மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான A-Frame எனும் திறமூல இணைய கட்டமைப்பு

A-Frame என்பது WebVR என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மெய்நிகர் உண்மை அனுபவங்களை உருவாக்குவதற்கான திறமூல இணைய கட்டமைப்பாகும். இந்த A-Frameஇன் மூலம் HTML உடன் WebVR ஐ உருவாக்கலாம் Vive, Rift, Daydream ,போன்ற பலவற்றில் உறுப்பு-கூறின்( entity-component )பணிகளை உருவாக்கலாம். கைபேசி, மேசைக்கணினி, Vive, Rift, போன்ற தளங்களில் நம்மை இயக்குவதற்கு தேவையான 3D , WebVR ஆகியவற்றினைக் கையாள்வதன் மூலம் A-Frame மெய்நிகர் உண்மைநிலையை எளிதாக்குகிறது. இதனை HTML இலிருந்தே பயன்படுத்தலாம் என்பதால், விரும்பும் எவரும் இதைஎளிதாகப் பயன்படுத்தலாம்.
A-Frameஆனது HTML இன் மேற்பகுதியை அடிப்படையாகக் கொண்டது, இது தொடங்குவதை எளிதாக்குகிறது. ஆனால் A-Frame என்பது 3D காட்சி வரைபடம் அல்லது markup மொழி மட்டுமல்ல; இது ஒரு சக்திவாய்ந்த உட்பொருள்-கூறின் கட்டமைப்பாகும், இது three.js க்கு அறிவிக்கக்கூடிய, விரிவாக்கம்செய்யக்கூடிய தொகுக்கக்கூடிய கட்டமைப்பை வழங்குகிறது.
முதலில் Mozilla வில் உருவாக்கப்பட்டு, இப்போது Supermedium இல் இதனை A-Frame இன் இணையாக-உருவாக்கியவர்களால் பராமரிக்கப்படுகிறது, A-Frame ஆனது VR உள்ளடக்கத்தை உருவாக்க எளிதான சக்திவாய்ந்த வழியாக உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு சுதந்திரமான திறமூல செயல்திட்டமாக, A-Frame மிகப்பெரிய VR சமூககுழுக்களில் ஒன்றாக வளர்ந்துவருகின்றது.
A-Frame ஆனது Vive, Rift, Windows Mixed Reality, Cardboard, Oculus Go போன்ற பெரும்பாலான VR தலையணிகளை ஆதரிக்கிறது, மேலும்பெரியதாகஆக்குகின்ற( augmented) உண்மை நிலைக்கும் கூட பயன்படுத்தலாம். A-Frame முழு நிறமாலையையும் ஆதரித்தாலும், A-Frame ஆனது அடிப்படையில் 360° உள்ளடக்கத்திற்கு அப்பால் சென்று, நிலையின் கண்காணிப்பு ,கட்டுப்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்தி, முழுமையாக அதில் மூழ்கி ஊடாடும் VR அனுபவங்களை வரையறுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
A-Frame என்பது three.jsக்கு மேல் ஒரு மெல்லிய ஆனால் சக்திவாய்ந்த கட்டமைப்பாகும். A-Frameஆனது HTML இலிருந்து முழுமையாக அணுகக்கூடியதாக இருந்தாலும், மேம்படுத்துநர்கள் JavaScript, DOM APIகள், three.js, WebVR , WebGL ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்திகொள்ள முடியும்.
முக்கியவசதிவாய்ப்புகள்
👓 மெய்நிகர்உண்மைநிலை எளிமையானது: கைபேசி, மேசைக்கணினி, அனைத்து தலையணிகள் (WebXR திறன் கொண்ட உலாவியுடன் இணக்கமானது) உள்ளிட்ட தளங்களில் இயங்குவதற்கு தேவையான 3D , WebXRஐ கையாளுகிறது.
❤️ அறிவிப்பு: HTMLஇல் படிப்பது, நகலெடுத்து ஒட்டுவது எளிது. HTML இலிருந்து A-Frame ஐப் பயன்படுத்த முடியும் என்பதால், A-Frameஇன் இணையதள உருவாக்குநர்கள், VR , AR ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், குழந்தைகள். ஆகிய அனைவராலும் அணுகக்கூடியது
🔌 உட்பொருள்-கூறின் கட்டமைப்பு: A-Frame என்பது three.js க்கு மேல் உள்ள ஒரு சக்திவாய்ந்த கட்டமைப்பாகும், இது three.jsக்கான அறிவிப்பு, தொகுக்கக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய உட்பொருள்-கூறு கட்டமைப்பை வழங்குகிறது. A-Frame ஐ HTML இலிருந்து பயன்படுத்த முடியும் என்றாலும், மேம்படுத்துநர்கள் JavaScript, DOM APIகள், three.js, WebXR, WebGL ஆகியவற்றுக்கான வரம்பற்ற அணுகலைப் பெற்றுள்ளனர்.
⚡ செயல்திறன்: A-Frame என்பது three.jsக்கு மேல் உள்ள மெல்லிய கட்டமைப்பாகும். A-Frame DOM ஐப் பயன்படுத்தினாலும், A-Frame உலாவி தளவமைப்பு இயந்திரத்தைத் தொடாது. செயல்திறன் முதன்மையானது, மிகவும் ஊடாடும் WebXR அனுபவங்களில் -சோதனை செய்யப்படுகிறது.
🌐 குறுக்கு-தளம்: WebXR திறன் கொண்ட உலாவியுடன் இணக்கமான எந்த தலையணிக்கும் VR , AR பயன்பாடுகளை உருவாக்கவும். தலையணி அல்லது கட்டுப்பாட்டாளர்கள் இல்லையா? எனும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை! A-Frame இன்னும் நிலையான மேசைக்கணினி ,திறன்பேசிகளில் நன்கு செயல்படுகிறது.
🔍 காட்சி ஆய்வாளர்: A-Frame ஆனது ஒரு உள்ளமைக்கப்பட்ட 3D ஆய்வாளரை உலாவியின் மேம்படுத்துநர் கருவிகள் , ஒருங்கிணைந்தவை போன்ற இடைமுகம் ஆகிய பணிப்பாய்வுகளுடன்உள்ளது. எந்த A-Frame காட்சியையும் திறந்து <ctrl> + <alt> + i ஐ அழுத்துக.
🏃 வசதிவாய்ப்புகள்: வடிவவியல், பொருட்கள், விளக்குகள், அசைவூட்டங்கள், மாதிரிகள், raycasters, நிழல்கள், நிலையின்ஒலி, பின்தொடருதல் செய்யப்பட்ட கட்டுப்பாட்டாளர்கள் போன்ற A-Frame இன் உள்ளமைக்கப்பட்ட கூறுகளுடன் தரையைத் தாக்கவும். துகள் அமைப்புகள், இயற்பியல், பல்பயனாளர், பெருங்கடல்கள், மலைகள், பேச்சு அங்கீகாரம் அல்லது தொலைநிலை பிரித்தல் போன்ற சமூகக் கூறுகளுடன் மேலும் முன்னேறிடுக!
ஓடிடும் கூறுகள்: A-Frame இன் முக்கிய கூறுகளான வடிவவியல், பொருட்கள், விளக்குகள், அசைவூட்டங்கள், மாதிரிகள், raycasters, நிழல்கள், நிலையின் ஒலி, உரை , பெரும்பாலான பெரிய தலையணிகளுக்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றைக் கொண்டு தரையைத் தாக்கவும். சுற்றுச்சூழல், நிலை, துகள் அமைப்புகள், இயற்பியல், பல்பயனர், பெருங்கடல்கள், teleportation, , பெரியதாக ஆக்குகின்ற உண்மைநிலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சமூககுழுக் கூறுகளிலிருந்து இன்னும் அதிகமாகப் பெற்றிடுக.
Earth_americas Proven and Scalable: இந்த A-Frame ஆனது Google, Disney, Samsung, Toyota, Ford, Chevrolet, Amnesty International, CERN, NPR, Al Jazeera, The Washington Post, NASA போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டது. கூகுள், மைக்ரோசாப்ட், சாம்சங் போன்ற நிறுவனங்கள் A-Frame இல் பங்களிப்பு செய்துள்ளன.
இந்த பயன்பாடானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு MIT எனும் உரிமத்தின்கீழ் வெளியிடப்பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் aframe.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

 

%d bloggers like this: