பகிர்ந்துகொள்ளப்பட்ட , பரவலாக்கப்பட்ட மெய்நிகர் தளத்தை வழங்குவதன் மூலம், புதுமை, படைப்பாற்றல் , சமூக இணைப்பு ஆகியவற்றிற்கான பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்ற திறனை இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில் அவ்வாறான மீப்பெரும் செயலாக்கத்தின் (Metaverse) உள்கட்டமைப்பை உருவாக்கு வதற்கும் அதைப் பாதுகாக்க உதவுவதற்கும்ஆன பிரபலமான திற மூலக் கருவிகளை பற்றி காண்போம்.
இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) எனும் தொழில்நுட்பமானது இன்னும் அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, ஆனால் இது ஒரு மெய்நிகர் சூழலில் நாம் தொடர்பு கொள்ளும், சமூகமயமாக்கும் , வணிகத்தை நடத்துகின்ற விதத்தை மாற்றுகின்ற திறனைக் கொண்டுள்ளது.
இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது பல்வேறு காரணங்களுக்காக மிகப்பெரும் அளவில் பிரபலமாகி வருகின்றது.
அதிவேக அனுபவம்: இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது மிகவும் அதிவிரைவான மெய்நிகர் உலக அனுபவத்தை வழங்குகிறது, அங்கு பயனர்கள் ஒருவருக்கொருவர், குறிக்கோள்களுடனும் சூழல்களுடனும் நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்ளமுடியும், இது தங்களது இருப்பினையும் சமூகத்தின் உணர்வையும் உருவாக்குகிறது.
பரவலாக்கம்: இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது மிகவும் பரவலாக்கப்பட்டதாகும், அதாவது இது குறிப்பிட்டதொரு நிறுவனம் அல்லது நிறுவனத்தால் கட்டுப்படுத்தப் படவில்லை, இது பயனர்களுக்கு அவர்களின் மெய்நிகர் சொத்துக்களின்மீதும் அனுபவங்களின் மீது அதிக கட்டுப்பாட்டையும் உரிமையையும் வழங்குகிறது.
புத்தாக்க சுதந்திரம்: இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது படைப்பாற்றல், புதுமை , வெளிப்பாட்டிற்கான தளத்தை வழங்குகிறது, இது நடப்பு உலகில் சாத்தியமில்லாத தனித்துவமான மெய்நிகர் சூழல்களையும் அனுபவங்களையும் உருவாக்கிடவும் ஆய்வுசெய்திடவும் பயனர்களை அனுமதிக்கிறது.
சமூக இணைப்பு: இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது சமூக தொடர்பினையும் இணைப்புக்கான தளத்தையும் வழங்குகிறது, பயனர்கள் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களுடன் மெய்நிகர் சமூககுழுக்களையும் உறவுகளையும் உருவாக்க உதவுகிறது.
மீப்பெரும் செயலாக்கத்தின் (Metaverse) சூழலுக்கான திறமூல கருவிகள்
இந்த மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) ஆனது , ஒரு பரவலாக்கப்பட்ட மெய்நிகர் உலகமாக இருப்பதால், இது நன்கு செயல்படவும் பாதுகாப்பாக இருக்கவும் பல்வேறு கருவிகளும் தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன. அதற்காக பயன்படுத்தக்கூடிய சில திறமூலக்கருவிகள் பின்வருமாறு
Ethereum
திறமூல சங்கிலிதொகுப்பு (blockchain)தளமானது மெய்நிகர் உலகங்கள் உட்பட பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்கும் பயன் படுத்துவதற்கும் ஒரு பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பை வழங்குகிறது. அதில்Ethereum ஆனது பரவலாக்கப்பட்ட சங்கிலிதொகுப்பின் ஒருதளமாகும், இது மீப்பெரும் செயலாக்கத்தில்(Metaverse)உள்ள பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. NFTகளை (செயல்படாத அடையாளவில்லைகள்) உருவாக்கும் அதன் திறன் , திறன்மிகு ஒப்பந்தங்கள் ஆகியவை மீப்பெரும் செயலாக்கத்தின்(Metaverse)உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரபலமான தளமாக ஆக்குகின்றன.
IPFS
இது மீப்பெரும் செயலாக்கத்தின்(Metaverse) உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான கருவியாகும், ஏனெனில் இது தரவு ,எண்ணிம சொத்துக்களை சேமித்தல், பகிர்ந்துகொள்ளுதல் வழங்குதல் ஆகியவற்றிற்கான பரவலாக்கப்பட்டதும் அளவிடக்கூடியதுமான தீர்வை வழங்குகிறது. மீப்பெரும் செயலாக்கத்தில்(Metaverse), மெய்நிகர் உலக வரைபடங்கள், பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் பிற எண்ணிம சொத்துக்கள் போன்ற பல்வேறு வகையான தரவுகளைச் சேமிக்க இந்த IPFSஆனது பயன்படுத்தப்படுகிறது. IPFS ஐப் பயன்படுத்துவதன் மூலம், தரவானது பரவலாக்கப்பட்டதும் விநியோகிக்கப்பட்டதுமான முறையில் சேமிக்கப் படுகின்றது, இது மிகவும் பாதுகாப்பானதாகவும் எளிதாக கிடைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வாறானIPFS முனைமத்தை அமைப்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு
1.முதலில் இந்த IPFSஐ பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்துகொள்க: இது விண்டோ,, மேக், லினக்ஸ் போன்ற பிற இயக்க முறைமைகளிலும் செயல்படுகின்ற திறனுடன் கிடைக்கிறது.
2. பின்னர் இந்தIPFS ஐ செயல்படுத்த துவக்கிடுக: IPFS ஐ நிறுவுகைசெய்ததும், நம்முடைய கணினியில் ஒரு புதிய IPFS களஞ்சியத்தை உருவாக்கிடுவதற்காக பின்வருமாறான கட்டளை வரியை செயல்படுத்திடுக:
$ “ipfs init”
3. மூன்றாவதாக இதனை மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) வலை பின்னலுடன் இணைத்திடுக: இப்போது IPFS கட்டமைப்பில் மீப்பெரும் செயலாக்கத்தின்(Metaverse) IPFS இற்கான முன்னோடி முனைமங்களைச் சேர்த்திடுக.
4. நான்கவாதாக கணினியின் இணைப்பைச் சரிபார்த்திடுக: முந்தைய படிமுறையைச் செய்த பிறகு, பின்வரும் கட்டளைவரியை உள்ளிடுவதன் மூலம் நம்முடைய கணினியானது பிணையத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாவெனச்சரிபார்த்திடுலாம்:
$ “ipfs swarm peers”
இது மீப்பெரும் செயலாக்கத்தி்ன் (Metaverse) வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சகIPFSகளின் பட்டியலைத் திரும்பப் பெற வேண்டும்.
5. ஐந்தாவதாகIPFS ஐப் பயன்படுத்தத் துவங்கிடுக: நம்முடைய கணினியில் IPFS ஆனது நிறுவுகைசெய்யப்பட்டு, மீப்பெரும் செயலாக்கத்தின் (Metaverse) வலைபின்னலுடன் இணைக்கப் பட்டிருந்தால், அதில் கோப்புகளைச் சேமித்தல் பகிர்ந்துகொள்ளுதல், பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்திடுக. பிணையத்தில் கோப்புகளைச் சேர்க்க, பிற நண்பர்களிடமிருந்து கோப்புகளை மீட்டெடுக்க ,நம்முடைய IPFS களஞ்சியத்தை நிர்வகிக்க IPFS கட்டளைகளைப் பயன்படுத்திடலாம்.
Three.js
இணைய உலாவியில் முப்பரிமான(3D) வரைகலையை உருவாக்கவும் வழங்குவதற்குமான இந்த திறமூல ஜாவாஸ்கிரிப்ட் நூலகமானது ஊடாடும் மெய்நிகர் உலக சூழல்களை உருவாக்கிடுவதற்காக பயன்படுகிறது. இந்த Three.js இன் ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், மேம்படுத்துநர்கள் கவர்ச்சிகரமான மெய்நிகர் உலகங்கள், அவதாரங்கள் , போன்ற புதிய , அற்புதமான வழிகளில் பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவுகின்ற பொருட்களை உருவாக்க முடியும். மீப்பெரும் செயலாக்கத்தின்(Metaverse) மேம்பாட்டிற்காக Three.js ஐ நிறுவுகைசெய்வதற்கான பொதுவான படிமுறைகள் பின்வருமாறு.
மீப்பெரும் செயலாக்கம் (Metaverse) மேம்பாட்டிற்கு Three.js கட்டமைப்பதற்கான படிமுறைகள்
1. முதலில்நம்முடைய கணினியில் Node.js ஐப் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க: இந்த Three.js என்பது Node.js உடன் சேர்த்து பயன்படுத்தக்கூடிய ஜாவாஸ்கிரிப்ட் நூலகமாகும்.
2. பின்னர் ஒரு புதிய Node.js செயல்திட்டத்தை பின்வரும் கட்டளைவரியை முனையத்தில் இயக்குவதன் மூலம் மீப்பெரும் செயலாக்க(Metaverse) மேம்பாட்டிற்காக உருவாக்கிடுக..
$ “npm init”
3. அதன்பின்னர் பின்வருமாறான கட்டளைவரியை உள்ளிடுவதன் மூலம் Three.js ஐ நிறுவுகைசெய்திடுக:
$ “npm install Three.js ”
இது நம்முடைய செயல்திட்டத்தில் Three.js இன் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்துவிடுகின்றது.
4. பிறகு Three.js நிறுவுகைசெய்யப்பட்டதும், நூலகத்தைப் பயன்படுத்த நம்முடையசெயல்திட்ட அமைக்கலாம். ஊடாடுதலைச் சேர்க்க அல்லது மீப்பெரும் செயலாக்க (Metaverse) வலைபின்னலுடன் இணைக்க கூடுதல் ஜாவாஸ்கிரிப்ட் கோப்புகளையும் சேர்க்கலாம்.
5. பின்னர் Three.js நிறுவுகைசெய்யப்பட்டு, நம்முடைய செயல்திட்டம் அமைக்கப்பட்டால், நம்முடைய மீப்பெரும் செயலாக்க(Metaverse) பயன்பாட்டை உருவாக்கத் துவங்கிடலாம்.
A-Frame
இது மெய்நிகர் உலகில் யதார்த்த அனுபவங்களை உருவாக்குவதற்கான திறமூல வலை கட்டமைப்பாகும், இது ஒரு அதிவேக மெய்நிகர் உலகத்தை உருவாக்க பயன்படுகிறது. மீப்பெரும் செயலாக்கத்தில்(Metaverse) A-Frame ஐப் பயன்படுத்த, மேம்படுத்துநர்கள் முப்பரிமான(3D) காட்சிகளை உருவாக்கலாம், அவை மெய்நிகர் இடைவெளிகள் அல்லது பல்வேறுபயனர்களால் தொடர்பு கொள்ளக்கூடிய குறிக்கோள்களைக் குறிக்கின்றது. A-Frame ஆனது WebRTC அல்லது WebSockets போன்ற பல்வேறு நெறிமுறைகள் மூலம் பல்லூடக செயலியின் தொடர்புகளை ஆதரிக்கிறது, பல்வேறு பயனர்கள் ஒரே மெய்நிகர் சூழலுடன் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
Blender
இந்த திறமூல முப்பரிமானத்தை(3D) உருவாக்குகின்ற மென்பொருளை மெய்நிகர் உலகங்களுக்கான முப்பரிமான(3D) சொத்துக்களை உருவாக்க ,பதிவேற்றம் செய்திட பயன்படுத்தி கொள்ளலாம். பரந்த அளவிலான முப்பரிமான(3D) மாதிரிகள், அசைவூட்டங்கள் . மீப்பெரும் செயலாக்கத்தில் (Metaverse) பயன்படுத்தக்கூடிய காட்சி விளைவுகள் ஆகியவற்றை உருவாக்க இதனை பயன்படுத்திகொள்ளலாம். இந்த சொத்துக்கள் glTF, FBX அல்லது OBJ போன்ற பல்வேறு கோப்பு வடிவங்களில் பதிவேற்றம் செய்திடலாம், அவை மீப்பெரும் செயலாக்கத்தில்(Metaverse) பயன்படுத்தப்படுகின்ற பெரும்பாலான மெய்நிகர் உலகின் உண்மையான இயங்குதளங்கள் ,விளையாட்டு இயந்திரங்களுடன் இணக்கமாக செயல்படுமாறு இருக்கின்றன.
Unity
இந்த திறமூலவிளையாட்டு இயந்திரத்தினை மெய்நிகர் உலகங்களையும் , விளையாட்டுகளையும் உருவாக்கிடவும் வரிசைப்படுத்திடவும் பயன்படுத்தி கொள்ளலாம். இது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இது மேம்படுத்துநர்களை முப்பரிமான(3D) சூழல்கள், சொத்துக்கள் , மீப்பெரும் செயலாக்கத்தில்(Metaverse) பயன்படுத்தக்கூடிய ஊடாடும் அனுபவங்களை உருவாக்க அனுமதிக்கிறது.
OpenSim
இது ஒரு சக்திவாய்ந்த தளமாகும், இது பயனர்கள் தங்களுடைய சொந்த மெய்நிகர் உலகங்களை உருவாக்க பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது, இதனை மீப்பெரும் செயலாக்கத்தின்(Metaverse) ஒரு பகுதியாக பயன்படுத்திகொள்ளலாம். அதன் நெகிழ்வுத்தன்மை, திறமூல இயல்பு , மிகைத்தொகுப்பு (hypergrid) தொழில்நுட்பத்திற்கான ஆதரவு ஆகியவை தங்களின் சொந்த மெய்நிகர் சூழல்களை உருவாக்கிடவும் மீப்பெரும் செயலாக்கத்தில்(Metaverse) மற்றவர்களுடன் இணைக்க விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது.
பயனர் தரவு, மெய்நிகர் சொத்துக்கள் மெய்நிகர் உலகின் நிரந்தரத்தன்மை ஒருமைப்பாட்டின் பாதுகாப்பிற்கு மீப்பெரும் செயலாக்கத்தின்(Metaverse) பாதுகாப்பு அவசியமாகும். வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் , சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் பயனர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க உதவுவதோடு, மீப்பெரும் செயலாக்கத்தில்(Metaverse) நம்பிக்கையையும் நம்பிக்கையையும் மேம்படுத்தலாம்.