திற மூல மென்பொருளைக் கொண்டு கலப்பின செய்யறிவின் (AI)-குவாண்டம் உள்கட்டமைப்பை உருவாக்குதல்

பெரிய மொழி மாதிரிகள் (LLMs) , குவாண்டம் கணினி ஆகிய இரண்டு தொழில்நுட்பப் புரட்சிகளும் நவீன எண்ணிம உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்து வருகின்றன. அதிகப்படியான குளிரூட்டும்வசதியின் தேவை காரணமாக நம்முடைய சாதாரன பயன்பாட்டு வளாகத்தில் குவாண்டம் கணினியை நிறுவுகைசெய்வது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதால், இந்தத் துறை ஒரு கலப்பின முன்னுதாரணத்தை நோக்கி நகர்கிறது: அதாவது, மேககணினி API-கள் வழியாக, பாரம்பரிய CPU/GPU-க்களை தொலைநிலை குவாண்டம் கணினிசேவையாளர் (QCaaS) தளங்களுடன் இணைந்து செயல்படுவதாகும்.

திறமூலக் கருவிகள், குறிப்பாக  Kubernetes, இந்த வேறுபட்ட கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் அடிப்படை ஒருங்கிணைப்பின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன.

அளவீட்டு அடுக்கு: திறமூல செய்யறிவு(AI)மேககணினி

LLM-களை நிறுவுகைசெய்திட, மிகப்பெரிய இணையான கணக்கீடுகளைக் கையாளும் திறன் கொண்ட, சிறப்பு வாய்ந்த, செய்யறிவு(AI)-சார்ந்த மேககணினிகள் தேவைப்படுகின்றன. ஒரு திறமையான, திறமூல செய்யறிவு(AI)மேககணினியின் அடுக்கு ஆனது பொதுவாக பின்வருவனவற்றை ஒருங்கிணைக்கிறது:

ஒருங்கிணைப்பு:  Kubernetes பரவலாக்கப்பட்ட கொள்கலணாக்கப்பட்ட பணிச்சுமைகளை மாறும் தன்மையுடன் திட்டமிட்டு நிர்வகிக்கிறது.

கணக்கீடும் முடுக்கமும்: வேகமான மாதிரிப் பயிற்சிக்காக NVIDIA CUDA போன்ற கட்டமைப்புகளால் இயக்கப்படும் GPU-இயக்கப்பட்ட முனைமங்கள்.

மாதிரி வழங்குதல்: GPU நினைவகத்தை நிர்வகிக்கவும், கோரிக்கைகளைத் தொகுக்கவும் vLLM அல்லது Ollama போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட அனுமான வழித்தடங்களை உருவாக்குகின்றது.

கண்காணிப்புத்திறன்: அளவீடுகளைக் கண்காணிக்கவும், செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் Prometheus, Grafanaஆகியவற்றின் வழியாகக் கண்காணித்தலும் காட்சிப்படுத்துதலும் உள்ளடங்கும்.

QCaaS-இன் கட்டமைப்பு

QCaaS, ஒரு பல அடுக்கு மேககணினி கட்டமைப்பின் மூலம் சிறப்பு வாய்ந்த குவாண்டம் வன்பொருளை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது:

[User Interface Layer (SDKs / Qiskit)]

[Cloud Orchestration Layer (Job Scheduling)]

[Classical Processing Layer (Data Pre/Post Processing)]

[Quantum Hardware Layer (Remote Qubits / IBM Quantum / Amazon Braket)]

மேம்படுத்துநர்கள், Qiskit போன்ற திறமூல SDK-க்களைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்குகிறார்கள். இவை, உள்ளூர்மயமாக்கப்பட்ட, சிறப்பு உள்கட்டமைப்பு தேவையின்றி, குவாண்டம் சுற்றுகளை தொலைநிலை வழங்குநர்களுக்கு (எ.கா., IBM Quantum அல்லது Amazon Braket) சமர்ப்பிக்கின்றன.

கலப்பின குவாண்டம்-மரபுவழி பணிச்சுமைகளை ஒருங்கிணைத்தல்

குவாண்டம் கணினி என்பது மரபுவழி அமைப்புகளை முழுமையாக மாற்றுவதற்காக அன்று; மாறாக, அவை இணைந்து செயல்படுகின்றன. Variational Quantum Eigensolver (VQE) , Quantum Approximate Optimization Algorithm (QAOA) போன்ற தருக்கங்கள், ஒரு தொடர் ஆனது, மூடிய-சுற்றுடனான கலப்பின பணிப்பாய்வைச் சார்ந்துள்ளன:

மரபுவழி முன் செயலாக்கம்: மரபுவழி அமைப்பு தரவைத் தயாரித்து, சிக்கலை வடிவமைக்கிறது.

குவாண்டம் செயலாக்கம்: ஒரு குவாண்டம் சுற்று உருவாக்கப்பட்டு, ஒரு குவாண்டம் செயலியில் தொலைவிலிருந்து இயக்கப்பட்டு, அளவிடப்படுகிறது.

மரபுவழிஉகப்பாக்கம்: மரபுவழி CPU-க்கள்/GPU-க்கள் அளவீட்டு வெளியீடுகளைப் பகுப்பாய்வு செய்து, தருக்க அளவுருக்களை உகப்பாக்கம்செய்கின்றன.

ஒருங்கிணைப்பு: ஒரு உகந்த தீர்வு எட்டப்படும் வரை இந்தச் சுற்று மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.இந்த அணுகுமுறை, மூலக்கூறு உருவகப்படுத்துதல், முதலீட்டுத் தொகுப்பின் உகப்பாக்கம், தளவாடங்கள் ,குறியாக்கவியல் போன்ற சிக்கலான துறைகளை இலக்காகக் கொண்டு, உயர் செயல்திறன் கணினியின் (HPC) கடினமான தரவுக் கையாளுதலையும் குவாண்டம் செயலிகளின் ஒருங்கிணைப்பு ஆற்றலையும் சமநிலைப்படுத்துகிறது.

ஒருங்கிணைப்பின் எதிர்காலம்

நிறுவன உள்கட்டமைப்பின் இறுதி இலக்கு என்பது, செய்யறிவு (AI), உயர் செயல்திறன் கணினி (HPC) , குவாண்டம் அமைப்பு ஆகியவைகளை ஒரேயொரு, திறந்த மேககணினி சூழலமைப்பில் முழுமையாக ஒன்றிணைப்பதாகும்.

┌───► GPU Clusters (AI / Inference)

Unified Kubernetes ────┼───► Dedicated Nodes (HPC Simulations)

Orchestration        │

└───► Remote QCaaS APIs (Quantum Subroutines)

 

இந்தச் சூழலில், செய்யறிவு சுற்றுகளை மேம்படுத்துவதன் மூலமும் இரைச்சலைக் குறைப்பதன் மூலமும் குவாண்டம் செயலாக்கத்தை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் குவாண்டம் செயலிகள் கடினமான பாரம்பரிய இயந்திர கற்றல் நடைமுறைகளை வேகப்படுத்துகின்றன. இன்று திறமூலக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் சிக்கலான வன்பொருள் அடுக்குகளை மறைத்து, அணுகக்கூடிய அடுத்த தலைமுறை கணினிக்கு அடித்தளத்தை அமைக்கின்றன.

 

Leave a Reply