லினக்ஸ் செயலிகள் பற்றி நம்முடைய மனதில் இன்னும் சாம்பல் நிற விண்டோக்களும், கட்டளை வரி சார்ந்த சிக்கல்களுமாகவே இருந்தால், இந்த புதிய நவீன செயலிகள் அதை மாற்றக்கூடும். இப்போது அறிமுகப்படுத்தும் இந்த மூன்று செயலிகளும், ஒரு புதிய தலைமுறை லினக்ஸ் மென்பொருள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கின்றன—ஒரு உண்மையான செயலிகளின் அங்காடியைப் போன்று உருவாக்கப்பட்ட Flatpak store,ஆனது உள்ளூர் செய்யறிவால் இயக்கப்படும் இணையஇணைப்பில்லாமலேயே படியெடுப்பதற்கான ஒருகருவியாகும், இது வேகமான, நேர்த்தியான, உண்மையாகவே நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒரு முனைம கோப்பு மேலாளர் போன்றதாகும். லினக்ஸ் எப்போதுமே சக்தி வாய்ந்ததாக இருந்துவருகின்றது; இறுதியாக, இவ்வாறான புதிய நவீன செயலிகளின் வாயிலாக அது அதற்கேற்ற புதிய தோற்றத்தையும் பெறத் தொடங்கிவிட்டது.
Bazaar

இது நம்முடைய அனைத்து Flatpaks களையும் கண்டறிய, நிறுவுகைசெய்திட, நிர்வகிக்க தேவையான ஒரே இடமாகும்.Flatpaks களை நிறுவுகைசெய்வதற்கான வழக்கமான நடைமுறை சற்று சிக்கலானதாக இருக்கலாம். இணையஉலாவியைத் திறந்து, Flathubஇற்குச் சென்று, நாம் பதிவிறக்க விரும்பும் செயலியைத் தேடி, அதன் நிறுவுகைக்கான கட்டளையைப் பெற்று, இறுதியாக அதை நம்முடைய முனைமத்தில் இயக்கிடுவோம். செயலிகளை ஒரே இடத்தில் கண்டறிந்து நிறுவுகைசெய்யக்கூடிய ஒரு முறையான வரைகலை storeஇருந்தால் அது சிறப்பாக இருக்குமல்லவா? ஆம் இந்த Bazaarஎன்பதன் மூலம் பெறுவது அதைத்தான்.
இந்தச் செயலி, Flatpaks களைக் கண்டறிந்து பதிவிறக்கம்செய்வதற்கு ஒரு நேர்த்தியான , நவீன storeஐ வழங்குகிறது. இது மிகவும் வேகமானது, மேலும் செயலியானது திணறாமல், நாம் விரும்பும் அளவுக்கு செயலிகளை நிறுவுகைசெய்திட வரிசைப்படுத்தலாம். இது ஒரு மேலாண்மையின் முகப்புத் திரையாகவும் செயல்படுகிறது, இந்த —Bazaarஎன்பதன் வழியாக நாம் வெளிப்படையாகப் பதிவிறக்காதவற்றையும் கூட நம்முடைய எல்லா Flatpaks களையும் புதுப்பிக்கவும் நீக்கவும் முடியும். மற்றொரு சிறப்பான வசதி என்னவென்றால், ஒவ்வொரு செயலியின்பக்கத்திலும், அந்தச் செயலியையும் , அதன் உருவாக்குநரை பற்றியும் நாம் ஆய்வு செய்யத் தேவையான அனைத்து இணைப்புகளும் உள்ளன. உருவாக்குநரின் பங்களிப்புகளுக்காக நாம் அவரை ஆதரிக்க விரும்பினால், நன்கொடை இணைப்பும் (வழங்கப்பட்டிருந்தால்) இதில் அடங்கும்.
தொழில்நுட்ப ரீதியாக, GNOME Software அல்லது KDE Discover போன்ற பெரும்பாலான மென்பொருள் அங்காடிகளில் நாம் ஒரு செருகுநிரலைச் சேர்க்கலாம் அல்லது ஒரு நிலைமாற்றியை இயக்கலாம்—அது Flatpaks களை வரைகலை வழிமுறையில் நிறுவுகைசெய்திட நம்மை அனுமதிக்கின்றது. இருப்பினும், அனுபவத்தில், மற்ற எந்த லினக்ஸ் அங்காடியையும் விட Bazaar ஆனதுமிகவும் மென்மையாகவும் வேகமாகவும் இருப்பதாக உணரப்படுகிறது. உண்மையில், லினக்ஸில் உள்ள அனைத்து செயலிகளையும்—Flatpaks கள் , அதிகாரப்பூர்வ களஞ்சியங்களிலிருந்து வரும் வழக்கமான தொகுப்புகள் ஆகிய இரண்டையும்—வரைகலை வழிமுறையில் நிறுவுகைசெய்வதற்கான இயல்புநிலைத் தேர்வாக Bazaar ஆனது மாற வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.Bazaar ஐ நிறுவுகைசெய்திட, முதலில் நம்முடைய கணினியில் Flatpakஐ நிறுவுகைசெய்து அமைக்க வேண்டும்,அதனை தொடர்ந்து பின்வருமாறானக் கட்டளையை இயக்கிடுக:
flatpak install flathub io.github.kolunmi.Bazaar
Buzz

உள்ளூர் இசைக்கோப்புகளையும், YouTube இணைப்புகளையும் படியெடுத்திடுவதற்கு—இனி நமக்கு மேககணினித் தேவையில்லை.Buzz என்பது ஒரு உள்ளூர் பேச்சு-உரை படியெடுப்புக் கருவியாகும். இதன்வாயிலாக நாம் ஒரு எளிய வரைகலை இடைமுகத்தைப் பெற்றிடுவோம், அதில் Whisper அடிப்படையிலான ஒரு செய்யறிவு(AI) மாதிரியைத் தேர்ந்தெடுத்து, அதைப் பதிவிறக்கம் செய்த, பின்னர் ஒலியை முழுவதுமாக நம்முடைய சொந்த வன்பொருளிலேயே செயலாக்க அனுமதிக்கலாம்—அதற்காக மேககணினித் தேவையில்லை, சந்தாதொகை எதுவும் செலுத்தத்தேவையில்லை, நம்முடைய கணினியை விட்டு ஒலியானது வெளியேறாது. நாம் ஒரு உள்ளூர் ஒலிக்கோப்பை பதிவேற்றலாம், ஒரு URL-ஐ ஒட்டலாம், அல்லது ஒரு YouTube இணைப்பைக்கூட கொடுத்திடலாம், உடன்அது ஒலியைமட்டும் தனியாகப் பிரித்தெடுத்து நேரடியாகப் படியெடுத்துவிடும்.
படியெடுத்தல் செயல்முறைக்கு முன் இந்தBuzz ஆல் நம்முடைய ஒலியை மொழிபெயர்த்தல்செய்யவும் முடியும், ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த வசதியில் அதிக வெற்றி கிடைக்கவில்லை. ஏனெனில் கணினியில் தேவையான பல்வேறு மொழித் தொகுப்புகள் இல்லாததால் இது தோல்வியடைந்துவிடுகின்றது என நம்பப்படுகின்றது. இருப்பினும், நேரடி ஆங்கிலப் படியெடுத்தலுக்கு, இது குறைபாடற்றதாக இருந்துவருகின்றது.
தனிப்பட்ட முறையில், கணினியில் உள்ள ஒரு கோப்புறையை Buzz மூலம் கண்காணித்திடலாம். கைபேசியில் ஒலியைப் பதிவுசெய்யும்போதெல்லாம், அந்தப் பதிவை அந்தக் குறிப்பிட்ட கணினியின் கோப்புறைக்குத் தானாக அனுப்ப Syncthing-ஐப் பயன்படுத்தி கொள்கிறது ஒரு புதிய கோப்பு தோன்றும்போது, Buzz தானாகவே அதை எழுத்து வடிவில் மாற்றி, நமக்காக ஒரு உரைக்கோப்பை உருவாக்குகிறது.
மேலும், நேரலை எழுத்து வடிவ மாற்றம் செய்யும் ஒரு வழிமுறையும் உள்ளது, அதில் நாம் பேசும்போதே Buzz ஆனது நிகழ்நேரத்தில் பேச்சை எழுத்து வடிவில் மாற்றுகின்றது. அது நன்கு செயல்படுகிறது, ஆனால் பரிசோதித்ததில் அது சற்று சிக்கலாக இருப்பது தெரியவருகிறது. நாம் பேசுவதை எழுத்து வடிவில் மாற்றுவதற்காக அது சொற்றொடரின் நடுவிலேயே பேச்சைத் துண்டித்துவிட்டு, மீண்டும் கேட்கத் தொடங்கும், இதனால் ஒலியின் சில பகுதிகள் விடுபட்டுப் போய்விடுகின்றன. எனவே, முழு ஒலிக் கோப்புகளையும் எழுத்து வடிவில் மாற்றுவதற்கு இதைப் பயன்படுத்துவதையே தனிப்பட்ட முறையில் விரும்புப்படுகிறது.இது எவ்வளவு வேகமாக எழுத்து வடிவில் மாற்றுகிறது என்பது முற்றிலும் கணினியிலுள்ள வன்பொருளைப் பொறுத்தது. RTX 3060 உடன், Buzz 20 நிமிட ஒலியை 20 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் எழுத்து வடிவில் மாற்றுகின்றது. பயன்படுத்துவது Faster Whisper Large v3 எனில் இது வேகம் , துல்லியம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சிறந்த சமநிலையை ஏற்படுத்துகிறது. வேகமான முடிவுகளை விரும்பினால், சிறிய, இலகுவான திரையைத் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் துல்லியத்தில் ஒரு பின்னடைவைச் சந்திப்போம். இது Whisper, Whisper.cpp , Hugging Face-இல் புரவலராக செய்யப்பட்ட எந்தவொரு இணக்கமான மாதிரியையும் ஆதரிக்கிறது.
GPU இல்லாமல், மொழிமாற்றிக்கான CPU-ஐப் பயன்படுத்தி செயல்படுகின்றது, ஆனால் அது மிகவும் மெதுவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில், ஒரு OpenAIஇன் API திறவுகோளை இணைத்து, செயலாக்கத்தை OpenAI-இன் சேவையாளர்களுக்கு மாற்றலாம். இது வேகமானது, ஆனால் ஒலியானது கணினியை விட்டு வெளியேறுகிறது என்று அர்த்தமாகும்—தனியுரிமை நமக்கு முக்கியம் என்றால், இதை மனதில் கொள்வது அவசியம்.Buzz,ஆனது Flatpak , Snap ஆகிய இரண்டு வடிவங்களிலும் கிடைக்கிறது, எனவே ஏற்கனவே Bazaar-ஐ அமைத்திருந்தால், அங்கிருந்தே இதை நிறுவுகைசெய்திடலாம்.
Yazi

இதுபயன்படுத்துவதற்கு மிகவும் இனிமையான ஒரு முனைம கோப்பு மேலாளர் ஆகும் . லினக்ஸின் முனைமத்தில் ls, cd ஆகிய கட்டளைகளைப் பயன்படுத்துவதில் சோர்வடைந்திருந்தால், Yazi தான் நமக்குத் தேவையானதாகும். தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய சிறந்த முனைமத்தின் அடிப்படையிலான கோப்பு மேலாளர்களில் இதுவும் ஒன்று. இது நேர்த்தியாகவும் நவீனமாகவும் தோற்றமளிக்கிறது—ஆனால் அது வெறும் அழகுக்காக மட்டுமன்று. Yazi, பார்ப்பதற்கு அழகாக இருப்பது போன்றே, செயல்பாட்டுத் திறனுடனும் இருக்கின்ற வகையில் நன்கு சிந்தித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.இயல்பாகவே, இது Miller எனும் நெடுவரிசையின் அமைப்பில் திறக்கிறது, இது எங்கிருந்து வந்தோம், நாம் இப்போது எங்கே இருக்கின்றோம், தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பகத்தில் என்ன இருக்கிறது ஆகிய அனைத்தையும் திரையில்ஒரே நேரத்தில் காண்பிக்கின்றது. ஒரு ஆழமான கோப்பு அமைவிற்குள் (filesystem) ஊடுருவிச் செல்வதை, குழப்பமானதாக இல்லாமல், மிகவும் இயல்பான ஒரு அனுபவமாக இது மாற்றுகிறது. வழிசெலுத்தலுக்கு, Vim-பாணி குறுக்குவழிகள் (shortcuts)—இடம்பெயர H-J-K-L ஆகிய விசைகளைப் பயன்படுத்தலாம்— சுட்டி (mouse) ஆதரவு ஆகிய இரண்டும் இதில் உள்ளன. F1 விசையின் பின்னால் உள்ளமைக்கப்பட்ட ஒரு ‘உதவிக்குறிப்புத் தாள்’ (cheat sheet) கூட இதில் உள்ளது; எனவே, எல்லாவற்றையும் தொடக்கத்திலேயே மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
Yazi எனும் மென்பொருள் உண்மையில் தனித்து நிற்பது அதன் சிறப்பம்சங்களில்தான். முனைம சாளரத்திற்குள்ளேயே நேரடியாகக் காட்டப்படும் உருவப்பட முன்னோட்டங்கள், கோப்புகளைத் திறக்காமலேயே அவற்றின் உள்ளடக்கத்தை காணும் வசதி, ஒரே நேரத்தில் பல கோப்பகங்களைத் திறந்து வைத்திருக்க உதவும் ‘tabs’ எனும் வசதி ஆகியவை இதில் கிடைக்கின்றன. கோப்புகளை மொத்தமாகப் பெயர் மாற்றம் செய்திடுகின்ற வசதி கூட இதில் இயல்பாகவே உள்ளடக்கப்பட்டுள்ளது; மேலும், இதன் செயல்பாடுகளை இன்னும் விரிவுபடுத்த விரும்பினால், அதற்கென ஒரு Lua plugin எனும் அமைவுகூட இதில் உள்ளது. இது ripgrep, fzf , zoxide ஆகிய கருவிகளுடனும் இயல்பாகவே ஒருங்கிணைந்து செயல்படுகிறது.