கட்டற்ற கட்டணமற்ற OpenDots ஒரு அறிமுகம்

By | November 7, 2026

சமீபத்தில் நடைபெற்ற தங்களின் DevDay நிகழ்வில், OpenAI எனும் நிறுவனம் Dotsஎன்பதை அறிமுகப்படுத்தியது. இவை எப்போதும் இயங்கும் செய்யறிவின்(AI)சக பணியாளர்கள் ஆகும் . இவை தங்களின் சொந்த மெய்நிகர் கணினிகளில் இயங்கி, நாம் இல்லாதபோது பின்னணியில் பணிகளை முடித்து, அவ்வாறு முடிக்கப்பட்ட வேலையை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். இருப்பினும், OpenAI-இன் இந்தத் தீர்வு ஒரு மூடிய மூலக் குறிமுறைவரிகளை (closed-source) கொண்டது, இது OpenAI-இன் சொந்த மாதிரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, மேலும் பிராந்தியம், சந்தா திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கு பதிலாக OpenDots என்பது முற்றிலும் திறமூலக் குறிமுறைவரிகளை கொண்ட, சுயமாந புரவலராக செய்யப்பட்ட ஒரு மாற்றுத் தீர்வாகும். இது நம்மடைய தரவு, தனியுரிமை , மாதிரிகள் ஆகியவற்றின்மீது முழுமையான கட்டுப்பாட்டுடன், அதே ஆற்றலை நமக்கு வழங்குகிறது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
ஒவ்வொரு “Dot”-உம் ஒரு குறிப்பிட்ட பெயர், பங்கு, அறிவுறுத்தல்கள் , கருவிகளின் தொகுப்புடன் வழங்கப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த செய்யறிவு(AI)உதவியாளர் ஆகும்:
• மெய்நிகர் கணினி அணுகல்: ஒவ்வொரு “Dot”-உம் அதன் சொந்த உலாவி, கோப்பு அமைவு, முனைமம் ஆகியவற்றினை பயன்படுத்திகொள்ள முடியும். நாம் எந்த நேரத்திலும் உள்ளே நுழைந்து இதன் கட்டுப்பாட்டை நாம் எடுத்துக் கொள்ளலாம். (பாதுகாப்பிற்காக கணினி அணுகல் இயல்பாகவே அணைத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது).
• பணியிடமும் ஆவணங்களும்: ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளமைக்கப்பட்ட அரட்டையறையுடன் கூடிய ஒரு காட்சி திருத்தியைப் பயன்படுத்தி, குறிப்புகளையும், ஆவணங்களையும் “Spaces”, “Pages” -இல் ஒழுங்கமைத்திடபடுகின்றது.
• நிகழ்நேரக் குரல் அழைப்புகள்: நம்முடைய Dotஆனது பின்னணியில் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும்போதே, அதை அழைத்து நிகழ்நேரத்தில் பேசலாம்.
•தளர்வான(Slack)ஒருங்கிணைப்பு: நம்முடைய அரட்டை செயலியை விட்டு வெளியேறாமலேயே, தளர்வான(Slack) உரையாடல்களில் நேரடியாக Dot-ஐக் குறிப்பிட்டு கூப்பிட்டு வேலையைப் பகிர்ந்தளிக்கலாம்.
• மனித மேற்பார்வையும் திட்டமிடலும்: சேமிப்பதற்கு முன் நம்முடைய ஒப்புதலுக்காக வரைவுகளை நம்முடைய Dot-ஐ நம்மிடம் சமர்ப்பிக்கச் செய்திடலாம், அல்லது தொடர்ச்சியான தானியங்கிப் பணிகளைச் செய்ய அதைத் திட்டமிடலாம்.
• தொடர்ச்சியான கற்றல்: தானியங்கியான கற்றலின் மூலம், நம்முடைய உரையாடல்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன்களாக மாறுகின்றன, அவற்றை நம்முடைய Dot-ஆனது காலப்போக்கில் கற்றுக்கொண்டு பயன்படுத்திகொள்கிறது.
முழுமையான நெகிழ்வுத்தன்மையும் கட்டுப்பாடும்
OpenDots ஆனது திறந்த தரநிலைகளின் (CopilotKit , AG-UI):) அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால்:
1. மாதிரி தேர்வு: நாம் இதை எந்தவொரு OpenAIக்கு -இணக்கமான செய்யறிவு(AI) மாதிரியுடனும் (உள்ளூர் அல்லது தனிப்பட்ட மாதிரிகள் உட்பட) இணைக்கலாம்.
2. இயக்கமுறைமை அணுகல்: இணையத்திலும் , கைப்பேசியின் உலாவிகள் ஆகிய இரண்டிலும் இதைத் தடையின்றிப் பயன்படுத்தி கொள்ளலாம்.
3. தனிப்பயனாக்கம்: பயனரின் இடைமுகத்தை மாற்றியமைத்திடலாம், தனிப்பயன் கருவிகளைச் சேர்த்திடலாம், நம்முடைய குழுவின் தேவைகளுக்கு ஏற்ப பணிப்பாய்வுகளைத் தனிப்பயனாக்கிடலாம்.
இதனை தொடங்குவது எப்படி
மேம்படுத்துநர்கள் தொகுபதிவகத்தை(repository) நகலாக்கம் ( clone ) செய்து, வழக்கமான மேம்படுத்துநர் கட்டளைகளைப் பயன்படுத்தி OpenDots-ஐ வளாக கணினியில் இயக்கலாம் அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
Bash
git clone github.com/CopilotKit/OpenDots.git
cd OpenDots
npm ci
cp .env.example .env
npm run dev
ஒட்டுமொத்த சுருக்கம்: OpenDots, தன்னாட்சிபெற்ற செய்யறிவானது(AI)குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது. இதன் மூலம், தனியுரிமையுடனான செய்யறிவு(AI)கருவிகளுக்கு ஒரு தனிப்பட்ட, தனிப்பயனாக்கக்கூடிய , செலவு குறைந்த மாற்றீட்டை அக்குழுக்களுக்கு வழங்குகிறது.

Leave a Reply