கடந்த கட்டுரையில் நான்கு கட்டற்ற பயிற்சி நிகழ்வுகள் தொடர்பாக பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்டுரையாக இதை எழுதுகிறேன்.
பகுதி 1:kaniyam.com/foss-internship-1/
கடந்த கட்டுரையை போலவே, itsfoss இணையதளத்தில் திரு.அபிஷேக் பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல்களை பகிர்கிறேன்.
5. OpenGenus Internship
மென்பொருள் உருவாக்கம்,அல்காரிதம் தயாரிப்பு, கருவி கற்றல் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் உங்களுக்கு ஊக்கத் துவை எதுவும் வழங்கப்படுவதில்லை.
ஆனால், மதிப்புமிக்க சான்றிதழ்களும், பிற நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
குறைந்தபட்சம் இரண்டு மாத காலம் இந்த பயிற்சி முகாம் நடைபெறும்.
6. Girl script summer of code
2019 ஆம் ஆண்டு, இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
தற்பொழுதும், 150 ற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜனவரி மாதத்தில் இருந்து இந்த நிகழ்வு தொடங்கும்.
இங்கும் உங்களுக்கு ஊக்கத் தொகைகள் எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
7. Outreachy
ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, பெண்களுக்காகவும் இவற்றின் திருநங்கைகளுக்காகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
2006 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படும் இந்த நிகழ்வு, 2010 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.
Debian, Red Hat, OpenStack போன்றவற்றில் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.
7000 டாலர்கள் வரையிலான மதிப்பீட்டில் ,ஆண்டிற்கு இரண்டு முறை இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
8. Season of KDE
அனைவரும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் இந்த நிகழ்வில், KDE தொடர்பான பல தொழில்நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
KDE சமூகம் இதை ஒருங்கிணைக்கிறது.
மதிப்புமிக்க சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.
ஏற்கனவே கடந்த கட்டுரையில் நான்கு பயிற்சி நிகழ்வுகள் குறித்து பார்த்திருந்தோம். இந்த கட்டுரையிலும், நான்கு பயிற்சி நிகழ்வுகள் குறித்து பார்த்து இருக்கிறோம்.
வரக்கூடிய கட்டுரையோடு இந்த தொடர் முற்றுப்பெறுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com