Author Archives: ச. குப்பன்

நிரலாக்கங்களின் பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) ஒரு அறிமும்

PMDஎன  சுருக்கமாக அழைக்கபெரும்  நிரலாக்கங்களின்பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) என்பது புதியதாக உருவாக்கப்படும் பயன்பாடுகளின்நிரலாக்கங்களில் மூல குறிமுறைவரிகளை பகுப்பாய்வுசெய்வதற்காக உதவிடும் ஒரு . கட்டற்றகருவியாகும் இதனை கொண்டு  புதியதாக உருவாக்கப்படும் எந்தவொரு நிரலாக்கங்களிலும் பயன்படுத்தப்படாத மாறிகள், வெற்று பிடிப்பு தொகுப்புகள்(empty catch blocks) , தேவையற்ற பொருள் (object) உருவாக்கம் என்பனபோன்ற பொதுவான நிரலாக்க குறைபாடுகளை கண்டுபிடித்திட முடியும் இது Java,JavaScript, Apex, Visualforce, PLSQL,Apache ,Velocity,XML, XSL, C, C++, Fortran, PHP, , C#… Read More »

Speedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம் அல்லது பிணைய வேகத்தை சரிபார்த்திடலாம்.

நம்முடைய கணினியின் இணைப்பு கட்டுப்பாட்டில் இருக்கும். இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை சரிபார்த்து ஏற்புகை செய்திடமுடியும் அவ்வாறு இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை கட்டளை வரிகளின் வாயிலாக சரிபார்த்திடுவதற்காக Speedtest, Fast, iPerf ஆகிய மூன்று திற மூல கருவிகளும் உதவுகின்றன. 1. Speedtestஎனும் திறமூல கருவி இது அனைவராலும் விரும்பும் ஒரு மிகப்பழைய கருவியாகும். இது பைத்தானில் பயன்பாடாக தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, , மேலும் இது pip மூலமும் கிடைக்கின்றது. நாம் இதனை… Read More »

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )என்பது ஒருகே.டி.இ(KDE) இன் மேஜைக்கணினி சூழலுடன்கூடிய ஆர்ச் லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமையாகும், பொது மக்கள்அனைவருக்கும் ஒரு உறுதியான நிரந்தமான இயக்க முறைமை தேவை என்ற புரிதலுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இது பொது மக்கள் அனைவராலும் விரும்புகின்ற வகையிலானஒரு மிகச்சிறந்த இயக்கமுறைமையாகும், இது அழகான வடிவத்தை தியாகம் செய்யாமல் செயல்பாட்டின் விரிவாக்கத்தையும் பயன்பாட்டின் எளிமையை-யும் வழங்குவதே இந்த இயக்கமுறைமை வெளியீட்டின் நோக்கமாகும். இந்த ப்ளூஸ்டார் லினக்ஸ்இயக்கமுறைமையின் தற்போதைய வெளியீடானது மேஜைக்கணினி (desktop ), வல்லுனர்(Deskpro),… Read More »

AcademiX ஒரு அறிமுகம்

அகாடெமிக்ஸ் குனு / லினக்ஸ் என்பது ஒரு டெபியன் சார்ந்த லினக்ஸ் இயக்கமுறைமை வெளியீடாகும், இது கல்விக்கான பல்வேறு இலவச மென்பொருட்களையும் கொண்டுள்ளது குறிப்பாக இது தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்துநிலையிலும் கல்விபயில்வதற்காவே உதவிடுமாறு இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள திட்டங்கள் அமைந்துள்ளன அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல், புவியியல், உயிரியல், புள்ளியியல், மின்னணுவியல், அமெச்சூர் வானொலி, வரைகலை, அலுவலகநிருவாகம், நிரலாக்கங்கள் – ஆகிய பல்வேறு துறைகளில் இருந்தும் பல்வேறு வகைகளிலான பயன்பாடுகளை நிறுவுகை செய்வதற்கான பயன்பாடுகள்… Read More »

மறையாக்க பணப்பைகள் (crypto-wallet)

மறையாக்க பணப்பை (crypto-wallet) என்பது மின்னனு நாணயத்தை சேமிக்கவும், அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பான மின்னனு நாணய பணப்பையாகும். இது தனியார் திறவுகோள், பொது திறவுகோள் ஆகியஇரண்டினையும் சேமிப்பதன்வாயிலாக மின்னனு பணத்தை நிருவகிப்பதற்கான ஒரு மென்பொருள் பயன்பாடாகும், மேலும் பயனாளர்கள் மின்னனு நாணயத்தை அனுப்பவும் பெறவும்,இருப்பைக் கண்காணிக்கவும் பல்வேறு சங்கிலி தொகுப்புகளுடன் இது தொடர்பு கொள்கின்றது. இந்த மறையாக்க பணப்பையில், பிற முகவரியிலிருக்கும் பணப்பைகள் செலுத்த அனுமதிக்கின்ற பணியைஇதனுடைய பொது திறவுகோள் செய்கின்றது, அதேசமயம் தனிப்பட்ட… Read More »

Rufusஎனும் கட்டற்ற பயன்பாடு

ரூஃபஸ் என்பது யூ.எஸ்.பி விசைகள் / பென்ட்ரைவ்கள், மெமரி ஸ்டிக்ஸ் போன்றவைகளை கணினியின் இயக்கத்தை துவக்கக்கூடிய வகையில் வடிவமைத்து உருவாக்க உதவும் ஒரு பயன்பாடாகும்.இதன்வாயிலாக FAT/FAT32/NTFS/exFAT/UDF/ReFS என்பன போன்ற யூ.எஸ்.பி மெமரி ஸ்டிக்ஸ் களை எளிதாக வடிவமைத்திடலாம் வெளியிலிருந்து எந்தவொரு கோப்புகளின் துனையில்லாமலேயே இதனைகொண்டு பழைய MS-DOS/ துவக்ககூடியFreeDOS ஐ கூட நாமே உருவாக்கமுடியும் மேலும் பரந்த அளவிலான ஐஎஸ்ஓக்களிலிருந்து துவக்கக்கூடிய யூ.எஸ்.பி ட்ரைவை உருவாக்கிடமுடியும் அதனோடு பயாஸ் அல்லது யுஇஎஃப்ஐ துவக்கக்கூடிய இயக்கிகளை உருவாக்கிடமுடியும் மிகமுக்கியமாக… Read More »

கைபேசி லினக்ஸிற்கும் மேசைக்கணினி லிக்ஸிற்கும் இடையேயான வேறுபாடுகள்-

புதியதாக துவங்கியுள்ள இந்த ஆண்டு நிரந்தரமாக “மேசைக்கணினியின் லினக்ஸின் ஆண்டு” ஆக இருக்கலாம், ஆனால் கைபேசியில் லினக்ஸினுடைய கெர்னலின் அடிப்படையில் செயல்படும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமைஅதற்காக காத்திருக்கவில்லை. கைபேசியிலுள்ள இந்த லினக்ஸின் கெர்னலானவை, கைபேசி சாதனங்கள் நன்கு செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கின்றன. இந்நிலையில் லினக்ஸின் அடிப்படையிலான கெர்னல் ஆனது மேசைக்கணினி , கைபேசி ஆகியஇரண்டிலும் எவ்வாறு இயங்க முடியும்? மேலும் கைபேசி லினக்ஸ் ஆனது மேசைக்கணினி லினக்ஸிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்டில் மேசைக்கணினியின்… Read More »

Math Tricks Workout-

  Math Tricks Workout என்பது ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாடாகும், இது தொடர் எண்கணித பயிற்சிகளை பயன்படுத்தி நமது மூளையின் கணக்கீட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும் நகரங்களில்உள்ள ஜிம் மையங்கள் ஆனவை நம்முடைய உடலுக்கு நல்ல பயிற்சியை அளிக்கின்றன என நாம் நம்புகின்றோம் அல்லவா, அவ்வாறே கணிதமானது நம்முடைய மூளைக்கு. நல்ல பயிற்சியை வழங்குகின்றது உடற்பயிற்சி இல்லாமல் நம்முடைய உடல் துருப்பிடிக்கின்றது என நம்மில் பெரும்பாலானோர் நகரங்களில்உள்ள ஜிம் மையங்களை நோக்கி செல்கின்றனர் அதே போன்று, நம்முடைய… Read More »

SourceTail எனும் கட்டற்ற கட்டணமற்ற கணினிமொழிகளின்மூலக்குறிமுறைவரிகளின் உலாவி

Sourcetrail என்பது ஒரு அனைத்து தளங்களிலும் செயல்படும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற கணினிமொழிகளின்  மூலக்குறிமுறைவரிகளுக்கான உலாவி பயன்பாட்டுகருவியாகும். இது அறிமுகமில்லாத மூலக் குறிமுறைவரிகளை கூட பயனுள்ள பயன்பாடாக மெருகூட்டிட உதவுகிறது. தற்போது இது சி, சி ++, ஜாவா ,பைதான் போன்ற கணினிமொழிகளின் மூலக் குறிமுறைவரிகளில் நிலையான பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறது . வரைபட காட்சிப்படுத்தல் ,குறிமுறைவரிகளின் காட்சியை ஊடாடும் வகையில் ஒருங்கிணைக்கும் பயனாளர் இடைமுகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை வழிநடத்த அனுமதிக்கிறது. இது ஏறத்தாழ 40% கணினி பயன்பாடுகள்… Read More »

Calculator N+ எனும் கட்டற்ற பயன்பாடு

Calculator N+ என்பது ந ம்முடைய திறன்பேசிக்கான அறிவியல் கணக்கீட்டிற்காக உதவிடும் ஒரு கட்டற்ற பயன்பாடாகும். இந்தஆண்ட்ராய்டு பயன்பாடானது நம்முடைய கைகளில் உள்ள திறன்பேசிவாயிலாக பலவிதமான மேம்பட்ட கணித செயல்பாடுகளை செயல்படுத்திடுகின்றது. பொதுவாக தற்போது நாமனைவரும் பயன்படுத்தி கொண்டுவருகின்ற செல்லிடத்து பேசிகள் ஒவ்வொரு நாளும் மிகவும் சக்திவாய்ந்ததாக உயர்ந்து கொண்டே வருகின்றன, எனவே அவை தொலைதூரத்தில் இல்லாத பெரும்பாலான கணினிகளை வெல்ல முடியும் என்பதில் ஆச்சரியமில்லை. இதன் பொருள் அவற்றில் கிடைக்கும் கருவிகள் ஒவ்வொரு நாளும் அதிக… Read More »