குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள்

நிரலாக்கத் திறன்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் இணையப் பயன் பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஆர்வமும் சிறந்த கருத்தமைவுமட்டுமே உள்ளது என்னசெய்வது என தத்தளிக்கவேண்டாம் குறிமுறைவரிகளை எழுதிடும்திறன் இல்லாதவர்களும் மென்பொருள் உருவாக்கிடுவதற்கான உதவி தற்போது தயாராக உள்ளது. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கத்திற்கு(No-code Development) உதவியை, தேர்வு செய்யக்கூடிய ஏராளமான திறமூல தளங்களும் உள்ளன. அவைகளுள் சிறந்தவை பின்வருமாறு.
குறிமுறைவரிகளற்ற நிரலாக்கம்(No-code Development) என்பது பொதுமக்கள் நிரலாளர்கள் போன்று எந்தவொரு குறிமுறைவரிகளையும் எழுதிடவேண்டியத் தேவையில்லாமல் மென்பொருளை தாமே சுயமாக உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும். ஒரு இணைய பயன்பாட்டை உருவாக்க விரும்புகின்றோம், ஆனால் எவ்வாறு நிரலாக்கம் செய்வது அதற்கான குறிமுறைவரிகளை எவ்வாறு எழுதுவது என்று நமக்குத்தெரியவில்லை. இந்நிலையில் குறிமுறைவரிகளற்ற நிரலாக்க இயங்குதளங்களின் மூலம் குறிமுறைவரிகளை எழுதாமலேயே, எளிமையான, காட்சி கருவிகளைப் பயன்படுத்தி நமக்குத்தேவையானபயன்பாட்டை நாமே உருவாக்கலாம். இந்த இயங்குதளங்கள் நமக்குத் தேவையான இழுத்து சென்றுவிடுதல் (drag-and-drop) எனும் எனும் இடைமுகம், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கூறுகள் போன்ற அனைத்தையும் வழங்குகின்றன, அதாவது இந்த துண்டுகளை தேவையானவற்றை ஒன்று சேர்த்து அமைப்பதன் மூலம் மென்பொருளை வடிவமைத்து உருவாக்கலாம்.
வீட்டினை செங்கற்களால் கட்டுவது போன்று என எண்ணிபார்த்திடுக. தேவையான செங்கற்களை நாமே உருவாக்க வேண்டிய அவசியமில்லை; கற்பனை செய்த வீட்டினை உருவாக்க இவற்றை ஒன்றாக இணைக்கின்றோம். குறிமுறைவரிகளற்ற நிரலாக்கமும் இதேபோன்று செயல்படுகிறது. சிக்கலான குறிமுறைவரிகளின் பகுதியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, நம்முடைய பயன்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் ,எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் மட்டும் நாம்அதிக கவனம் செலுத்தினால் போதுமானதாகும். தொழில்நுட்ப திறன் இல்லாதவர்கள் தங்கள் ஆலோசனைகளை உயிர்ப்பிக்கவும், மென்பொருளை விரைவாகவும் திறமையாகவும் உருவாக்குவதை இது மிகவும் எளிதாக்குகிறது.
குறிமுறைவரிகளற்ற நிரலாக்கம்(No-code Development) என்றால் என்ன?
குறிமுறைவரிகளற்ற நிரலாக்கம் என்பது, நாம் விரும்பிய மென்பொருளிற்கான கூறுகளை இழுத்து சென்று விடுவதன் மூலம் நமக்கான பயன்பாடுகளை நாமே உருவாக்க நம்மை அனுமதிக்கின்ற தளங்களைப் பயன்படுத்துவதாகும். இந்த இயங்குதளங்கள் நமக்கு தேவையான அனைத்து கருவிகளுடனும் கூறுகளுடனும் தயாராக இருக்கின்றன, எனவே நாம் எந்த குறிமுறைவரிகளையும் எழுத வேண்டிய அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, நம்முடைய பயன்பாட்டில் ஒரு பொத்தானைச் சேர்க்க விரும்பினால், பொத்தானிற்கான உறுப்பை பணியிடத்திற்கு இழுத்துச்சென்று விட்டிடுக. பயனாளரின் உள்ளீட்டிற்கு ஏதேனுமொரு படிவம் வேண்டுமா? அதற்கான படிவ கூறுகளை இழுத்துச்சென்று விட்டிடுக. இது அதே போன்று எளிதானது. இந்த உள்ளுணர்வு, காட்சி அணுகு முறையின் காரணமாக, புதிதாக குறிமுறைவரிகளை எழுதுவதை விட, செயலியின் பயன்பாட்டை மிக விரைவாக ஒன்றிணைக்கலாம்.
நிரலாக்கத்தில் பின்னணி இல்லாத ஆனால் மென்பொருளை உருவாக்க விரும்பும் நபர்களுக்கு இந்த வழிமுறை மிகவும் உதவியாக இருக்கின்றது. இது குறிமுறைவரிகளின் சிக்கலை அறவே நீக்குகிறது நம்முடைய பயன்பாட்டின் வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் மட்டும் நாம் அதிக கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த வழிமுறையில், மென்பொருளை உருவாக்குவதில் பொதுமக்கள் ஈடுபட்டு தங்களின் தேவைகளை உடனுக்குடன் எளிதாக தாமே பூர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் செயல்திட்டங்களின் ஆலோசனையிலிருந்து யதார்த்தத்திற்கு மிக வேகமாக நகரலாம்.
குறிமுறைவரிகள் எழுததேவையில்லாத தளங்களின் நன்மைகள்
குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத இயங்குதளங்கள் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன அவை பின்வருமாறு.
வேகம்: குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத இயங்குதளங்களின் மூலம், புதிதாக குறிமுறைவரிகளை எழுதுவதை விட மிகவிரைவாக புதிய பயன்பாடுகளை உருவாக்கலாம். பலமணிநேரங்கள் அல்லது பலநாட்களை செலவழித்து நிரலாக்கத்திற்கான குறிமுறை வரிகளை எழுதுவதற்குப் பதிலாக, நம்முடைய பயன்பாட்டினை விரைவாக உருவாக்க, முன்பே கட்டமைக்கப்பட்ட கூறுகளைமட்டும் பயன்படுத்திகொள்ளலாம்.
அணுகல்தன்மை: குறிமுறைவரிகளை எழுதிடுகின்ற திறன் இல்லாதவர்கள்கூட மென்பொருளை உருவாக்குவதற்கு குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத தளங்கள் சாத்தியமாக்குகின்றன. சிறு வணிக உரிமையாளர்களாக இருந்தாலும், கல்வியாளர்களாக இருந்தாலும்அல்லது பொழுதுபோக்காக இருந்தாலும், பொது மக்களாக இருந்தாலும் தங்கள் கருத்துக்களை உயிர்ப்பிக்க முடியும் என்பதே இதன் பொருளாகும்.
செலவு குறைந்தவை: நமக்கான பயன்பாட்டினை உருவாக்கிடுவதற்காக சிறந்த மேம்படுத்துநர்களை எவரையும் பணியமர்த்தத் தேவையில்லை என்பதால், குறிமுறைவரிகள் எழுததேவையில்லாத இயங்குதளங்களைப் பயன்படுத்தி பணத்தைச் சேமிக்கலாம். இவைகளின் கருவிகள் பயன்படுத்த எளிதானது என்பதால், பெரும்பாலான பணிகளை நாமே அல்லது ஒரு சிறிய குழுவுடன் எளிதாக செய்யலாம், அதற்கான செலவுகளைக் குறைக்கலாம்.
நெகிழ்வுத்தன்மை: இந்த தளங்கள் நம்முடைய பயன்பாடுகளில் மாற்றங்களையும் புதுப்பிப்புகளையும் எளிதாக்குகின்றன. நாம் ஒரு புதிய வசதியை சேர்க்க வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ளதை மாற்ற வேண்டும் என்றால், சிக்கலான குறிமுறைவரிகளுக்குள் நுழையாமல் விரைவாகச் செய்யலாம். நம்முடைய பயன்பாட்டினை புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும், பயனாளரின் கருத்துகளுக்கு பதிலளிக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத திறமூலஇயங்குதளங்கள் முக்கியமானவைகளாகும், ஏனெனில் அவை வெளிப்படைத்தன்மை நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. தேவையெனில் பயனர்கள் மூலக் குறிமுறைவரிகளைப் பார்வையிடலாம், அதை மாற்றலாம் சமூககுழுவுடன் தங்கள் மேம்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பான, தனிப்பயனாக்கக்கூடிய நம்பகமான மென்பொருளுக்கு வழிவகுக்கிறது.
சிறந்த குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத இயங்குதளங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள்
குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்க.
பயன்பாட்டுத்திறன்: இயங்குதளத்தைப் பயன்படுத்துவது எவ்வளவு எளிது என்பதைக் குறிக்கிறது. ஒரு பயனர் நட்புடனான தளமானது உள்ளுணர்வு , இடைமுகம், தெளிவான வழிமுறைகள், பயனுள்ள பயிற்சிகளைக் கொண்டுள்ளது. இதன் பொருள், தொழில்நுட்ப பின்னணி இல்லாதவர்களும் கூட, அதிக சிரமமின்றி இயங்குதளத்திற்குள் செல்லவும் பயன்பாடுகளை உருவாக்கவும் முடியும்.
தனிப்பயனாக்குதல்: தனிப்பயனாக்கம் என்பது நம்முடைய குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய தளத்தை மாற்றியமைத்து நீட்டிக்கும் திறன் ஆகும். மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய இயங்குதளமானது, அதன் வசதிகளை மாற்றியமைக்கவும், புதியகூறுகளைச் சேர்க்கவும்,நம்முடைய செயல் திட்டப் பணிக்கு ஏற்றவாறு வடிவமைப்பைச் சரிசெய்யவும் நம்மை அனுமதிக்கிறது. இந்த நெகிழ்வுத்தன்மையானது நம்முடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பயன்பாடுகளை உருவாக்குவதற்கு மிகமுக்கியமானதாகும்.
சமூககுழுவின் ஆதரவு: சமூககுழுவின் ஆதரவு என்பது ஏதேனும் சிக்கல் எழும்போது அதனை தீர்வுசெய்வதற்காக உதவக்கூடிய, தம்முடைய பட்டறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஆதரவான சமூககுழுவின் இருப்பை உள்ளடக்கியது. ஒரு வலுவான சமூககுழுவின் மன்றங்கள், பயனர் குழுக்கள் ஆதாரங்களை வழங்குகிறது, அங்கு நாம் கேள்விகளைக் கேட்கலாம், தீர்வுகளைக் காணலாம் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளலாம். நம்முடைய செயல் திட்டங்களை சரிசெய்து மேம்படுத்துவதற்கு இந்த ஆதரவு வலைபின்னல் விலைமதிப்பற்றதாகும்.
ஒருங்கிணைப்புத் திறன்கள்: ஒருங்கிணைப்புத் திறன்களானவை மற்ற கருவிகள், அமைப்புகளுடன் இயங்குதளம் எவ்வளவு நன்றாக இணைக்க முடியும் என்பதைக் குறிக்கின்றன. ஒரு நல்ல குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத தளமானது பல்வேறு தரவுத்தளங்கள், APIகள் , மூன்றாம் தரப்பு சேவைகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்க வேண்டும். இது நம்முடைய பயன்பாடு மற்ற மென்பொருளுடனும் அமைப்புகளுடன் தொடர்புகொள்வதை உறுதிசெய்கிறது, மேலும் இது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பல்துறை சார்ந்ததாகவும் ஆக்குகிறது.
செலவும் உரிமமும்: செலவும் உரிமமும் என்பது தளத்தைப் பயன்படுத்து வதற்கான கட்டண வசதிகளையும் அது வழங்கும் உரிமத்தின் வகையையும் உள்ளடக்கியது. சில இயங்குதளங்கள் கட்டணமற்றது ,கட்டற்றது மற்றவற்றிற்கு சந்தா அல்லது ஒரு முறை கட்டணம் தேவைப்படலாம். கட்டண அமைப்பு, உரிம விதிமுறைகளைப் புரிந்துகொள்வது நம்முடைய செலவிடுகின்ற திறனிற்குள் இயங்குதளம் பொருந்துகிறதா நம்முடைய பயன்பாட்டுத் தேவைகளுக்கு இணங்குகிறதா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.
சிறந்த குறிமுறைவரிகள்எழுததேவையில்லாத திற மூல தளங்கள்
Appsmith கண்ணோட்டம்: Appsmith என்பது உள்ளக கருவிகளை விரைவாக உருவாக்குவதற்கான ஒரு திற மூல தளமாகும்.
வசதிகள்: இழுத்துசென்ற விடுதல் எனும் இடைமுகம், ஆயத்த widgets, API ஒருங்கிணைப்புகள் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
நன்மை: பயன்படுத்த எளிதானது, நல்ல ஆவணங்கள், செயலில் உள்ள சமூககுழுவினை கொண்டுள்ளது.
பாதகம்: வரையறுக்கப்பட்ட தனிப்பயனாக்குதல் வாய்ப்புகள்; சிக்கலான பயன்பாடுகளுடன் செயல்திறன் பின்தங்கியிருக்கலாம்.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: உள்ளகமுகப்புத்திரைகள், நிர்வாக பலகங்கள், அறிக்கையிடல் கருவிகள்.
செயல்திறனும் அளவிடுதலும்: பொதுவாக சிறிய நடுத்தர செயல்திட்டங்களுக்கு இது மிகச்சிறப்பாக செயல்படுகிறது. மிகவும் சிக்கலான பயன்பாடுகளுடன் தாமதமாகலாம்.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:செயலில் உள்ள சமூககுழுவும் விரிவான ஆவணங்களையும் கொண்டுள்ளது.
இதனுடடைய இணையமுகவரி URL: www.appsmith.com/ ஆகும்
Budibase
கண்ணோட்டம்: Budibase பயனர்கள் குறிமுறைவரிகள் இல்லாமல் வணிக பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது.
வசதிகள்: தானியங்கிகருவிகள், தனிப்பயனாக்கக்கூடிய கூறுகள், தரவுத்தள ஒருங்கிணைப்பு ஆகியன.
நன்மை: பயனர் நட்பு, திறமூலம், விரைவான முன்மாதிரிக்கு நல்லது.
பாதகம்: மற்றவைகளுடன் ஒப்பிடும்போது குறைவான ஒருங்கிணைப்புகள், சிறிய சமூககுழுவினை கொண்டது.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: வணிக பயன்பாடுகள், உள்ளக கருவிகள், தரவு மேலாண்மை.
செயல்திறனும் அளவிடுதலும்:அளவிடக்கூடிய வாய்ப்புகளுடன் நல்ல செயல்திறன் , பெரும்பாலான வணிக பயன்பாடுகளுக்கு ஏற்றது.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:நல்ல ஆதரவு ஆதாரங்களுடன் வளரும் சமூககுழுவினைகொண்டது.
இதனுடடைய இணையமுகவரி: budibase.com/ ஆகும்
NocoDB
கண்ணோட்டம்: NocoDB தரவுத்தளங்களை திறன்மிகு விரிதாள்களாக மாற்றுகிறது.
வசதிகள்: விரிதாள் இடைமுகம், தரவுத்தள இணைப்புகள், தானியங்கிசெயல்.
நன்மை: எளிதான தரவுத்தள மேலாண்மை; பல்வேறு தரவுத்தளங்களை ஆதரிக்கிறது.
பாதகம்: வரையறுக்கப்பட்ட மேம்பட்ட வசதிகள்; அடிப்படை தரவுத்தள அறிவு தேவை.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: தரவு காட்சிப்படுத்தல், தரவுத்தள மேலாண்மை, குழுவின் ஒத்துழைப்பு.
செயல்திறனும் அளவிடுதலும்:அதிக தரவுஉள்ள பயன்பாடுகளுக்கு திறன்மிக்கது ஆனால் பெரிய தரவுத்தொகுப்புகளுக்கு மேம்படுத்தல் தேவைப்படலாம்.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:போதுமான ஆதரவுடன் நடுத்தர அளவிலான சமூககுழுவினைகொண்டது.
இதனுடடைய இணையமுகவரி: nocodb.com/ ஆகும்
Retool
கண்ணோட்டம்: உள்ளக கருவிகளை விரைவாக உருவாக்க இது உதவுகிறது.
வசதிகள்: இழுத்து சென்ற விடுதல் எனும் இடைமுக கட்டமைப்பு, முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட கூறுகள், API ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
நன்மை: சக்திவாய்ந்த ஒருங்கிணைப்புகள், தனிப்பயனாக்கக்கூடிய UI கொண்டது.
பாதகம்:செங்குத்தான கற்றல் வளைவு, மேம்பட்ட வசதிகளுக்கான அதிக விலை.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: நிர்வாக பலகங்கள், முகப்புத்திரைகள், உள்ளக கருவிகள்.
செயல்திறனும் அளவிடுதலும்:உயர் செயல்திறன் அளவிடுதல். குறிப்பாக நிறுவன பயன்பாடுகளுக்கு ஏற்றது.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:வலுவான சமூககுழுவும் ஆதரவும் கொண்டது, குறிப்பாக நிறுவன பயனர்களுக்கு ஏற்றது.
இதனுடடைய இணையமுகவரி: retool.com/ ஆகும்
Joget
கண்ணோட்டம்: Joget என்பது நிறுவன இணைய பயன்பாடுகளை உருவாக்கு வதற்கான ஒரு திறமூல தளமாகும்.
வசதிகள்: காட்சி மேம்பாடு, செயல்முறை தானியங்கிசெயல், மேககணினி ஆதரவு கொண்டது.
நன்மை: நிறுவன-நிலையிலான வசதிகள், மிகவும் தனிப்பயனாக்கக்கூடியவை.
பாதகம்: சிக்கலான அமைப்பு; தொழில்நுட்ப அறிவு தேவைப்படலாம்.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: வணிக செயல்முறை மேலாண்மை, நிறுவன பயன்பாடுகள், பணிப்பாய்வு தானியங்கிசெயல்.
செயல்திறனும் அளவிடுதலும்:நிறுவன பயன்பாட்டிற்கு அளவிடக்கூடியது ஆனால் உகந்த செயல்திறனுக்காக தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படலாம்
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:நிறுவன பயனர்களுக்கு நல்ல ஆதாரங்களைக் கொண்ட செயலில் உள்ள சமூககுழுவினை கொண்டுள்ளது.
இதனுடடைய இணையமுகவரி: www.joget.org/ ஆகும்
Directus
கண்ணோட்டம்: இது தரவுத்தள உள்ளடக்கத்தை நிர்வகிப்பதற்கான ஒரு திறமூல கருவியாகும்.
வசதிகள்: Headless CMS,API-முதல்,பாத்திர அடிப்படையிலான அணுகலைகொண்டது.
நன்மை: நெகிழ்வானது; பல்வேறு தரவுத்தளங்கள், வலுவான API ஐ ஆதரிக்கிறது.
பாதகம்:இதுவொரு முழுமையான no-codeதளம்அன்று;தரவுத்தள அமைப்பு தேவை.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: உள்ளடக்க மேலாண்மை, தரவுத்தள மேலாண்மை, பயன்பாடுகளுக்கான பின்புலதளம்.
செயல்திறனும் அளவிடுதலும்:வலுவான அளவிடுதல், குறிப்பாக உள்ளடக்க நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:வலுவான சமூககுழுவினையும் விரிவான ஆதரவினையும் கொண்டுள்ளது
இதனுடடைய இணையமுகவரி: directus.io/ ஆகும்
OutSystems
கண்ணோட்டம்: OutSystems என்பது நிறுவன தர பயன்பாடுகளுக்கான குறைந்த-குறிமுறைவரிகளின் தளமாகும்.
வசதிகள்: முழு அடுக்கு மேம்பாடு, செநு(AI)உதவி, மேககணினி வரிசைப்படுத்தல்.
நன்மை: வலுவான வசதிகள், நல்ல அளவிடுதல்.
பாதகம்: அதிக விலை, முழுமையான no-code அல்லாதது மிகசிக்கலானது.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: நிறுவன பயன்பாடுகள், சிக்கலான பணிப்பாய்வுகள், கைபேசி பயன்பாடுகளை உருவாக்குதல்.
செயல்திறனும் அளவிடுதலும்:சிறந்த செயல்திறன் , அளவிடுதல்; நிறுவன தர பயன்பாடுகளுக்கு ஏற்றது.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:ஒரு பெரிய சமூககுழுவுடன் சிறந்த ஆதரவினை கொண்டது.
இதனுடடைய இணையமுகவரி: www.outsystems.com/ ஆகும்
Mendix
கண்ணோட்டம்: இது குறிமுறைவரிகள் தேவையில்லாத நிரலாக்கத்தை ஆதரிக்கின்ற குறைந்த-குறிமுறைவரிகளின் தளமாகும்.
வசதிகள்: காட்சி மேம்பாடு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கூறுகள், மேககணினியின் ஒருங்கிணைப்பு ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
நன்மை: வலுவான ஆதரவு, நெகிழ்வான வரிசைப்படுத்தல்.
பாதகம்: விலை உயர்ந்ததாக இருக்கலாம், சிக்கலான பயன்பாடுகளுக்கு சில குறிமுறைவரிகளின் வழிமுறை தேவைப்படலாம்.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: நிறுவன பயன்பாடுகள், விரைவான முன்மாதிரி, கைபேசி பயன்பாடுகள், இணைய பயன்பாடுகள்.
செயல்திறனும் அளவிடுதலும்:உயர்ந்த அளவிடுதல், செயல்திறன்; சிறிய பெரிய அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:வலுவான சமூக ஆதரவும் விரிவான ஆதாரங்களையும் கொண்டுள்ளது.
இதனுடடைய இணையமுகவரி: www.mendix.com/ ஆகும்
Corteza
கண்ணோட்டம்: Corteza என்பது வணிக பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு திறமூல தளமாகும்.
வசதிகள்: பணிப்பாய்வு தானியங்கிசெயல், CRM, தனிப்பயனாக்கக்கூடிய தகவமைவுகள் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
நன்மை: திறமூலம், சமூககுழு சார்ந்த, நெகிழ்வான திறன்மிக்கது.
பாதகம்: சிறிய சமூககுழு, குறைவான மெருகூட்டப்பட்ட இடைமுகம்.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: CRM, வணிக செயல்முறை மேலாண்மை, தனிப்பயன் வணிக பயன்பாடுகள்.
செயல்திறனும் அளவிடுதலும்:நல்ல செயல்திறன்; வணிக செயல்முறைகளுக்கு அளவிடக்கூடியது, ஆனால் குறைவான பளபளப்பினை கொண்டது.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்: சிறிய சமூககுழுவினை கொண்டது ஆனால் இக்குழுமிகசுறுசுறுப்பாகவும் ஆதரவாகவும் இருக்கிறது
இதனுடடைய இணையமுகவரி: cortezaproject.org/ ஆகும்

Internal.io
கண்ணோட்டம்: Internal.io என்பது உள்ளக கருவிகளை விரைவாக உருவாக்குவதற்கான ஒரு தளமாகும்.
வசதிகள்: முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட மாதிரிபலகங்கள், API ஒருங்கிணைப்புகள், பயனாளர் அனுமதிகளை கொண்டது.
நன்மை: பயன்படுத்த எளிதானது, விரைவான அமைப்பு, நல்ல ஒருங்கிணைப்பு.
பாதகம்:உள்ளகக் கருவிகளுக்கு மட்டும்பொதுப் பயன்பாடுகளுக்குப் பொருந்தாது.
பயன்படுத்திடும் வழக்கங்கள்: உள்ளக முகப்புத்திரைகள், நிர்வாகக் கருவிகள், தரவு மேலாண்மை.
செயல்திறனும் அளவிடுதலும்:நல்ல அளவிடுதல் கொண்ட உள்ளக கருவிகளுக்கான நம்பகமான செயல்திறனை கொண்டது.
சமூககுழுவும் ஆவணங்களின்ஆதரவும்:உள்ளக கருவிகளுக்கான மையப்படுத்தப்பட்ட ஆதரவுடன் நடுத்தர சமூக குழுவின் ஆதரவினை கொண்டது
இதனுடடைய இணையமுகவரி: internal.io/ ஆகும்
குறிமுறைவரிகள் தேவையில்லாத திறமூல தளத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், வணிகநிறுவனங்கள் தங்கள் நிரலாக்க மேம்பாட்டு செயல்முறைகளை நெறிப்படுத்தலாம், செலவுகளைக் குறைக்கலாம் செயலியின் பயன்பாடுகளை உருவாக்க தொழில்நுட்பம் அல்லாத பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கலாம்.
மேலே கண்டவற்றுள் நம்முடைய தேவைகளுக்கு சரியான தளத்தை எவ்வாறு தேர்வு செய்வது
தேவைகளுக்கு சரியான குறிமுறைவரிகளின் தேவையில்லாத தளத்தைத் தேர்ந்தெடுப்பது,
நம்முடைய செயல்திட்டத் தேவைகள் நீண்ட கால இலக்குகளை கவனமாக மதிப்பீடு செய்வதை உள்ளடக்குகிறது. பயன்பாட்டின் எளிமை, தனிப்பயனாக்குதல் வாய்ப்புகள் , ஒருங்கிணைப்பு திறன்கள் போன்ற நமக்குத் தேவையான குறிப்பிட்ட வசதிகளையும் செயல்பாடுகளையும் அடையாளம் காண்பதன் மூலம் இதனை தொடங்கிடுக. நாம் உருவாக்கத் திட்டமிடும் பயன்பாடுகளின் வகை, நம்முடைய செயல்திட்டங்களின் சிக்கலான தன்மை அளவை தளங்களை கையாள முடியுமா என்பதைக் கருத்தில் கொள்க. கிடைக்கக்கூடிய சமூககுழுவின் ஆதரவினையும் ஆதாரங்களையும் மதிப்பிடுக, ஏனெனில் இவை பிழைகாணலிற்கும் கற்றலுக்கும் முக்கியமானதாக இருக்கும். கூடுதலாக, நம்முடைய செலவிடும் அளவு பயன்பாட்டு எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போவதை உறுதிப்படுத்த, அதன்விலை உரிம விதிமுறைகளின் காரணிகளை சரிபார்த்திடுக. இந்த வசதிகளை முழுமையாக ஆராய்வதன் மூலம், நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தளத்தை தேர்ந்தெடுக்கலாம் வெற்றிகரமான பயன்பாட்டு மேம்பாட்டிற்கு நம்மை தக்கவைத்து கொள்ளலாம்.
நம்முடைய செயல்திட்டத் தேவைகளை மதிப்பிடுதல்: நம்முடைய செயல் திட்டத்தின் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்த பணியை துவங்குக.நமக்கு நாமே கேள்விகளை கேட்டுக்கொள்க:
நான் எந்த வகையான பயன்பாட்டை உருவாக்குகிறேன் (எ.கா., உள்ளக கருவி, பொதுவான பயன்பாடு)?
எனக்கு எந்த அளவிலான தனிப்பயனாக்கம் தேவை?
சமூககுழுவின் ஆதரவு , ஆவணங்கள் எவ்வளவு முக்கியம்?
மற்ற கருவிகளுடன் எனக்கு வலுவான ஒருங்கிணைப்பு தேவையா?
எனது செலவிடும் அளவு எவ்வளவு?
நீண்ட கால பரிசீலனைகள்: நம்முடைய செயல்திட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொள்க. பின்வருமாறானக் கேள்விகளைக் கேட்டுக்கொள்க:
எனது தேவைகளுடன் இயங்குதளம் அளவிடப்படுமா?
சாத்தியமான மறைக்கப்பட்ட செலவுகள் உள்ளதா?
தளத்தின் அதன் சமூககுழுவின் நீண்டகால நம்பகத்தன்மை என்ன?
தொடங்குவதற்கான உதவிக்குறிப்புகள்
சிறியதாகத் தொடங்குக: தளத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள ஒரு எளிய செயல்திட்டத்துடன் தொடங்கிடுக.
கிடைக்கக்கூடிய ஆதாரங்களைப் பயன்படுத்திடுக: சமூககுழுவின் மன்றங்கள், ஆவணங்கள் , பயிற்சிகள் ஆகியவற்றினைப் பயன்படுத்திகொள்க.
பரிசோதனை: எது மிகவும் உள்ளுணர்வும் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்பதைசரிபார்க்க வெவ்வேறு தளங்களை முயற்சித்திடுக.
வளர்ந்து வரும் போக்குகள்
எதிர்காலத்தில், குறிமுறைவரிகளின்தேவையில்லாத தளங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
அதிகரித்த செநு(AI) ஒருங்கிணைப்பு: செநு(AI) கருவிகள் குறிமுறைவரிகளின் தேவையில்லாத இயங்குதளங்களில் அதிகமாக இருக்கும், மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை தானியக்கமாக்குதல், மேம்படுத்துதல்களை பரிந்துரைத்தல், முடிவெடுப்பதில் கூட உதவுவதன் மூலம் வளர்ச்சி செயல்முறையை மேம்படுத்தக்கூடும். இந்த ஒருங்கிணைப்பு பயனாளர்களுக்கு ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் எதுவும் தேவையில்லாமல் அதிநவீன பயன்பாடுகளை உருவாக்குவதை எளிதாக்குகின்றது.
சிறந்த ஒத்துழைப்புக் கருவிகள்: மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு வசதிகள் வெளிப்படும், குழுக்களை செயல்திட்டங்களில் மிகவும் திறம்படச் செய்ய உதவுகிறது. இதில் நிகழ்நேர தொகுப்பு, பதிப்பு கட்டுப்பாடு,செயல் திட்ட மேலாண்மை கருவிகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும். இந்த மேம்பாடுகள் குழுவானபணியை வளர்க்கும், தகவல்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் செயல்திட்ட காலக்கெடுவை துரிதப்படுத்தும்.
விரிவாக்கப்பட்ட பயன்பாட்டு நிகழ்வுகள்: குறிமுறைவரிகளின் தேவையில்லாத இயங்குதளங்கள் மிகவும் சிக்கலான , மாறுபட்ட பயன்பாடுகளை ஆதரிக்க அவற்றின் திறன்களை விரிவுபடுத்தக்கூடும். மேம்பட்ட தரவு பகுப்பாய்வு இயந்திர கற்றல் மாதிரிகள் முதல் சிக்கலான பணிப்பாய்வு தானியங்கிசெயல், IoT ஒருங்கிணைப்புகள் வரை, இந்த தளங்கள் பரந்த அளவிலான வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவிருக்கின்றன. இந்த விரிவாக்கமானது குறிப்பிட்ட தொழில்துறை தேவைகளுக்கு ஏற்றவாறு தீர்வுகளை புதுமைப்படுத்தவும் மேம்படுத்தவும் பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றது.
ஒட்டுமொத்தமாக, இந்த முன்னேற்றங்கள் எதிர்காலத்தைக் குறிக்கின்றன, அங்கு குறிமுறைவரிகளின் தேவையில்லாத தளங்கள் மென்பொருள் மேம்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்துவது போன்ற மாற்றிடுவது மட்டுமல்லாமல், அதிநவீன பயன்பாடுகளை உருவாக்குவதில் அதிக திறன், புதுமை, சுறுசுறுப்பு ஆகியவற்றை அடைய நிறுவனங்களுக்கு உதவுகிறது.
எதிர்காலத்திற்கான கணிப்புகள்
​​பல முக்கிய போக்குகள் குறிமுறைவரிகளின் தேவையில்லாத தளங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கின்றன.முதன்மைவெள்ளோட்ட தத்தெடுப்பு: குறிமுறைவரிகளின் தேவையில்லாத கருவிகள் தொடர்ந்து உருவாகி மேலும் சக்திவாய்ந்ததாக இருப்பதால், பல்வேறு தொழில்களில் பரந்த தத்தெடுப்பை நாம் எதிர்பார்க்கலாம். சிறு வணிக நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் , இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவை தங்கள் செயல் பாடுகளை நெறிப்படுத்தவும், வேகமாகப் புதுமைப்படுத்தவும், விரிவான குறிமுறைவரிகளின் நிபுணத்துவம் எதுவும் தேவையில்லாமல் வளர்ந்து வரும் எண்ணிம தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த தளங்களுக்கு அதிகளவில் திரும்பும்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: திறமூல குறிமுறைவரிகளின் தேவையில்லாத இயங்குதளங்கள் அவற்றின் பாதுகாப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும். தரவு தனியுரிமை கவலைகள் அதிகரித்து வருவதால், இந்த தளங்கள் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தும், வழக்கமான தணிக்கைகளை நடத்தும் பாதிப்புகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதில் சமூககுழுவினை ஈடுபடுத்தும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பு: சங்கிலிதொகுப்பு, IoT போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் குறிமுறைவரிகளின் தேவையில்லாத இயங்குதளங்கள் மிகவும் தடையின்றி ஒருங்கிணைக்கும். இது மேம்படுத்துநர்களுக்கு பாதுகாப்பான பரிமாற்றங்கள் , தரவு மேலாண்மைக்கான சங்கிலிதொகுப்பினைப் பயன்படுத்தவும், சாதனங்களை இணைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் IoT ஐயும் செயல்படுத்தும்.
பாரம்பரிய நிரலாக்க திறன்கள் இல்லாமல் பயன்பாடுகளை உருவாக்க பயனாளர்களை அனுமதிப்பதன் மூலம் குறிமுறைவரிகளின் தேவையில்லாத நிரலாக்க அடிப்படையில் மென்பொருள் உருவாக்கத்தை மாற்றியுள்ளது. குறிமுறைவரிகளின் தேவையில்லாத திறமூல இயங்குதளங்கள் வெளிப்படைத் தன்மை , நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம் இந்த அணுகலை மேம்படுத்துகின்றன. பயனாளர்கள் தளத்தின் மூலக் குறிமுறை வரிகளை எளிதாக அணுகலாம், தம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப அதனை மாற்றியமைத்திடலாம், வலுவான சமூக குழுவின் ஆதரவு பயனர் அனுபவத்தை மேலும் வளப்படுத்துகிறது, அறிவு பரிமாற்றம் , சரிசெய்தலுக்கான மன்றங்களை வழங்குகிறது, பயனர்கள் தளத்தின் திறன்களை திறம்பட அதிகரிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பயன்பாட்டினை, , ஒருங்கிணைப்புத் திறன்கள், செலவுக் கருத்தாய்வுகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் இலக்குகளுடன் ஒத்துப்போகின்ற , திறமையான குறிமுறைவரிகளின் தேவையில்லாத தளத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

%d bloggers like this: