உபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்

ஜோபின் பிராஞ்சல்

<jophinep@gmail.com>

பின் வரும் ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் இருப்பதாக எண்ணுங்கள்:

  • ஒரு டோரண்டு முடிவதற்கு வெகு நேரம் ஆகிறது.

  • உறுதிபடுத்தும் அஞ்சல் வர நேரம் ஆகிறது.

  • தரமற்ற சேவை மையம், தரமற்ற சேவையை வழங்குகிறது.

உங்கள் கணினியுடன் மேற்கண்ட சூழல்களில் நீங்கள் இருக்க நேரிடலாம்.

இந்த சூழ்நிலைகளில், எளிதாக நேரத்தை செலவிட, கவனத்தை வேறு எதிலாவது செலுத்துவது சிறந்தது. எடுத்துக் காட்டாக, குறிப்பேட்டில் எதாவது கிறுக்கல்கள் செய்யலாம், பாடல் பாடலாம் அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம் நேரம் செலவிடலாம்.

என்னை எடுத்துக் கொண்டால் வெட்டிப் பசங்க பல்கலைக்கழகம் (University of Procrastination) அங்கீகரித்துள்ள, பின்வரும் விளையாட்டுகளில் ஒன்றை விளையாடுவேன்.

பிக்சா (Picsaw):

லொள்.. லொள்.. ளொள்..

இப்படித்தான் என் பக்கத்து வீட்டு நாய் தினமும் குரைக்கும். இது போன்ற சூழல்களில் வேலையை பார்ப்பது சிரமமாக இருக்கும். ஆனால், பிக்சா புதிர் விளையாட்டு, இந்த சிரமத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

நாய் குரைக்கும் சப்தம் அதிகம் ஆகும் போது (அல்லது கைபேசியில் பாடல் கேடகும் போது) நான் கணினியில் ஃபிடோ(Fido) குவி அற்ற(ill focus) தரத்தில் எடுத்த ஒரு பன்றியின் புகைப்படத்தை ஒழுங்குபடுத்தி சிறிது சிறிதாக அடுக்க தொடங்குவேன்.

அது மட்டும் அல்ல, புதிர்கள் உண்மையாகவே மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி ஆகும்.

கடினத்தன்மையை அதிகரிக்க, எளிதில் கண்டுபிடிக்க இயலாத பாங்கில் ஒரு படத்தை தேர்வு செய்யவும். எடுத்துக் காட்டாக, வானத்தின் படம், மிருகங்களின் கம்பிளி, போன்றவை.

பிக்சாவைஉபுண்டுசெயலிமையத்திலிருத்துநிறுவலாம்

apps.ubuntu.com/cat/applications/picsaw/

டேங்கிளட் (Tanglet):

புகழ்வாய்ந்த வார்த்தை விளையாட்டான பாகிளின் (Boogle) ஒரு வீரர் விளையாடும் வகையை சார்ந்ததே டேங்கிளட் ஆகும்.

இதன் விளையட்டு முறை எளிதானது. கொடுக்கப் படும் எழுத்துகளில், அருகில் இருக்கு எழுத்துகளை சேர்த்து, வார்த்தைகளை கண்டுபிடுக்க முயல வேண்டும்.

எழுத்துகளை, செங்குத்தாகவோ, சமநிலையாகவோ அல்லது குறுக்கலாகவோ சேர்க்கலாம். நீங்கள் சேர்க்கும் எழுத்துகள் அருகில் இருத்தலும், குறைந்தது மூன்று எழுத்துகளை சேர்ப்பதும் உங்கள் மதிப்பெண்களை அதிகப்படுத்தும்.

டேங்கிளில் வேறுபட்ட கடினத்தன்மையுடன் 7 விதமான விளையாட்டு முறைகள் உள்ளன. உங்கள் விளையாட்டு, புள்ளி விபரங்களுடன் சேமிக்கப்படுவதால், நீங்கள் மேலும் மேலும் சிறப்பாக விளையாட தூண்டப்படுவீர்கள்.

இதை விட சிறந்ததாக நேரத்தைச் செலவிட ஏதும் இருக்க முடியாது.

டேங்கிளைஉபுண்டுசெயலிமையத்திலிருந்துநிறுவலாம்

சுவெல்டு(Gweled):

ரத்தினக் கல் வீழ்த்துதல், ஒரு தோற்ற பிம்பங்கள் சேர்த்தல் போன்ற பல்வண்ண பொலிவுடன் விளங்கும் விளையாட்டுகள் இல்லை எனில், அந்த விளையாட்டுத் தளம் வீண் என கருதப்படும்.

சரி காரியத்திற்கு வருவோம், இப்படியாக சுவெல்டு ஒரு நல்ல விளையாட்டு.

ஐஓயசு (iOS), ஆண்டுராய்டு (Android), விண்டோசு கைப்பேசி (Windows Phone), பிளாக்பெரி (Blackberry), மாக் ஏப் கடை (Mac App Store) போன்றவற்றில் அதி சிறந்த விளையாட்டிகளை விரைவாக ஒரு நோட்டம் விட்டால், ரத்தினக் கல் வீழ்த்தும் விளையாட்டுக்கு பெரிய வரவேற்பு இருப்பது புலப்படும்.

எனினும் அது உபுண்டுவில் இல்லாமல் இருக்கலாம் 😉

இதில் பொதுவான விளையாட்டு முறையை தவிர்த்து, மேலும் இரண்டு முறைகள் உள்ளன. அவை:

  • நேர முறை (Timed Mode) – குறிப்பிட்ட நேரத்தில் அதிக புள்ளிகளை எட்டும் முறை

  • நேரமற்ற முறை (Endless Mode) – இதில் நேரக் கணக்கு ஏதும் இல்லை, அதுபோல உங்கள் மதிப்பெண்ணும் சேமிக்கப்படுவது இல்லை

சுவெல்டைஉபுண்டுசெயலிமையத்திலிருந்துநிறுவலாம்

.எம்.ஜி.!! சொற்கள்!! (OMG!! Words!!):

நாவிடம் வாய் என்ன சொன்னது? நான் உன்னை சிறைபிடித்தேன் என்றது!

சிரிப்பு வந்ததா? இல்லை அல்லவா !!! நல்லது, அறுவையான நகைச்சுவை!! அப்படி என்றால், 100% நல்ல கேளிக்கையை என்னால் உங்களுக்கு இன்னும் அளிக்க முடியும். நம் பட்டியலில் இறுதியானது இதுதான்: .எம்.ஜி.!! சொற்கள்!! (OMG!! Words!!)

இந்த வார்த்தை விளையாட்டு மிக எளிதானது: சரியான சொற்களை முடிந்த அளவுக்கு வேகமாக தட்டச்சு செய்யவும். எவ்வளவுக்கு எவ்வளவு பிழைகள் ஏற்படுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு விளையாட்டு விரைவாய் முடியும்!

இந்த விளையாட்டில் உள்ள அத்தனை வார்த்தைகளும், இணையக் கட்டுரைகளிலிருந்து பெறப்படுபவை.

ஆனால் இது அவ்வளவு எளிமையானது அன்று. நீங்கள் மிக மிக சரியாக வார்த்தைகளை தட்டச்சு செய்கிறீர்கள் என்றால், ஓ.எம்.சி.!! சொற்கள்!! (OMG!! Words!!) இன் ஆசிரியரான பெஞ்சமின் கம்ப்ரேயின் (Benjamin Humphrey) முகம் தோன்றி, மாயமாய் அது தொடும் வார்த்தைகளை உருகுலைத்துவிடும்.

ஆனால், நான் என்றும் உங்கள் பக்கம் தான், என் முகம் தோன்றி மாயமாய் அது தொடும் சொற்களை சரிசெய்துவிடும்.

உங்களுக்கு கேளிக்கையுடன் பயன்பாடும் வேண்டுமா? அப்படியானால் ஓ.எம்.சி.!! சொற்கள்!! (OMG!! Words!!) ஒரு சரியான தேர்வு!! இது உங்கள் சொல் வளத்தையும், தட்டச்சு திறத்தையும் மேம்படுத்தும்.

.எம்.சி.!! சொற்கள்!! (OMG!! Words!!) – 32 நுண்மி(bit)

launchpad.net/~tommybrunn/+archive/omgwords/+files/omgwords_1.2.2~12.04ppa3_i386.deb

.எம்.சி.!! சொற்கள்!! (OMG!! Words!!) – 64 நுண்மி(bit)

launchpad.net/~tommybrunn/+archive/omgwords/+files/omgwords_1.2.2~12.04ppa3_amd64.deb

மூலக் கட்டுரை: JOEY-ELIJAH SNEDDON

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: