திறந்த படிவம் (OpenFOAM) என்பது ஒரு கட்டணமற்ற, கட்டற்ற CFD மென்பொருளாகும், இது OpenCFD Ltd என்றநிறுவனத்தாரால்2004 இல் முதன்முதல் உருவாக்கப்பட்டது. வணிகநிறுவனங்களிலும் , கல்வி நிறுவனங்களிலும் பொறியியல், அறிவியல் ஆகி யதுறைகளில் இது ஒரு பெரிய பயனாளர் தளத்தைக் கொண்டுள்ளது. வேதியியல் எதிர்வினைகள், கொதித்தலும்( turbulence ) வெப்பப் பரிமாற்றமும், ஒலியியல், திட இயக்கவியல் , மின்காந்தவியல் உள்ளிட்ட சிக்கலான திரவ ஓட்டங்களிலிருந்து எதையும் தீர்க்க இது ஒரு விரிவான வசதிகளைக் கொண்டுள்ளது.
வாடிக்கையாளரின் முன்னேற்றங்கள் , சமூகத்தின் பங்களிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்குவதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இதனை மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இது ESI-OpenCFD இன் பயன்பாட்டு வல்லுநர்கள், மேம்பாட்டு கூட்டாளிகள் , தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஆகியோர்களால் சுதந்திரமாக பரிசோதிக்கப்படுகிறது, மேலும் ESI இன் உலகளாவிய உள்கட்டமைப்பு, மதிப்புகள் , அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
தர உத்தரவாதம் கடுமையான சோதனையை அடிப்படையாகக் கொண்டது. குறிமுறைவரிகளின் மதிப்பீடு, சரிபார்ப்பு ஆகியவற்றின் செயல்பாட்டில் பல நூறு தினசரி அலகு பரிசோதனைகள், வாராந்திர அடிப்படையில் ஒரு நடுத்தர அளவிலான பரிசோதனை மின்கலணில் இயங்குதல், புதிய பதிப்பு வெளியீடுகளுக்கு முன்பு பெரிய தொழில் சார்ந்த பரிசோதனை மின்கலண் இயக்கம் ஆகியவை அடங்கும். பின்னடைவு நடத்தை, நினைவக பயன்பாடு, குறிமுறைவரிகளின் செயல்திறன், அளவிடுதல் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக பரிசோதனைகள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை ஜூன் , டிசம்பர் ஆகிய இருமாதங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.
மென்பொருள் ஆதரவு, ஒப்பந்த முன்னேற்றங்கள், பொறியியல் சேவைகள் , பயிற்சி வகுப்புகள் , சமூக அடிப்படையிலான மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட ESI-OpenCFD இன் முழு வணிக ஆதரவுடன் இந்த திறந்த படிவம் (OpenFOAM) வெளியிடப்பட்டுவருகிறது. இந்த நடவடிக்கைகள் இதனுடைய தொடர்ச்சியான மேம்பாடு, பராமரிப்பு ,வெளியீட்டிற்கு நிதியளிக்க உதவுகின்றன, இது வலுவான சாத்தியமான, வணிக ரீதியாக ஆதரிக்கப்படுகின்ற,ஒரு திற மூல தயாரிப்பு ஆகும்.இந்தOpenFOAM ஆனது GPL உரிமத்தின் கீழ் OpenCFD ஆல் விநியோகிக்கப்படுகிறது:
இதனை பயன்படுத்திகொள்வதற்காக எந்த வொருலினக்ஸ் கணினியிலும் மூலக் குறிமுறைவரிகள் தொகுக்கப்பட வேண்டும். லினக்ஸ் அமைப்புகளில் முதலில் இருமநிலை கோப்பாக தொகுக்கப்பட்டு நிறுவுகைசெய்திடவேண்டும். மேக்இயக்கமுறைமைகளில் முதலில் இருமநிலை கோப்பாக தொகுக்கப்பட்டுநிறுவுகைசெய்திட வேண்டும். விண்டோஇயக்கமுறைமையில் விண்டோ நிறுவியைபயன்படுத்திகொள்ளவேண்டும். விண்டோ 10 இயக்கமுறைமையில் உபுண்டுவின் Bash ஐ பயன்படுத்தவேண்டும்.
இதற்கான மேம்பாட்டு களஞ்சியங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன. இந்த களஞ்சியங்கள் பிழைத் திருத்தங்கள் மற்றும் புதிய செயல்பாட்டுடன் தொடர்ந்து அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன.
பயனாளர் மேம்படுத்தல் வழிகாட்டியில் பயனர்களுக்கான உதவி வழங்கப்படுகிறது.. மேம்படுத்தல் வழிகாட்டியில் மேம்படுத்துநர்களுக்கான உதவி வழங்கப்படுகிறது.ஒரு சில வழக்கமான நெறிமுறைகளின் புரிதலை மேம்படுத்துவதற்காக குறிமுறைவரிகள் குறித்த ஆவணங்களும் கிடைக்க துவங்கியுள்ளன, அது ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு openfoam.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க