வணக்கம்,
தமிழ் விக்கிமீடியாச் சமூகம், அனலி கலை மற்றும் இலக்கியப் பள்ளி, ‘இனம்’ பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், கணியம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் “தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செய்யறிவு வளர்ச்சியும்” (Tamil Wikisource Enhancement and AI Integration) திட்டத்தின் முதற்கட்ட இணையவழிப் பயிற்சி முகாமிற்குப் பதிவு செய்துள்ள உங்களுக்கு எங்களது மனமார்ந்த வரவேற்பும் நன்றிகளும்!
தமிழ் மொழியின் அரிய செவ்விலக்கியங்களை எண்ணிம மயமாக்கி, எதிர்காலச் செயற்கை நுண்ணறிவு (Tamil AI / LLM) மாதிரிகளுக்கான திறந்தநிலைத் தரவுத்தொகுப்பாக மாற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியில் உங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. அதில் இணைந்திட அன்புடன் வரவேற்கின்றோம்.
நிகழ்வு விவரங்கள்:
நாள்: 10.09.2026 (வியாழக்கிழமை)
நேரம்: இரவு 07:00 மணி முதல் 08:00 மணி வரை
தளம்: Google Meet (இணையவழிச் சந்திப்பு)
இணைப்பில் இணைய வேண்டிய விவரங்கள்:
- கூகுள் மீட் நேரடி இணைப்பு:
meet.google.com/jpb-ufia-jod - அல்லது Google Meet செயலியில் குறியீட்டை (Code) உள்ளிடலாம்:
jpb-ufia-jod
(நிகழ்வு தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாகவே இணைப்பில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்).
சிறப்புப் பயிற்றுநர் & உரையாளர்:
- முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமிஉதவிப்பேராசிரியர், விக்கிமீடியர் & திட்ட ஒருங்கிணைப்பாளர்(உரை: தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செய்யறிவு வளர்ச்சியும்)
பயிற்சியின் முக்கியச் சிறப்பம்சங்கள்:
- பயிற்சிகளைச் சிறப்பாக நிறைவு செய்யும் பங்கேற்பாளர்களுக்குக் கணியம் அறக்கட்டளை வாயிலாகச் சிறப்புத் தொழில்பயிற்சிச் சான்றிதழ் (Internship Certificate) வழங்கப்படும்.
- சிறப்பாகப் பங்காற்றும் மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஊக்கப் பரிசுகளும் விருதுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
- மாணவர்களைச் சிறப்பாக வழிநடத்தும் 5 முதன்மைப் பேராசிரியர்களுக்குக் கல்விசார் மதிப்பூதியமும் (Honorarium) விருதுச் சான்றிதழும் வழங்கப்படும்.
பயிற்சியில் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுடன்,
திட்ட ஒருங்கிணைப்புக் குழு
தமிழ் விக்கிமூல மேம்பாட்டுத் திட்டம்
தொடர்பிற்கு: sathiyarajkkt@gmail.com
