எதிர்கால GNOME வெளியீடுகளுக்கான GNOME Shell வடிவமைப்பு ஆலோசனைகள்

By | September 13, 2026

GNOME வடிவமைப்பு குழுவானது, GNOME Desktop சூழலின் எதிர்கால வெளியீடுகளுக்கான பல்வேறு ஆலோசனைகளைப் பகிர்ந்துள்ளது. இவை நடைமுறைக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம்; இருந்தபோதிலும் இவற்றைச் செயல்படுத்த அவர்களுக்கு நம்முடைய உதவி மிகமுக்கியமாக தேவையாகும். ஒரு GNOME பயனராக, இதில் உள்ள சில கருத்துக்கள் மிகவும் சுவாரசியமானவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்; குறிப்பாக ‘transparent panel’ எனும் வசதி. இரண்டு பலகங்கள் அல்லது தொடக்கிகளை (மேலும் கீழும்) பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை என்றாலும், GNOME-ஐப் பலர் “அழகற்றது (ugly)” என்று கருதுவதற்கும், ‘Dash to Panel’ அல்லது ‘Dash to Dock’ போன்ற நீட்டிப்புகளைப் (extensions) பயன்படுத்துவதற்கும் இதுவே முக்கிய காரணமாக உள்ளது. மற்றொரு சிறந்த வடிவமைப்பு ஆலோசனையானது ‘editable Quick Settings’ ஆகும்; இது அந்த அமைப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்த நம்மை அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் இதைச் செய்ய முடிவது போன்று, GNOME Desktop இலும் ஏன் செய்யக்கூடாது? GNOME Shell-இன் பட்டியில் ஒரு ‘inline editor ‘ மூலம் இது நடைமுறைக்கு வரக்கூடும். GNOME வடிவமைப்பு குழு ‘calendar popover’ எனும் அமைப்பை மாற்றி அமைப்பது குறித்தும் விவாதிக்கிறது. தற்போதைய அமைப்பு மிகமோசமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கணினியில், calendar popover என்பது மிகப் பெரியதாகவும் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகவும் உள்ளது; இடதுபுறம் உள்ள பகுதி பெரும்பாலும் காலியாகவும், வலதுபுறம் உள்ள பகுதி அதிகப்படியான தகவல்களுடனும் காணப்படுகிறது. இவற்றைத் தனித்தனியாகப் பிரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய முடியும். “சிலரிடம் world clocks உள்ளன, ஆனால் அதிக அறிவிப்புகள் (notifications) எதுவும்வருவதில்லை” என்று GNOME வடிவமைப்பு குழு கூறியுள்ளது; இது கணினி அமைப்பிற்கும் மிகவும் பொருந்தும். எனவே, வலதுபுறத்தில் தற்போதைய தேதி, வானிலை , தற்போதைய நிகழ்வுகள், இடதுபுறத்தில் மாத காலண்டர் , உலகக் கடிகாரங்கள், அறிவிப்புகள் ‘விரைவு அமைப்புகள்’ ஆகியன பட்டிக்கு மாற்றப்படுவது போன்ற புதிய calendar popover வடிவமைப்புகளை மிகவும் விரும்பிடுவார்கள். GNOME உருவாக்குநர்கள் பகிர்ந்துள்ள பிற சுவாரசியமான வடிவமைப்பு ஆலோசனைகளில், ‘drag-and-drop’ என்றசெயலியின் மூலம் சாளரங்களைக் கையாளுவதற்கான ‘spatial overview’என்பதாகும் ,இது ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளையும் சாளரங்களையும் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட ‘full-screen Alt+Tab switcher’ , ,மூன்றாண்டுகளுக்கு முன்பு விவாதிக்கப்பட்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘ Mosaic window management system’ ஆகியவை அடங்கும். பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த login screen grid எனும் வசதியும் உள்ளது; மேசைக்கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் இருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மடிக்கணினிப் பயனர்களுக்காக இயக்க நேர மின்கலண் உருவப்பொத்தானும் உள்ளது, இது மின்கலணின் நிலையை ஒரே பார்வையில் அறிந்துகொள்வதை எளிதாக்குகிறது. இறுதியாக, வரவிருக்கும் GNOME 51 Desktop சூழலின் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள ஒரு வசதியை GNOME வடிவமைப்பு குழு அறிவித்துள்ளது. அது, முழு மேலோட்டத்தையும் மாற்றுவதற்குப் பதிலாக, தேடல் பதிவிலிருந்து வெளிவரும் GNOME Shell-இல் உள்ள ஒரு மேம்படுத்தப்பட்ட தேடல் மேல்மீட்பு பட்டியாகும். இதில் உள்ளமைக்கப்பட்ட கோப்பு முன்னோட்டங்கள், ஒவ்வொரு தேடல் முடிவிற்கும் பல்வேறு செயல்பாடுகள், தேடல் வடிகட்டிகள் போன்ற பல வசதிகளும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு release.gnome.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a Reply