ஒவ்வொரு பயனாளரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதினெட்டு அத்தியாவசிய லினக்ஸ் கட்டளைகள்


லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்திடுகின்ற புதியவர்கள் முதல் அனுபவமிக்கவர்கள்வரை.உள்ள அனைத்து பயனாளர்களுடைய பணியையும் எளிதாக்கு கின்ற 18 லினக்ஸ் கட்டளைகள் பின்வருமாறு.
இருண்டதாக காட்சியளிக்கின்ற சாளரத்தில் கட்டளைகளைத் தட்டச்சு செய்வது சிலருக்கு பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் பல்வேறு கணினி பயனர்களுக்கும், இது ஒரு கணினி செய்யக்கூடிய எந்தப் பணியையும் நிறைவேற்றுவதற்கான மிகவும் திறமை யான, எளிதாக அணுகக்கூடிய, தெளிவான வழிமுறையாகும்.தற்போதை நம்முடைய வாழ்க்கை சூழலில், நாம் மேக, விண்டோ போன்ற கட்டுண்ட தளங்களிலும் செயல்படுகின்ற திறமூல கட்டளைகள் ஏராளமாக உள்ளன, அவ்வாறான கட்டளைகள் லினக்ஸ் , பிஎஸ்டி போன்ற பயனாளர்களுக்கு மட்டு மல்லா்மல் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படுகின்ற திறனுடைய வாறு அவை அனைவருக்கும் பயனுடையதாக அமைந்திருக்கின்றன. ஒரு சராசரி POSIX கணினியில் ஆயிரக்கணக்கான கட்டளைகள் நிறுவுகைசெய்யப்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியப்படலாம், ஆனால் நிச்சயமாக, அவற்றில் பெரும்பாலானவை நேரடியாகவோ அல்லது முறையாகவோ பயன்படுத்தப் படாமல் வீனாகஉள்ளன. சில கட்டளைகள் மற்றவற்றை விட உலகளாவிய அளவில் பயனுள்ளதாக இருக்கின்றன, வேறுசில குறைவான பயனுடன் முனையப் பயன்பாட்டிற்கு முற்றிலும் அவசியமானவைகளாக உள்ளன.
அவ்வாறானவைகளில் ஒரு முனையப் பயனாளின் அன்றாட பயன்ப்டிற்கான 18 கட்டளைகள் பின்வருமாறு:
1.cd
பொதுவாக ஒரு கோப்புறையிலிருந்து இன்னொரு கோப்புறைக்கு செல்ல அதற்கான உருப்பொத்தான்களை சொடுக்குதல் செய்திடுவோம், ஆனால் முனையத்தில் மற்றக் கோப்பகத்தைக் குறிக்கின்ற cd எனும் கட்டளையை பயன்படுத்தி லினக்ஸ் இயக்கமுறைமையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மிக விரைவாகவும் நேரடியாகவும் எளிய செல்லலாம்
உதாரணமாக, மேசைக்கணினியில், நம்முடைய கோப்புறைகள் அனைத்தையும் வைத்திருக்கும் home எனும் கோப்பகத்திலிருந்து presentations எனப்படும் கோப்புறைக்குச் செல்ல விரும்பும் போது, முதலில் Document கோப்புறையைத் திறக்க வேண்டும், பின்னர் work என்ற கோப்புறையைத் திறக்க வேண்டும், பின்னர் projects எனும் கோப்புறை, பின்னர் conference எனும் கோப்புறை, இறுதியாக presentations எனும் கோப்புறை ஆகியவற்றின் உருவப்பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக திறக்கவேண்டும் .அதற்கு பதிலாக

பலர் தங்கள் மேசைக்கணினியில் எல்லாவற்றையும் வைத்து இந்த சிறிய பணியைத் தவிர்க்கிறார்கள். அதற்கு பதிலாக முனைய பயனாளர்கள் இந்த சிக்கலை பின்வருமாறு தட்டச்சு செய்வதன் மூலம் தவிர்க்கிறார்கள்:

$ cd ~/Documents/work/projects/conference/presentations

அனுபவம் வாய்ந்த முனைய பயனர்கள் அதையெல்லாம் தட்டச்சு செய்வதைக் கூட கவலைப்படுவதில்லை. அவர்களுக்கான சொற்களை தானாக நிறைவு செய்ய தாவல் விசையைப் பயன்படுத்துகிறார்கள்.சில நேரங்களில், அவ்வாறு தானாக நிறைவு செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக பின்வருமாறு wildcards பயன்படுத்தலாம்:

$ cd ~/Doc*/work/*/conf*/p*

2.pwd

வது நம்முடைய பணிஇடம் எங்கே என்று மிகச்சரியாக கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் போது, pwd எனும் கட்டளையைப் பயன்படுத்தினால் போதுமானதாகும். Pwd என்பது பணிசெய்கின்ற கோப்பகத்தைக் அச்சிடுக(print working directory) என்பதை குறிப்பதோடு , அது சரியாகச் செய்ல் படுத்திடுகின்றது. –தொட்டுணரக்கூடிய (அல்லது சில செயலாக்கங்களில் வெறும் -P) அனைத்து குறியிணைப்புகளும் தீர்க்கப்பட்டு இருப்பிடத்தைக் காட்டுகிறது.

$ pwd
/home/tux/presentation
$
pwd –physical
/home/tux/Documents/work/projects/conference/presentations

3.sed

sed என அறியப்படும், இந்த தாரையோட்ட பதிப்பாளர்( stream editor) ஒரு சக்திவாய்ந்த மொத்த கண்டுபிடிப்பினையும் கட்டளையும் மாற்றுகிறது, ஆனால் இது முறையான உரை பதிப்பாளரும் ஆகும். opensource.com/article/20/12/sedனும் இணையதள முகவரியில் இதனை பற்றி மேலும் அறிந்துகொண்டு இதனைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம்

4.grep

Grep கட்டளை எங்கும் நிறைந்திருப்பதால், இது பெரும்பாலும் வினைச் சொல்லாகவும் (“I’ll grep through some files“), தொழிற்பெயராகவும் (“சில வெளியீடுகளில் grepping“) பயன்படுத்தப்படுகிறது. றைபொதியில் உள்ள உரையை பாகுபடுத்தும் போது, பதிவு கோப்புகளைப் பார்க்கலாம் அல்லது வேறு சில கட்டளைகளின் வெளியீட்டை பாகுபடுத்தும்போது இது ஒரு முக்கிய அங்கமாகும். அதி பணிச்சுமையுடனான பயனாளர் குறிப்பிட்ட தகவல்களில் கவனம் செலுத்த இது ஒரு வழியாகும். ணினி உலகில் எவ்வளவு தரவு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, இது ஒரு பிரபலமான கட்டளையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. opensource.com/article/21/3/grep-cheat-sheet எனும் இணையதள முகவரியில் இதனை பற்றி மேலும் அறிந்துகொண்டு இதனைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம்

5.file

$ file example.foo
example.foo: RIFF
(little-endian) data, Web/P image []
$
file example.bar
example.bar: ELF
64-bit LSB executable, x86-64 []

இந்த file எனும் கட்டளை நிச்சயமாக ஒருமந்திரம் அன்று. ஒரு கோப்பு தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் மட்டுமே அது வெளி காட்டுகிறது, மேலும் கோப்புகள் தவறாகவோ, சிதைந்ததாகவோ அல்லது மாறுவேடமிட்டோ இருக்கலாம். hexdump டன் ஒரு கடுமையான ஆய்வு அதிக உறுதியை அளிக்கிறது, ஆனால் சாதாரண பயன்பாட்டிற்கு, இந்த கட்டளை வசதியானது.

6.awk

இந்த Awk என்பது வெறும் கட்டளை அன்று; இது ஒரு நேரடி நிரலாக்க மொழியாகும். opensource.com/article/21/1/learn-awk எனும் இணையதள முகவரியில் இதனை பற்றி மேலும் அறிந்துகொண்டு இதனைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம் மேலும் நினைத்துப் பார்க்காத உரைநிரல்களைகூட இதன்வாயிலாக எழுதமுடியும்.

7.curl

இந்த curl எனும் கட்டளை யானது நம்முடைய முனையத்திற்கான ஊடாடும் இணைய உலாவியாகும். இது இணையம் ஏபிஐ மேம்படுத்துநர்களுக்கான மேம்பாட்டு கருவியாகும். இது ஒரு சிக்கலான கட்டளையாகும், ஆனால் நம்மமுடைய முனையத்திலிருந்து வலைபின்னல் சேவைகளுடன் சுமூகமாக தொடர்பு கொள்ள விரும்பினால் இதனை கற்றுக்கொள்வது நல்ல மதிப்பு மிக்கதாகும் .opensource.com/downloads/curl-command-cheat-sheetனும் இணையதள முகவரியில் இதனை பற்றி மேலும் அறிந்துகொண்டு இதனைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம்

8.ps

நம்முடைய கணினியின் வளங்களை நிர்வகிப்பது பெரும்பாலும் உருவாக்க மையத்தைப் பொறுத்தது, ஆனால் நாம் விரும்பினால் அல்லது ஒரு கையேடு அணுகுமுறை தேவைப்படும் போது, நம்முடைய உதவிக்கு இந்தps எனும் கட்டளை தயாராக உள்ளது.

9.cat

cat எனும் கட்டளையானது ஒன்றுசேர்த்தல்(concatenate) என்பதன் சுருக்கமாகும்ேலும் முன்பெல்லாம் அளவு கட்டுப்பாடுகள் காரணமாக பல சிறிய கோப்புகளாகப் பிரிக்கப்பட்ட கோப்புகளை (உள்ளுணர்வாக பிரித்தல் என்று அழைக்கப்படும்) இணைப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்று, இந்த கட்டளையானது பெரும்பாலும் தலைப்பு, முடிவு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்தடா விட்டால், ஒரு உரை கோப்பின் உள்ளடக்கங்களை விரைவான குறிப்புக்காக முனையத்தில் திணிப்பதற்கான ஒரு வழியாக பயன்படுத்தப் படுகிறது.
இதனுடைய அசல் நோக்கம் கிட்டத்தட்ட விலக்கப்பட்டதாக இருந்தபோதிலும், பல கட்டளைகள் அதன் இரண்டாம் நிலை செயல்பாட்டைச் செய்தாலும், இதுஇன்னும் ஒரு பயனுள்ள பயன்பாடாக திகழ்கின்றது. உதாரணமாக, இது நகல் (cp) கட்டளைக்கு ஒரு நிலைப்பாடாக இருக்கின்றது:
$ cat myfile.ogg > /backups/myfile.ogg

இதனைகொண்டுகோப்புகளில் கண்ணுக்கு தெரியாத எழுத்துக்களை வெளிப்படுத்த முடியும். YAML ஐ உடைக்கின்ற தாவல் எழுத்து, –show-tabs எனும் ாய்ப்படன் ^I என காட்டப்படும்

$ cat –show-tabs my.yaml

– hosts: all
tasks:
– name: Make sure the current version of
‘sysstat’ is installed.
dnf:
name:
^I- sysstat
^I- httpd
^I- mariadb-server
state: latest

இது அச்சிடாத எழுத்துக்களை –show-printing என்பதுடன் காட்டலாம், வரிகளின் முனைகளை –show-ends என்பதுடன் குறிக்கலாம், வரி எண்களைnumber, போன்ற பலவற்றுடன் வழங்கலாம்.

10.find

find எனும் கட்டளை நமக்கு கோப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது, ஆனால் அதில் மேலும் பல வாய்ப்பகள்உள்ளன, இது பல்வேறு வடிப்பான்கள் , அளவுருக்கள் கொண்ட கோப்புகளை கண்டுபிடிக்க உதவுகின்றது.

எல்லாவற்றிலும் மிக அடிப்படையான கட்டளையான ls என்பது ஏன் இந்த பட்டியலில் இல்லை என்று யோசித்துக்கொண்டிருந்தால், கோப்புகளமட்டுமல்லாது வேறு பலவற்றையும் கண்டுபிடிப்பதான இதனுடைய நெகிழ்வுத்தன்மையே காரணமாகும். :

$ find .
.
/bar.txt
.
/baz.xml
.
/foo.txt
[]

இது நீண்ட பட்டியல்களையும் வழங்க முடியும்:

$ find . -ls
3014803 464 -rw-rw-r– 1 tux users 473385 Jul 26 07:25 ./foo.txt
3014837 900 -rwxrwxr-x 1 tux users 918217 Nov 6 2019 ./baz.xml
3026891 452 -rw-rw-r– 1 tux users 461354 Aug 10 13:41 ./foo.txt
[…]

இது ஒரு சிறந்த தொழில்நுட்பம், ஆனால் தெரிந்து கொள்ள ஒரு நேர்த்தியான தந்திரமாகும்

11.tar

சிலர்BSD இன் tar தொடரியலை மேற்கோள் காட்டி சில நேரங்களில் லினக்ஸ் கட்டளைகளைப் பற்றி கேலி செய்கின்ர். அதன் புகழ் எவ்வாறு இருந்த போதிலும், இந்த கட்டளை உண்மையில் மிகவும் உள்ளுணர்வுடன் கூடியதாகும். தேவைக்கேற்ப tar எனும் கட்டளையைத் பயன்படுத்திடுவதற்கான எளிய ரகசியத்தை opensource.com/article/17/7/how-unzip-targz-file எனும் இணையதள முகவரிக்குசென்று மேலும் அறிந்துகொண்டு இதனைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம்.

12.ssh

SSH தொலைநிலை அமைப்புகளுக்கு இணைப்புகளைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல் மற்ற கட்டளைகளையும் செயல்படுத்துகிறது. உதாரணமாக, பல பயனாளர்களுக்கு, அவர்களின் .ssh கோப்பகம் தான் Git களஞ்சியங்களுடன் சுமூகமாக தொடர்பு கொள்ளவும், ஒரு வலைத்தளத்திற்கு புதுப்பிப்புகளை இடுகையிடவும் அல்லது அவர்களின் மேககணினி கட்டுப்பாட்டு செயல்திட்டத்தில் உள்நுழையவும் உதவுகிறது.

13.mv

இந்த mv கட்டளையானது கோப்புகளை நகர்த்துதல் கோப்புகளுக்கு மறுபெயரிடுதல் ஆகிய இரண்டு செயலைச் செய்கிறது. ஏற்கனவே உள்ள கோப்பில் மெழுகுதல் செயவதைத் தவிர்ப்பதற்கு interactive –no-clobber ஆகிய வாய்ப்புகள் செயல் படுத்தப்படுகின்றன, தரவுகள் அதன் புதிய இடத்தில் சரிபார்க்கப்படும் வரை அவை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கின்ற-backup கட்டளை உட்பட பல பாதுகாப்புகள் இதில் உள்ளன. பழைய பதிப்பு புதிய கோப்பை மாற்றாது என்பதை உறுதி செய்துகொள்க.

14.sudo

நமக்கு தெரிந்த பயனாளர்பெயரும் ஒரு கணினியில் அனைத்து சலுகைகளும் கொண்ட ஒரு பயனளரும் இருக்கும்போது, அந்த பயனாளர் விரைவா தாக்குதலுக்கு இலக்காகிறார். நேரடி மூல பயனாளரின் தேவையை நீக்குவதன் மூலம், இந்த sudo எனும் கட்டளையானது நம்முடைய கணினியைப் பற்றிய முக்கியமான தகவல்களை பொதுவாக தெரிந்துகொள்வதிலிருந்து நேர்த்தியாக நீக்குகிறது. இருப்பினும், அது மட்டும் அன்று. இந்த sudo எனும் கட்டளையின் மூலம், தனிப்பட்ட கட்டளைகள், பயனாளர்கள் , குழுக்கள் ஆகியோர்களுக்கு சலுகைகளை எளிதாக நிர்வகிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டளைகளின் கடவுச்சொல் இல்லாத செயல்படுத்துதல், பயனாளர் அமர்வுகளைப் பதிவு செய்தல், சுருக்கத்தொகுப்பு சரிபார்ப்புடன் கட்டளைகளைச் சரிபார்ப்பது போன்று பலவற்றை இயக்கலாம்.

15.alias

இதன்உதவியுடன் மாற்று கட்டளையைப் பயன்படுத்தி நீண்ட கட்டளைகளை எளிதில் நினைவில் கொள்ளும் குறுக்குவழி கட்டளைகளாக மாற்றலாம்:

$ alias ls=‘ls –classify –almost-all –ignore-backups –color’

16.clear

சில நேரங்களில் முனையம் குழப்பமாக இருக்கிறது. இந்த clearஎனும் கட்டளையை தட்டச்சு செய்த பிறகு (அல்லது சில உறைபொதிகளில் Ctrl+L ஐ அழுத்தினால்) ஒரு நல்ல, புதிய திரை போன்று ஆகிவிடுகின்றது

17.setfacl

பாரம்பரியமாக, POSIX கோப்பு அனுமதிகள் chown, chmod மூலம் தீர்மானிக்கப் படுவருகின்றது. கணினியின் அமைப்புகள் தற்போது இன்னும் சிக்கலானதாகி விட்டன, எனவே இன்னும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கான கட்டளையாக இந்த Setfacl எனும் கட்டளை அமைந்துள்ளது. இந்த Setfacl எனும் கட்டளை அணுகல் கட்டுப்பாட்டு பட்டியலை (ACL) உருவாக்க உதவுகிறது, தன்னிச்சையான பயனர்களுக்கு அனுமதிகளை வழங்குகிறது. கோப்புறைகள் , அவர்களுக்குள் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு இயல்புநிலை அனுமதிகளை இது அமைக்கிறது.

18.netcat

ஒவ்வொரு பயனாளருக்கும் இந்த netcat (nc) எனும் கட்டளைத்தேவையில்லை, ஆனால் அதைப் பயன்படுத்துகின்ற சிலர் அதை விட்டுவிடவே விரும்புவதில்லை. து அனைத்து நோக்கங்களுடனான பிணைய இணைப்பு கருவியாக திகழ்கின்றது.
இது telnet போன்ற ஒரு பொருத்துவாயுடன் இணைக்கின்றது:

$ nc -u 192.168.0.12 80

இது ping போன்ற ஒரு பொருத்துவாயில் ping செய்கின்றது:

$ nc -zvn 192.168.0.12 25

இது nmap போன்ற திறந்த பொருத்துவாயில்களை ஆராய்கின்றது:

$ nc -zv 192.168.0.12 2580

வை ஒரு சிறிய மாதிரிமட்டுமே . இன்னும் ஏராளமானபயன்கள் உள்ளன

லினக்ஸ் முனையமானது, ஆக்கபூர்வமான பல்வேறுசிக்கலைத் தீர்வுசெய்வது பற்றியதாக அமைந்துள்ளது. கட்டளைகளைக் கற்றுக்கொள்ளும்போது, நம்முடைய சொந்த கட்டளைகளை உருவாக்க நாம் பயன்படுத்தக்கூடிய தொகுப்புகட்டுமானங்களையும் கற்றுக் கொள்ளலாம். உறைபொதியில் பல கட்டளைகள் நாமே எழுதி உறைபொதி உரைநிரல்களைஉருவாக்கலாம். இதன் விளைவாக, நம்முடைய பணிப்பாய்வு நாம் எவ்வாறு பணிசெய்ய வேண்டும் என்பதற்கேற்ப அமைகின்றது. நம்முடைய உறைப்பொதியில் உள்ள அத்தியாவசிய கட்டளை களை நம்முடைய சொந்த செயல்திறனிற்காகவும் வசதிக்காகவும் வடிவமைத்துகொள்க. சில சிறந்த கட்டளைகளை அறிந்து கொள்ள சிறிது நேரம் செலவழித்திடுக, ஆயினும் பின்னர் நம்முடைய சொந்த கட்டளையை உருவாக்கிபிறகு நன்றாக அமைந்திருந்தால் அதனை அதை திறமூலமாக்குக,மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்க!

%d bloggers like this: