இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD

லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு  இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD)  பற்றி  எளிதாக  முழுமையாக புரிந்துகொள்ள உதவும் ஒரு பயன்பாடாகும்.

https://i0.wp.com/forum.librecad.org/file/n5647912/bottle_opener_LibreCAD_Gimp.jpg?w=1130
இதனை பயன்படுத்துவதற்காக  அனுமதிக் கட்டணமோ ஆண்டுக் கட்டணமோ செலுத்திடத்தவையில்லை. அவ்வாறே பதிப்புரிமை அனுமதியோ அல்லது தனியான அனுமதியோ தேவையில்லை.
எனக்கு என்னுடைய தாய்மொழி மட்டும்தான் தெரியும். மற்ற மொழிகள் எதுவும் தெரியாது என்றாலும் பரவாயில்லை. உங்களுடைய தாய்மொழி வழியிலேயே கற்று பயன்படுத்துவதற்கேற்ப இதுவரை 20 மொழிகளில் பயன்படுத்திடும் வகையில் இந்த பயன்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதனை GPLv2எனும் பொது அனுமதியின் அடிப்படையில் இந்த பயன்பாடு வெளியிடப்பட்டுள்ளதால் யார் வேண்டுமானாலும் இதனை பதிவிறக்கம் செய்து தங்களுடைய தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
ஏராளமான தொழில்நுட்பவல்லுனர்கள் அன்றாடம் இதில் புதிய புதிய வாய்ப்புகளையும் மாறுதல்களையும் செய்து வெளியிடுகின்றனர். அதனால் நாம் நம்முடைய தேவைக்கேற்ற இதனுடைய சமீபத்திய பதிப்பினை நகலெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். மற்றவர்களுக்கு விநியோகிக்கலாம்.

இது GUI எனும் வரைகலைபயன்பாட்டு இடைமுகம் வசதி கொண்டது. அதனால் பொறியியல் பயிலுபவர்கள் மட்டுமல்லாது  வரைகலையை பயன்படுத்த விழைபவர்கள் அனைவரும் தங்களுடைய தேவைக்கேற்ப இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த லிபர் கேட் என்பது சி++மொழியில் அதிலும் சி++11 இல் API இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு HTML5 இலும் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது முதன்முதலில் QCad என்றபெயரிலும் அதன்பின் CADuntu என்ற பெயரிலும் உருவாக்கபட்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது லிபர் கேட்(LibreCAD) எனும் பெயரில் புதியதாக பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தலிபர் கேட்(LibreCAD) ஆனது DWG எனும் பின்னொட்டு கொண்ட கோப்பினை படிக்கவல்லது.  இது DXF எனும் பின்னொட்டு கொண்ட கோப்பில் எழுதுகின்றது.  இதனுடைய வெளியீட்டு கோப்புகளை SVG, JPG, PNG, PDF  போன்ற கோப்புகளின் வடிவமைப்பில் வெளியிடமுடியும்.

இது பல்லடுக்குகள்,தொகுப்புகள்,இசைவான வளைவுகோடுகள், பலகோடுகள், நீள்வட்டகருவிகள்,மேம்பட்ட செங்கோணக் கருவிகள், உருமாற்றக் கருவிகள் என்பன போன்ற எண்ணற்ற  கூறுகளை பயனாளர்கள் பயன்படுத்துவதற்காக தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பயன்பாட்டினை நிறுவுகை செய்து செயல்படுத்திடுவதற்கு 20 எம்பி நினைவக கொள்ள அளவு மட்டும் போதுமானதாகும்.

இதனை librecad.org/ எனும் இணைய பக்கத்திலிருந்து நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து பயன்படுத்திக்கொள்க . இந்த லிபர் கேட்(LibreCAD) பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ள wiki.librecad.org/ எனும் இணையப் பக்கத்திற்கு செல்க .

librecad

ச.குப்பன்
kuppansarkarai641@gmail.com

%d bloggers like this: