கூகுளுக்கு மாற்று | குறுந்தொடர் அறிமுகம்

கணியம் இணையதளத்தில் கட்டற்ற பல தகவல்கள் குறித்தும் நெடுந்தொடர்கள் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்த தொடர் தான்”எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ்”. நானே எதிர்பாராத வகையில், எலக்ட்ரானிக்ஸ் தொடரில் மட்டும் 35க்கும் அதிகமான வெற்றிகரமான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். அதனோடு சேர்ந்து சில குறுந்தொடர்களை எழுதி இருக்கிறேன். தற்போதைக்கு எளிய தமிழில் சி, கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ளிட்ட தொடர் வரிசையிலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

ஆனால், கணியத்தில் என்னுடைய எழுத்து பயணம் தொடங்கிய போது, itsfoss எனும் ஆங்கில கட்டற்ற இணையதளத்திலிருந்து கட்டுரைகளை மொழிபெயர்த்து தான் கணியத்தில் வெளியிட்டு வந்தேன். அந்த வகையில் குறுகிய காலத்திற்குப் பிறகு எக்ஸ்போஸ் தளத்தில் சுவாரசியமான கட்டுரைகளை தேடிக் கொண்டிருந்தபோது “கூகுளுக்கு மாற்றாக இருக்கும் கருவிகள்” எனும் பெயரில் திரு அங்குஸ்தாஸ் அவர்கள் எழுதிய கட்டுரை என் கண்களில் பட்டது.

வழக்கம்போல, இந்த கட்டுரையை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக, அந்த கட்டுரை மற்றும் இன்ன பிற தளங்களில் ஆராய்வு செய்து கூகுள் செயலிகளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து உங்களிடம் தெரிவிக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

இந்தக் குறுந்தொடரானது குறைந்தபட்சம் 10 முதல் 15 கட்டுரைகளை ஆவது கொண்டிருக்கும். Google கான கட்டற்ற மாற்றுக் கருவிகள் என்பதே இந்த குறுந்தொடரின் நோக்கம். ஒரு குறிப்பிட்ட பெருநிறுவனத்தை மட்டுமே சார்ந்து, தரவுகளைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி, நமக்கான நமது தனி உரிமையை மதிக்கக்கூடிய கட்டற்ற வாய்ப்புகள் குறித்து ஆராய்வதே இந்த தொடரின் நோக்கம்.

அதிலும், கூடுதல் சிறப்பு என்னவென்றால் வழக்கம் போல இந்த தொடரிலும் உங்களோடு சேர்ந்து நானும் கற்றுக் கொள்ளப் போகிறேன்.

சரி கட்டுரையின் ஆரம்பத்திலேயே, நான் ஏற்கனவே கணியம் இணையதளத்தில்,குறிப்பிட்டு இருந்த கற்றற்ற மின் மடல் வசதியான proton mail குறித்த கட்டுரை இணையும் இதனோடு இணைக்கிறேன்.

இந்த புரோட்டான் மின்மடல் வசதியின் மூலம் உங்களால் தனிப்பட்ட,கட்டற்ற, பாதுகாப்பான மின் மடலை பயன்படுத்த முடிவதோடு ஆண்ட்ராய்ட் போன்ற மொபைல் கருவிகளிலும் கூட புரோட்டான் மின் மடல் வசதியை உங்களால் பயன்படுத்த முடியும்.

மேற்படி நான் முன்பே எழுதி இருந்த கட்டுரையில் இது குறித்து விரிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

திறந்த நிலை மின் மடல் வசதிகளை வழங்கும் புரோட்டான் மின்மடல்

விரைவில் ஒரு புதிய google க்கு மாற்றான வசதி குறித்து அறிந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திப்போம்.

மேற்படி இந்த தொடர் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் : srikaleeswarar@myyahoo.com

இணையம்: ssktamil.wordpress.com

%d bloggers like this: