குறைந்த-குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களை பயன்படுத்திடுவதற்கேற்ப வருங்காலத்திற்காக தயாராகிடுக

LCNC எனசுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாத (low-code/no-code (LCNC)) இயங்குதளங்கள் உருவானதன் மூலம் மென்பொருள் மேம்பாடு ஒருஅதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளது, இது குறிமுறைவரிகளின் வழிமுறையில் செயல்படத்தொடங்காதவர்கள் கூட விரைவாக குறைந்த நேரத்தில் பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிலும் திறமூல களப்பெயர்களில் உள்ள சிறந்த LCNC இயங்குதளங்களை இப்போதுகாண்போம்.
தற்போதை சூழலில் திறமையான மென்பொருள் உருவாக்குநர்கள் போதுமான அளவு கிடைத்திடாமல் பற்றாக்குறையாக இருப்பதால், நிறுவனங்கள் தங்களுடைய பணியை விரைவாகச் செய்து முடிக்க செயற்கை நுண்ணறிவு (AI) , குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களுக்கு மாறி வருகின்றன. மென்பொருளை உருவாக்க குறைந்த குறிமுறைவரிகளின் வழிமுறை தேவைப்படும் தளத்தை குறைந்த குறிமுறைவரிகளின் மென்பொருள் உருவாக்கம் பயன்படுத்திகொள்கிறது. குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் விரைவான பயன்பாட்டு மேம்பாட்டிற்கும் வணிக செயல்முறைகளை தானியக்கமாக்குவதற்கும் ஏற்றது. முன்கூட்டியே-திட்டமிடப்பட்ட மென்பொருளின் பல்வேறு வார்ப்புருக்களிலிருந்தும் , கூறுகளிலிருந்தும் பயன்பாடுகளை உருவாக்க, இழுத்துசென்றவிடுதல்(drag-and-drop) எனும் செயலியுடன் கூடிய இடைமுகத்தை இந்த குறிமுறைவரிகள்இல்லாத மென்பொருள் உருவாக்க செயலி வழங்குகிறது.இது குறிமுறைவரிகளை எழுதுகின்ற தேவையில்லாமல் ஒரு பயன்பாட்டை உருவாக்க உதவுகிறது. குறிமுறைவரிகளில்லாத இயங்குதளங்கள் சிறு வணிகநிறுவனங்களுக்கு ஏற்றவை , ஏனெனில் அவைகளுக்கு தேவையான தீர்வுகளை விரைவாக வழங்குகின்றன.
கார்ட்னர் 2026 ஆம் ஆண்டளவில், முறையான தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு வெளியே உள்ள மேம்படுத்துநர்கள் குறைந்த-குறிமுறைவரிகளின் மேம்பாட்டுக் கருவிகளுக்கான பயனாளர் தளத்தில் குறைந்தபட்சம் 80% பங்களிப்பார்கள் என்று கணித்துள்ளார், இது 2021 இல் 60% ஆக இருந்தது. IDC இன் படி, குறிமுறைவரிகள்இல்லாத இயங்குதளங்களின் விற்பனை குறுகிய காலத்தில் வளர்ந்துவிடும். 2026 வரை ஆண்டு விகிதம் 13.9%, அதே காலகட்டத்தில் குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்களின் வளர்ச்சி 14.1% ஆகும்.
2020 , 2030 க்கு இடையில் உலகளாவிய குறைந்த குறிமுறைவரிகளின் சந்தை 31.1% என்றும் 2030 க்குள் 187 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று P&S நுண்ணறிவால் வெளியிடப்பட்ட சந்தை ஆராய்ச்சி ஆய்வுஒன்று கூறுகிறது.
LCNC இயங்குதளங்களின் முக்கிய பண்புகள்
LCNC இயங்குதளங்கள், பயனர் இடைமுகங்கள், தரவுத்தளங்கள் , APIகள் போன்ற முன்கூட்டியே-கட்டமைக்கப்பட்ட கூறுகளின் நூலகத்தை மேம்படுத்துவதன் மூலம் விரைவாக பயன்பாடுகளை உருவாக்க மேம்படுத்துநர்களுக்கு உதவுகிறது.
மிகவும் பொதுவான பண்புகள் சிலபின்வருமாறு:
விரைவுபடுத்தப்பட்ட பயன்பாட்டு மேம்பாடானது இழுத்துசென்றவிடுதல்(drag-and-drop) எனும் செயலியின் இடைமுகத்தின்மூலம், இது பாய்வு விளக்கப்படங்கள் , பிற வரைபடங்களைப் பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. பயனுள்ள தனிப்பயன் பயன்பாடுகளை உருவாக்க அனுபவமும் பயிற்சியும் தேவையில்லை என்பதால் இந்த தளங்களின்மூலம் மென்பொருள் வளர்ச்சியை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு செயற்படுத்துகின்றன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய குறிமுறைவரிகளின் செயலி, பயனர்கள் முக்கிய கூறுகளை மீண்டும் உருவாக்கத் தேவையில்லை என்பதால் நேரத்தைச் சேமித்திடுமாறு செய்கின்றன.
தனிப்பயனாக்கப்பட்ட , தடையற்ற பயனர் அனுபவங்களுக்கான காட்சியுடனான கருவிகளை கொண்டுள்ளன.
தானியங்கி பயன்பாட்டு வாழ்க்கை சுழற்சி மேலாண்மை, விரைவான பயன்பாட்டு மேம்பாடு, பிழைத்திருத்தம், நிலைப்படுத்தல் , வரிசைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளனது.
செநு(AI) உடனான ஒருங்கிணைப்பு செயல்முறைகளை நெறிப்படுத்தவும், முடிவெடுப்பதை தானியங்குபடுத்தவும் உதவுகிறது.
தானியங்கியான பணிப்பாய்வு , முடிவெடுக்கும் செயல்முறைகள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் கைமுறையான முயற்சிகளைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.
ஏற்புகை செயல்முறைகள் , தரவு குறியாக்க சேவைகள் ஆகியன பாதுகாப்பை மேம்படுத்துகின்றன.
LCNCஇன் மேம்பாடு மேம்படுத்துநர்கள் மீதான அறிவாற்றலின் பணிச்சுமை, குறிப்பிட்ட காலத்திற்குள்முடிக்கவேண்டுமெனும் அழுத்தம் ஆகியவற்றை எளிதாக்குகிறது, இது ஆளுகையின்(governance) தேவையை குறைக்கிறது.
முக்கிய LCNCஇன் இயங்குதளங்கள்
LCNCஇன் சந்தையானது தனியுரிமைகளங்களாலும் திறமூல களங்களாலும் ஆன பல முக்கியதளங்களால் நிரப்பப்படுகிறது.

திற மூல LCNC இயங்குதளங்கள்
திறமூல LCNC இயங்குதளங்கள் இணைய மேம்பாடு , செயல்முறை தானியங்கியாக்குதல் முதல் இயந்திர கற்றல் வரையிலான பல்வேறு திறன்களை வழங்குகின்றன, அவை மேம்படுத்துநர்கள், மேம்படுத்துநர்கள் அல்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் மதிப்புமிக்கதாக ஆக்குகின்றன. அவை செலவு குறைந்தவை, நெகிழ்வானவை, அளவிடக்கூடியவை, நம்பகமானவை, வெளிப்படையானவை முக்கியமாக, விற்பனையாளர் உள்நுழைவு இல்லாதவை.
முதல் பத்து திறமூல LCNC மேம்பாட்டு தளங்கள் பின்வருமாறு
Budibase: இந்த பல்துறை குறைந்த-குறிமுறைவரி இயங்குதளமானது, இழுத்து சென்று விடுதல்(drag-and-drop) எனும் செயலியின் இடைமுகம், முன்கூட்டியே-கட்டமைக்கப்பட்ட கூறுகள் , MongoDB, PostgreSQL, MySQL, Elasticsearch, Airtable போன்றவை உள்ளிட்ட பல வெளிப்புற தரவு மூலங்களுக்கான ஆதரவை வழங்குகிறது.
Huginn:இது செயல்முறையின் தானியங்கியானசெயலிற்காக வடிவமைக்கப்பட்டது, இது பயனர்கள் விரிவான குறிமுறைவரிகளின் வழிமுறை இல்லாமல் பணிகள் , பணிப்பாய்வுகளின் தானியங்கியான செயலைக் கண்காணிக்கின்ற முகவர்களை உருவாக்க அனுமதிக்கிறது. Huginn இன் முகவர்கள் இயக்கிய வரைபடத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை உருவாக்கி நுகர்கின்றனர்.
WordPress:இது இழுத்து சென்று விடுதல்(drag-and-drop) எனும் செயலியின் இடைமுகத்துடன் இணையதளங்களை உருவாக்குவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, இது பல செருகுநிரல்கள், கருப்பொருள்களுடன் மிகவும் தனிப்பயனாக்கக்கூடியது, இது இணையதள மேம்பாட்டிற்கான பல்துறை குறிமுறைவரிகள் இல்லாத தளமாக அமைகிறது.
Node-RED: இந்த இயங்குதளமானது சாதனங்கள், APIகள் ,இணையத்தின்நேரடி சேவைகளை ஒன்றாக இணைக்க ஒரு காட்சி நிரலாக்க இடைமுகத்தை வழங்குகிறது, இது சிக்கலான பணிப்பாய்வுகளை உருவாக்குவதை எளிதாக்குகிறது. IoT பயன்பாடுகளை உருவாக்க இது ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது, மேலும் Raspberry Pi, Beagle Bone ஆகிய அட்டைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முனைமங்களைக் கொண்டுள்ளது.
PyCaret: Python இல் உள்ள இந்த குறைந்த-குறிமுறைவரிகளின் இயந்திர கற்றல் நூலகமானது இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குதல் , வரிசைப்படுத்துதல் செயல்முறை ஆகியவற்றினை எளிதாக்குகிறது, இது குறைந்த குறிமுறை வரிகளின் தளமானது அனுபவமுள்ள பயனர்களுக்கு அனுகக்கூடியதாக உள்ளது.
Base row: இந்த இயங்குதளமானது, தரவின் உந்துதல் செயல்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் இழுத்து சென்று விடுதல்(drag-and-drop) எனும் செயலியின் இடைமுகம் ,தரவு காட்சிப்படுத்தல் கருவிகளை வழங்குகிறது. இது தரவு ஒத்துழைப்பை அனுமதிக்கிறது, அதிக புலங்களின் வகைகள், APIகள், இணையகொக்கிகள் , அட்டவணைகளுக்கு இடையிலான உறவுகளை ஆதரிக்கிறது.
Appsmith: உள்ளக கருவிகளை உருவாக்கப் பயன்படுகிறது, இது ஒரு இழுத்து சென்று விடுதல்(drag-and-drop) எனும் செயலியின் இடைமுகத்தை வழங்குகிறது . தனிப்பயன் பயன்பாடுகளை உருவாக்க பல்வேறு தரவு மூலங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
Directus: இந்த CMS , தரவுஅடிப்படையிலான இயங்குதளமானது குறிமுறைவரிகளின் தேவையில்லாத இடைமுகத்துடன் உள்ளடக்கம், தரவை நிர்வகிக்க அனுமதிக்கிறது. இது மிகவும் தனிப்பயனாக்கக்கூடியது, மற்ற கருவிகளுடன் நன்றாக ஒருங்கிணைகிறது பணிப்பாய்வு தானியங்கியாக்குதலை உருவாக்க அனுமதிக்கிறது. இது PostgreSQL, MySQL, SQLite, OracleDB, CockroachDB, MariaDB , MS SQL ஆகிய தரவுத்தளங்களுடன் இணைக்கிறது.
Supa base: இந்த இயங்குதளமானது நிகழ்நேர தரவுத்தளம், பயனர் ஏற்புகை, வரிசை நிலை பாதுகாப்பு, REST API, விளிம்பு செயலிகள், சேமிப்பகம் உள்ளிட்ட ஒரு பின்புலதளத்தை சேவையாக வழங்குகிறது. அனைத்து தரவையும் குறிமுறைவரிகளின் தேவையில்லாத இடைமுகத்தின் மூலம் அனுகலாம்.
Metabase:: இந்த வணிக நுண்ணறிவு கருவி குறிமுறைவரிகளை எழுதாமலேயே முகப்பு பக்களையும் காட்சிப்படுத்தல்களையும் உருவாக்க அனுமதிக்கிறது. இது பயனர் நட்புடனும் பல்வேறு தரவு மூலங்களுடனும் ஒருங்கிணைக்கிறது.
LCNC இயங்குதளத்தின் நெகிழ்வுத்தன்மை, விரிவாக்கத்தின் அடிப்படையில் எந்தப் பயன்பாட்டையும் உருவாக்கலாம். இந்த தளங்களில் சில, நிறுவன பயன்பாடுகள், மின்-வணிக அமைப்புகள், IoT தீர்வுகள் அல்லது விளையாட்டு மேம்பாடு போன்ற குறிப்பிட்ட பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்றது.
LCNC இயங்குதளங்களை ஏற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள்
விற்பனையாளர் உள்நுழைவுசெய்தல்(lock-in) : பல LCNC இயங்குதளங்கள் குறிமுறைவரிகளை அல்லது தயாரிப்பை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு நகர்த்த அனுமதிக்காததால் விற்பனையாளர் உள்நுழைவுசெய்தல் ஒரு சவாலாக உள்ளது.
பாதுகாப்பு: நிறுவன தரவின் பாதுகாப்பு ஒரு முக்கிய கவலையாகும். இது பயன்படுத்தப்படும் தளத்தைப் பொறுத்ததாகும்.
தனிப்பயனாக்கம் இல்லாமை: சில LCNC இயங்குதளங்கள் தனிப்பயனாக்குதல் சாத்தியங்களை மட்டுப்படுத்துகின்றன.
உறுதியான வார்ப்புருக்கள் , கூறுகள்: LCNC இயங்குதளங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய உறுதியான வார்ப்புருக்களை, கூறுகளை வழங்குகின்றன. ஒரு பயன்பாட்டை உருவாக்கும்போது பயனர்கள் சில பயன்பாட்டு நிகழ்வுகளை சந்திக்க இவற்றை மாற்ற வேண்டியுள்ளது.
வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு வாய்ப்புகள்: LCNC இயங்குதளங்கள் செயல்பாட்டுத் திறனில் கவனம் செலுத்துகின்றன , மூன்றாம் தரப்பு அல்லது உள்ளக நிறுவன அமைப்புகளுக்கான தனிப்பயன் ஒருங்கிணைப்புகளை அனுமதிக்காது.
சிக்கலான பயன்பாடுகளுக்கு ஆதரவு இல்லை: தற்போதைய LCNC இயங்குதளங்கள் சிக்கலான செயலியையும் கட்டமைக்கப்படாத பணிப்பாய்வுகளையும் ஆதரிக்காதவைகளாகும்.
LCNC இயங்குதளங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்
மேலேகூறிய சவால்கள் இருந்தாலும் பின்வருமாறு நன்மைகள் இவற்றில் உள்ளன.
மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம்: LCNC இயங்குதளங்கள் இறுதிப் பயனர்களுக்கு சிறந்த , எளிதான பயனர் இடைமுகத்தை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் , எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
விரைவான வழங்கல்செயல்முறை: இந்த இயங்குதளங்கள் இயல்பான மொழி செயலாக்கத்தைப் பயன்படுத்துகின்றன, இது பயனர்கள் விரிவான மென்பொருள் மேம்பாட்டு நிபுணத்துவம் இல்லாமல் குறிமுறைவரிகளை உருவாக்க அனுமதிக்கிறது. தளங்கள் குறிமுறைவரிகளின்வழிமுறையைக் குறைக்கவும், வளர்ச்சி செயல்முறையிலிருந்து எளிதற்ற சிக்கல்களை அகற்றவும் உதவுகின்றன. இது பயனர்களை மிக விரைவான விகிதத்தில் பயன்பாடுகளை வடிவமைத்து வழங்க உதவுகிறது.
பயன்படுத்த எளிதானது: வணிகநிறுவனப் பயனர்கள் பணிப்பாய்வுகளை மிகவும் திறமையாக உருவாக்கலாம், உள்ளமைக்கலாம். உரைநிரல்கள் அல்லது வினவல்களை எழுதும் போது உதவி கிடைக்கின்றது, இது தொழில்நுட்பக் குழுக்களைஅதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
குறைக்கப்பட்ட செலவுகள்: குறிமுறைவரிகளின்வழிமுறை குறைவாக இருப்பதால், LCNC இயங்குதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய பணத்தையும் வளங்களையும்ச் சேமிக்க முடியும். LCNC இயங்குதளப் பயன்பாட்டிற்கு குறைந்தபட்ச பயிற்சிமட்டுமே தேவையாகும் , அதனால் யார் வேண்டுமானாலும் ஒரு பயன்பாட்டை உருவாக்கலாம்.
அதிகரித்த செயல்திறன்: இந்த தளங்கள் பயனர்கள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகின்றன, பயன்பாடுகளின் வடிவமைப்பையும் விநியோகத்தையும் விரைவுபடுத்துகின்றன.
LCNC இயங்குதளங்கள் எண்ணிம மாற்றத்திற்கு உட்பட்ட வணிக நிறுவனங்களுக்கு ஏற்றதாக இருக்கும், ஏனெனில் அவை குறைந்த செலவில் அதிகம் செயல்பட உதவும். இந்த LCNC கருவிகளில் சில பதிப்புகளை ஆதரிக்கின்றன , வளர்ச்சிப் பணிகளை எளிதாக்குவதற்கு குழுக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆதரிக்கின்றன. திறமூல LCNC மேம்படுத்துதலிற்கான தளங்கள் தனிநபர்களை, நிறுவனங்களை திறமையாகவும் செலவு குறைந்ததாகவும் பயன்பாடுகளை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது. வெவ்வேறு இயங்குதளங்கள் வெவ்வேறு வசதிகளை வழங்குவதால், தேர்ந்தெடுக்கும் தளமானது, தரவுத்தள மேலாண்மை, உள்ளடக்க உருவாக்கம் அல்லது தானியங்கியாக்குதல் போன்ற நிறுவனங்களின் செயல்திட்டத் தேவைகளுடன் சீரமைக்க வேண்டும்.

%d bloggers like this: