சமீபகாலமாக, எந்தவொரு அமைவு நிர்வாகியும் அக்கறை கொள்ளாத ஒரே செய்தி தானியங்கியாகும். ஆனால் சமீபத்தில், தகவல்தொழில்நுட்பத்துறையின் பெரும்பாலானசெயல்கள் இந்த தானியங்கியிலிருந்து பல்லியமறைசெயலிக்கு (orchestration) மாறிவிட்டதாகத் தெரியவருகின்றது, இதனால் குழப்பமான பல நிர்வாகிகள் “இவ்விரண்டிற்கும் இடையே என்னென்ன வேறுபாடுகள் உள்ளன?” என ஆச்சரியப்படுகிறார்கள்: தானியங்கிக்கும், பல்லியமறைசெயலிக்கும் இடையிலான வேறுபாடுகளானவை அவைகளின் முதன்மையான நோக்கத்திலும் அவற்றின் கருவிகளிலும் உள்ளன. ஆயினும் தொழில்நுட்ப ரீதியாக, தானியங்கியானது பல்லியமறைசெயலியின் துணைக் குழுவாக கருதப்படலாம். பல்லியமறைசெயலி பல நகரும் பகுதிகளை பரிந்துரைக்கும் அதே வேளையில், தானியங்கியானது பொதுவாக ஒரேயொரு ஒற்றை பணி அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வலுவான தொடர்புடைய பணிகளைமட்டும் குறிக்கின்றது. பல்லியமறைசெயலி உயர் மட்டத்தில் செயல்படுகிறது மேலும் மாறிவரும் நிலைமைகள் , தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த பார்வையை மிகவும் எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனென்றால் தானியங்கி, பல்லியமறைசெயலி ஆகிய இரண்டு சொற்களும் அவை பயன்படுத்தப்படும்போது பல்வேறு தாக்கங்களைக் கொண்டுள்ளன. இரண்டின் முடிவுகளும் செயல்பாட்டு ரீதியாக ஒரே மாதிரியானவை: மேலும் இவ்விரண்டிலும் நேரடியாக நம்முடைய தலையீடு எதுவும் இல்லாமல் செயல்கள் தானாகவே நடைபெறும். ஆனால் அவைகளிலிருந்து பெறப்படும் இறுதி முடிவுகளும் அவற்றை நாம் பெறும் விதமும் அவற்றைச் செய்ய நாம் பயன்படுத்துகின்ற கருவிகளும் வேறுபட்டவை களாகும், அல்லது நாம் பயன்படுத்திய கருவிகளைப் பொறுத்து குறைந்தபட்ச செயல்களுடன் வித்தியாசமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, தானியங்கியானது(Automation) வழக்கமாக உரைநிரலை உள்ளடக்கியதாக செயல்படுகின்றது, பெரும்பாலும் இந்த உரைநிரலானது Bash அல்லது பைத்தான் அல்லது அதற்கு ஒத்த கணினிமொழியாக இருக்கும், மேலும் இது ஒரு துல்லியமான நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் ஏதேனும் ஒரு செயலானது தானாகவே நடைபெறுமாறு திட்டமிடுகின்றது. இருப்பினும், பல்லியமறைசெயலி பெரும்பாலும் ஒரு பயன்பாட்டுடன் துவங்குகிறது, இது ஒழுங்கற்ற முறையில், தேவைக்கேற்ப, அல்லது எந்தவொரு தூண்டுதல் நிகழ்வுகளின் விளைவாகவும் நிகழக்கூடும், மேலும் சரியான முடிவுகள் பல்வேறு நிலைமைகளைப் பொறுத்து கூட மாறியமையலாம்.
தகவல்தொழில்நுட்ப(IT) துறையில் முடிவெடுத்தலும் பல்லியமறைசெயலியும்
அமைவு நிருவாகியானது ஒரு கணினியை பாதிக்ககூடிய ஏதேனும் ஒன்றை செய்கின்ற ஒரு அமைவைக் கண்டுபிடித்திருப்பதாக தானியங்கியானது பரிந்துரைக்கின்றது, இது ஒரு கணினியில் வழக்கமாக கைமுறையாகநாம் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்யும். தானியங்கியான செயலில், அந்த அமைவு நிருவாகியானது ஏற்கனவே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பெரும்பாலான முடிவுகளை எடுக்கின்றது, மேலும் கணினி செய்ய வேண்டியவை அனைத்து பணிகளின் “செய்முறையை” செயல்படுத்துவதாகும். விதிகள், அளவுருக்கள், கவனித்தல்கள் (observations) ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அமைவு நிருவாகியானது சொந்தமாக ஏதாவதுவொன்றை செய்வதற்கான ஒரு அமைப்பை கொண்டுள்ளது என்று பல்லியமறைசெயலி அறிவுறுத்துகிறது. பல்லியமறைசெயலியில், அமைவு நிருவாகிக்கு விரும்பிய இறுதி முடிவு தெரியும், ஆனால் என்ன செய்வது என்று தீர்மானிக்க அதை கணினிக்கு விட்டு விடுகிறது.
இந்நிலையில் Ansible ,Bashஆகியஇரு கணினி மொழிகளை கருத்தில்கொள்க. Bash என்பது ஒரு பிரபலமான shell ,உரைநிரல் (scripting )ஆகியவற்றின் மொழியாகும், இது ஒரு குறிப்பிட்ட வேலை நாளில் தாம் செய்யும் அனைத்து பணிகளையும் நடைமுறையில் நிறைவேற்ற அமைவு நிருவாகிகளால் பயன்படுத்தப்படுகின்றது. Bashஉடன் தானியங்கு படுத்துவது நேரடியானசெயலாகும்: ஒரு ஊடாடும் அமர்வில் கட்டளைகளைத் தட்டச்சு செய்வதற்கு பதிலாக, அவற்றை உரை ஆவணத்தில் தட்டச்சு செய்து கோப்பை shell இன் உரைநிரலாக சேமிக்கமுடியும். Bash ஆனது shell இன் உரைநிரலை இயக்கி, ஒவ்வொரு கட்டளையையும் அடுத்தடுத்து செயல்படுத்திடுகின்றது. ஒருசில நிபந்தனைகளுடன் முடிவெடுப்பதற்கு இதில் இடமுண்டு, ஆனால் வழக்கமாக, இது எளிமையான if-then எனும் கூற்றுகளை விட சிக்கலானது அன்று, ஆயினும்அவை ஒவ்வொன்றும் உரைநிரலில் குறியிடப்பட வேண்டும்.
மறுபுறம், Ansibleஎனும் கணினிமொழியானது playbooksஐ பயன்படுத்துகிறது, அதில் ஒரு அமைவுநிருவாகி கணினிவிரும்பிய நிலையை விவரிக்கிறது. இந்தAnsible செய்த பணியை கருத்தில் கொள்வதற்கு முன் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகளை இது பட்டியலிடுகிறது. இந்த Ansibleஆனது தான் இயங்கும் போது, கணினியின் இயக்க முறைமையின் அடிப்படையில், விரும்பிய நிலையுடன் ஒப்பிட்டுகணினியின் தற்போதைய நிலையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கின்றது. இந்நிலையில் ஒரு playbookஇல் குறிப்பிட்ட கட்டளைகள் எதுவும் இல்லை எனும் அதற்கு பதிலாக அந்த முடிவுகளை Ansibleஐ செயற்படுத்திடுமாறு விட்டுவிடுகிறது.
நிச்சயமாக, Ansibleஆனது ஒரு தானியங்கிசெயலி என்று குறிப்பிடப்படுகின்றது-இந்நிலையில் நமக்கு இந்த பல்லியமறைசெயலியானது- ஒருகருவியாககருதலாமா என்ற சந்தேகம் நம்மனைவரின் மனதிலும் எழும்.நிற்க பல்லியமறைசெயலியானது கண்டிப்பாக ஒருகருவி அன்று என்ற செய்தியை மனதில்கொள்க.
ஆயினும் இவ்விரண்டிற்குமானவேறுபாடு நுட்பமானதாக இருக்கலாம், மேலும் நிபந்தனைகள் நிச்சயமாக ஒன்றுடன் ஒன்று கலந்துஇருக்கலாம் என்ற செய்திகளை மட்டும் மனதில்கொள்க.
பல்லியமறைசெயலியும் மேககணினியும்
பயனாளர்கள் தங்களுடை சேவையகத்தில் தொடர்ந்து பதிவேற்றப்படும் கோப்பின் வகையை மாற்ற வேண்டும் என்று இதுகூறிடுகின்றது. இதனுடைய தீர்வின்கையேடு என்பது தினமும் காலையில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கத்திற்கான கோப்பகத்தை சரிபார்த்து, கோப்பைத் திறந்து, பின்னர் அதை வேறு வடிவத்தில் சேமிப்பதாகும். இந்த தீர்வு மெதுவானது, திறமையற்றது, மேலும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை மட்டுமே இது நிகழக்கூடும், ஏனெனில் நாம் ஒரே பணியை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்போம்.
அதற்கு பதிலாக அப்பணியை தானியக்கமாக்கலாம் என விரும்புவோம் . அதைச் செய்ய வேண்டுமானால், ஒரு கோப்பு பதிவேற்றப்பட்டதைக் கண்டறிய நாம் ஒரு PHP அல்லது Node.js இல் உரைநிரலை எழுதி செயல்படுத்திடலாம். உடன் உரைநிலானது மாற்றத்தை நிகழ்த்தி ஒரு எச்சரிக்கை செய்தியை நமக்கு அனுப்புகிறது அல்லது மாற்றம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திடுவதற்காக பதிவினை உள்ளீடு செய்கின்ற. பதிவேற்றத்துடனும் மாற்று செயல்முறையுடனும் பயனாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அனுமதிப்பதற்காக காலப்போக்கில் நாம் உரைநிரலை மேம்படுத்தலாம்.
செயல்முறையைத் திட்டமிட விரும்பினால், அதற்கு பதிலாக ஒரு பயன்பாட்டுடன் தொடங்கலாம். இதில்தனிப்பயன் பயன்பாடு கோப்புகளை ஏற்றுக்கொள்ளவும் மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய மேகக்கணினியின் ஒரு கொள்கலனில் பயன்பாட்டை இயக்கலாம், மேலும் OpenShift,ஐப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் போக்குவரத்து அல்லது பணிச்சுமை அதிகரிக்கும் போது நம்முடைய பயன்பாட்டின் கூடுதல் நிகழ்வுகளைத் தொடங்கலாம்.
தானியங்கியையும் பல்லியமறைசெயலியையும் கற்றல்
தானியங்கிக்கு அல்லது பல்லியமறைசெயலிக்கு எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லை. இவை வேறுபட்ட பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப் படும் பரந்த நடைமுறைகளை கொண்டுள்ளன. இவற்றை கற்றலுக்கான முதல் படி, நாம் திட்டமிடவும் தானியங்கு படுத்துவதற்காகவுமான தொழில்நுட்பத்துடன் தேர்ச்சி பெறுவதாகும். ஒரு இணைய சேவையகம் எவ்வாறு இயங்குகிறது, அல்லது எந்த இணையவாயில்கள் திறந்திருக்க வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும், அல்லது ஒரு இணையவாயில்என்றால் என்ன என்பதுபற்றி நமக்கு தெரியவில்லை எனில், தொடர்ச்சியான இணைய சேவையகங்களை அளவிடுவது (பாதுகாப்பாக) கடினமாகும். நடைமுறையில், நாம் இணையவாயில்களைத் திறக்கும் நபராகவோ அல்லது சேவையை உள்ளமைக்கம் நபராகவோ இருக்கக்கூடாது.ஒரு கொள்கலனில் உள்ளதை பற்றி உண்மையில் அறியாமலோ அல்லது கவனிக்காமலோ OpenShiftஐ நிர்வகிக்கும் பணியை செய்ய முடியும். ஆனால் அடிப்படைக் கருத்துக்கள் முக்கியம், ஏனெனில் அவை பயன்பாட்டினை, சரிசெய்வற்கும் பாதுகாப்பிற்கும் பரவலாக பொருந்தும்.
முதலில் நாம் மிகவும் பொதுவான பல்லியமறைசெயலி, தானியங்கி ஆகியவற்றினுடைய கருவிகளை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையான Bash எனும் கணினி மொழியை கற்றுக் கொள்க, அதனை தொடர்ந்து Gitஎனும் கணினிமொழியை பயன்படுத்தத் தொடங்குக, பின்னர் ஒருசில Gitஇனுடைய கொக்கிகளை வடிவமைத்திடுக, அதன்பின்னர் பைத்தானைக் கற்றுக் கொள்க, மேலும்YAML , Ansible ஆகியவற்றுடன் வசதியாக நம்முடைய செயல்பாடுகள் இருக்குமாறு அறிந்து கொள்க, அதனோடு Minikube, OKD, OpenShift ஆகியவற்றை முயற்சித்திடுக. இவையனைத்தும் பல்லியமறைசெயலி, தானியங்கி ஆகிய இரண்டிற்கும் அடிப்படை தேவைகளாகும்
, இவை இரண்டும் நம்முடைய பணியை மிகவும் திறமையாக, நம்முடைய குழுவிற்கு முக்கியமான திறன்களைகொண்டு வரவும் உதவக்கூடும். இன்று அவைகளை கற்பதற்கான முதலீடு செய்க, நாளை அதனைவிட இரண்டு மடங்கு அதிகமாக பெறுக என பரிந்துரைக்கப்படுகின்றது.