லினக்ஸ் எனும் இயக்கமுறைமையின் எதிர்காலம் ஆனது இந்த கட்டுரையில் கூறப்படுகின்ற நான்கு இயக்கமுறைமைகளையைச் சார்ந்தே உள்ளது. முன்பெல்லாம் ஏதேனுமொரு லினக்ஸ் இயக்கமுறைமையைத் (distro) தேர்ந்தெடுப்பது என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தையும் தோற்ற அமைப்பையும் மட்டுமே சார்ந்த செய்தியாக இருந்தது. ஆனால் இன்று, நவீன லினக்ஸ் இயக்கமுறைமைகள் குறிப்பிட்ட நடைமுறைப் பணிகளுக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன—எடுத்துக்காட்டாக, ஆயிரக்கணக்கான ஒரே மாதிரியான அலுவலகக் கணினிகளை நிர்வகித்தல், தோல்வியடைந்த மென்பொருள் நிகழ்நிலைபடுத்துதல்களைச் (updates) சமாளித்தல் அல்லது ஒரு தொலைக்காட்சியை விளையாட்டுபணஇயகமாக மாற்றுதல் போன்றவை. குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவே கட்டமைக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலின் கணினித் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கின்ற நான்கு முக்கிய லினக்ஸின் இயக்கமுறைமைகள் பின்வருமாறு:
1. NixOS: இது ஒரு நகலி(Blueprint) இயக்கமுறைமையாகும்
• இது எவ்வாறு செயல்படுகிறது: அமைப்புகள் (settings) முதல் மென்பொருள் நிரலாக்கங்கள் வரை கணினியின் முழு அமைவும் ஒரேயொரு உரைக்கோப்பில் (text file) விவரிக்கப்பட்டிருக்கும்.
• இது ஏன் முக்கியம்: அந்த ஒரேயொரு கோப்பை மட்டுமே பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான ஒரே மாதிரியான கணினிகளைச் சில நொடிகளில் அமைக்கலாம்; எனவே இது பள்ளிகள், வணிக நிறுவனங்கள் , அரசுகளுக்கு (எ.கா., நெதர்லாந்து , பிரான்ஸ்) மிகவும் ஏற்றது. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், உடனடியாகச் சரியாக இயங்கிக்கொண்டிருந்த முந்தைய நிலைக்குத் திரும்பலாம்.
2.Fedora Atomic (Universal Blue):இது ஒருசிதையாத அல்லதுபழுதாகாத அமைவுஆகும்
• இது எவ்வாறு செயல்படுகிறது: இதன் முக்கிய அமைவுகளின் கோப்பு ஆனது ‘படிக்ககூடியவை மட்டுமே(read-only)‘ ஆகும்; அதாவது சாதாரண பயனர்களோ அல்லது தவறான மென்பொருள் நிகழ்நிலைபடுத்துதல்களோ (updates) அவற்றைச் சேதப்படுத்த முடியாது. இதன்செயலிகள் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கலன்களில் (containers – Flatpaks) இயங்குகின்றன.
• இது ஏன் முக்கியம்: நிகழ்நிலைபடுத்துதல்கள் முழுமையாக வெற்றியடையும் அல்லது தானாகவே இரத்து செய்யப்படும்; இதனால் அமைவு பாதியிலேயே பழுதாகும் நிலை தவிர்க்கப்படுகிறது. Universal Blue-விலிருந்து உருவான பிரபலமான பதிப்புகளில் Bazzite (விளையாட்டிற்காக உருவாக்கப்பட்டது) , Bluefin (இது மென்பொருள் உருவாக்குநர்களுக்காக உருவாக்கப்பட்டது) ஆகியவை இதிலடங்கும்.
3. SteamOS:கணினியின்(PC)விளையாட்டினை வரவேற்பறைக்குக் கொண்டு வருதல்
• இது எவ்வாறு செயல்படுகிறது: Valve எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டினை சார்ந்த அமைவு, Proton போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, செயல்திறன் இழப்பு ஏதுமின்றி லினக்ஸில் Windows இயக்கமுறைமையில் செயல்படுகின்ற விளையாட்டுகளை எளிதாக இயக்குகிறது.
• இது ஏன் முக்கியம்: SteamOS ஆனது கையடக்க சாதனங்கள் (Steam Deck , ROG Ally போன்றவை), வீட்டு உபயோக விளையாட்டு கணினிகளை இயக்குகிறது. இது லினக்ஸ் விளையாட்டினை ஒரு எளிய “சொடுக்குதல் செய்து விளையாடும் (click and play)” அனுபவமாக மாற்றுகிறது; இருப்பினும், ஏமாற்றுவதைத் தடுக்கும் மென்பொருள் (anti-cheat software) , Nvidia இன் வரைகலை ஆதரவு ஆகியவை இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
4. Debian: நம்பகமான அடித்தளத்தினை கொண்டது
• இது எவ்வாறு செயல்படுகிறது: Debian ஆனது மிக உறுதியான நிலைத்–தன்மைக்கு (stability) முன்னுரிமை அளிக்கிறது; நிகழ்நிலைபடுத்துதல்களை (updates) வெளியிடுவதற்கு முன் மென்பொருளை முழுமையாக பரிசோதித்து சரிபார்க்கிறது.
• இது ஏன் முக்கியம்: இது பல பிரபலமான அமைவுகளுக்கு (Ubuntu, Raspberry Pi OS , Pop!_OS உட்பட) ஒரு மறைமுகமான முதுகெலும்பாகத் திகழ்கிறது. வீட்டுச் சேவையகங்கள் (home servers), மேகக்கணிணி அமைவுகள் (cloud systems) , ஒருபோதும் செயலிழக்கக்கூடாத உள்கட்டமைப்புகளுக்கு இதுவே முதன்மையான தேர்வாகத் திகழ்கிறது.
முக்கியக் கருத்து லினக்ஸின் (Linux) எதிர்காலம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான தீர்வை வழங்கும் அமைவுகளைச் சார்ந்ததன்று. மாறாக, முழுமையான சீரான செயல்பாடு, அசைக்க முடியாத பாதுகாப்பு, எளிதான விளையாட்டு அல்லது மிக உறுதியான நம்பகத்தன்மை என எது தேவைப்பட்டாலும், நடப்பு உலகச் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய சிறப்பு வாய்ந்த லினக்ஸ் பதிப்புகளே (specialized distros) தற்போது முன்னிலை வகிக்கின்றன.