நாம்அணுகிடுகின்ற எல்லைக்குள் AI ஐக் கொண்டுவருவதற்காக OpenCV ஐ பயன்படுத்தி கொள்க

தற்போதைய கணினிகளின் காட்சிமுறையினாலும் IoTஎன சுருக்கமாக அழைக்கப் பெறும் பொருட்களுக்கான இணைய பயன்பாட்டினாலும், AI தொழில் நுட்பம் முன்பை விடமிகஎளிதாக அனைவராலும் அணுகக்கூடியதாக மாறிவருகிறது. இந்த OpenCVஎன்பது, கணினியின்காட்சியும் இயந்திரகற்றலிற்குமான ஒரு கட்டற்ற மென்பொருள்நூலகம் ஆகும், இதுசிறியவணிகநிறுவனங்கள்முதல், பெரிய வணிகநிறுவனங்கள்வரை அனைத்து நிறுவனங்களும் AIஐ எளிதில் ஏற்று பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.
கணினி காட்சி (Computer vision)என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) தனியானதொரு துறையாகும், இது நடப்பு உலகசெயல்களில் இருந்து உருவப்படங்களுக்கு அல்லது கானொளிகாட்சிகளுக்கு விளக்கமளிப்பதற்கும் அவற்றை புரிந்து கொள்வதற்கும் கணிப்பொறிகளை இயக்குவதற்கு தருக்கபடிமுறைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும்.
இந்த புதிய கணினியின் காட்சி எனும் துறையின் மூலம், கணிப்பொறிகளானவை முன்பு எப்போதும் இல்லாத வகையில் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல் புரிந்துகொள்ளவும் முடியும். மிகமுக்கியமாக முகஉருவமைப்பு களை, பொருட்களை, அதனோடுகூடுதலாக உணர்ச்சிகளைக் கூட AI அமைப்புகள் அடையாளம் கண்டுகொள்வதை இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுத்திட முடிந்தது என்பது நம்பமுடியாத அளவிற்கு நமக்கு வியப்பாகி விடுகின்றது! ஆயினும் அது மட்டுமல்லாமல் நம்முடைய உடல்நலன் முதல் வேளாண்மை வரை, சிக்கலான பிரச்சனைகளை நாம் அணுகும் விதத்தில் இந்த கணினியின் காட்சியானது புதியதொருபுரட்சியையே ஏற்படுத்தி வருகிறது. அதாவது AIஇன் கணினியின் காட்சி (Computer vision) ஆனது IoT உடனான ஒருங்கிணைப்புடன், செயல்படுத்திடுகின்ற திறன்கள் முடிவற்றவை!
ஆனால் இந்த ஒருங்கிணைப்பு ஏன் மிகவும் முக்கியமானது? பதில் எளிது: துல்லியம். கணினி காட்சியின் மூலம், எந்தவரு பயன்பாட்டிலும்இடையிடையே ஏற்படுகின்ற மனித பிழைகளை நீக்கி, நாம் எடுக்கும் முடிவுகள் நம்பகமான துல்லியமானதரவுகளின் அடிப்படையில் இருப்பதை இதன்வாயிலாக உறுதிசெய்ய முடியும்.
கணினி காட்சிக்கான OpenCV எனும்நூலகம்
IoTஆனது பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு இந்த கணினியின் காட்சியை பயன்படுத்திகொள்கிறது
AI ,பொருட்களுக்கானஇணையம்(IoT) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு பல்வேறு தொழில்களிலும், பயன்பாட்டு நிகழ்வுகளிலும் கணினி காட்சியைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைத் திறந்துள்ளது.
புத்திசாலித்தனமான இடங்கள்: AI , IoT இன் சூழலில் கணினி காட்சியின் முதன்மை பயன்பாடுகளில் ஒன்று திறன்மிகு வீடுகள், கட்டிடங்கள் ஆகிய துறையில் உள்ளது. உணர்விகளின், படபிடிப்புகருவிக்களின் ஒருங்கிணைப்புடன், கட்டிடங்களின் வெப்பநிலை, ஒளி , ஆக்கிரமிப்பு போன்ற தரவை கண்காணிக்கின்ற பகுப்பாய்வு செய்கின்ற அமைப்புகளுடன் பொருத்தி பயன்பெறலாம். வெப்பநிலையை சரிசெய்தல் அல்லது குறிப்பிட்ட அறையானது ஆளில்லாமல் இருக்கும்போது விளக்குகளை தானாகேவே அணைத்தல் போன்ற பல்வேறு செயல்முறைகளை தானியக்கமாக்க இந்தத் தகவல்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
மருத்துவத் துறை: மருத்துவ உபகரணங்களில் , சாதனங்களில் படபிடிப்பு கருவிக்களை , உணர்விகளை ஒருங்கிணைப்பதன் மூலம், நோயறிதல், சிகிச்சைக்கு உதவ சுகாதார தரவு , படங்களை சேகரித்தல் ஆகியபன்பெறமுடியும். எடுத்துக்காட்டாக, கணினி காட்சியின் வழிமுறைகளின்மூலம் நோய் அல்லது நோய்பாதிப்பதற்கு உள்ளாககூடிய அசாதாரணங்களின் துவக்க அறிகுறிகளைக் கண்டறிய எக்ஸ்ரே அல்லது எம்ஆர்ஐ வருடுதல்களை பகுப்பாய்வு செய்யலாம்.
உற்பத்திதுறை: உற்பத்தித் துறையில், கணினி காட்சி, AI ஆகியவை உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தவும், தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்திகொள்ளலாம். உற்பத்தி சாதனங்களில் படபிடிப்புகருவிக்களை ,உணர்விகளை ஒருங்கிணைப்பதன் மூலம், உற்பத்தியாளர்கள் தாம் உற்பத்தி செய்திடுகின்ற பொருட்களில் குறைபாடுகளைக் கண்டறிந்து செயல்திறனை மேம்படுத்த தரவினை , உருவப்படங்களை சேகரிக்க முடியும். கூடுதலாக, பணியாளர்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் கணினி காட்சியை பயன்படுத்திகொள்ளலாம்.
பாதுகாப்புத் துறை: கணினி காட்சி, AI , IoT ஆகியவை பாதுகாப்புத் துறையில் பல்வேறு பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளன.
கண்காணிப்பும் பாதுகாப்பும்: கணினி காட்சி தருக்கபடிமுறைகளை படபிடிப்புகருவிக்களுடனும் , உணர்விகளுடனும் ஒருங்கிணைத்து உணர்திறன் வாய்ந்த பகுதிகளைக் கண்காணிக்கவும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளைக் கண்டறியவும் முடியும். இந்த அமைப்பு தனிநபர்களையும் பொருட்களையும் அடையாளம் கண்டு, அவர்களின் இயக்கங்களையும் செயல்களையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும், எந்தவொரு பாதுகாப்பு மீறல்களையும் விரைவாக கண்டறிந்து அதனைசரிசெய்திடுவதற்கான செயலைச் செயல்படுத்துகிறது.
தன்னியக்க அமைவுகள்(Autonomous systems) : , கணினி காட்சி, AI ஆகியன பொருத்தப்பட்ட Drones ,ஆளில்லா வாகனங்கள் ஆகியவை கண்காணிப்பிற்காகவும் , உளவுப் பணிகளுக்காகவும், தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் அல்லது தொலைதூர பகுதிகளுக்கு பொருட்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திகொள்ளலாம்.
முன்கணிப்பு பராமரிப்பு: பாதுகாப்புத் துறையில், உபகரணங்கள் செயல்படாத நேரம் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். உடன் உணர்விகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பராமரிப்பு குழுக்கள் நிகழ்நேரத்தில் உபகரணங்களின் செயல்திறனைக் கண்காணிக்கலாம், பராமரிப்பு தேவைப்படுவதை கணிக்க முடியும், செயல்படாத நேரத்தைக் குறைத்து, அவை சரியாக தொடர்ந்து செயல்படுவதற்கான தயார்நிலையை உறுதிசெய்யலாம்.
வேளாண்மை: வேளான் பயிர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும், அவற்றில் பாதிப்பு ஏற்படுத்திடுகின்ற நோய்கள் அல்லது பூச்சிகளைக் கண்டறியவும், நீர்ப்பாசனத்தையும், உரமிடுதலையும் மேம்படுத்தவும் கணினி காட்சியைப் பயன்படுத்திகொள்ளலாம். இதன் மூலம் பயிர் விளைச்சலை மேம்படுத்தி வேளாண்விளைபொருகளின் இழப்பினை குறைக்கலாம்.
சில்லறை விற்பனை: சில்லறை விற்பனையாளர்கள் கணினி காட்சி, AI ஐப் பயன்படுத்தி வாடிக்கையாளர் நடத்தையை பகுப்பாய்வு செய்யலாம், அதாவது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டபொருட்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், அவர்கள் விரும்பு கின்ற பொருட்கள் எவை. கிடங்குகளின் தளவமைப்பு, சரக்கு மேலாண்மை , தனிப்பயனாக்கப்பட்ட சந்தைப்படுத்தல் உத்திகளை மேம்படுத்த இந்தத் தரவினை பயன்படுத்திகொள்ளலாம்.
போக்குவரத்து மேலாண்மை: கணினி காட்சி , AI உடன் உணர்விகளை, படபிடிப்புகருவிக்களை ஒருங்கிணைப்பது போக்குவரத்தினை கண்காணிக்கவும், போக்குவரத்து வழிமுறைகளை அடையாளம் காணவும், போக்குவரத்திற்கான அடையாள விளக்குகளை மேம்படுத்தவும் உதவும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து சாலை பாதுகாப்பினை மேம்படுத்த முடியும்.
OpenCV இன் வாயிலாக புதுமைகளை ஊக்குவித்தல்
OpenCV என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற திறமூலகணினிகாட்சிநூலகம்(Open Source Computer Vision Library) என்பது ஒரு திறமூல கணினி காட்சி , இயந்திர கற்றல் ஆகியவற்றின்மென்பொருள் நூலகம் ஆகும், இது இயந்திரமனிதன், கானொளிகாட்சி பகுப்பாய்வு , உருவப்பட செயலாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் பரவலாகப் பயன்படுத்திகொள்ளப்படுகிறது.
உருவப்படங்கள் , கானொளிகாட்சிக்களை நிகழ்நேரத்தில் செயலாக்கும் திறன் அதன் முக்கிய இயல்புகளில் ஒன்றாகும். இது உருவப்பட செயலாக்கம், இயல்பினை கண்டறிதல், பொருளின் ஏற்புறுதி போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கான பலதரப்பட்ட செயலிகளையும் தருக்கபடிமுறைகளையும் வழங்குகிறது. OpenCVஆனது குறுக்கு-தள பயன்பாடு என்பதால், இது Windows, Linux , macOS போன்ற பல்வேறு இயக்க முறைமைகளில் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் நூலகம் C++ இல் எழுதப்பட்டுள்ளது, ஆனால் பைதான், ஜாவா,போன்ற பிற நிரலாக்க மொழிகளுக்கான இடைமுகங்களும் இதில்உள்ளன.
OpenCV இன் திறமூல இயல்பு மேம்படுத்துநர்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அதன் செயலிகளை தனிப்பயனாக்கவும் நீட்டிக்கவும் உதவுகிறது. இது கணினி காட்சி துறையில் ஆராய்ச்சியாளர்கள் , மேம்படுத்துநர்கள் ஆகியஇருவருக்கும் ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது.
நிறுவுகைசெய்தல்:
இந்த OpenCV ஐ பயன்படுத்தி கொள்வதற்காக விரும்பினால் முதலில் நம்முடைய கணினியில் பைதான் ஏற்கனவே நிறுவுகைசெய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்துகொள்க இல்லை எனில் உடன் பைதானை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடுக.
அதனைதொடர்ந்து நம்முடைய முனைமத்தில் பின்வரும் கட்டளைவரியை இயக்குவதன் மூலம் pipஐ பயன்படுத்தி OpenCV ஐ நிறுவுகைசெய்திடுக:
pip install opencv-python.
OpenCV உடன் பணிபுரிதல்:
import cv2 எனும் கட்டளைவரியைப் பயன்படுத்தி நம்முடைய பைதான் குறிமுறைவரிகளில் OpenCVஇன் நூலகத்தை பதிவிறக்கம் செய்திடுக.
பின்னர்cv2.imread() அல்லது cv2.VideoCapture() செயலிகளைப் பயன்படுத்தி முறையே ஒரு உருவப்படம் அல்லது கானொளிகாட்சி கோப்பை பதிவேற்றம் செய்திடுக.
OpenCV நூலகத்தில் உள்ள பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தி மறுஅளவிடுதல், வெட்டுதல்(cropping), வடிகட்டுதல் அல்லது பொருளை கண்டறிதல் என்பனபோன்ற பல்வேறு செயலிகளைச் செயற்படுத்திடுக.
செயலின் முடிவை திரையில் காண்பிப்பதற்காக cv2.imshow() எனும் செயலியைப் பயன்படுத்தி கொள்க.
குறிப்பிட்ட செயலி செயல்படும்போது ஏதேனும்ஒரு விசையை அழுத்துவதற்கு காத்திருப்பதற்காக. cv2.waitKey() எனும் செயலியைப் பயன்படுத்திகொள்க
cv2.release() , cv2.destroyAllWindows() ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி முறையே ஆதாரங்களை வெளியிட்டு அதன்பின்னர் சாளரத்தை மூடிடுக.
OpenCV ஐப் பயன்படுத்தி ஒரு உருவப்படத்தை எவ்வாறு பதிவேற்றுவது, அளவை மாற்றுவது அதைக் காண்பிப்பது என்பதை விளக்குகின்ற ஒரு சிறியஎடுத்துக்காட்டு குறிமுறைவரிகளின் துணுக்கு பின்வருமாறு:
import cv2

உருவப்படத்தினை பதிவேற்றுதல்(Load the image)

img = cv2.imread(‘image.jpg’)

உருவப்படத்தின் அளவை சரிசெய்தல்(Resize the image)

resized_img = cv2.resize(img, (500, 500))

உருவப்படத்தினை திரையில் காட்சியிடச்செய்தல்(Display the image)

cv2.imshow(‘Image’, resized_img)

(Wait for a key press)

cv2.waitKey(0)

வளங்களை வெளியிட்டுசாளரத்தை மூடுதல்(Release the resources &close the window)

cv2.release()
cv2.destroyAllWindows()

OpenCV ஆனது பல்வேறு கணினி காட்சிகளுக்கும், பட செயலாக்க பணிகளுக்கும் உகந்த தருக்கபடிமுறைகளின் விரிவான தொகுப்பை வழங்குகிறது. மேலே உள்ள வழிகாட்டிதுனுக்கின் மூலம், நம்முடைய சொந்த கணினி காட்சி பயன்பாடுகளை உருவாக்க OpenCV ஐ ஆய்வுசெய்து பரிசோதனை செய்யலாம்.
எதிர்காலத்தை சித்தரித்தல்: OpenCV இன் விளையாட்டுகளை மாற்றியமைத்திடு கின்ற, பயன்பாடுகளில் பயன்படுத்திகொள்ளலாம் .OpenCV ஐ வகைப்படுத்தப்பட்ட உயர் செயல்திறன் பயன்பாடுகளிலும் பயன்படுத்திகொள்ளலாம்.
பொருளை கண்டறிதலும் ஏற்புறுதியும்:ஆய்வாளர்கள் உருவப்படங்களில் அல்லது கானொளி காட்சிகளில் உள்ள பொருட்களைக் கண்டறிந்து அடையாளம் காணும் தருக்கபடிமுறைகளை உருவாக்க OpenCV ஐப் பயன்படுத்திகொள்ளலாம்.
இதனை கண்காணிப்பு, தன்னியக்கம் , இயந்திரமனிதன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாம்.
மருத்துவ உருவப்படம்: எக்ஸ்-கதிர்கள், எம்ஆர்ஐகள் , சிடி வருடுதல்கள் போன்ற மருத்துவ உருவப் படங்களை பகுப்பாய்வு செய்ய OpenCVஐ பயன்படுத்தி கொள்ளலாம். ஆய்வாளர்கள் பல்வேறு வகையான நோய்களைக் கண்டறிந்து வகைப்படுத்த தருக்கபடிமுறைகளை உருவாக்கலாம், மருத்துவ நோயறிதல்களின் துல்லியத்தினையும் செயல்திறனையும் மேம்படுத்தலாம்.
தன்னியக்க வாகனங்கள்: தன்னியக்க வாகனங்களுக்கான கணினி காட்சி அமைப்புகளை உருவாக்க இந்த நூலகத்தினை பயன்படுத்திகொள்ளலாம், அவை அவற்றின் சூழலில் உள்ள பொருட்களைக் கண்டறிந்து மிகச்சரியாக செயல்படுவதற்காக உதவுகின்றன. இது பாதுகாப்பான , திறமையான போக்குவரத்து அமைப்புகளுக்கு வழிவகுக்கும்.
அதிகரிக்கப்பட்ட யதார்த்தநிலை(Augmented reality): இது பயன்பாடுகளை உருவாக்கவும், எண்ணிம தகவல்களை நடப்பு உலகப் பொருட்களில் மேலெழுதவும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனை விளையாட்டு, கல்வி , விளம்பரம் ஆகியபணிகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாம்.
மனித-இயந்திரமனித தொடர்பு: கணினி காட்சி அமைப்புகளை உருவாக்க OpenCV பயன்படுத்திகொள்ளலாம், இது இயந்திரமனிதர்கள் உயிருள்ள மனிதர்களுடன் மிகவும் திறம்பட தொடர்பு கொள்ள உதவுகிறது. இதனை சுகாதாரம், உற்பத்தி , சேவைகள் உட்பட பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாம்.
OpenCV பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிக்கும், மேம்பாட்டிற்குமான பரந்த நோக்கத்தையும் வழங்குகிறது. இது இயந்திரமனிதன், தன்னியக்க வாகனங்கள், மருத்துவ உருவப்படம், கண்காணிப்பு அமைப்புகள் போன்றவற்றில் பரவலாகப் பயன்படுத்திகொள்ளலாம். OpenCV இன் விரிவான அளவிலான இயல்புகள் , வழிமுறைகள், உருவப்பட செயலாக்கம், பொருளை கண்டறிதல் , கண்காணிப்பு உள்ளிட்டவை ஆய்வாளர்களுக்கும் , மேம்படுத்துநர்களுக்கும் ஒரு பிரபலமான தேர்வாக அமைகின்றன. அதன் திறமூல இயல்பு ஆனதுதனிப்பயனாக்கலுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது, இது குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப கணினி காட்சி பயன்பாடுகளை உருவாக்குவதற்கான சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது.
AI , நிகழ்நேர காட்சிகள் ஆகியவற்றிற்கான OpenCV இன் நூலகங்கள்
கணினி காட்சி பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பரந்த அளவிலான கருவிகளையும் செயலிகளையும் OpenCV வழங்குகிறது. இந்த OpenCV அடிப்படையிலான திறமூல நூலகங்கள் மேம்படுத்துநர்களுக்கு AI , நிகழ்நேர கணினி காட்சி பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கருவிகள் , செயல்களை வழங்குகின்றன.AI, நிகழ்நேர காட்சிகள் ஆகியவற்றிற்கான சிலOpenCV அடிப்படையிலான திறமூல நூலகங்கள் பின்வருமாறு.
YOLOv4: இது பொருளை கண்டறிதலிற்கான தருக்கபடிமுறையாகும், இது நிகழ்நேரத்தில் பொருட்களைக் கண்டறிந்து வகைப்படுத்த ஆழ்ந்த நரம்பியல் வலைபின்னல்களைப் பயன்படுத்திகொள்கிறது. இது கருமையானஇணைய(Darknet) வரைச்சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது , உருவப்பட செயலாக்கத்திற்கு OpenCV ஐப் பயன்படுத்தி கொள்கிறது இதனுடைய இணையமுகவரி (github.com/AlexeyAB/darknet)ஆகும்.
OpenPose: இது நிகழ்நேர இருபரிமான (2D) முப்பரிமான (3D) காட்சிகளை கண்டறிதலுக்கான திறமூல நூலகமாகும்.நிகழ்நேரத்தில்பல்வேறு நபர்களின் உருவப்படங்களை மதிப்பிடுவதற்கு ஆழ்கற்றல், கணினி காட்சி நுட்பங்களைப் பயன்படுத்திகொள்கிறது. இதனுடைய இணையமுகவரி(https://github.com/CMU-Perceptual-Computing-Lab/openpose) ஆகும்
APIயுடனானபொருளை கண்டறிதல் : இது பொருளை கண்டறிதலுக்கும் வகைப்படுத்தலுக்குமான திறமூல நூலகமாகும். இது TensorFlow , OpenCV ஆகியவற்றைப் பயிற்சி, நிகழ்நேர காட்சிஆகியவற்றில் பொருளை கண்டறிதலுக்கான ஆழ்ந்த நரம்பியல் வலைபின்னல்களின் அனுமானத்தைப் பயன்படுத்தி கொள்கிறது. இதனுடைய இணையமுகவரி (github.com/tensorflow/models/tree/master/research/object_detection).ஆகும்
DLib: இது கணினி காட்சி பயன்பாடுகளை உருவாக்குவதற்கான நவீன C++ எனும் கணினிமொழியின் கருவித் தொகுப்பாகும். பொருளை கண்டறிதல், முகஉருவினை கண்டறிதல் போன்ற பலவற்றிற்கான பரந்த அளவிலான தருக்கபடிமுறைகளும் கருவிகளும் இதில் அடங்கும். இதனுடைய இணையமுகவரி (github.com/davisking/dlib).ஆகும்
OpenCVSharp: இது OpenCV நூலகத்திற்கான .NETஇன் மேலுறையாகும். மேம்படுத்துநர்கள் தங்கள் .NET பயன்பாடுகளில் OpenCV ஐப் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.
Emgu CV: OpenCV நூலகத்திற்கான குறுக்கு-தள .வலைதள(NET)போர்வையான, இது C#, VB.NET , F# போன்ற .NET மொழிகளிலிருந்து OpenCV செயலிகளுக்கான அணுகலை வழங்குகிறது.
OpenFace: இது ஒரு திறமூல முகஉருமாறுதலிற்கான பகுப்பாய்வு கருவித் தொகுப்பாகும், இது முகஉருவத்தினை அடையாளக் கண்டறிதலுக்கும் கண்காணிப்பிற்கும் OpenCV ஐப் பயன்படுத்திகொள்கிறது.
Mahotas: உருவப்பட செயலாக்கம் , கணினி காட்சிக்கான பைதான் நூலகம், ஆகியவற்றுடனான இது அடிப்படை உருவப்பட செயலாக்க செயலிகளுக்கு OpenCV ஐப் பயன்படுத்திகொள்கிறது.
scikit-image: உருவப்பட செயலாக்கம் , கணினி காட்சிக்கான இந்த பைதான் நூலகம் சில உருவப்பட செயலாக்க செயலிகளுக்கு OpenCV ஐப் பயன்படுத்துகிறது.

கணினி காட்சிக்கான முன்னணி தளங்கள்
OpenCV இயங்குதளத்தைப் போன்ற ஒத்த வாய்ப்புகளை தேடுகின்றோமெனில்,. அந்தந்த URLகளுடன் கணினி காட்சிக்கான சில பிரபலமான நிரலாக்க தளங்களும் , நூலகங்களும் பின்வருமாறு.
TensorFlow: இது இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்திகொள்வதற்குமான ஒரு திற மூல தளமாகும். இது கணினி காட்சி பணிகளான உருவப்படத்தை அறிதல், பொருளை கண்டறிதல் , வகைபிரித்தல் போன்ற ஒரு தகவமைகளை உள்ளடக்கியதாகும்.இதனுடைய இணையமுகவரி (www.tensorflow.org/) ஆகும்.
PyTorch: இது ஒரு திறமூல இயந்திர கற்றல் வரைச்சட்டமாபாகும், இது ஆழ்கற்றல் மாதிரிகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்திகொள்வதற்கும் பல்வேறு வகையிலான கருவிகளையும் நூலகங்களையும் வழங்குகிறது. இது உருவப்பட வகைப்பாடு, பொருளை கண்டறிதல், வகைபிரித்தல் போன்ற கணினி காட்சி பணிகளுக்கான ஒரு தகவமை வினை கொண்டுள்ளது.இதனுடைய இணையமுகவரி (pytorch.org/).ஆகும்.
Keras: இது உயர்நிலை நரம்பியல் வலைபின்னல்களின் API ஆகும், இது பைத்தானில் எழுதப்பட்டுள்ளது , TensorFlow, CNTK அல்லது Theano ஆகியவற்றின் மேல் இயங்கும் திறன் கொண்டது. உருவப்படத்தை அறிதல், வகைபிரித்தல் போன்ற கணினி காட்சி பணிகளுக்கு ஆழ்கற்றல் மாதிரிகளை உருவாக்குதல் பயிற்சி செய்தல் ஆகியவற்றிற்கான எளிய , உள்ளுணர்வுகூட வழிமுறையை இது வழங்குகிறது.இதனுடைய இணையமுகவரி (keras.io/). ஆகும்.
MATLAB: இது ஒரு நிரலாக்க மொழி, பொறியியல் , அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளின் பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற எண்ணிம கணினி சூழல் அமைவாகும். உருவப்பட செயலாக்கம், கணினி காட்சி அமைப்பின் வடிவமைப்பு , இயந்திர கற்றல் போன்ற கணினி காட்சி பணிகளுக்கான விரிவான கருவிப்பெட்டியை இது கொண்டுள்ளது.இதனுடைய இணையமுகவரி (www.mathworks.com/products/computer-vision.html).ஆகும்
SimpleCV: இது பைத்தான் எனும் கணினிமொழியில் உருவாக்கப்பட்டகணினி காட்சி பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு திற மூல வரைச்சட்டமாகும். இதில் உருவப்பட செயலாக்கம், இயல்புநிலையாக்குதல், பிரித்தெடுத்தல், பொருளை ஏற்புறுதிசெய்தல் போன்ற பொதுவான CV பணிகளுக்கு இது உயர் நிலை பயனாளர் இடைமுகத்தை வழங்குகிறது. இதனுடைய இணையமுகவரி (simplecv.org/)ஆகும்
TorchVision: இது சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கின்ற ஒருகணினி காட்சியின் நூலகமாகும். இது உருவப்படம் , கானொளிகாட்சி வகைப்பாடு, பொருளை கண்டறிதல் வகைபிரித்தலிற்கான கருவிகளையும் மாதிரிகளையும் வழங்குகிறது.இதனுடைய இணையமுகவரி (pytorch.org/vision/).ஆகும்
ImageJ: இது ஜாவாவில் எழுதப்பட்ட திறமூல உருவப்பட செயலாக்க பகுப்பாய்வு மென்பொருளாகும். இது உருவப்பட(image) செயலாக்கம், வகைபிரித்தல் (segmentation), இயல்நிலையைப் பிரித்தெடுப்பதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது இதனுடைய இணையமுகவரி (imagej.net/).ஆகும்
மேற்கூறிய தளங்களும் நூலகங்களும் மேம்படுத்தநர்களுக்கு கணினி காட்சியின் பயன்பாடுகளை உருவாக்க , வரிசைப்படுத்த(deploy) பல்வேறு கருவிகளையும் செயலிகளையும் வழங்குகின்றன.
இறுதியாக வருங்காலத்தில் AI மட்டுமே அனைத்திலும் நிறைந்திருக்க விருக்கின்றது என்பது இரகசியமன்று. கணினி காட்சி , IoT ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆனது உலகின் மிக முக்கியமான சில சிக்கல்களைத் தீர்வு செய்திடக் கூடும். ஆனால் அது உற்சாகமாகத் தோன்றினாலும், இந்த தொழில்நுட்பத்தைக் பிற்காப்பு செய்து பயன்படுத்துவதற்கு ஆகின்ற தொகையை செலவிட தயாராக இல்லாதவர்களுக்கு அவ்வாறான செலவுகளே இதனை தவிர்ப்பதற்கான மிகவும் முதன்மையான பிரச்சினையாகக உள்ளது. அங்குதான் OpenCV களத்திற்கு அவ்வாாறானவர்களுக்கு உதவதயாராகவருகிறது.
AI ஐ பொதுமக்களுக்கானதாக ஆக்குவதன் மூலம், OpenCV போன்ற தளங்கள் பாரம்பரியமாக சிறு வணிகநிறுவனங்களுக்கு எட்டாதவைகளாக உள்ளவைகளையு மறுவரையறை செய்து பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்கின்றன. இந்த மாற்றம் புதுமைகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், புதிய திறமைகளுக்கான கதவுகளைத் திறக்கிறது குறைந்த வாய்ப்பு கொண்ட சந்தைகள் வளர புதியதொரு வாய்ப்பை உருவாக்குகிறது .சக்திவாய்ந்த இந்த தொழில்நுட்பத்தை தனிப்பட்டவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படுமா்று OpenCV ஆனது ஆடுகளத்தை சமன் செய்ய உதவுகிறது.

 

%d bloggers like this: