பொதுமக்கள் தங்களுடைய கானொளி படங்களை தாங்களே திருத்தம் செய்வதற்கு வசதியாக தற்போது open Shot Portable 2.4.4 (video editor) எனும் கட்டற்ற கையடக்ககானொளி படக்கருவி வெளியிடப்பட்டுள்ளது. இது கானொளி காட்சி படங்களை முழுமையாக தொகுப்பதற்காக உதவுகின்றவகையிஸ் முழு வசதி வாய்ப்புளையும் கொண்டதொரு பயன்பாடாக விளங்குகின்றது , எனவே இதனைகொண்டு நம்முடைய பயணத்தின் போது கூட கானொளி காட்சி படங்களைத் திருத்தம் செய்திடமுடியும். இது PortableApps.com எனும் இணையதளம் அறிவுறுத்துகின்ற வடிவமைப்பில் தொகுக்கப்பட்டுள்ளதால் இதனை PortableApps.com இயங்குதளத்துடன் எளிதாக ஒருங்கிணைக்க முடியும். அதைவிட இது முழுக்கமுழுக்க கட்டற்றதாகவும் முற்றிலும் கட்டணமில்லாமலும் பொதுமக்களுக்கு கிடைக்கின்றது , இதுகானொளி காட்சி படத்தினை தொகுப்பதற்கான முழுமையான தொழில்முறை வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
இது லினக்ஸ், மேக் , விண்டோஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்க கானொளி படங்களை திருத்துவதற்கு உதவிடும் ஒரு சிறந்த குறுக்கு-தள பயன்பாடாகும்.
நம்முடைய கானொளி படக்காட்சிகளில் மிகச்சரியான தருணங்களையும் காட்சிகளையும் கண்டறிந்து அவைகளை மிகச்சரியாகவும் விரைவாகவும் ஒழுங்கமைத்திடலாம் , மேலும் நம்முடைய கானொளி படகாட்சிகளை தேவையானவாறு வெட்டிஒட்டி சரிசெய்வதற்கு ஏற்ப இது பல்வேறு எளிய வழிமுறைகளையும் கொண்டுள்ளது.
இதனுடைய அசைவூட்டுதல் எனும் சக்திவாய்ந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி, நம்முடைய கானொளி காட்சிகளில் எதையும் அசைந்தாடுமாறும், குதித்தோடுமாறும் செய்யலாம் மேலும் காட்சிகளை உயிரோட்டமாக செயல்படுமாறும் செய்திடலாம்.
இதில் கானொளிகாட்சிகளின் பின்னணி, இசையொலிகளின்பாதைகளையும் மேலும் பல தேவையான பல்வேறு அடுக்குகளைச் சேர்க்கவும் நீக்கவும் முடியும் .
இதனுடைய கானொளி காட்சிகள் விளைவுகள் இயந்திரம்(video effects engine) எனும் வசதியைப் பயன்படுத்தி, நம்முடைய கானொளிகாட்சிகளிலிருந்து பின்னணியை அகற்றி, வண்ணங்களைத் திருப்பி, காட்சிகளின் ஒளிரும்அளவை சரிசெய்திடமுடியும்.
நம்முடைய கானொளி காட்சிகளில் தேவையானவாறு இசை கோப்புகளை அலைவடிவங்களாகக் காட்சிப்படுத்திடலாம் , மேலும் நம்முடைய கானொளி படங்களின் ஒரு பகுதியாக இசையை அலைவடிவங்களாக வெளியிடலாம்.
நம்முடைய கானொளி காட்சிகளில் தலைப்பினை சேர்ப்பதற்காக இதனுடைய வார்ப்புருக்கள் ஒன்றைப் பயன்படுத்திகொள்ளலாம் அல்லது நமக்கென தனியாக நம்முடையசொந்த வார்ப்புரு ஒன்றினை உருவாக்கிகொள்ளமுடியும்
நம்முடைய கானொளி காட்சிகளில் உரைகளில் எழுத்துகள் பறந்து செல்வதை போன்ற அழகான முப்பரிமான (3D) அசைவூட்ட தலைப்புகளையும் விளைவுகளையும் உருவாக்கிடலாம்.
நேரவிளைவுகள் எனும் வசதியைபயன்படுத்தி காட்சி படங்களை கட்டுப்படுத்துதல், மாற்றியமைத்தல், மெதுவாக்குதல்,கானொளி படங்களை விரைவுபடுத்துதல். முன்னமைக்கப்பட்டதைப் பயன்படுத்துதல் அல்லது பின்னணி வேகம் செல்லும் திசையை உயிரேட்டமாக செயல்படுமாறு செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை எளிதாக செய்திடலாம்.
நம்முடைய கோப்பு மேலாளரிடமிருந்து கானொளி படங்களிற்கான அல்லது இசைகளிற்கான கோப்பினை இந்த பயன்பாட்டின் திரைக்கு இழுத்துவந்து விடுவதன்வாயிலாக நம்முடைய கானொளி காட்சி படங்களில் திருத்தம் செய்திடும் பணியைதுவங்கலாம்
இந்த கட்டற்ற கருவியானது நாம் பேசுகின்ற பல்வேறு மொழிகளில் கிடைக்கிறது, மேலும் தேவையெனில் வேறு பலமொழிகளில் இணையத்தின் வாயிலாக LaunchPad. எனும் பயன்பாட்டின் உதவியுடன் மொழிபெயர்க்கலாம்.
இது ஒருஎளிய பயனாளர் இடைமுகத்தன்மை கொண்டது . இதில் 32-பிட் ,64-பிட் ஆகிய இரண்டுபதிப்புகளாக அதிகபட்ச செயல்திறன் பொருந்தக்கூடிய தன்மைக்கேற்ப சேர்க்கப்பட்டுள்ளத.மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் www.openshot.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க