Author Archives: இரா.சுப்ரமணி

முனையத்தில் அளவுகள்

முனையத்தில் அளவுகள்  GNU Units அளவுகளை ஒரு அலகிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுகின்றது. இந்த நிரல் பெரும்பாலான லினக்ஸ் வழங்கல்களில் (distribution) தானாகவே நிறுவப்பட்டிருப்பதில்லை. எனவே, நீங்கள் உங்களது வழங்கலின் களஞ்சியத்திலிருந்து(repository) GNU Units நிரலை நிறுவிக் கொள்ளுங்கள். GNU Units பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளும் வரை, units -v (v for verbose)’ கட்டளையை முனையத்தில் அடியுங்கள். இது பெறுகையை எளிதில் புரிந்து கொள்ள உதவும். ‘units -v’ என்று முனையத்தில் அடிக்கும் போது, கீழே… Read More »

நிரலாக்கத்தில் அதிமேதாவியாக இல்லாமல் திறவூற்றுக்கு பங்களிக்க 14 வழிகள்

  திறவூற்றுக்கு பலர் தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உங்களது தொழில்நுட்ப அறிவில் உங்களுக்கு நம்பிக்கை இல்லா விட்டாலும், எப்படியெல்லாம் திறவூற்றுக்கு உதவலாம் என்று நாம் இப்போது பார்ப்போம்.   கணிமையையும், உலகையும் திறவூற்று மென்பொருள்கள் மாற்றி இருக்கின்றன. உங்களில் பலரும் பங்களிக்க விரும்புகின்றீர்கள். ஆனால் ஒரு திட்டப்பணியில் நுழைய பல தடைகள் இருப்பதாக, நீங்கள் நினைத்துக் கொண்டு துரதிர்ஷடவசமாக உங்களது ஊக்கத்தை இழந்து விடுகின்றீர்கள். பெரும்பாலும் பங்களிக்க… Read More »

டெபியன் நிர்வாகிக்கான கையேடு

    புத்தகத்தைப் பற்றி:   இந்தப் புத்தகத்தை எழுதிய ராபேல் ஹெர்ஜாக்(Raphaël Hertzog), ரோலண்ட் மாஸ்(Roland Mas) இருவரும் டெபியன் உருவாக்குபவர்கள். பிரெஞ்சு மொழியில் மிக அதிகமாக விற்பனையான, இவர்களது ‘Cahier de l’admin Debian'(Eyrolles வெளியீடு) என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பே, இந்த ‘டெபியன் நிர்வாகிக்கான கையேடு’ ஆகும். டெபியனை அடிப்படையாகக் கொண்ட வழங்கல்களை உபயோகிக்கும் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.  யாவர்க்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இப்புத்தகம், திறமையான, தற்சார்புடைய டெபியன் குனு/லினக்ஸ் நிர்வாகியாக விரும்பும்… Read More »

getting-started-with-ubuntu12.04 – கையேடு

Getting Started with Ubuntu 12.04 Getting Started with Ubuntu 12.04 புதிய பயனர்களுக்கான, விரிவான, உபுண்டு இயக்குதளத்தைப் பற்றிய கையேடாகும். திறவூற்று உரிமத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இதை, நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய, வாசிக்க, மாற்றங்கள் செய்ய மற்றும் பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. இந்தக் கையேடு இணையத்தில் உலாவுவது, பாடல்கள் கேட்பது மற்றும் ஆவணங்களை வருடுவது போன்ற அன்றாட பணிகளை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள உதவும். எளிதில் பின்பற்றக் கூடிய அறிவுரைகளைக் கொண்டிருப்பதால்,… Read More »

awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி?

awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி? awk, sed மற்றும் grep ஆகிய மூன்றும் லினக்ஸ் அல்லது யுனிக்ஸ் கட்டளை–வரியில்(command-line) எனக்கு விருப்பமான கருவிகளாகும். இவை மூன்றும் திறன்மிகு கருவிகளாகும். எப்படி awk-ஐ உபயோகிப்பது என்று இப்போது பார்ப்போம். அதன் பிறகு சில உபயோகமான awk ஒற்றை வரி கட்டளைக் காணலாம். AWK உரை நடையில் உள்ள தரவுகள் அல்லது தரவுத் தொடர் பரப்புகைகளை(data streams) நிரற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும். இது 1970-களில் பெல் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.… Read More »

உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க ‘NetHogs’

NetHogs ஒரு சிறிய ‘net top’ கருவியாகும். பொதுவாக போக்குவரத்தை நெறிமுறை(protocol) அல்லது உள்பிணையத்தின்(subnet) படி பிரிக்கும் மற்ற கருவிகளைப் போல் அல்லாமல், இது அலைத்தொகுப்பை(bandwidth) செயல் வாரியாகத் தொகுக்கின்றது; இதற்காக எந்தவொரு சிறப்பு கருனிக் கூறும் ஏற்றப்பட வேண்டிய அவசியமில்லை. திடீரென்று வலையமைப்புப் போக்குவரத்து அதிகமானால், NetHogs மூலம் எந்த PID அதற்கு காரணம் என்று கண்டுபிடித்து, அது தேவையில்லாத்தாக இருப்பின் அந்த செயலை நிறுத்தி விடலாம்.   உபுண்டு repository-ல் வழக்கமாக இருக்கும் NetHogs-ஐ… Read More »

லினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்

1. சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் பதிவுகளை(logs) ஆராயுங்கள். லினக்ஸில் எல்லா விதமான நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் பணியை ஏதேனும் ஒரு பிரச்சனை தடை செய்தால் முதலில் நீங்கள் பதிவுகளை ஆராய வேண்டும். பெரும்பாலான அமைப்புகளில், இவை ‘/var/log/’ அடைவுக்குள் காணப்படும். ‘/var/log/syslog’ கோப்பில் பொதுவான பிழை செய்திகள் (error messages) உட்பட எல்லா அமைப்பு(system) செய்திகளும் இருக்கும். பதிவுகளிலிருக்கும் பிழை செய்திகள் மூலம் தடைகளைக் களைய பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. 2. tail’ என்ற கட்டளை ஒரு… Read More »

மென்பொருள் விடுதலை நாள் 2012 – செப்டம்பர் 15, 2012 – நிகழ்ச்சி அறிக்கை

மென்பொருள் விடுதலை நாள் 2012 – நிகழ்ச்சி அறிக்கை   உலகம் முழுவதும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் குனு/லினக்ஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மென்பொருள் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்தியன் லினக்ஸ் பயனர் குழு – சென்னை [ ilugc.in ] மற்றும் Free Software Foundation TamilNadu [ fsftn.org ] இணைந்து மென்பொருள் விடுதலை நாள் விழாவை செப்டம்பர் 15, 2012 அன்று… Read More »