பொதுவாக நாமனைவரும் Linux-க்கு மாறும்போது, சில செயலிகளுக்கு Linux-இற்கான நேரடிப் பதிப்பு (native version) இல்லை என்பதை கவனித்திருக்கலாம். அப்போது, பொருந்தக்கூடிய தன்மையை ஏற்படுத்தும் மென்பொருளின் இணக்க அடுக்கின் (’compatibility layer’) மூலம் அந்தச் செயலியை இயக்க வேண்டியிருக்கும் என்று நமக்குச் சொல்லப்படலாம். ஆனால், அந்தச் சிக்கலான வழிமுறைக்குள் நுழைவதற்கு முன், அந்தச் செயலிக்கு இணையான ஒரு திறமூல(‘open-source’) மாற்றைத் தேடுவது நல்லது.
Phone Link-க்கு பதிலாக KDE Connect
இது Android , iOS ஆகிய இரண்டிலும் செயல்படும் திறன்மிக்கது.Windows-இல் ‘Phone Link’ என்ற கைபேசி இணைப்புச் செயலி (phone companion app) முன்பே இணைக்கப்பட்டிருக்கும். Linux-இல் அதற்குப் பதிலாக ‘KDE Connect’-ஐ நிறுவுகை செய்திடலாம். இது அனைத்து முக்கிய கைபேசி, கணினி இயங்குதளங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு கட்டணமற்ற , திறமூலச் செயலியாகும்.
Phone Link-ஐப் பயன்படுத்த Microsoft கணக்கில் பதிவு செய்திட வேண்டும்; ஆனால் KDE Connect-க்கு, கைபேசியும் கணினியும் ஒரே வலைபின்னலின் இணைப்பில் மட்டும்இருந்தால் போதுமானது. இச்செயலி கிடைக்கக்கூடிய சாதனங்களின் பட்டியலைக் காட்டும், மேலும் கைபேசியில் ஒரே ஒரு தட்டல் (tap) மூலம் அவற்றுடன் இணைந்திடலாம்.
கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், ஒட்டுப்பலகைகளை (clipboards) ஒத்திசைக்கவும் (sync) இதைப் பயன்படுத்தலாம். KDE Connect இயக்கப்பட்டிருக்கும்போது, கணினியில் ,நகலெடுக்கும் (copy) எந்தவொரு உரையும் (text) உடனடியாக கைபேசியின் விசைப்பலகையின் செயலியிலும் தெரியும். கைபேசியிலிருந்து அறிவிப்புகள் (notifications) நேரடியாக , கணினிக்கு அனுப்பப்படும். கணினியிலிருந்தே குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கலாம்.
Phone Link-இல் இல்லாத சில சிறப்புஇயல்புகள் இதில் உள்ளன. KDE Connect கைபேசியை ஒரு ‘presentation remote’-ஆக மாற்றுகிறது. கணினியில் இசை ஒலிப்பதை கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். கணினியைத் தொலைவிலிருந்து இயக்க (remote input), மெய்நிகர் விசைப்பலகை (virtual keyboard) தடத்திண்டை(trackpad) வழங்குகின்ற வசதியும் இதில் உள்ளது.
இந்தக் கூடுதல் வசதிகள் எதுவும் நமக்குத் தேவையில்லை, சாதனங்களுக்கு இடையே கோப்புகளையும் ,உரையையும் மட்டும் பகிர்ந்துகொண்டால் போதும் என்றால், ‘LocalSend’-என்பதையேப் பெரிதும் பரிந்துரைக்கப்படுகின்றது. இதை AirDrop-இன் திறமூலப் பதிப்பாகக் கருதலாம். இது மிகவும் நவீனமானது . தடையின்றிச் செயல்படக்கூடியது. KDE Connect-இன் கோப்புப் பகிர்வு வசதிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.
Task Manager-க்கு பதிலாக btop
இது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒன்று.ZorinOS போன்ற சில Linux இயங்குதளங்கள் (distros), தனிப்பட்ட ‘resource monitor’ எனும்செயலியுடன் வருகின்றன. GNOME அடிப்படையிலான அமைப்புகளிலும் ‘system monitor’ எனும்செயலி உள்ளது. இருப்பினும், பெரும்பாலான Linux இயங்குதளங்களில், அதுபோன்ற நேரடி ‘Task Manager’ எனும் செயலி நமக்குக் கிடைக்காது. அதற்குப் பதிலாக, முனைமத்தைத் திறந்து, வளப் பயன்பாட்டைக் கண்காணிக்க top அல்லது htop போன்ற ஒரு எளிய கட்டளையை இயக்கலாம்.
இந்தக் கட்டளைகள் அனைத்து லினக்ஸ் (Linux) கணினிகளிலும் செயல்படும், ஆனால் அவற்றின் இடைமுகங்கள் (interfaces) மிகவும் பழைய பாணியில் இருப்பதை காணலாம். அதனால்தான் அனைவரும் தங்களின் லினக்ஸ் கணினிகளில் எப்போதும் ‘btop’-ஐ நிறுவுகைசெய்து வைத்திருப்பார்கள். இது முனைமத்திற்குள் (terminal) இயங்கும் ஒரு அழகான கணினி கண்காணிப்பு கருவியாகும் (system monitor).
இதற்கான கட்டளைவரி Debian அல்லது Ubuntu அமைப்புகளில்:
sudo apt install btop
Fedora கணினிகளில்:
sudo dnf install btop
இதை சுட்டியின் (mouse) அல்லது விசைப்பகையின் (keyboard) மூலம் பயன்படுத்தலாம். இது நினைவகம் (memory), வலைபின்னல் (network), சேமிப்பகம்(storage) , CPU பயன்பாடு ஆகியவற்றை நேர்த்தியான சிறிய கட்டங்களில் காட்டுகிறது. இயங்கும் செயல்முறைகளை (active processes) வடிகட்டவும் தேடவும் இதில் முடியும். மேலும், விசைப்பலகையின் குறுக்குவழிகளைப் (shortcuts) பயன்படுத்தி செயல்முறைகளை நிறுத்தம்செயதிடலாம் (terminate). இதில் திரையின்தோற்றங்களையும் (themes) மாற்றிக்கொள்ளலாம்.
Photoshop-க்கு பதிலாக PhotoGIMP
GIMP-ஐ Photoshop போன்ற தோற்றத்திற்கு மாற்றுதல். Photoshop தான் நம்மை நீண்ட காலத்திற்கு Windows சூழலிலேயே இருக்க வைத்த செயலியாகும். அதை பெரும்பாலும் படங்களை வரைவதற்கும் (drawing) சில எளிய திருத்தங்களைசெய்திடும் பணிகளுக்கும் பயன்படுத்திகொள்வார்கள்; ஆனால் காலப்போக்கில் வரைவதற்கு Krita-வையும், திருத்தங்கள்செய்திடுகின்ற பணிகளுக்கு GIMP-ஐயும் பயன்படுத்தத் தொடங்கிடுவார்கள். இவை இரண்டும் கட்டணமற்ற கட்டற்ற மென்பொருள்கள் ஆகும்.
சிறியஅளவிலான பயன்பாட்டிற்கு இந்த அமைப்பு சரியாக உள்ளது; ஆனால் Photoshop (அல்லது எந்தவொரு Adobe படைப்பாற்றல் மென்பொருளும்) என்பது, அதைப் பயன்படுத்துபவர் நிறைய புதிய செய்திகளைக் கற்றுக்கொள்ளாமல் மாற்றீடு செய்ய முடியாத செயலிகளில் ஒன்றாகும். அப்படி மாற்றினாலும், பழைய மென்பொருளில் இருந்த அதே வசதிகள் இதில் கிடைக்காது. எனவே, இந்த குறிப்பிட்ட பரிந்துரையை ஒரு நிபந்தனையுடனேயே (asterisk) முன்வைக்கப்படுகின்றது. இணக்கத்தன்மை அடுக்குகளின் மூலம் Photoshop-ஐ இயக்க முயற்சிக்கும் முன், இதை ஒருமுறை முயற்சித்துப் பார்த்திடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.
நமக்கு Kritaஆனது உடனடியாகப் பிடித்தமென்பொருளாகிவிடும், ஆனால் GIMP-இன் இயல்புநிலை இடைமுகம் அவ்வளவாகப் பிடிக்காது. நல்லவேளையாக, GIMP-இன் இடைமுகத்தை Photoshop-இன் இயல்புநிலை இடைமுகத்தைப் (UI) போன்று மாற்றும் ஒரு கூடுதல்வசதி (plugin) உள்ளது. அதன் பெயர் PhotoGIMP. இது ஒரு .zip கோப்பாகக் கிடைக்கிறது; அதை ‘home’ கோப்புறையில் (folder) பிரித்தெடுத்தால் (extract) போதும். அவ்வளவுதான் உடன் இதனை பயன்படுத்திகொள்ளமுடியும்.
RDP-க்கு பதிலாக RustDesk -மிகவும் எளிமையானது , கட்டணமற்றது.மற்றொரு விண்டோஸ் கணினியைத் தொலைவிலிருந்து அணுக (remote access), விண்டோவில் ‘Remote Desktop Connection’ (RDP) என்ற வசதி உள்ளது. லினக்ஸில் , RustDesk மூலம் இதே செயலைச் செய்யலாம். இது ஒரு கட்டணமற்ற , கட்டற்ற (open-source) மென்பொருள்ஆகும்; இதன் மூலம் மற்றொரு கணினியுடன் இணைந்து அதைத் தொலைவிலிருந்து இயக்க முடியும்.
இதன் அதிகாரப்பூர்வ GitHub களஞ்சியத்திலிருந்து (repository) இரு கணினிகளிலும் இதை நிறுவுகைசெய்திடலாம். RustDesk-ஐத் திறக்கும்போது, அது இரு கணினிகளிலும் ஒரு தனித்துவமான IDஐயும் , ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லையும் (one-time password) உருவாக்குகின்றது. இணைப்பை ஏற்படுத்த, மற்றொரு கணினியில் அந்தக் IDஐ உள்ளிட்டு “Connect” என்பதை சொடுக்குதல் செய்தால் போதும். இது ஒருமுறை மட்டும்பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லைக் கேட்கும்; அவ்வளவுதான்.
இதைப் பயன்படுத்துவது எளிது . இது முற்றிலும் கட்டணமற்றது. மேலும், RustDesk லினக்ஸிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அன்று; இது அனைத்து முக்கிய இயங்குதளங்களிலும் (platforms) செயல்படுகின்ற திறன்மிக்கது.
Microsoft Office-க்கு மாற்றாக LibreOffice
Microsoft Office-இன் பழைய, சிறந்த காலங்களை இது நினைவூட்டுகிறது.Microsoft Office தொகுப்பு (suite) முழுவதையும் மாற்றியமைக்கும் வகையில் LibreOffice உருவாக்கப்பட்டுள்ளது. இது கட்டணமற்றது, திற-மூல மென்பொருள் . இணைய இணைப்பு இல்லாமலும் (offline) முழுமையாகச் செயல்படக்கூடியது. 2000-களின் தொடக்கத்தில் இருந்த Microsoft Office-இன் பழைய பதிப்புகளை நினைத்துப் பார்த்திடுக; LibreOffice செயலிகளைப் பயன்படுத்தும்போது நமக்கு அத்தகைய உணர்வே ஏற்படுகிறது. Microsoft-இன் சொந்த வடிவங்களான .doc, .docx, .ppt, .pptx, .xls, .xlsx, .pub போன்றவற்றைக் கூட இதில் திறக்கலாம், திருத்தலாம் , சேமிக்கலாம்.
இதில் Word-க்கு பதிலாக Writer-உம், Excel-க்கு பதிலாக Calc-உம், PowerPoint-க்கு பதிலாக Impress-உம், Publisher-க்கு பதிலாக Draw-உம், , Base-க்கு பதிலாக Access-உம் கிடைக்கின்றன. இதில் Outlook-க்கு நேரடி மாற்று இல்லை என்றாலும், அத்தகைய வசதி தேவைப்பட்டால் Thunderbird-ஐ நிறுவிக் கொள்ளலாம்.
லினக்ஸிற்கான நேரடிப் பதிப்பு (native version) கிடைக்காதபோது, எப்போதும் திற-மூல மாற்று மென்பொருளைத் தேடிப் பார்த்திடுக
சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட, லினக்ஸ் மேசைக்கணினி அனுபவம் இன்று வெகுவாக முன்னேறியுள்ளது. நமக்குப் பிடித்த பெரும்பாலான செயலிகளுக்குச் சிறந்த திற-மூல மாற்று மென்பொருட்களை கண்டறிய முடியும். Adobe-இன் படைப்பாற்றல் சார்ந்த தயாரிப்புகள் , பரவலாகப் பயன்படுத்தப்படாத சிறப்புத் தேவைகளுக்கான செயலிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்