முனைமம்(Terminal) , கட்டளைவரி(Command Line) , உறைபொதி(Shell) , பணியகம்(Console) ஆகியவை உண்மையில் வேறுபட்டவைகளா?

By | October 26, 2025

கணினியில் எப்போதாவது “முனைமம்(Terminal)” , “உறைபொதி(Shell)” அல்லது “கட்டளைவரி(Command Line)” என்றவாறு விவாதித்திருக்கின்றோமா? அவ்வாறு செய்தது தவறாக இல்லை என்றாலும், இந்த சொற்களுக்கு இடையே தனித்துவமான வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள்யாவை , இந்தசொற்கள் எங்கிருந்து தோன்றின என்பதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்;
முனைமம்(Terminal) என்றால் என்ன?
“முனைமம்(Terminal)” என்ற சொல் “முனைமம் போலச்செய்தல்( terminal emulator )” என்ற இருசொற்களின் சுருக்கமான பெயராகும், இது பழைய பாணியிலான பருப்பொருளான கணினியில் முனைமங்களின் நடத்தையைப் பிரதிபலிக்கின்ற ஒரு நிரலாகும். கணினிமயமாக்கலின் துவக்க நாட்களில், பயனர்கள் தொலைதூர கணினிகளுடன் ஒருதொடர்பு இணைப்பின் மூலம் தனிப்பட்ட வன்பொருள் முனைமங்களின் மூலம் தொடர்பு கொண்டனர். அத்தகைய முனைமங்களில் ஒரு விசைப்பலகை , ஒரு திரை அல்லது சில சந்தர்ப்பங்களில், அதற்கு பதிலாக ஒரு அச்சுப்பொறிகூட இருந்தன. கட்டளைகளை அனுப்பவும் உரையின் வெளியீட்டை திரையில்காணவும் பயனர்கள் இந்த முனைமங்களைப் பயன்படுத்திகொள்வார்கள்.
PC என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற தனிநபர் பயன்படுத்தி கொள்கின்ற கணினிகள் மிகவும் பரவலாகிவிட்டபோது, ​​இயக்க முறைமைகளின் மென்பொருளில் வன்பொருள் முனைமங்களைப் பின்பற்றத் தொடங்கின. இது பயனர்கள் பருப்பொருளான முனைய வன்பொருள் எதுவும் தேவையில்லாமல் தொலைநிலை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள அனுமதித்தது. இன்று, பருப்பொருளான முனைமங்களின் மரபு முனைம முன்மாதிரிகள் மூலம் தொடர்கிறது, இதை நாம் மிகவும் ஒத்த முறையில் பயன்படுத்துகிறோம்.
ஒரு முனைம முன்மாதிரி, கட்டளைகளை அனுப்பவும், கணினியிலிருந்து உரை வெளியீட்டைப் பெறவும் நம்மை அனுமதிக்கிறது; முனைம சாளரம்( terminal window) என்பது அதைச் சுற்றியுள்ள வரைகலை கொள்கலன் ஆகும். எனவே, தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், லினக்ஸில் “முனைமம்(Terminal)” என்ற சொல்லின் பொதுவான , நவீன வரையறை ஆனவை சாளரத்தைக்(window) குறிக்கவில்லை, மாறாக கட்டளைகளை அனுப்புவதற்கும் உரையைப் பெறுவதற்கும் ஒரு உருவகப்படுத்தப்பட்ட சாதனத்தைக் குறிக்கிறது.
உறைபொதி(Shell)என்றால் என்ன?
உறைபொதி(Shell) என்பது பயனர் தொடர்புகளை எளிதாக்கும் ஒரு அமைவின் வெளிப்புற அடுக்கு ஆகும். ஒரு இயக்க முறைமையில்,உறைபொதி(Shell) ஆனது ஒரு கட்டளை வரி இடைமுகத்தின் அல்லது வரைகலை பயனர் இடைமுகத்தின் (GUI) வடிவத்தை வழங்கலாம். இது பொதுவாக உருவாக்கமையத்துடன்(kernel) நேரடியாக தொடர்புகொள்வதற்குப் பதிலாக, நிலையான பயனரின் காலிஇடை வெளியை அலைவரிசைகள் மூலம் கணினியுடன் தொடர்பு கொள்கின்றதொரு பயனரின் காலிஇடைவெளி நிரலாக செயல்படுகிறது.
பயனாளரின காலிஇடம்(User space) என்பது சலுகையற்ற செயல்முறைகளுக்கான இயக்க நேர சூழலாகும். வழக்கமான பயன்பாடுகள் அனைத்தும் (மூலப் பயன்பாடுகள் கூட) பயனரின் காலிஇடத்தில் இயங்குகின்றன. உருவாக்கமைய காலிஇடம் சலுகை பெற்ற குறிமுறைவரிகளுக்கானது, மேலும் இது மீதமுள்ள அமைவின் மீது முழுமையான சக்தியையும் வன்பொருளுக்கான நேரடி அணுகலையும் கொண்டுள்ளது – எடுத்துக்காட்டாக, இயக்கிகள்(drivers) அல்லது உருவாக்கமைய கூறுகள்.
அன்றாடபயன்பாடான லினக்ஸ் மொழியில், உறைபொதி என்பது பொதுவாக இயக்க முறைமையில் பணிகளைச் செய்ய கட்டளைகளை, உரைநிரல்களை ஏற்றுக்கொள்ளும் கட்டளை-வரி மொழிபெயர்ப்பாளரைக் குறிக்கிறது. இது கட்டளைகளைப் படித்து புரிந்துகொண்டு அவற்றை செயல்படுத்துகின்ற ஒரு நிரலாகும். லினக்ஸில் உள்ள வழக்கமான உறைபொதிகளின் எடுத்துக்காட்டுகள் Bash, Zsh , fish ஆகியவைகளாகும். இந்த உறைபொதிகளில் ஒவ்வொன்றும் கட்டளைகளை செயலாக்குவதற்கும் உரைநிரல்களை செயல்படுத்துவதற்கும் அதன் சொந்த வழிமுறைகளைக் கொண்டுள்ளன.


நாம் Gnomeஇன் உறைபொதியைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்; இது ஒரு வரைகலை உரைபொதியின் ஒரு எடுத்துக்காட்டாகும், மேலும் பயனர்கள் கணினியைக் கட்டுப்படுத்த அதனுடன் இடைமுகப்படுத்துகிறார்கள் – எடுத்துக்காட்டாக, கோப்புகளை உருவாக்குதல் , நீக்குதல், முதலியசெயல்களை செயல்படுத்துவதற்கானவை. லினக்ஸில் உள்ள ஒரு வரைகலை உறைபொதி விண்டோவின் அமைவுடன் இடைமுகப்படுத்தப்பட்டு பட்டியல்கள்,சாளரம், பிற மேசைக்கணினி செயல்பாடுகளின் வடிவம் ஆகியவற்றினை கொண்டுவருகின்றன.
கட்டளைவரி(Command Line)என்றால் என்ன?
ஒரு கட்டளை வரி (CLI என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற கட்டளை வரி இடைமுகம்) என்பது ஒரு கணினியில் கட்டளைகளை உள்ளிடுவதற்கான இடமாகும், பொதுவாக ஒரு கட்டளையானது உறைபொதி வழியாக. இது ஒரு உலகளாவிய சொல்லாகும், மேலும் ஒரு கட்டளை வரியானது ஒரு இயக்க முறைமையின் ஒரு பகுதியாகவோ அல்லது ஒரு நிரலின் ஒரு நிரலாகவோ இருக்கலாம். பொதுமக்கள் பெரும்பாலும் இந்த சொல்லை முனைமத்தின் அல்லது உறைபொதி போன்ற பிற, அதனோடுநெருங்கிய தொடர்புடைய சொற்களுடன் குழப்பிகொள்கிறார்கள், ஆனால் அதற்கு ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளது. அந்த வேறுபாடு இரவுமுழுவதும் கவலையுடன் நம்மை விழித்திருக்க வைக்காது, ஆனால் அது செயலில்உள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.
கட்டளை வரியின் இரண்டு பொதுவான எடுத்துக்காட்டுகள் Bash அல்லது Zsh இல் உள்ளீடு செய்திடுகின்ற உரையின் வரிகளாகும்.


கட்டளை வரியின் மற்றொரு எடுத்துக்காட்டு Emacs இல் காணப்படுகிறது, இது Elisp ஐப் பயன்படுத்தி கட்டளைகளை உள்ளிட நம்மை அனுமதிக்கிறது.


பணியகம்(Console) என்றால் என்ன?
லினக்ஸில் பணியகம்(Console) என்பது லினக்ஸானது உருவாக்கமையத்துடன் தொடர்புகொள்வதற்காகஅனுப்பப்படும் உள்ளீட்டு/வெளியீட்டு துணை அமைவாகும். இது செய்திகளைப் பெற்று உருவாக்கமையத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.
லினக்ஸின் உருவாக்கமையத்திற்கும் முனையம்போலச்செய்தலுக்கும்( terminal emulator )உள்ள வேறுபாடு என்னவென்றால், லினக்ஸின் பணியக இயக்கியானது உருவாக்கமைய காலிடத்தில் இயங்குகிறது, கணினியின்திரையில் செய்திகளைக் காண்பிக்கிறது ,லினக்ஸ்அமைவுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது. மறுபுறம், முனைமம்போலச்செய்தல்கள்ஆனவை கட்டளைகளை அனுப்புவதற்கும் பதில்களைப் பெறுவதற்கும் நிரல்களிலும், பயனர் காலிஇடத்திலும் இயங்குகின்றன. லினக்ஸ் பணியகம் முனைமம்போலச்செய்தல்களை விட குறைவான பல்வேறு நவீன இயல்புகளையும் கொண்டுள்ளது.
லினக்ஸின் பணியகமானது இதனைTTYகள் (மெய்நிகர் பணியகங்கள்) எனப்படும் மெய்நிகர்முனைமங்களை நிருவகிக்கின்றது . /dev/tty* இல் காணப்படும் இந்த TTYகள் வழியாக நாம் லினக்ஸின் பணியகத்துடன் தொடர்பு கொள்ளலாம், அங்கு “” என்பது ஒரு எண் ஆகும். இதேபோன்று, முனைமபோலச்செய்தல்கள் /dev/pts/ எனும் கோப்பகத்தில் அமைந்துள்ள போலி முனமங்களுடன் இடைமுகப் படுத்துகின்றன (எ.கா., /dev/pts/0, /dev/pts/1, முதலியன).
TTY என்பது தொலைநிலைதட்டச்சினைக் குறிக்கிறது. வரலாற்று ரீதியாக, இவை தட்டச்சுப்பொறிகளைப் போன்றே மின் இயந்திர சாதனங்களாக இருந்தன, அவை ஒரு தகவல் தொடர்பு வரியின் (தொலைபேசி, தந்தி அல்லது தொடர் வரி போன்றவை) வாயிலாக மின்னணு செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும். இந்த சாதனங்கள் தந்தி சகாப்தத்திற்கு (மோர்ஸ் குறியீட்டில் மேம்படுத்தப் பட்டவை) முந்தையவைகளாகும். நவீன லினக்ஸ் அமைவுகள் இவற்றைப் பின்பற்றுகின்றன.
ஏதேனும் ஒரு பொறிமுறையின் மூலம், மெய்நிகர் பணியகங்கள், முனைம முன்மாதிரிகள் ஆகிய இரண்டும் ஒரு உறைபொதியை இயக்குகின்றன, இது பொதுவாக Bash ஆகும். உறைபொதிகள் அவற்றை ஒன்றுக்கொன்று ஒத்ததாக உணர வைக்கலாம், ஆனால் அவற்றின் இயக்க சூழல்கள் மிகவும் வேறுபட்டவை.
Ctrl+Alt+F
என்பதன்வழியாக TTY ஐ அணுகலாம், அங்கு “*” என்பது ஒரு எண் (1-7). லினக்ஸ் விநியோகங்கள் பொதுவாக காட்சி மேலாளரை (உள்நுழைவுத் திரை) தொடங்க TTY1 ஐ உள்ளமைக்கின்றன, இது வரைகலையில் உறைபொதியை (அதாவது, ஒரு மேசைக்கணினி சூழல்) தொடங்கும். 2–7 எண்கள் பொதுவாக பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன, ஆனால் TTY1 க்கு மீண்டும் மாறுவது நம்மை நம்முடைய மேசைக்கணினிக்குத் திரும்பவும் கொண்டுவரும்.
உள்நுழைவு அமர்வு எந்த மெய்நிகர் பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைகாண பின்வரும் கட்டளையைப் பயன்படுத்திகொள்க.
loginctl session-status


சுருக்கமாககூறுவதெனில், லினக்ஸின் பணியகம் என்பது ஒரு மெய்நிகர் பணியகத்தின் வழியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒரு உருவாக்கமையத்தின்-நிலை உள்ளீட்டு/வெளியீட்டு துணை அமைவாகும். இந்த TTY சாதனங்கள் வரலாற்று மூலங்களைக் கொண்டுள்ளன ,தொலைநிலைதட்டச்சு சாதனங்களைப் பின்பற்றுகின்றன. தொலைநிலைதட்டச்சு சாதனங்கள் வழியாக லினக்ஸின் உருவாக்கமையத்திற்கு கட்டளைகளை அனுப்பவும் பெறவும் முடியும்.
பொதுமக்கள் பெரும்பாலும் இந்த சொற்களை ஒன்றிணைக்கிறார்கள், ஆனால் அவற்றுக்கு தெளிவான தொழில்நுட்ப வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, CLI என்பது முனைமம் அல்லது பணியகத்தினை சரியாகக் குறிக்கலாம். உறைபொதிஎன்பது இந்த சொற்களில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கலாம். பெரும்பாலும், பொதுமக்கள் “open a shell” என்று கூறுவார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் ஒரு முனைமத்தைத் திற என்று அர்த்தம்கொள்கின்றனர். இருப்பினும், ஒரு மெய்நிகர் பணியகத்தின் வழியாகவும் நியமிக்கப்பட்ட பணியை செய்யமுடியும்.
பெரும்பாலான பயனர்களுக்குப் பயன்படுத்த சரியான சொற்றொடர் “terminal window” என்பதாகும். ஒரு வரைகலை சாளரத்தைத் திறந்து கட்டளைகளை இயக்கு கின்றோம். “CLI” என்ற சொற்றொடர் எந்த கட்டளைவரி இடைமுகத்தையும் (Emacs minibuffer உட்பட) குறிக்கக்கூடும் என்பதால் செல்லுபடியாகும். இருப்பினும், யாராவது நம்மிடம் ஒரு பணியகத்தினைத் திறக்கச் சொன்னால், அது மிகவும் குறிப்பிட்ட கோரிக்கையாகும், எனவே அந்த காரணத்திற்கு அதிககவனம் செலுத்த வேண்டும்.
இப்போது முனைமம்(Terminal) , கட்டளைவரி(Command Line) , உறைபொதி(Shell) , பணியகம்(Console) ஆகிறு சொற்களுக்கு இடையிலான வேறுபாட்டினை நாம்அறிந்து கொண்டோம்,

Leave a Reply