம், சோதனை புள்ளிவிவரங்கள் ஆகியவை நமக்கு ஆர்வமாக இல்லை என்பதை தீர்மானிக்கலாம் (அவை Angband க்கு குறிப்பிட்ட மேம்படுத்துநரின் வாய்ப்புகள்). இருப்பினும், ஒரு சிறிய இணையத்தின்நேரடி ஆய்வின் மூலம், SDL2 ஒரு நல்ல வசதியாக இருக்கின்றது என்பதை நாம் கண்டறியலாம். குறிமுறைவரிகளைத் தொகுக்கும்போது ஒரு சார்புநிலையைத் தீர்வுசெய்திடுவதற்காக, நாம் விடுபட்ட கூறு , அந்த விடுபட்ட கூறுக்கான மேம்பாட்டு நூலகங்கள் ஆகியவற்றினை நிறுவுகை செய்திட வேண்டும். வேறு சொற்களில் கூறுவதானால், ஒலியை இயக்குவதற்கு Angband க்கு SDL2 தேவை, ஆனால் அதை உருவாக்க SDL2-devel (libsdl2-dev எனப்படும், டெபியன் கணினிகளில்) தேவை. நம்முடைய தொகுப்பு மேலாளருடன் இரண்டையும் நிறுவுகைசெய்திடுக அதற்கான கட்டளை வரி பின்வருமாறு:
$ sudo dnf install sdl2 sdl2-devel
உள்ளமைவு உரைநிரைலை மீண்டும் முயற்சித்திடுக:
$ ./configure –enable-sdl2
[…]
Configuration:
[…]
– Curses Yes
– X11 Yes
– SDL2 Yes
– SDL Disabled
– Windows Disabled
– Test No
– Stats No
– Spoilers Yes
– SDL sound Disabled
– SDL2 sound Yes
Make
இவ்வாறு எல்லாம் கட்டமைக்கப்பட்டவுடன், makeஎனும் கட்டளையை இயக்கிடுக:

$ make
இது வழக்கமாக சிறிது நேரம் எடுக்கும், ஆனால் இது நிறைய காட்சி கருத்துக்களை வழங்குகிறது, எனவே குறிமுறைவரிகள் தொகுக்கப்படுவதை அறிந்துகொள்ளலாம்.
நிறுவுகைசெய்தல்
நாம் தொகுத்த குறிமுறைவரிகளை நிறுவுகைசெய்வதே இறுதிப் படிமுறை யாகும். குறிமுறைவரிகளை நிறுவுகைசெய்வதில் மந்திரம் எதுவும் இல்லை. நிறைய கோப்புகள் குறிப்பிட்ட கோப்பகங்களுக்கு நகலெடுக்கப்படுகின்றன. நாம் மூலக் குறிமுறைவரிகளிலிருந்து தொகுத்தாலும் அல்லது ஆடம்பரமான வரைகலை நிறுவுகையின் வழிகாட்டியை இயக்கினாலும் அது உண்மைதான். கணினி-நிலையான கோப்பகங்களுக்கு குறிமுறைவரிகள் நகலெடுக்கப்படுவதால், நாம் மூல(நிர்வாக) சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும், அவை பின்வருமாறா கட்டளை வரிமூலம் வழங்கப்படுகின்றன.
$ sudo make install
பயன்பாட்டை இயக்கிடுதல்
பயன்பாடு நிறுவுகைசெய்யப்பட்டதும், நாம் அதை இயக்கலாம். Angband ஆவணத்தின்படி, அந்த விளையாட்டைத் தொடங்குவதற்கான கட்டளைவரி angband ஆகும், எனவே இதை முயற்சி்த்திடுக:
$ angband
தொகுத்தல் குறிமுறைவரிகள் ஸ்லாக்வேர் மேசைக்கணினியிலோ அல்லது சென்டோஸ் மடிக்கணினியிலோ NetBSD இன் pkgsrcsystem ஐப் பயன்படுத்தி நம்முடைய சொந்த பயன்பாடுகளில் பெரும்பாலானவற்றை தொகுத்திடலாம். மென்பொருளை நாமே தொகுப்பதன் மூலம், பயன்பாட்டில் உள்ள வசதிகள், அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, எந்த நூலகப் பதிப்பைப் பயன்படுத்துகிறது என்பனபோன்ற பலவற்றைப் பற்றி நாமே குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இது நல்ல பலனளிக்கிறது, மேலும் இது புதிய வெளியீடுகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்க நமக்கு உதவுகிறது, மேலும் சில நேரங்களில் செயலியில் பிழைகளைக் கண்டறிவதால், பல்வேறு திறமூல செயல்திட்டங்களில் ஈடுபட இது உதவுகிறது. மென்பொருளைத் தொகுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது அரிது. பெரும்பாலான திறமூல செயல்திட்டங்கள் மூலக் குறிமுறைவரிகள் (அதனால்தான் இது “திறமூலம்” என்று அழைக்கப்படுகிறது) நிறுவுகை செய்யக்கூடிய தொகுப்புகள் ஆகிய இரண்டையும் வழங்குகிறது. மூலக் குறிமுறைவரிகளிலிருந்து தொகுத்தல் என்பது நமக்காக நாமே செய்யக்கூடிய ஒரு தேர்வாகும், ஒருவேளை சமீபத்திய வெளியீட்டில் புதிய வசதிகள் கிடைக்காததால் அல்லது குறிமுறைவரிகளைநாமே தொகுக்க விரும்புவதால் இருக்கலாம்.

செய்முறை
இதற்காக Angband Autotools அல்லது Cmake ஐப் பயன்படுத்தலாம், எனவே குறிமுறைவரிகளின் கட்டமைைப்பில் மற்றொரு வழியை அனுபவிக்க விரும்பினால், இதை முயற்சித்திடுக அதற்கான கட்டளைவரிகள் :

$ mkdir build
$ cd build
$ cmake ..
$ make
$ sudo make install
GNU C எனும்இயந்திரமொழிமாற்றிக்குப் பதிலாக LLVM இயந்திரமொழிமாற்றியைக் கொண்டும் தொகுக்க முயற்சி செய்யலாம். இப்போதைக்கு, நமக்கு சொந்தமாக ஆய்வு செய்வதற்கான பயிற்சியாக அதை விட்டிடுக (குறிப்பு: CC சூழல் மாறியை அமைக்க முயற்சித்திடுக.) Angband இன் மூலக் குறிமுறைவரிகளையும் அதன் சில வரையறைகளையும் ஆராய்ந்து முடித்தவுடன் (நாம் பணியியில்லா நேரத்தைச் சம்பாதித்துள்ளோம்), வேறு சில குறிமுறைவரிகளின்த் தளங்களைப் பார்வையிடுக. பலர் Autotools அல்லது Cmake ஐப் பயன்படுத்துவார்கள், மற்றவர்கள் வேறு ஏதாவது பயன்படுத்தலாம். நம்மால் என்ன உருவாக்க முடியும் என்று பார்த்திடுக!

%d bloggers like this: