Author Archives: ச. குப்பன்

OSI மாதிரியை ஐந்தே நிமிடங்களில் கற்றுக் கொள்க

கட்டற்ற அமைவின் உள்ளகஇணைப்பு (Open Systems Interconnection (OSI)) எனும்வரைச்சட்ட மானது கணினிகளும் சேவையகங்களும் பொதுமக்களும் ஒரு கணினி அமைவிற்குள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதற்கான தரநிலையாகும். இது வலைபின்னலின் தகவல் தொடர்புக்கான முதல் நிலையான மாதிரியாகும் இது 1980 களின் முற்பகுதியில் அனைத்து பெரிய கணினியாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. OSI மாதிரியானது வலைபின்னல்களை விவரிப்பதற்கும், தனித்தனி துகள்கள் அல்லது அடுக்குகளில் அவற்றைப் பற்றி சிந்திக்கவும் ஒரு உலகளாவிய மொழியை வழங்குகிறது. OSI மாதிரியானது கணினி… Read More »

OpenRAN என்றால் என்ன

தற்போது உலகெங்கிலும் உள்ள தன்னிச்சையான(arbitrary ) கணினிகளுடன் இணைக்கும் திறன்கொண்ட திறன்பேசியை( smartphone) சொந்தமாக வைத்திருப்பவர்களும் பயன்படுத்து பவர்களும் கண்டிப்பாக இந்த வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்களின் (RAN) பயனாளராவார்கள். நம்முடைய கைபேசி தொடர்பு வழங்குநரால் இந்த RAN வழங்கப்படுகிறது, மேலும் இது நம்முடைய திறன் பேசிக்கும் தகவல் தொடர்பு வழங்குநருக்கும் இடையிலான கம்பியில்லா இணைப்புகளைக் கையாளுகிறது. நம்முடைய திறன்பேசியில் திறமூல இயக்க முறைமை (ஆண்ட்ராய்டு) இயங்குகின்றது ஒரு திறன்பேசியானது மற்றொரு திறன்பேசியுடன் தொடர்பு கொள்வதற்காக இணைப்பை ஏற்படுத்து… Read More »

கொள்கலன்கணினி(Container), மெய்நிகர்கணினி(Virtual Machine(VM)) ஆகியவை குறித்த தொடக்கநிலையாளர்களுக்கான நட்புடன்கூடிய அறிமுகம்

நாம் ஒரு நிரலாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுநர் எனில் இணைப்பாளரைப் (Docker) பற்றி கண்டிப்பாக கேள்விப்பட்டிருக்கலாம்:அதாவது இணைப்பாளர் என்பது “கொள்கலன் கணிகளில்” கட்டுதல், பதிவேற்றுதல் என்றவாறு பயன் பாடுகளை இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதொரு பயனுள்ள கருவியாகும். தற்போதைய நவீனகாலச்சூழலில் மேம்படுத்துநர்கள் கணினியின் அமைவுநிருவாகிகள் போன்றவர்களின் கவனத்தை இது ஈர்க்கும் வகையில், இல்லாமல் இருப்பது மிகக்கடினம். கூகுள், VMware , அமேசான் போன்ற பெரிய சேவையாளர்கள் கூட இதனை ஆதரிக்கின்ற வகையிலான சேவைகளை உருவாக்குகின்றனர். இணைப்பாளரின்… Read More »

வணிகநிறுவனங்கள்AIOPs எனும் புதியசகாப்தத்தை தழுவ தயாராகிடுக

வணிகநிறுவனங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், தற்போதைய நவீனதொழில்நுட்பத்திற்குஏற்ப எண்ணிம(digital ) நிறுவனங்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தங்களை மாற்றிகொள்வதற்கு ‘choosing’ என்பது ஒரு பெரிய கேள்வி குறி அன்று; மாறாக,அவ்வாறான மாற்றத்துடன் தங்களுடைய நிறுவனம் எவ்வாறுமுன்னேறுவது என்பது பற்றியதே முக்கிய கேள்விக்குறியாகும். இவ்வாறான சூழலில்தான் AIOps என்பது வணிக நிறுவனங்களின உதவிக்கு வருகிறது. பொதுவாக ஒரு வணிக நிறுவனத்தை எண்ணிம(digital ) நிறுவனமாக மாற்றுவதில் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.… Read More »

ஜூலியா , பைதான் ஆகிய இரண்டில் எந்த கணினிமொழி விரைவாக செயல்படக்கூடியது?

ஜூலியா என்பது மிகஅதிகசுருக்கமான ஒரு இயக்கநேர நிரலாக்க மொழியாகும். இது எந்தவொரு நிரலையும் உருவாக்க ஒரு பொது-நோக்க கணினிமொழியாக இருந்தாலும், இது எண்ணியல் பகுப்பாய்வு , கணக்கீட்டு ஆய்விற்கு மிகவும் பொருத்தமான பல பண்புகளைக் கொண்டுள்ளது. பைதான்ஆனது 1990 களின் முற்பகுதியில் ஒரு எளிய பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாக வடிவமைக்கப்பட்டது, ஆனால் அதன் பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துவருகின்றது. இந்த கட்டுரையில் நரம்பியல் பிணையவமைப்புகள், இயந்திர கற்றல் ஆகியவற்றில் இவ்விரண்டு கணினிமொழிகளின் செயல்திறனை ஆழமாகப் ஆய்வு… Read More »

குனு/லினக்ஸிற்கானNuTyX எனும் புதிய இயக்கமுறைமை

தற்போது NuTyX எனும் அதிக நெகிழ்வுத்தன்மையுடனான ஒரு முழுமையான குனு/லினக்ஸிற்கான இயக்கமுறைமை வெளியிடப்பெற்றுள்ளது , , . இதனை பயன்படுத்தவிரும்பும் பயனாளர்கள் முதலில் குனு/லினக்ஸ் இயக்கமுறைமையின் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் இதனுடைய ‘install-nutyx’ எனும் உரைநிரல் , சுதந்திரமான GRUB நிறுவுகையின் செயல்முறை, cards’ எனும்தொகுப்பு மேலாளர், collections, என்பன போன்ற அசல் கருத்துமைவுகள் குனு/லினக்ஸ்பற்றி குறைந்த அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்கக்கூடும். தங்கள் திறமைகளை… Read More »

லினக்ஸின்KDE ,GNOME ஆகியவற்றிற்குஇடையிலான வேறுபாடு

ஒரு தீவிர KDE இன் அடிப்படையிலானPlasma மேசைக்கணினி பயனாளர்கூட, தன்னுடைய அலுவலகப் பணிக்கு மிகமகிழ்ச்சியுடன்GNOME அடிப்படையிலானதைப் பயன்படுத்திகொள்வார். நாம் பாலைவனம் போன்ற பொட்டல்காடான எந்தவொரு பகுதிக்கு அல்லது தனித்த தீவுபோன்ற எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் லினக்ஸின் இவ்விரண்டு வெளியீடுகளில் எந்த வெளியீடு செயல்படுகின்ற மேசைக் கணினியை அல்லது மடிக்கணினியை கையோடு எடுத்துச் செல்வது என்ற பட்டிமன்ற கேள்விக்கெல்லாம் செல்லாமல் , லினக்ஸின் இயக்க முறைமையின் இரண்டுவகை வெளியீடுகளின் சிறப்பியல்புகளையும் மட்டும்இப்போது காண்போம், மேலும் திறமூலமற்ற மேசைக்கணினி இயக்கமுறைமை… Read More »

லினக்ஸின், Xfce எனும் இயக்கமுறைமையுடன் பழைய மடிக்கணினியை கூட புதியதைபோன்று பயன்படுத்தி கொள்ளமுடியும்

நான் பயன்படுத்திய மடிக்கணினி 2012 இல் வாங்கப்பட்டது. 1.70 GHz CPU, 4 GB நினைவகம் , 128 GB நினைவகஇயக்கி ஆகியவை எனது தற்போதைய மேசைக்கணினியுடன் ஒப்பிடும்போது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் Linuxஇன் , Xfce எனும் மேசைக்கணனி இயக்கமுறைமையானது இந்த பழைய மடிக் கணினிக்கு புத்துயிர் கொடுத்து பயன்படுத்திகொள்ள தயார் செய்துவிடுகிறது. லினக்ஸிற்கான Xfce எனும் மேசைக்கணினி இயக்கமுறைமை Xfce எனும் லினக்ஸிற்கான மேசைக்கணினி இயக்கமுறைமையானது ஒரு நேர்த்தியான, நவீன தோற்றத்தை வழங்குகின்ற இலகுரக… Read More »

பைதானின் புதிய தகவமைவினை(module) நான்கே படிமுறைகளில் தொகுத்திடுக

பொதுவாக நாமெல்லோரும் ஒரு பயன்பாட்டை நிறுவுகைசெய்திடும் போது, வழக்கமாக ஒரு பயன்பாட்டிற்கான இயங்கக்கூடிய குறிமுறைவரிகள், ஆவணங்கள், உருவப்பொத்தான்கள் போன்ற முக்கியமான கோப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பை நிறுவுகைசெய்கின்றோம் அல்லவா. லினக்ஸில், பயன்பாடுகள் பொதுவாக RPM அல்லது DEB கோப்புகளாக தொகுக்கப்படுகின்றன, மேலும் பயனர்கள் லினக்ஸ் விநியோகத்தைப் பொறுத்து dnf அல்லது apt கட்டளைகளுடன் அவற்றை நிறுவுகைசெய்துகொள்கின்றனர். இருப்பினும், புதிய பைதான் தகவமைவுகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வெளியிடப்படு கின்றன, எனவே இதுவரை தொகுக்கப்படாத ஒரு தகவமைவினை நாம்… Read More »

இயந்திரவழி கற்றலுக்கு உதவும் சில திறமூலகருவிகள் (OpenSource Tools)

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆழ்த கற்றல் ஆகியவை பல தசாப்தங்களாக மனிதர்கள் செய்யும் விதத்தில் கணினிகள் பணிகளைச் செய்ய உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கணினிகளைப் பயன்படுத்தி மனித மூளையின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய இது கணிதமாதிரிகளையும், புள்ளிவிவர மாதிரிகளையும் பயன்படுத்திகொள்கிறது (எ.கா., நிகழ்தகவு). இயந்திரவழி கற்றல் (ML) மனிதமூளை செயல்பாடுகளின் நிரலாக்க மாதிரிகளைப் பயன்படுத்தி AI மாதிரிகளின் நடத்தையை மேம்படுத்துகிறது, மேலும் இந்த மாதிரிகளின் முடிவுகளை எதிர்கால கணிப்புகளுக்காக சேமிக்கிறது.… Read More »