5 . ஜோலி OS (Joli OS )
நேட்புக் என்று அழைக்கப்படும் சிறிய மடி கணினிக்கு ஏற்ற இயக்குதளம் இந்த ஜோலி. HTML5 ஐ அடிப்படையாக கொண்ட பயன்பாடுகள் தான் இதன் சிறப்பம்சம். இந்த இயக்குதளத்தில் இருக்கும் பல்வேறு பயன்பாடுகள் Cloud Computing ஐ மேம்படுத்த முயற்சிப்பவை. ஆகையால் உங்களின் ஜோலி OS இல் உள்ள பயன்பாடுகளை எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் இயக்கலாம்.
இது ஒரு புது வகையான இடைமுகப்பை கொண்டுள்ளதால் இதனை பயன்படுத்துவது சற்று புதிதாக இருக்கலாம். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.
4 . ஜூரின் (Zorin OS )
விண்டோஸ் இல் இருந்து லினக்ஸ் இற்கு மாறும் பலரிடம் ஒரு பயம் இருக்கும். அதனை போக்க தயாரிக்கப்பட்ட இயக்குதளம் தான் இந்த ஜூரின். இதில் உள்ள ஒரு பயன்பாட்டின் மூலம் உங்கள் முகப்பை விண்டோஸ், மேக் (Mac) போன்ற மாறி மாற்றி கொள்ளலாம்.
இதன் முழு பதிப்பை பெற நீங்கள் உங்களால் முடிந்த சிறு தொகையை அளிக்க வேண்டும். இல்லை என்றால் சில பயன்பாடுகள் இல்லாத இலவச பதிப்பையும் பெறலாம். [ zorin-os.com ]
3 . ஓபன் சுசே(OpenSUSE)
KDE டெஸ்க்டாப் அமைப்பை உள்ளிருப்பால் கொண்ட ஒரே இயக்குதளம் இந்த ஓபன் சுசே தான். அந்த காரணத்தினால் பல்வேறு சிறந்த அலுவல் தொடர்பான பயன்பாடுகள் இதில் உள்ளன.
உபுண்டு வில் விண்டோஸ் போன்ற ஒரு சிறு அமைப்பு கூட இருக்காது. ஆனால் விண்டோஸ் உபயோகிபவர்களை மகிழ்விக்கும் வண்ணம் ஓபன் சுசே வில் சில அம்சங்கள் உள்ளன. உபுண்டு வை போல இதிலும் LibreOffice உபயோகிக்கப்பட்டுள்ளது.
குனோம் இல் வரும் வசதிகளை காட்டிலும் KDE இல் வருபவை சிறப்பாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஓபன் சுசே வை பதிவிறக்க இங்கே செல்லவும்
[ software.opensuse.org/121/en
2 . பெடோரா (Fedora )
உபுண்டு விற்கு அடுத்த பிரபலமான லினக்ஸ் பதிப்பு பெடோரா தான். பெடோரா அழகான வடிவமைப்பு, சிறந்த வன்பொருள் இணைப்புகள் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.
தற்போது வெளிவந்துள்ள பெடோரா 16 பதிப்பு மிக சிறப்பான குனோம் ஷெல் (Gnome Shell ) சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. அசைவூட்டம் பெற்ற அமைப்பு, எளிதான இயக்கு முறை என பல அமம்சங்களை கொண்ட பெடோரா வை பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். fedoraproject.org/get-fedora
1 . மின்ட் லினக்ஸ் (Mint Linux )
லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட இயக்குதளங்களில் உபுண்டு விற்கு அடுத்த இடம் நிச்சயமாக இந்த மின்ட் லினக்ஸ் இற்கு தான் போய் சேரும். இதன் எளிமையான இயக்குமுறை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
மேலும், இதில் அனைத்து வசதிகள், பயன்பாடுகள் என ஒவ்வொன்றும் மிக சிறப்பாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து டிரைவர்களும் தேவையான இதர அம்சங்களும் உள்ளிருப்பாக பதிக்க பட்டுள்ளன. மக்களின் தேவையை உணர்த்து செயல்படுவது தான் மின்ட் லினக்ஸ் இன் முக்கியமான சிறப்பம்சம். இதனை பெற இங்கே சொடுக்கவும். www.linuxmint.com
ஸ்ரீராம் இளங்கோ
காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை.
இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.
எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr