எளிமையான கட்டளைகளைக் (prompts) கொண்டு முழுமையாகச் செயல்படக்கூடிய செயலிகளை உருவாக்குவதில் செய்யறிவின்(AI) குறிமுறைவரிக் கருவிகள் தற்போது சிறந்து விளங்குகின்றன. ஆனால், ஆண்ட்ராய்டு செயலிகளின் உருவாக்கத்தில் இவை எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பது குறித்து நமக்கு எப்போதும் ஆர்வம் இருந்துகொண்டே இருப்பது வழக்கமானசெயல்தான. இவற்றின் திறனைபரிசோதிக்க, Claude Code, OpenAIஇன் Codex, Google இன்Antigravity ஆகிய மூன்றையும் கொண்டு, முற்றிலும் புதிதாக ஒரே மாதிரியான ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கிடுமாறு சவால் விடுத்திடலாம்.
Pixel 8 , Galaxy S25 Ultra ஆகிய சாதனங்களில், பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், நம்பகமான செயல்பாட்டைக் கொண்டதாகவும், அந்தச் சாதனங்களுக்கு இயல்பாகப் பொருந்தக்கூடிய வகையிலும் ஒரு முழுமையான ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்க விரும்புவதாக கொள்க. இந்தச் சோதனையின் முடிவுகள், பல்வேறு செய்யறிவின்(AI) குறிமுறைவரி முகவர்களுக்கு இடையே எவ்வளவு பெரிய வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்பதைத் தெளிவாகக் காட்டிடுகின்றன.
ஒரே ஆண்ட்ராய்டு செயலியின் கட்டளை, மூன்றுவகைகளிலான செய்யறிவின்(AI) குறிமுறைவரி முகவர்கள்
இந்தச் சோதனையை நேர்மையாக நடத்த, ஒவ்வொரு கருவியிலும் இயல்பாக (default) அமைக்கப்பட்டிருக்கின்ற செய்யறிவின்(AI) மாதிரிகளையே பயன்படுத்த முடிவு செய்திடுக. அதன்படி, Claude Code-இல் ‘Claude Opus 5.5’, Codex-இல் ‘GPT-6 Astra’ , Googleஇன் Antigravity-இல் ‘Gemini 3.8’ ஆகிய மாதிரிகளைப் பயன்படுத்திகொள்க. நாம் எந்த மாதிரைகளையும் மாற்றவோ, அதன் செயல்பாட்டு அமைப்புகளில் (reasoning settings) திருத்தங்கள் செய்யவோ அல்லது எந்தவொரு முகவருக்கும் கூடுதலாக சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவோ இல்லை என்ற செய்தியை மனதில் கொள்க..
‘GearVault’ எனும் செயலிக்கான நமது எதிர்பார்ப்புகளை விவரிக்கின்ற விரிவான கட்டளை ஒன்றை உருவாக்கிடுக. இதில் நேர்த்தியான ‘Material 3’எனும் இடைமுகம், சாதனங்களின் பட்டியல் (gadget inventory), உத்தரவாத மேலாண்மை (warranty management), உள்ளூர் சேமிப்பகம் (local storage), அறிவிப்புகள் (notifications) ,போன்ற பிற அத்தியாவசியமான வசதிகள் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டிடுக.
மேலும், செயலியின் அமைப்பு (layout), வண்ணங்கள், வழிசெலுத்தல் (navigation) , ஒட்டுமொத்த வடிவமைப்பு ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முழு சுதந்திரத்தையும் அந்தந்த முகவர்களிடமே விட்டிடுக. சுருக்கமாக கூறுவதெனில், இது ஒரு ‘ஒரே முயற்சியிலான‘ (one-shot) பரிசோதனையாகும். நமது தலையீடு ஏதுமின்றி, ஒவ்வொரு முகவராலும் சுயமாக என்ன உருவாக்க முடியும் என்பதை நாம் கண்டறிய விரும்புவதாக கொள்க.
OpenAIஇன் Codex
இது ஒரு நல்ல அனுபவத்தைத் தந்தாலும், பெரிய அளவில் நம்மை கவர்ந்து இழுக்கவில்லை
முதலில் OpenAIஇன் Codex-ஐப் பயன்படுத்திடுக; துவக்கத்தில் நல்ல அபிப்பிராயமே ஏற்படுகின்றது. இது வெளிர் பச்சை வண்ணத்திலான வடிவமைப்பைப் பயன்படுத்திடுகின்றது; இது பார்ப்பதற்குப் புத்துணர்ச்சியுடனும், தெளிவாகவும், கண்களுக்கு இதமாகவும் இருக்கின்றது. முகப்புத்திரையின் (dashboard) அமைப்பு நன்றாக இருக்கின்றது, குறிப்பாக அதன் கீழ்ப்பகுதியில் இருக்கின்ற ‘Add Gadget’ எனும் பொத்தான் நம்மனைவருக்கும் பிடித்திருக்கின்றது. பெரும்பாலான அத்தியாவசிய வசதிகள் நாம் எதிர்பார்த்த இடங்களிலேயே இருக்கின்றன, எனவே இடைமுகத்தைப் புரிந்துகொள்ள நாம் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்க–வில்லை. இருப்பினும், இதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன.
‘GearVault’-இன் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான ‘Vault’ எனும் பகுதி, இன்னும் கூடுதல் கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதன் வடிவமைப்பு மிகவும் எளிமையாக இருக்கின்றது, மேலும் இந்தCodexஆனது நமது சாதனங்களை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைத்து வழங்கும் என்று நாம் எதிர்பார்த்திடுவோம். மற்றொரு சிறிய எரிச்சலூட்டும் செயல் என்னவென்றால் செயலியின் உருவப்பொத்தான் ஆகும்.
Codex ஆனது சதுர வடிவ உருவபொத்தானை உருவாக்கிடுகின்றது, இது நமது Pixel முகப்புத் திரையில் உள்ள வட்டவடிவமான உருவப்பொத்தான்களுக்கு மத்தியில் பொருத்தமில்லாமல் தெரிகின்றது. இது ஒரு சிறிய குறைதான், ஆனால் ஒரு செயலி நமது கைப்பேசியில் இடம்பெறத் தகுதியானதா என்பதை நாம் தீர்மானிக்கும்போது, இதுபோன்ற இறுதிக்கட்ட வசதிகள் முக்கியமானவைகளாகும்.
நேர்மறையாகப் பார்த்தால்Codex ஆனது dark themeஐ மிகவும் சிறப்பாகச் செயல்படுத்திடுகின்றது. வண்ணங்கள் அழகாகப் பிரதிபலிக்கின்றன, மேலும் இடைமுகம் சீராகவும் படிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. அசைவூட்டல்களும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, நாம் இந்த Codex இக்கு 10-க்கு 7 மதிப்பெண் கொடுத்திடலாம். இது ஒரு இனிமையான இடைமுகத்துடனும் பயனுள்ள வசதிகளுடனும், செயல்படக்கூடிய, நேர்த்தியான ஆண்ட்ராய்டு செயலியை வழங்கிடுகின்றது. இருப்பினும்,’GearVault’-ஐ ஒரு themeஇல் ஆண்ட்ராய்டின் செயலியாக உணரவைக்கின்ற படைப்பாற்றல், நுணுக்கமான கவனம் ,செம்மையான செயல்பாடுகள் ஆகியன இதில் இல்லை.
Googleஇன் Antigravity
இது நம்பிக்கையளிப்பதாகத் தோன்றுகின்றது,ஆனால் பிழைகளால் சிரமப்படுகின்றது
அடுத்து Googleஇன் Antigravity, இது வெளிர் நீல வண்ணசெயல் திட்டத்துடன் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளுகின்றது. இடைமுகம் சுத்தமாகவும் நவீனமாகவும் தோன்றுகின்றது, இருப்பினும் Codexஎன்பது கொண்டுவருகின்ற ஒளி இல்லாத themeஐ நாம் தனிப்பட்ட முறையில் விரும்புவதாககொள்க. முதல் பார்வையில், Antigravityஆனது ஒரு பாராட்டத்தக்க பணியைச் செய்வதாகத் தோன்றுகின்றது. முகப்பத்திரை ஒழுங்கமைக்கப்பட்டதாகத் தெரிகின்றது, வழிசெலுத்தல் உள்ளுணர்வுடன் இருக்கின்றது, மேலும் பெரும்பாலான வசதிகள் நாம் எதிர்பார்த்தபடியே சரியாகச் செயல்படுகின்றன.
இருப்பினும், நாம் உண்மையில் இந்த செயலியைப் பயன்படுத்தத் தொடங்கிடும்–போது செயல்கள் சீர்குலையத் தொடங்குகின்றன. நமது தொகுப்பில் மேலும் பல gadgets களைச் சேர்த்திடும்போது, பல எரிச்சலூட்டும் பிழைகள் தோன்றுகின்றன. சில சாதனப் பட்டியல்கள் சரியாகத் திறப்பதில்லை, மேலும் முகப்புத்திரையின் தாவலைத் தட்டும்போது அவ்வப்போது எதுவும் நடப்பதில்லை. ஒட்டுமொத்த அனுபவத்தையும் நம்பகத்தன்மையற்றதாக உணரவைக்கின்ற மற்ற கோளாறுகளையும் நான் சந்தித்திடுவோம்.
அங்குதான் இந்த Antigravityஆனது நமது நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது. சில வடிவமைப்பு முரண்பாடுகள் அல்லது அடிப்படை அசைவூட்டங்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம், ஆனால் பழுதடைந்த வழிசெலுத்தல், நம்பகத்தன்மையற்ற செயல்பாட்டை மன்னிப்பது மிகவும் கடினமாகும்.
Claude Code
சிந்தனைமிக்க விவரங்களுடன் கூடிய ஒரு பிரமிக்க வைக்கும் இடைமுகமாகும்
நமது சோதனையில் Claude Codeஆனது கடைசிப் போட்டியாளராக இருக்கின்றது, இது உடனடியாக நம்முடைய கவனத்தை ஈர்க்கின்றது. இது ஒரு கருப்புப் பின்னணி, வண்ணமயமான கூறுகள் , premium தோற்றமுடைய இடைமுகத்துடன் ஒரு அழகான ‘Vault’ பகுதியை உருவாக்கிடுகின்றது. மேலே, நமது gadgets சேகரிப்பின் மொத்த மதிப்பையும் இதன்வாயிலாகக் காண முடிகின்றது, அதைத் தொடர்ந்து நமது சாதனங்கள், அவற்றின் மதிப்புகளின் விரிவான விவரங்களும் இருக்கின்றன.
சிறிய விவரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் Claude Code ஆனது நம்மை கவர்ந்து இழுக்கின்றது. எடுத்துக்காட்டாக, நாம் திரையைக் கீழே உருட்டும்போது + எனும் உருவப்பொத்தான் ஆனது நுட்பமாகச் சுருங்குகின்ற ஒரு நேர்த்தியான ஒருங்கிணைப்பை Claude Codeஆனது சேர்க்கின்றது. இது ஒரு எளிய வசதிதான், ஆனாலும் இது போன்ற சிந்தனைமிக்க அசைவூட்டங்கள்தான் ஒரு மெருகூட்டப்பட்ட செயலியை பொதுவானதொரு செய்யறிவின்(AI) செயல்திட்டத்திலிருந்து வேறுபடுத்துகிறது.
கவர்ச்சிகரமான அட்டைகள், இரசனையான வண்ணங்கள் , சிறந்த இடைவெளியுடன், இந்த முழு இடைமுகமும் ஒரு வண்ணச்சாய்வு கருப்பொருளைப் பின்பற்றுகிறது. செயலியின் முக்கிய செயல்பாடுகளும் அசைவூட்டங்களும் மிகச் சிறப்பாக உள்ளன. இதில்ஒரு குறையைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், புதிய gadgetsகளைச் சேர்ப்பதற்கான ‘+’ எனும் குறியீடு வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சொல்லலாம்; ‘Claude Code’ செயலியில் இது இடைமுகத்தின் மேல் பகுதியில் உள்ளது. இது பெரிய குறை ஒன்றும் இல்லை என்றாலும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தச் செய்யக்கூடிய ஒரு சிறிய மாற்றமாக இதைக் கருதலாம். மேலும், ‘Claude Code’ செயலியின் உருவப்பொத்தானையும் நாம் பாராட்ட வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தச் சோதனையில் ‘Claude Code’ தெளிவான வெற்றியாளராகத் திகழ்கிறது; நமது கைப்பேசியில் தொடர்ந்து வைத்திருக்கக்கூடிய ஒரே செயலி இதுதான்.
இவற்றிற்கிடையிலானவேறுபாடுகளைப் புறக்கணிக்க இயலவில்லை.
செய்யறிவுடன்(AI) ஒரு ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்குவது இனி ஒரு கடினமான பணி அன்று, ஆனால் பயன்படுத்தத் தகுந்த ஒன்றை உருவாக்குவது என்பது வேறு கதையாகும். மூன்று குறிமுறைவரிகளின் முகவர்களும் நாம் கொடுக்கின்ற குறிப்பை ஒரு ஆண்ட்ராய்டு செயலியாக மாற்றிடுகின்றன, ஆனால் நாம் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியதும் வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. Codex ஆனது பாதுகாப்பான வழியைப் பின்பற்றிடுகின்றது, Antigravity ஆனது எரிச்சலூட்டும் பிழைகளால் தடுமாறிடுகின்றது, Claude Code ஆனது நாம் எதிர்பார்க்கின்ற நேர்த்தியை வழங்குகின்றது. கண்டிப்பாக, Claude Code ஆனது ஒவ்வொரு குறிமுறைவரிகளை உருவாக்கிடுகின்ற சவாலிலும் வெற்றி பெறும் என்று இது அர்த்தப்படுத்தவில்லை, ஆனால் இந்தச் சோதனைக்கு, அதுவே மறுக்க முடியாத வெற்றியாளராக திகழ்கின்றது.