உங்களுக்கான, பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு(personalized Ai assistant) உதவியாளர்களுக்கு, திறன்மிகு மொழி மாதிரிகளை(LLM ) கணினியில் ஏற்றுவதற்கு, ஒரு சிறந்த வாய்ப்பை LM STUDIO ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து விவரமாக காணலாம்.
இதன் மூலம்,உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எவ்வித பாதகமும் இன்றி, மேலும் பெரு நிறுவனங்களை சார்ந்திருக்காது. அதிக தொகை கொடுத்து AI மாடல்களை வாங்காமல், உங்களால், உங்களுக்கான ஒரு AI உதவியாளரை உருவாக்க முடியும்.
தனிநபர் GPT மற்றும் ollama போன்றவற்றின் மூலம், இதை விட(LLM), செயல்திறன் மிக்க AI உதவியாளர்களை உருவாக்க முடிந்தாலும், அங்கு நாம் அதிகப்படியான உள்ளீடுகளை(inputs) முனையத்திற்கு (TERMINAL )வழங்க வேண்டியிருக்கும். அதனோடு ஒப்பிடும்போது, இம்முறையில் மிகவும் எளிமையாக செய்ய முடியும்.CHAT GPT உடன் ஒப்பிடக்கூடிய தனிநபர் ஏற்ற செயற்கை நுண்ணறிவு மாடலை , நம்மால் எளிமையாக பெறமுடியும். மேலும் அதற்குரிய திறன்மிகு மொழி (LLM) மாதிரிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
LM STUDIO இணையதளத்தில் இருந்து appimage ஐ உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்யுங்கள். அதை எவ்வாறு செய்வது என்பதற்கான பல விளக்கக் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
நிறுவிய பிறகு, தேடல் பகுதியில் உங்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு மாடல்களை தேடலாம். இல்லாவிட்டால், HUGGING FACE போன்ற செயற்கை நுண்ணறிவு நூலகங்களில் உள்ள இணைப்புகளையும்(URL) பயன்படுத்தலாம்.
பின்னர், தேடல் முடிவுகள் கிடைத்ததும், செயற்கை நுண்ணறிவு மாடல்களில், உங்கள் கணினியின் செயல் திறனோடு(முக்கியமாக GPU) ஒத்துப் போகக் கூடியவற்றை நிறுவலாம்.
நீங்கள் அனுமதித்தால்,உங்கள் கணினியை தானாகவே பரிசோதித்து, உங்களுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவு மாடல்களை LM STUDIO வழங்கும்.
தரவிறக்கி முடித்த பிறகு, நீங்கள் தரவிறக்கிய செயற்கை நுண்ணறிவு மாடல்களை,இணைய இணைப்பு(offline) இன்றி பயன்படுத்தி பார்க்க முடியும்.
வாருங்கள், அதற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்.
MYSQL தரவு அமைப்புடன் கூடிய WordPress க்கான docker-compose கோப்பை பெற முயற்சிப்போம்.
உண்மையைக் கூறப்போனால், உங்கள் கணினியில் உள்ள கிராபிக்ஸ் செயல்திறன் அலகை(GPU ) பொறுத்து,நம்முடைய செயற்கை நுண்ணறிவு மாடலின் வேகம் அமையும். மேற்குறிப்பிட்ட நிகழ்வில் தரவைப் பெறுவதற்கு சுமார் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது.
அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்ளும், ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலாக இருந்தாலும், அதிக திறன்மிக்க, கிராபிக்ஸ் செயலாக்க அலகு(GPU) கொண்ட கணினிகளுக்கு, LM STUDIO ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பிறகு ஏன் தாமதிக்கிறீர்கள்! உடனடியாக,LM STUDIO வை அணுகி, உங்களுக்கான ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை தயார் செய்யுங்கள்.
மேற்படி எழுதப்பட்டுள்ள கட்டுரை, கீழ்க்கண்ட இணையதள முகவரியில், திரு.அபிஷேக் குமார் அவர்களால் எழுதப்பட்டது.
மேற்படி,இந்த கட்டுரை ஆனது என்னால் மொழிபெயர்க்கப்பட்டு இங்கு வெளியிடப்படுகிறது. இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தயக்கமின்றி தெரிவிக்கவும். வரும் பதிவுகளில் சரி செய்யப்படும்.
மொழிபெயர்த்தவர்:-
ஶ்ரீ காளீஸ்வரர்.செ
இளங்கலை இயற்பியல் மாணவர்,
நாகர்கோவில்.
எனது இணையதள முகவரி