Portkey, Helicone, Cloudflareஎன்பனபோன்றநிர்வகிக்கப்பட்ட செய்யறிவின்(AI) நுழைவுவாயில்கள் பல்வேறு வசதிவாய்ப்புகளை வழங்குகின்றன, ஆனால் அதனோடு கூடவே அதன் அளவு, இணக்கம் ஆகியவை சவால்களையும் கொண்டு வருகின்றன. திறமூல நுழைவுவாயில்கள் அவற்றின் மூன்று முக்கிய நன்மைகளின் மூலம் இவற்றைத் தீர்வுசெய்கின்றன:
தரவு இறையாண்மை: நம்முடைய சொந்த VPC-க்குள் நினைவூட்டத் தூண்டல்(prompt ) தரவின் மீது முழுமையான கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது.
செலவுத் திறன்: ஒரு கோரிக்கை அல்லது ஒரு இருக்கைக்கான கட்டணத்தை அறவேநீக்கம்செய்கிறது, மூலக் கணக்கீட்டிற்கு மட்டுமே செலவாகும்.
தனிப்பயனாக்கம்: தனிப்பயன் இடைமாற்றலிற்காக அல்லது உள்நுழைவிற்காக செயல்பாட்டை எளிதாகப் பிரித்து நீட்டிக்கலாம்.
1. Bifrost — செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் நுழைவாயில் கட்டமைப்பு இது முன்பே உருவாக்கப்பட்ட worker poolsகள், object poolsகளுடன் (Go) எனும் கணினிமொழியில் எழுதப்பட்டது. இது மேலும் தேவையற்ற தரவுகளைச் சேகரிப்பதில் ஏற்படும் இடைநிறுத்தங்களைத் தவிர்க்கிறது.
செயல்திறன்: வினாடிக்கு 5,000 சுழற்சிகளில் (t3.xlarge) 11µs மேல்நிலைச் செலவுடன் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டது.
முக்கிய வசதிகள்: streaming எனும்ஆதரவுடன் கூடிய இரட்டை அடுக்கு பகுதியானஇடைமாற்ற (Weaviate வழியாக); முழுமையான மாதிரி போட்டி மரபொழுங்கு நெறிமுறையின் (MCP) ஒருங்கிணைப்பு; நுணுக்கமான செலவு மேலாண்மைக்கான நான்கு அடுக்கு பட்ஜெட் படிநிலை கொண்டுள்ளது..
குறைபாடுகள்: குறைவான வழங்குநர் ஒருங்கிணைப்புகள் (~20+) , ஒரு சிறிய சமூககுழுமட்டுமே உள்ளது.
2.LiteLLM (LiteLLM) — இது சூழல் அமைப்பின் மாபெரும் சக்திகொண்டுள்ளது
பலங்கள்: 100-க்கும் மேற்பட்ட வழங்குநர் ஒருங்கிணைப்புகளுடன் இணையற்ற சுற்றுச்சூழல் அமைப்பு, ஒரு ஒருங்கிணைந்த OpenAI வெளியீட்டு வடிவம், சிறந்த சமூக குழுவின்ஆதரவு ஆகியவைகளாகும்.
பைத்தானின் உச்சவரம்பு: 1,000 RPS-இல் 8ms P95 தாமதம். பைத்தானின் GIL-க்கு பெரிய அளவில் பல சான்றுகளை இயக்க வேண்டியிருப்பதால், உள்கட்டமைப்பு மேல்செலவு அதிகரிக்கிறது.
குறைபாடுகள்: பகுதியானஇடைமாற்றலும் MCP ஆதரவும் இல்லை.
3. அப்பாச்சியின் APISIX (Apache APISIX) — API மேலாண்மை அணுகுமுறை
பலங்கள்: நன்கு பரிசோதிக்கப்பட்ட, மேககணினியின் சொந்த API நுழைவுவாயில். ஏற்கனவே பாரம்பரிய தரவின்போக்குவரத்திற்கு APISIX-ஐப் பயன்படுத்தி, ஒரு செய்யறிவு(AI) வழிசெலுத்தியின் அடுக்கினைச் சேர்க்க விரும்பினால் இது மிகவும் பொருத்தமானது.
குறைபாடுகள்: செய்யறிவிற்கு(AI) முன்னுரிமை அளிக்காதது. சொந்தபகுதியான இடைமாற்றல், மெய்நிகர்விசைகள் அல்லது MCP இல்லை; மேம்பட்ட செய்யறிவு(AI) வசதிவாய்ப்புகளுக்கு தனிப்பயன் லூவா (Lua) எனும் கணினியின்மொழியில் செருகுநிரல்களை எழுத வேண்டியுள்ளது.
4. Kong AI Gateway — நிறுவன APIமேலாண்மை,கூட்டத்திற்கானசெய்யறிவு(AI)
பலங்கள்: உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நுழைவுவாயில் உள்கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டது. பல-LLM ஆதரவையும் உடனடி பொறியியல் செருகுநிரல்களையும் வழங்குகிறது.
குறைபாடுகள்: பொதுவாக 2-5 மில்லி விநாடிகள் கூடுதல் நேரத்தை ஏற்படுத்துகிறது. மேம்பட்ட நிர்வாகம், இணக்கம்,பகுதியானஇடைமாற்றல் ஆகியவை கட்டண Kong Enterpriseபிரிவில் மட்டுமே கிடைக்கின்றன.
5. Envoy AI Gateway— சேவை வலைகண்ணி அணுகுமுறை
நன்மைகள்: சொந்த மேககணினி, குறைந்த தாமதம் (1-3ms), ஏற்கனவே உள்ள Kubernetes/Istio சேவை வலைகண்ணிகளில் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.
குறைபாடுகள்: மிகவும் துவக்க நிலையில் உள்ளது. குறைவான வழங்குநர்களை (5+) மட்டுமே ஆதரிக்கிறது பகுதியானஇடைமாற்றல், MCP, அல்லது சிக்கலான பட்ஜெட் படிநிலைகள் இதில் இல்லை. உள்ளமைப்பைக் கற்றுக்கொள்வது கடினம்.
முடிவெடுப்பதற்கான கட்டமைப்பு
செயல்திறன் + சொந்தசெய்யறிவு(AI) வசதிகள் (MCP, பகுதியான இடைமாற்றல்): Bifrost-ஐத் தேர்ந்தெடுத்திடுக.
அதிகபட்ச வழங்குநர் உள்ளடக்கம்: LiteLLM-ஐத் தேர்ந்தெடுத்திடுக (மேலும் அதிக தாமதத்தை ஏற்றுக்கொள்க).
ஏற்கனவே APISIX அல்லது Kong-ஐப் பயன்படுத்துகின்றவர்கள்: கூடுதல் பதிலாள் அடுக்குகளைத் தவிர்க்க, தற்போதைய நுழைவாயிலை விரிவாக்கம் செய்திடுக.
Kubernetes/Istio உள்கட்டமைப்பில் ஆழ்ந்துள்ளவர்கள்: Envoy AI நுழைவுவாயிலைத் தேர்ந்தெடுத்திடுக.
முடிவாக: செய்யறிவு(AI) போக்குவரத்து முதன்மைப் பணிச்சுமையாக இருந்தால்,செய்யறிவின்(AI)-சொந்த நுழைவுவாயிலை (Bifrost/LiteLLM) தேர்ந்தெடுத்திடுக. ஒட்டுமொத்த APIபோக்குவரத்தில் செய்யறிவு(AI) ஒரு சிறிய பகுதியாக மட்டுமே இருந்தால், தற்போதைய பாரம்பரிய நுழைவுவாயிலை விரிவாக்கம்செய்திடுக.
உயர் செயல்திறன் விருப்பத்தை உடனடியாக முயற்சித்துப் பார்க்க, npx -y @maximhq/bifrost என இயக்கி, localhost:8080 என்ற முகவரியில் உள்ள இணைய இடைமுகத்தை அணுகிடுக.