ஒரு பைதான் பயன்பாட்டை புரலராக செய்வதற்கானகட்டணமற்ற வழிகள்

அறிமுகம்: ஒரு மாணவராகவோ அல்லது பயன்பாடுகளை உருவாக்குவதன் செயல்பாட்டுப் பக்கத்தைக் கற்கத் தொடங்குபவராகவோ இருக்கலாம். பயன்பாட்டை வளாககணினியில் உருவாக்கிபரிசோதிப்பதன் மூலம் ஏற்கனவே முதல் படிமுறையை செய்துவிட்டோம். இப்போது, அதை எங்கிருந்தும் அணுகுவதற்காக மேககணினியில் வெளியிட விரும்புவதாககொள்க. பிரச்சனை என்னவென்றால், புதிதாகத் தொடங்கும் போது மேககணினியின் புரவலராக செய்வது சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் உணரப்படலாம்.
இந்தக் கட்டுரையில், பைதானின் இணையஅல்லது பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) பயன்பாட்டை முன்பணம் செலுத்தாமல் புரவலராக செய்ய அனுமதிக்கின்ற சில எளிமையான கட்டணமற்ற தளங்களைப் பற்றிகாண்போம். இந்தச் சேவைகள் வரையறுக்கப்பட்ட கணக்கீட்டுத் திறனுடன் வந்தாலும், ஒரு முதல் மாதிரி செயல்திட்டம், ஒரு தனிப்பட்ட செயல்விளக்கம், அல்லது வெளியீடு, கண்காணிப்பு , அடிப்படைப் பயன்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் பரிசோதனை செய்வதற்கு இவை பொதுவாகப் போதுமானதை விட அதிகமாகவே இருக்கும்.

1. Hugging Face Spacesஇன் மூலம் செய்யறிவு(AI) பயன்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்
பைதான் பயன்பாடுகளை புரவலராக செய்வதற்கு Hugging Face Spacesஆனவை நமக்கு மிகவும் பிடித்தமான தேர்வுகளில் ஒன்றாகும், குறிப்பாக செய்யறிவு(AI) செயல்திட்டங்களில் பணிபுரிந்தால். இது தொடக்கநிலையாளர்களுக்கு மிகவும் எளிமையானது . வெளியீட்டை மிகவும் அச்சம் தராததாக உணர வைக்கிறது. கோப்புகளைப் பதிவேற்றுவதன் மூலமோ, Git commitsகளைப் உந்திதள்ளுவதன் மூலமோ, அல்லது Hugging Face எனும்கட்டளை வரி இடைமுகத்தைப் (CLI) பயன் படுத்துவதன் மூலமோ கூட ஒரு Gradio எனும்பயன்பாட்டைத் தொடங்கலாம்.
இது குறிப்பாக இயந்திர கற்றல் , பெரிய மொழி மாதிரி (LLM) ஆகிய செயல்திட்டங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது, ஆனால் இது Streamlit , Docker-அடிப்படையிலான பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது. நம்முடைய பயன்பாடு எவ்வளவு எளிமையானது அல்லது தனிப்பயனாக்கப்பட்டது என்பதைப் பொறுத்து இது நமக்கு சில நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.
Hugging Face Spaces-இல் உள்ள இயல்புநிலை கட்டணமற்ற வன்பொருள் நமக்கு 2 CPU coresகள், 16 GB RAM , 50 GB நிலையற்ற வட்டு இடம் ஆகியவற்றினை வழங்குகிறது, இது பல்வேறு செயல்விளக்கசெய்முறைகள், முன்மாதிரிகள், வகுப்பு செயல்திட்டங்கள் ,சிறிய சோதனைகள் ஆகியவற்றிற்குப் போதுமானதை விட அதிகமாகும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், கட்டணமற்ற CPU-அடிப்படை அடுக்கில் உள்ள Spaces, சுமார் 48 மணிநேர செயலற்ற தன்மைக்குப் பிறகு தானாகவே உறக்க நிலைக்குச் சென்றுவிடும், ஆனால் யாராவது மீண்டும் அந்தப் பயன்பாட்டைப் பார்வையிடும்போது அவை மறுதொடக்கம் ஆகும்.

2. Streamlit Community Cloud-ஐப் பயன்படுத்தி தரவுப் பயன்பாடுகளைப் பயன்படுத்துதல்
பைதானின் இணையதளப் பயன்பாடுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ளும்போது, பயன்படுத்திகொள்கின்ற முதல் தளங்களில் Streamlit Community Cloud-ம் ஒன்றாகும். Herokuஉடன் இணைந்து செயல்படும்போது, முழு செயல்முறையையும் புரிந்துகொள்வது மிகவும் எளிதாக இருக்கின்றது. இது துவக்நிலையாளர்களுக்கு ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாகும், ஏனெனில் அதிக அமைப்புகளைச் செய்ய வேண்டிய சிரமமின்றி, ஒரு உள்ளூர் செயல்திட்டத்திலிருந்து ஒரு நேரடிப் பயன்பாட்டிற்கு நேரடியாகச் செல்ல முடியும்.
Streamlit-ஐப் பலர் இன்றும் வெறும் ஒரு ‘முகப்புத்திரை(dashboard)’ கருவியாகவே கருதினாலும், Python மொழியில் தரவுச் செயலிகள், நிறுவனத்தின் உள்ளகக் கருவிகளையும் எளிய ஊடாடும் இணையச் செயலிகளையும் உருவாக்குவதற்கான ஒரு நெகிழ்வான வழியாக அது உருவெடுத்துள்ளது. இதன் ‘செயல்படுத்தல்’ (Deployment) அனுபவமே இதன் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்; ஏனெனில், GitHub களஞ்சியமே (Repository) தரவின் முதன்மை ஆதாரமாகச் செயல்படுகிறது — மேலும் அக்களஞ்சியத்தில் செய்யும் மாற்றங்கள், அச்சியலியில் தானாகவே பிரதிபலிக்கின்றன.
கட்டணமற்ற அடுக்குக்கு, அனைத்து இனமேககணினி(Community Cloud) பயனர்களும் ஒரே வளத் தொகுப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று Streamlitஆனது கூறுகிறது. இதில் தோராயமான வரம்புகளாக 0.078 முதல் 2 CPU coresகள், 690 MB முதல் 2.7 GB நினைவகம், 50 GB வரை சேமிப்பகம் ஆகியவை உள்ளன. தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், 12 மணி நேரத்திற்கு எந்தப் போக்குவரத்தும் இல்லாத பயன்பாடுகள் உறக்க நிலைக்குச் சென்றுவிடும், ஆனால் யாராவது அந்தப் பயன்பாட்டைப் பார்வையிடும்போது அவற்றை மீண்டும் எழுப்ப முடியும்.

3. Renderஎன்பதன் மூலம் பின்புல API-களைப் பயன்படுத்துதல்
Render என்பது ஒரு முழுமையான புரவலர் தளமாகும். இது Python, Node.js, Ruby on Rails, Docker ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் உட்பட அனைத்து வகையான இணையப் பயன்பாடுகளையும் பயன்படுத்த நம்மை அனுமதிக்கிறது. நாமே சேவையாளர்களை அமைக்காமல் ஒரு Flask அல்லது FastAPI பின்புல புரவலராக செய்ய விரும்பினால், இது ஒரு சிறந்த தேர்வாகும்.
பயன்படுத்தும் செயல்முறை மிகவும் எளிமையானது. நாம் ஒரு GitHub repositoryடன் இணைகின்றோம் — Renderஆனது GitLab and Bitbucketஐயும் ஆதரிக்கிறது — மேலும் இந்தத் தளம் நமக்காக உருவாக்கும், பயன்படுத்தும் செயல்முறையைக் கையாளுகிறது. இது ஒரு பைதான் API-ஐ இணையத்தில் கொண்டு வருவதற்கு மிகவும் எளிமையான வழியாக அமைகிறது.
Renderஆனது இணையச் சேவைகளுக்காக ஒரு கட்டணமற்ற அடுக்கினை வழங்குகிறது, இது ஆலோசனைகளைபரிசோதிப்பதற்கும், பொழுதுபோக்குத் செயல்திட்டங்களுக்கும், சிறிய செயல்முறைகாட்சிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், கட்டணமற்ற இணையச் சேவைகள் 15 நிமிட செயலற்ற தன்மைக்குப் பிறகு நின்றுவிடும், மேலும் யாராவது மீண்டும் வரும்போது, அந்தச் சேவை மீண்டும் செயல்படத் தொடங்க ஒரு நிமிடம் வரை ஆகலாம்.

4. Modalஎன்பதன் மூலம் பைதான் செயலிகளை இயக்குதல்
பைதான் செயலிகளை இயக்குவதற்குModal நமக்குப் பிடித்த நவீன தளங்களில் ஒன்றாகும், குறிப்பாக ஒரு செயல்திட்டம் ஒரு எளிய செயல்முறைகாட்சியை விட சற்றே மேம்பட்டதாக இருக்கும்போது. இதை மாதிரி (Model Context Protocol(MCP)) பின்புலசெயலிகள், செய்யறிவு(AI) முகவர்கள், உள்கட்டமைப்பை நாமே நிர்வகிக்க வேண்டிய அவசியமின்றி வேகமான ஒன்றை விரும்பிய மிகவும் சிக்கலான செயலிகளுக்காகப் பயன்படுத்திடலாம். இதன் மிகச் சிறந்த வசதிகளில் ஒன்று, பைதானில் உள்கட்டமைப்பை வரையறுக்கின்றோம், எனவே ஏற்கனவே பைதான் சூழலில் பணிபுரிந்தால், முழு மேம்படுத்துநர் அனுபவமும் மிகவும் இயல்பானதாக இருக்கும்.
இது குறிப்பாக இயந்திர கற்றல் பணிச்சுமைகள், பின்னணி பணிகள், பின்புலபணி சேவைகளுக்கு மிகவும் வலிமையானது. பைதான் செயல்பாடுகள், திட்டமிடப்பட்ட பணிகள் ,இணையதளபின்புலசெயலிகளை இயக்கலாம், இது API-கள், ஒத்திசைவற்ற செயலாக்கம் , மாதிரி அனுமானம் ஆகியவற்றிற்கு போதுமான நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.
தொடங்குவதற்கு கட்டணமற்ற அடுக்கு மிகவும் தாராளமானது. Modal’sஇன் Starter எனும் செயல்திட்டத்தில் மாதத்திற்கு $30 மதிப்புள்ள கட்டணமற்ற கடன்வரவுகள், வரையறுக்கப்பட்ட இணையதளமுடிவுசெயலிகள், cronஇன் jobsகள் ஆகியவை அடங்கும். இது பொதுவாக சிறிய பரிசோதனைகள், தனிப்பட்ட செயல்திட்டங்கள் துவக்கநிலை முன்மாதிரிகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

5.PythonAnywhere-இல் முழுமையான பைதான் செயலிகளை புரவலராகசெய்திடுக
பைதானின் புரவலர்களுக்கான மிகவும் பிரபலமான தளங்களில் PythonAnywhereஉம் ஒன்றாகும். புதிய கருவிகளுடன் ஒப்பிடும்போது இது சற்றுப் பழமையானதாகத் தோன்றினாலும், இது தனது பணியைச் சிறப்பாகச் செய்கிறது. பொதுமக்கள் மீண்டும் மீண்டும் இதை நாடுவதற்கான ஒரே காரணம், இது குறிப்பாக பைதானுக்காகவே உருவாக்கப்பட்டது. எனவே, சொந்த சேவையாளரை அமைக்காமலேயே, இணையஉலாவியில் இருந்தே நாம் குறிமுறைவரிகளை எழுதலாம், கோப்புகளை நிர்வகிக்கலாம், பணியகங்களைத்(consoles) திறக்கலாம் , ஒரு இணையதளச் செயலியை வெளியிடலாம்.
பல தனித்தனி சேவைகளை இணைப்பதற்குப் பதிலாக, அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் சூழலை விரும்பினால், எளிமையான Flask, Django ஆகிய செயல்திட்டங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். தொடக்கநிலையாளர்களுக்கு, இது கற்றல் செயல்முறையை மிகவும் எளிதாக்கக்கூடும்.
கட்டணமற்றக் கணக்கு, கற்றலிற்கும் , சிறிய செயல்திட்டங்களுக்கும் உண்மையாகவே பயன்படுத்தக்கூடியது. தற்போது, ​​கட்டணமற்றக் கணக்குகளில் பின்வருவன அடங்கும்:
ஒரு one web workerஉடன் கூடிய ஒரு web application.
Two consoles.
512 MiB of disk space and 100 CPU seconds.
பயன்பாடுகள் yourusername.pythonanywhere.com என்ற துனைகளப்பெயரில் இயங்கும், மேலும் கட்டணமற்றக் கணக்குகளுக்கு வெளிச்செல்லும் இணைய அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply