எப்போதாவது, செய்யறிவு(AI) பற்றி அறிய விரும்புகின்றோமா, ஆனால் எங்கு தொடங்குவது என்பது பற்றி தெரியவில்லையா? கவலையேப்பட வேண்டாம் – நம்மைபோன்ற பலர் இந்த செய்யறிவு(AI) கருவிகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு எங்கு,எவ்வாறு தொடங்குவது என்பதுதான் தெரியவில்லை. இந்த வழிகாட்டியில் குறிப்பிடுகின்ற ஐந்து பயனுள்ள திறமூலக்கருவிகளை பயன்படுத்தி செய்யறிவை(AI) கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளம் செய்திடுக
ஏன் திறமூலபயன்பாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்?
நாம் முதன்முதல் பைக் ஓட்ட கற்றுக்கொண்டது குறித்து சிந்தித்திடுக அதற்காக. பைக்குகளைப் பற்றிய புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அதனை நாம் தொடங்கவில்லை – நாம் ஏதேனும் ஒரு பைக்கில் ஏறி உட்கார்ந்து அரையும் குறையுமாக விழுந்து எழுந்து ஒட்டிட துவங்கினோம்அல்லவா! செய்யறிவை(AI) கற்றலும் அதே வழிமுறையில்தான் . செய்யறிவு(AI) பற்றி முழுவதுமாக படித்து அறிந்துகொள்வதற்கு பதிலாக, செய்யறிவு(AI)கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் நமக்குத்தேவையான பணியை அதில் உருவாக்குவதன் மூலமும் சிறப்பாகக் கற்றுக்கொள்ளலாம்.
திறமூலபயன்பாட்டின் சிறப்பு என்னவென்றால், அதனுள்ளே என்ன உள்ளது என நாம் நன்றாக பார்க்க முடியும் – ஒரு பைக்கை வெளிப்படையாக வைத்திருப்பது போன்று, அனைத்து கியர்களும் ஒன்றாக செயல்படுவதைக் காணலாம். தட்டச்சு செய்த குறிமுறைவரிகளை படிக்கலாம், மாற்றங்களைச் செய்யலாம் வெற்றிகரமான செயல்திட்டங்களை உருவாக்கிய உண்மையான மேம்படுத்துநர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
மேலும், நாம் மட்டும் தனியாக இல்லை – திறமூல குழுக்களில் கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் தயாராக பலர் உள்ளனர்.
அவ்வாறுகற்றுக்கொள்ளக்கூடிய சில திறமூல பயன்பாடுகள்யாவை?
மற்றவர்கள் தங்கள் வேலையை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைக் கவனிப்பதன் மூலம் நம்முடைய கற்றல்திறனானது நம்பமுடியாத அளவிற்கு பயிற்சிபெற்றிடுகின்றது. பெரும்பாலும், வழிகாட்டிகள் அல்லது அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளை அணுக முடியாமல் போகலாம், இருப்பினும் அர்த்தமுள்ள ஒன்றை அடைவதற்கான நமது உந்துதல் நம்மை முன்னேற வைக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், திறமூல செயல்திட்டங்களை ஆய்வுசெய்வது ,படிப்பது ஆகியன நாம் நன்கு கற்கவும் நம்முடைய திறனை வளர்த்துகொள்ளவும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது. அவ்வாறு திறன்களை வளர்த்துக் கொள்ளவும் நுண்ணறிவுகளைப் பெறவும் இது சிறந்த வழிகளில் ஒன்றாகும். அவ்வாறான சில திறமூல செயல்திட்டங்களை இப்போதுஆய்வுசெய்திடுவோம்.
1.SWIRL
github.com/swirlai/swirl-search/
SWIRL என்பது ஒரு திறமூல செய்யறிவு(AI) தேடல் , RAG அமைப்பாகும், இது மேம்பட்ட செய்யறிவு(AI) தொழில்நுட்பங்களை வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கிறது. இது மீட்டெடுப்பின்-வளர்ந்திடுகின்ற தலைமுறை(RAG), செய்யறிவு(AI) தேடல், பகுப்பாய்வு , இணையான-இயக்குபவரின் உதவியாளர் போன்ற வசதிகளை வழங்குகிறது, இது திசையன் தரவுத்தளங்களுக்கு தரவை நகர்த்தவோ அல்லது ETL செயல்முறைகளுக்கு உட்படுத்தவோ தேவையில்லாமல் மேம்பட்ட முடிவெடுப்பதை செயல்படுத்துகிறது.
அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
வணிகநிறுவனத்தில் செய்யறிவின்(AI)ஒருங்கிணைப்பு: முடிவெடுத்தல் , செயல்திறனை மேம்படுத்த, ஏற்கனவே உள்ள வணிக அமைப்புகளில் செய்யறிவின்(AI) திறன்களை எவ்வாறு இணைப்பது என்பதைப் புரிந்து கொள்க.
மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறை (RAG): தகவல் மீட்டெடுப்பை உருவாக்குகின்ற செய்யறிவு(AI) உடன் இணைக்கும் RAG நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்க. தரவு பாதுகாப்பு நடைமுறைகள்:வளாக தரவுகளில் நேரடியாகச் செயல்படுகின்ற செய்யறிவு(AI) தீர்வுகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்திடுக, இதுதரவு இயக்கத்தின் தேவையை நீக்குவதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
திற மூலத்தில் பரவலாகஅமர்த்துதல்(Deployment:): தனியார் மேககணினி சூழல்களுக்குள் திறமூல செய்யறிவு(AI) உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல் ,நிர்வகித்தல் ஆகியவற்றில் அனுபவத்தைப் பெற்றிடுக.
2.Postiz
github.com/gitroomhq/postiz-app/
Postiz என்பது ஒரு திற மூல சமூககுழுவின் ஊடக திட்டமிடல் கருவியாகும், இது பல்வேறு தளங்களில் உள்ளடக்கத்தை இடுகையிடுவதை மேம்படுத்த செய்யறிவை(AI) மேம்படுத்துகிறது. இது பல்வேறு சமூககுழுவின்ஊடக கணக்குகளை நிர்வகிக்கின்ற செயல்முறையை எளிதாக்குகிறது , இடுகைகளை திறம்பட திட்டமிடுகிறது.
அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
செய்யறிவு(AI)-இயங்குகின்ற திட்டமிடல்: செய்யறிவு எவ்வாறு சமூக ஊடகங்களில் இடுகையிட சிறந்த நேரத்தை தீர்மானிக்க முடியும் என்பதை அறிந்துகொள்க.
பல்வேறு தள ஆதரவு: பல்வேறு சமூக ஊடக தளங்களில் இடுகைகளை திட்டமிடுவதற்கான சவால்களையும் தீர்வுகளையும் புரிந்து கொள்க.
பயனர் நட்புடனான வடிவமைப்பு:எளிதான வழிசெலுத்தல்,கணக்கு நிர்வாகத் திற்கான உள்ளுணர்வு பயனர்இடைமுக(UI) வடிவமைப்பு கொள்கைகளை ஆய்வுசெய்திடுக.
பகுப்பாய்வு ஒருங்கிணைப்பு: பிந்தைய செயல்திறன், பார்வையாளர்களின் ஈடுபாடு பற்றிய நுண்ணறிவுகளை பகுப்பாய்வு எவ்வாறு வழங்குகிறது என்பதைக் கண்டறிந்திடுக.
github.com/OpenBB-finance/OpenBB /
OpenBB என்பது ஒரு கட்டற்றகட்டணமற்ற நிதித் தளமாகும், இது பரந்த அளவிலான முதலீட்டுஆய்வுக் கருவிகளுக்கான அணுகலை வழங்குகிறது. இது பங்குகள், விருப்ப பங்குகள், கிரிப்டோகரன்சிகள், அந்நிய செலாவணி, மேல்நிலையிலான பொருளாதார தரவு , நிலையான வருமானம் போன்றவற்றை பகுப்பாய்வு செய்வதற்கான செயலிகளை வழங்குகிறது. இந்த தளமானது விரிவாக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது.
அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
விரிவான நிதி பகுப்பாய்வு: பல்வேறு நிதிக் கருவிகளை , சந்தைகளை ஆய்வுசெய்திடுக, பங்குகள், விருப்பபங்ககள், கிரிப்டோகரன்சிகள்,போன்ற பலவற்றைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றிடுக.
தரவு ஒருங்கிணைப்பு நுட்பங்கள்: விரிவான முதலீட்டுஆய்வினை எளிதாக்கும் வகையில், பல தரவு மூலங்களை ஒரு ஒருங்கிணைந்த தளமாக எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதை அறிந்துகொள்க.
திற-மூல மேம்பாட்டு நடைமுறைகள்: பெரிய அளவிலான திற-மூலத் செயல்திட்டத்தைப் பராமரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள கூட்டுச் செயல்முறைகளைப் புரிந்து கொள்க.
நீட்டிப்பும் தனிப்பயனாக்கமும்: குறிப்பிட்டஆய்வுத் தேவைகளுக்கு ஏற்ப தளத்தை எவ்வாறு தனிப்பயனாக்குவது , விரிவாக்குவது என்பதைக் கண்டறிந்திடுக, அதன் செயல்பாட்டை மேம்படுத்திடுக.github.com/OpenBB-finance/OpenBB/
github.com/swirlai/swirl-search/
WebUI என்பது பெரிய மொழி மாதிரிகளுடன் (LLMs) தொடர்புகளை எளிதாக்கிடு வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திறமூல, பயனர் நட்புடனான இடைமுகமாகும். இது Ollama, OpenAI-இணக்கமான APIகள் உட்பட பல்வேறு LLM இயக்குபவைகளை ஆதரிக்கிறது, மேலும் பங்கு சார்ந்த அணுகல் கட்டுப்பாடு, பன்மொழி ஆதரவு உருவப்பட உருவாக்க கருவிகளுடன் ஒருங்கிணைப்பு போன்ற வசதிகளை வழங்குகிறது. தரவு தனியுரிமை , பாதுகாப்பை உறுதிசெய்து, முற்றிலும் இணையஇணைப்பில்லாமலும் செயல்படுகின்ற வகையில் இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
செய்யறிவு(AI) மாதிரி ஒருங்கிணைப்பு: ஒரு ஒருங்கிணைந்த இடைமுகத்தில் வெவ்வேறு செய்யறிவு(AI) மாதிரிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது ,நிர்வகிப்பது என்பதைப் புரிந்து கொள்க.
பயனர் மேலாண்மை: பயனர் அனுமதிகளை திறம்பட நிர்வகிக்க பங்கு அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாட்டை செயல்படுத்துவது பற்றி அறிந்துகொள்க.
பன்மொழி ஆதரவு: பல்வேறு மொழிகளை ஆதரிக்கின்ற பயனர் இடைமுகத்தை வழங்குவதற்கான நுட்பங்களை ஆராய்ந்திடுக.
இணையஇணைப்பில்லாத செயல்பாடு: இணைய இணைப்பு இல்லாமல் செயல்படுகின்ற பயன்பாடுகளை வடிவமைப்பது, தரவு தனியுரிமையை மேம்படுத்துவது பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றிடுக.
github.com/AIHawk-FOSS/Auto_Jobs_Applier_AI_Agent/
Auto Jobs Applier என்பது வேலை விண்ணப்ப செயல்முறையை தானியங்குபடுத்தும் ஒரு திற மூலக் கருவியாகும். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், பயனர்கள் பல்வேறு பணிகளுக்கு திறமையாகவும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் விண்ணப்பிக்கவும் இது உதவுகிறது. இது காலிபணியிடப் பட்டியலை வருடுதல் செய்து, தொடர்புடைய பதவிகளை வடிகட்டுகின்றது, மேலும் பயனரின் சார்பாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, வேலை தேடல் அனுபவத்தை ஒழுங்குபடுத்துகின்றது.
அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
தானியங்கியானநுட்பங்கள்: செய்யறிவு(AI)ஆனது -உந்துதல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பிக்கும் பயன்பாடுகள் போன்ற, மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை எவ்வாறு தானியக்கமாக்குவது என்பதைப் புரிந்து கொள்க.
செய்யறிவால்(AI) -இயக்கப்படும் தனிப்பயனாக்கம்: குறிப்பிட்ட பணியின் தேவைகளைப் பொருத்து, வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில், செய்யறிவு(AI) எவ்வாறு பயன்பாட்டுப் பொருட்களை மாற்றியமைக்க முடியும் என்பதை அறிந்துகொள்க.
தரவினைகையாளுதலும் பாதுகாப்பும்: பயன்பாட்டில் உள்ள முக்கியமான பயனர் தகவலைப் பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கான சிறந்த நடைமுறைகளை ஆய்வுசெய்திடுக.
திற-மூல ஒத்துழைப்பு: குறிமுறைவரிகளின் மதிப்புரைகள், சிக்கலை கண்காணித்தல் உட்பட சமூகம் சார்ந்த செயல்திட்டத்திற்கு பங்களிப்பதிலும் பராமரிப்பதிலும் அனுபவத்தைப் பெற்றிடுக.
இதைசெய்வதன் மூலம் கற்றல் ஏன் சிறப்பாக செயல்படுகிறது
எதையாவது சுறுசுறுப்பாகச் செய்யும்போது, நம்முடைய மூளை அதை ஒட்டிக்கொள்ளும் வகையில் செயல்படுத்துகிறது. கானொளிகாட்சிகளைப் காண்பது நமக்கு அறிவை வளப்படுத்திடுகின்றது, ஆனால் உண்மையில் கருத்துகளை முயற்சிப்பது சிக்கல்களைத் தீர்ப்பது அந்த அறிவை நடைமுறையில் மறக்கமுடியாததாக ஆக்குகிறது.
திறமூல செயல்திட்டங்களை உருவாக்குவதும் பரிசோதனை செய்வதும் பயிற்சி அமர்வுகளைப் போன்றது, அங்கு அவ்வாறான பயிற்சியை கவனிக்காமல் உண்மையான பணியைச் செய்கின்றோம். இந்த வழிமுறை நடப்பு உலக பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது கற்றல் அனுபவத்தை மிகவும் வளமாக்குகிறது.
இது கற்றல் பயணத்தில் உதவும் என்று நம்புப்படுகின்றது. திறமூலத்திற்கு பங்களிப்பதன் மூலமும் கற்றுக்கொள்வதன் மூலமும் நாம் நிறைய பட்டறிவினைப் பெறமுடியும். மேலும் வாசகரான நாமும் இதை போன்ற வெற்றியைப் பெறமுடியும்.