Author Archives: ச. குப்பன்

லினக்ஸின் இந்தஆறு கட்டளைகள் இல்லாமல் நம்முடைய அன்றாட பணிகள் எதையும் செய்ய முடியாது

கட்டளை வரி இல்லாமல் லினக்ஸைப் பயன்படுத்தலாம் என்றுஅடிக்கடி கூறுவார்கள்,. பலபத்தாண்டுகளாக லினக்ஸை கட்டளை வரிகளை முழுமையாகப் பயன்படுத்தி வருபவர்என்றாலும், திறமூல இயக்க முறைமையை முயற்சிக்க நினைப்பவர்களிடம் அது தேவையில்லை என்றுஅடிக்கடி கூறப்படுகின்றது.. உண்மையாகவே.விரும்பினால், கட்டளை வரியை முழுவதுமாக விட்டுவிடலாம். கண்டிப்பாக, நாம் பயன்படுத்திகொண்டுவருகின்ற சில கட்டளைகளை மாற்றிடுவதற்கு பொருத்தமான வரைகலை பயனர் இடைமுகப்பு(GUI) பயன்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது, ஆனால் அதையும் செய்ய முடியும். இருந்தபோதிலும் ஒரு கட்டத்தில்,லினக்ஸின் கட்டளைவரிகளை எப்படியும் கற்றுக்கொள்ள விரும்பலாம் இந்த கட்டளைவரிகள் இல்லாமல்… Read More »

ஆண்ட்ராய்டில் லினக்ஸின் முழு பயன்பாட்டினையும் இயக்கிடலாம்!

சில எளிய அமைப்புகளுடன், பிக்சல் போனில் GIMP , LibreOffice போன்ற மேசைக்கணினியின் முழுமையான லினக்ஸ் பயன்பாட்டையும் இயக்கலாம். வரவிருக்கும் ஆண்ட்ராய்டு நிகழ்நிலைபடுத்துதலானது லினக்ஸ் முனைம பயன்பாட்டினை கணிசமாக மேம்படுத்தும், இது ஆதரிக்கப்படும் சாதனங்களில் முழு அளவிலான வரைகலை லினக்ஸ் நிரலாக்கங்களை இயக்க உதவுகிறது. இந்த வசதி தற்போது சரிபார்ப்பிற்குரியது, குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு கேனரி பில்டில் பிக்சல் 6 அல்லது புதியது தேவைப்படுகிறது. சிறந்த செயல்திறனுக்காக முனைமம், வன்பொருள் முடுக்கம் ஆகிய இரண்டையும் செயல்படுத்த கைமுறையிலான படிமுறைகள்… Read More »

சிறந்த செயல்திறனையும், செயல்பாட்டையும் பெற பயன்படுத்த வேண்டிய லினக்ஸின் வசதிவாய்ப்புகள்

லினக்ஸ் சக்தி வாய்ந்தது, நெகிழ்வானது, மேலும் எதையும் செய்ய முடியும். இருப்பினும், லினக்ஸிலிருந்து உண்மையில் அதிகப் பலன்களைப் பெற, மேம்படுத்த வேண்டிய சில திறன்களும் பழக்கவழக்கங்களும் உள்ளன; இல்லையெனில், லினக்ஸிலிருந்து பெறக்கூடிய வளங்களை வசதிவாய்ப்புகளை உண்மையில் பயன்படுத்திகொள்ளவில்லை என்றே பொருள்கொள்ளலாம். எனவே, இதைப் பற்றி தீவிரமாக விவாதிக்க விரும்பினால், லினக்ஸ் செயல்படுகின்ற கணினிகளிலிருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்கு பின்வருமாறான உதவிக்குறிப்புகளைக் கருத்தில் கொள்க. 1. சிறப்பு விசைகளுக்கான முதன்மைகட்டுகளை (keybindings) உள்ளமைத்திடுக மிகநீண்டநாட்களாக லினக்ஸைப் பயன்படுத்தி வருபவர்கள்,… Read More »

நமக்கு பிடித்த லினக்ஸின் மேசைக்கணினி சூழல்கள்

இதுவரையில் நாமெல்லோரும் விண்டோஇயக்கமுறைமையுடன் வளர்ந்த ஒருவராக, இயக்க முறைமையின் பயனர் இடைமுகத்தின்(UI) முழுமையான மாற்றத்தைச் செய்வதைத் தடுக்கின்ற அதே வேளையில்,கணினியைத் தனித்துவமாக்கும் அளவிற்கு தனிப்பயனாக்கத்தை வழங்கும் அதே மேசைக் கணினியின் தளவமைப்பை பழகிவிட்டோம் எல்லாம் சரிதான், தொழில்நுட்ப ரீதியாக, OS இன் தோற்றத்தை மாற்றியமைக்க நம்மிடம் LiteStep , Cairo Desktop Shells ஆகியன உள்ளன என்ற செய்தியைமனதில்கொள்க, ஆனால் Windows NTஇன் உருவாக்கமையத்தின் தனியுரிமை தன்மையின் காரணமாக இந்த பயன்பாடுகள் மிகவும் அரிதானவை. எனவே, நமக்குப்… Read More »

லினக்ஸில் பயனர்இடவெளி மறுதொடக்கம்(userspace reboot)எனும் செயலி குறித்து அறிந்துகொள்க

இந்த கட்டுரையானது தொடக்கநிலையாளர்கள்கூட லினக்ஸில் பயனர்இடவெளி மறுதொடக்கம்(userspace reboot) என்பதுகுறித்து தெரிந்து கொள்வதற்கான ஒரு எளிய வழிகாட்டியாகும் லினக்ஸ் அமைவு மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கும் போது, நாம் நினைப்பதை விட திரைக்குப் பின்னால் மிகஅதிகமாக நடக்கிறது. நவீன லினக்ஸ் விநியோகங்களில் மிகவும் சுவாரசியமான, பயனுள்ள இயல்புகளில் ஒன்று பயனர்இடவெளி மறுதொடக்கம்(userspace reboot) அல்லது மென்மையான மறுதொடக்கம்(soft reboot) எனும் செயலியாகும். பயனர் இடவெளி மறுதொடக்கம்(userspace reboot)ஆனது பின்வருமாறான செயல்பாட்டினை அனுமதிக்கிறது: சேவை அடுக்கின் விரைவான மறுதொடக்கங்கள், OS… Read More »

மேம்படுத்துநர்கள் பல பத்தாண்டுகளாக எளிய பார்வையில் தெரியாமல் நகைச்சுவையின் உள்ளே இரகசியமாக ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்

பல பத்தாண்டுகளாக, மென்பொருள் உருவாக்குநர்கள் தங்கள் பணியில் நகைச்சுவைகளை நழுவ விட்டு வருகின்றனர். ஆயினும்மிகவும் நீடித்த, புத்திசாலித்தனமான திருப்திகரமான நகைச்சுவைகளில் ஒன்று வெற்றுப் பார்வையில் மறைந்துள்ளது: சுழல்நிலை சுருக்கெழுத்து(Recursive Acronym) . இது ஒரு தெளிவற்ற விசித்திரத்திலிருந்து ஒரு அன்புக்குரிய பாரம்பரியமாக வளர்ந்துள்ளது – இன்றும் வலுவாக உள்ளது. சுழல்நிலை சுருக்கெழுத்து(Recursive Acronym) என்றால் என்ன? சுழல்நிலை சுருக்கெழுத்தைப் புரிந்து கொள்ள, நாம் அடிப்படைகளுடன் தொடங்க வேண்டும். சுருக்கெழுத்து என்பது NASA (National Aeronautics and Space… Read More »

GPT4All ஐ ஆய்வுசெய்தல், உள்ளூர் LLM மேசைக்கணினியின் செயலி

கற்காலம் முதல் தற்போதைய மின்னணு தகவல் காலம் வரை, வாழ்க்கையை எளிதாக்குகின்ற குறிப்பிடத்தக்க பல்வேறு வகைகளிலான தொழில்நுட்ப முன்னேற்றங்களை மனிதகுலம் கண்டுவருகின்றது. அவ்வாறான நிலையில் தற்போது பல்வேறு செய்யறிவு(AI) கருவிகள் நம் முடையவிரல் நுனியில் கிடைக்கின்றன,செய்யறிவு(AI) bots அல்லது உதவியாளர்கள் நமக்கு நினைவூட்டல்களை அனுப்புவதன் மூலமும், கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், மேலும் பலவற்றின் மூலமும் நம்முடைய ஒவ்வொரு நாளையும் திட்டமிட உதவுகின்றன. செய்யறிவு(AI) கருவிகளின் பயன்பாடுகளின் குறிப்பிடத்தக்க திறன்களில் மனிதனைப் போன்ற உரையை உருவாக்குதல், மொழி மொழிபெயர்ப்புசெய்தல்,… Read More »

இப்போது நான்கு வழிகளில் ஒரு சில்லின் NPU ஆனது கணினியை சிறப்பாக ஆக்குகிறது

தற்போது செய்யறிவானது (AI) தேடுதலிற்கான கருவிகள் முதல் கானொளி அழைப்புகள் வரை அனைத்தையும் இயக்குகிறது, ஆனால் சில மடிக்கணினிகள் இன்னும் அவ்வாறான வசதிகளை ஒரே சீராக இயக்க சிரமப்படுகின்றன. ஏனெனில் சில மையச்செயலிகள்(CPU) நிகழ்நேர செய்யறிவின்(AI) பணிகளை திறமையாக கையாளுமாறு வடிவமைக்கப் படவில்லை.புதியதாக ஏதேனும் ஒரு கணினியை நாம் கொள்முதல்செய்கின்றபோது, மையச்செயலி(CPU), தற்காலிகநினைவகம்(RAM) ஆகியவை பற்றிய விவரக்குறிப்புகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் அதில் NPU என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற நரம்பியல் செயலியின் அலகுகள்( Neural Processing Units(NPU)) உள்ளனவா… Read More »

சுட்டுமுனைகள்( inodes) பற்றிய அறிமுகம்

inode என சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற (‘சுட்டு முனை(‘index node’)’ ) என்பது ஒரு கோப்பின பெயருக்கும் சேமிப்பக சாதனத்தில் அதன் இருப்பிடத்திற்கும் இடையிலான இணைப்பாகும் .யுனிக்ஸ், லினக்ஸ் ஆகிய இயக்க முறைமைகளில், சுட்டு முனைகள்(inodes) என்பவை கோப்புகள், கோப்பகங்கள் ஆகிய விவரங்களை பற்றிய மீப்பெரும்தரவை வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்ற தரவு கட்டமைப்புகள் ஆகும். ஒரு கோப்பு முறைமை என்பது ஒரு இயக்க முறைமையானது ஒரு சேமிப்பக சாதனத்தில் கோப்புகளை எவ்வாறு ஒழுங்கமைத்து சேமிக்கிறது என்பதுதான். கணினியில் உள்ள… Read More »

ஒற்றைக்கோப்பு(SingleFile)

ஒற்றைக்கோப்பு(SingleFile) என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணையஉலாவியின் நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழு இணையதளப்பக்கத்தையும் அதன் அனைத்து வளங்களையும் (எ.கா., படங்கள், நடைதாட்கள், எழுத்துருக்கள், திரைகாட்சிகள் போன்றவை) ஒரே சொடுக்குதலில் ஒரேயொரு HTML கோப்பாக சேமிக்க நம்மை அனுமதிக்கிறது. SingleFile என்பது ஒரு நீட்டிப்பு ஆகும், இது ஒரு முழுமையான பக்கத்தை ஒரு HTML கோப்பாக அல்லது Google Chrome , Chromium உடன் HTM-கோப்பாக காப்பகப்படுத்த உதவுகிறது. இதன்பதிப்பு 0.0.76 இல், unMHT ஐப்… Read More »