ஜாவாமேம்படுத்துநர் பதவிக்கான நேர்காணலின் போது மிகவும் கடினமான கேள்விகளால் எப்போதாவது தடுமாறினீர்களா? ஆம் எனில் இது நம்மில் பலருக்கும் நடக்கின்ற வழக்கமான செயலாகும். இரகசியம் என்னவென்றால், மிகவும் பொதுவான சில கேள்விகளுக்கு மட்டும் நாம் முன்னதாகவே அவை ஒவ்வொன்றிற்கும் பதிலுடன் தயாராக இருக்கின்றோம். ஆனால் நேர்காணல் செய்பவர்கள் மிகவும் பொதுவான சில கேள்விகள்மட்டுமல்லாமல் மிகவும் பரந்த தலைப்புகளுடன் தொடங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்க, அந்த காரணத்திற்காக, இந்த பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதிகளுக்கு செல்லும் முன் அடிப்படைகளுடன் தொடங்குகிறது.
ஜாவா என்றால் என்ன?
சிலமேம்படுத்துநர்கள் ஒவ்வொரு பிரபலமான கணினிமொழியையும் தங்கள் பணிக்கான விண்ணப்பத்தில் அல்லது CV இல் பட்டியலிடுகிறார்கள், அவர்கள் அதை கடந்து சென்றாலும் அல்லது அடிப்படைகளை அறிந்திருந்தாலும் கூட. இந்த முதல் கேள்வி அவர்களை விரைவாக களையெடுக்க வடிவமைக்கப் பட்டுள்ளது.
நம்முடைய பதிலில் ஜாவாவின் முழு வரலாற்றையும் மறைக்க வேண்டிய தில்லை; பின்வருவன போன்ற ஏதாவது தகவல்போதுமானதாகும்:
“ஜாவா என்பது சன் மைக்ரோசிஸ்டம்ஸ் மூலம் முதலில் 1995இல் உருவாக்கப் பட்டு வெளியிடப்பட்ட ஒரு உயர்-நிலை, பொருள்நோக்கு, நிரலாக்க மொழியாகும். ஜாவா என்பது விண்டோஸ், மேக் , யுனிக்ஸ் போன்ற பல்வேறு அனைத்து தளங்களிலும் இயங்குகின்ற திறன்மிக்கது. இது தற்போது ஆரக்கிள் நிறுவனத்தாரால் பராமரிக்கப் படுகிறது இது உலகின் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழிகளில் ஒன்றாகும்.
ஜாவா மெய்நிகர் இயந்திரம் என்றால் என்ன?
இக்கேள்வி, சற்று கூடுதலான தொழில்நுட்பக் கேள்வி, ஆனால் ஜாவாவின் மையத்திற்குச் செல்லும் ஒன்றாகும், ஏனெனில் இது கணினிமொழியின் இயங்குதளத்தை-சுதந்திரமானதாகஆக்குகிறது அதன் குப்பை சேகரிப்பு வசதிகளை வழங்குகிறது.
இந்த கேள்விக்கு, பின்வருமாறு பதிலளிக்கலாம்:
“ஜாவா மெய்நிகர் இயந்திரம் அல்லது JVM என்பது இடைநிலையில் ஜாவாவின் எண்மி(byte ) குறிமுறைவரிகளை விளக்குகின்ற குறிப்பிட்ட இயக்க முறைமைக்கான இயந்திரக் குறிமுறைவரிகளை உருவாக்குகின்ற ஒரு நிரலாகும். இதனுடைய எண்மிகுறியீடானது(byte code) ஜேவிஎம் காரணமாக ஜாவாவில் எழுதப்பட்ட நிரலாக்கங்கள் மிகவும் கையடக்கமானதாக்குகின்றது. குப்பை சேகரிப்பு, வள ஒதுக்கீடு பிற செயல்திறன் மேம்படுத்தல்களுக்கும் ஜேவிஎம் பொறுப்பாகின்றது.
ஜாவாவின் வசதிவாய்ப்புகள் யாவை?
பிற நிரலாக்க மொழிகளிலிருந்து ஜாவாவை வேறுபடுத்துகின்ற அளவு இதில் பல்வேறு வசதிவாய்ப்புகள் உள்ளன. ஒரு தொழில்முறை ஜாவா மேம்படுத்துநராக, அவர்களில் ஒரு சிலரையாவது அறிந்திருப்போம். இதோ சிலகருத்தமைவுகள்:
பொருள்நோக்கநிரலாக்க(OOPs) கருத்தமைவுகள்: எந்தவொரு பொருள்நோக்கு கணினி மொழியிலிருந்தும் நாம் எதிர்பார்க்கின்ற அனைத்து வசதிவாய்ப்புகளையும் ஜாவா கொண்டுள்ளது, இதில் சுருக்குதல், இணைத்தல், வாரிசுரிமை, பொருள் சார்ந்த , பன்மொழியாக்கம்(polymorphism) ஆகியவை அடங்கும்.இது எந்தவொரு இயங்கு தளத்தையும் சாராதது: ஒரே நிரல் எந்த மாற்றமும் இல்லாமல் வெவ்வேறு இயக்கமுறைமைகளில் இயங்குதளங்களில் மிகச்சரியாக செயல்படுகின்ற திறன்மிக்கது
உயர் செயல்திறன்: மிச்சரியான நேரத்தின்இயந்திமொழிமாற்றி (JIT) என்பது ஜாவாவில் உயர் செயல்திறனை செயல்படுத்துகிறது.இந்த JITஆனது எண்மிகுறியீட்டை(byte code) இயந்திர மொழியாக மாற்றுகிறது, பின்னர் JVM செயலியைத் தொடங்குகிறது.
பல்புரி செயல்படுத்தும் ஓட்டமானது ஒரு நூல் என்று அழைக்கப்படுகிறது. ஜேவிஎம் ஒரு நூலை உருவாக்குகிறது, இது முக்கிய நூல் என்று அழைக்கப்படுகிறது. நூல்இனத்தை நீட்டிப்பதன் மூலம் அல்லது இயங்கக்கூடிய இடைமுகத்தை செயல்படுத்துவதன் மூலம் பயனாளர் கூடுதல் நூல்களை உருவாக்க முடியும்.
ஜாவாவின் எந்த IDEஐ (அல்லது ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலை) பயன்படுத்துகின்றோம்?
ஒரு IDE (அல்லது ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்) என்பது மென்பொருளை திருத்தம்செய்தல், கட்டமைத்தல், சோதனை செய்தல் , பயன்படுத்த எளிதான பயன்பாட்டில் கட்டுகளாக்குதல் போன்ற திறன்களை இணைப்பதன் மூலம் மேம்படுத்துநர் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மென்பொருள் பயன்பாடாகும்.
நேர்காணலுக்கு முன் நாம் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஏதாவதொரு IDE ஐப் பயன்படுத்தி யிருப்போம். இல்லையெனில், முதல் இரண்டு – Eclipse, IntelliJ IDEA – பற்றி தெரிந்துகொள்ள சிறிது நேரம் ஒதுக்கிடுக. இவற்றுள் NetBeans மற்றொரு நல்ல தேர்வாகும்.
பயன்பாட்டு செயல்திறன் கட்டுப்பாட்டாளர்கள் ,ஒத்துழைப்பு கருவிகள் போன்ற ஜாவாமேம்படுத்துநர் கருவிகளை நன்கு அறிந்திருப்பதும் நல்லதாகும்.
ஜாவாவில் இனம் என்றால் என்ன?
ஜாவா போன்ற பொருள்நோக்குநிரலாக்க(OOPs) மொழியில், இனங்களே அடித்தளமாக இருக்கின்றன. அவை மிகவும் அடிப்படையானவை, இனம் என்ற ஒன்று இல்லாமல் நம்மால் மிக அடிப்படையான நிரலைக் கூட எழுத முடியாது. இனம் என்பது தனிப்பட்ட பொருட்கள் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடமாகும். ஒருஇனத்தில் ஒரு பொருளின் நிலை, நடத்தையை விவரிக்க புலங்களும் வழிமுறைகளும் இருக்கலாம்.
ஜாவாவில் இனங்களும் பொருட்களும்
இனங்களுக்கும் பொருள்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் யாவை?
இது முந்தைய கேள்வியின் மாறுபட்டதாகும், இது நேர்காணல் செய்பவரை இனங்கள், பொருட்கள் ஆகியஇரண்டையும் வரையறுக்க கட்டாயப்படுத்துகிறது.
ஒரு இனம் என்பது பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மாதிரிப்பலகமாகும், அதேசமயம் ஒரு பொருள் என்பது ஒரு இனத்தின் எடுத்துக்காட்டாகும். ஒரு இனம்என்பது ஒரு தர்க்கரீதியான உட்பொருளாக இருக்கும்போது, ஒரு பொருள் ஒரு தொட்டுணருவதாகும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிலை உள்ளது, அதில் அனைத்து உறுப்புகளின் மாறிகளும் குறிப்பிட்ட மதிப்புகளைக் கொண்டுள்ளன.
ஒரு பொருளின் நிகழ்வை (Object Instance) எவ்வாறு உருவாக்குவது?
இங்கே, நேர்காணல் செய்பவர் புதிய முக்கிய சொல்லைப் பற்றிய தகவலைத் குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்திடுகிறார்.
ஒரு பொருளை உருவாக்க, இனத்தின் பெயரைக் குறிப்பிடுக, பொருளின் பெயரைத் தொடர்ந்து, பின்வரும் குறிமுறைவரிகளை எடுத்துக்காட்டில் காட்டப்பட்டுள்ளவாறு புதிய முக்கிய சொல்லாகப் பயன்படுத்திடுக:
Classname myObject = new Classname()
வாரிசுரிமை (Inheritance) என்றால் என்ன?
ஜாவாவில்வாரிசுரிமை என்பது மிகவும் முக்கியமான கருத்தமைவாகும், எனவே ஜாவா குறித்து அறிந்துள்ள மேம்படுத்துநர் அதை கண்டிப்பாக நன்கு அறிந்திருப்பார்.
வாரிசுரிமையின் அடிப்படையில் ஒரு இனத்தை மற்றொரு இனத்திற்கு நீட்டிக்க முடியும். இது பெற்றோர் இனத்தின் குறிமுறைவரிகளை பிள்ளைகளின் இனத்தில்ல் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. பெற்றோர்கள்,பி்ள்ளைகள் ஆகிய இனங்களுக்கான தொழில்நுட்ப சொற்கள் super class , sub class ஆகும்.
பொதிவுறையாக்கம்(Encapsulation) என்றால் என்ன?
ஜாவாவின் இனங்களானவை பல்லுருப்பெறல், வாரிசுரிமை, இணைத்தலும் சுருக்குதலும் உள்ளிட்ட பல தனித்துவமான வசதிகளைக் கொண்டுள்ளன.
ஜாவாவில் பொதிவுறையாக்கம் என்பது மாறிகளையும் வழிமுறைகளையும் ஒரு ஒற்றை அலகுக்குள் ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது. இணைப்பில், ஒரு இனத்தின் மாறிகள் மற்ற இனங்களிலிருந்து மறைக்கப்பட்டு, அவை காணப்படும் இனத்தின் வழிமுறைகளால் மட்டுமே அணுக முடியும்.
“அணுகல் மாற்றி(Access Modifier)” என்ற சொல்லின் பொருள் என்ன?
இந்த கேள்வி முந்தைய கேள்வியுடன் தொடர்புடையது, இணைப்பின் ஒரு பகுதியாக, இனங்கள் மற்றொரு இனத்திற்கும் உறுப்பினர்களுக்கும் வெவ்வேறு அளவுகளுக்கு அணுகல் வழங்கப்படலாம்.
ஜாவாவில், அணுகல் மாற்றிகள் இனங்கள், மாறிகள், வழிமுறைகள், கட்டமைப்பாளர்கள் ஆகியோர்களுக்கான அணுகல் நிலைகளை அமைக்கின்றன. பொதுநிலை, பாதுகாக்கப்பட்டநிலை, தொகுப்பு நிலை, தனிப்பட்டநிலை ஆகிய நான்கு நிலைகள்இதில் உள்ளன: . அணுகல் மாற்றியை குறிப்பிடப் படாதபோது, ஒரு உறுப்பிற்கு தொகுப்பு அல்லது இயல்புநிலை அணுகல் தன்மை உள்ளது.
ஜாவா நேர்காணல் கேள்விகள் பற்றிய இறுதி அறிவுரைகள்
இந்த பயிற்சியில் ஜாவா மேம்படுத்துநரின் நிலை தொடர்பாக பொதுவாக கேட்கப்படும் நேர்காணல் கேள்விகளில் சிலஅடிப்படையானவை வழங்கப்பட்டுள்ளன. ஒரு நேர்காணல் செய்பவர் என்ன கேட்கலாம் என்று கணிக்க இயலாது என்றாலும், இந்தக் கேள்விகளுக்கான பதிலைமட்டுமாவதுத் தெரிந்துகொள்வது நிச்சயமாக நேர்காணலை சந்திக்க நம்மைமிகவும் வலுவான நிலையில் வைக்கும்.